உன் தொடர் மௌனத்திற்கும்தான்
எத்தனைப் பொருத்தம் ?
இருளைக் குறைந்த ஒளி என்பான்
பாவேந்தன் பாரதி
அவன்வழியில் யோசிக்கையில்
உன் மௌனம் கூட எனக்கு
குறைந்த மொழியெனத்தான் படுகிறது
விழிகளை அகலத் திறந்திருந்தபோதும்
அடர்ந்த இருளில்
பொருட்கள் புலப்படாதது மட்டுமின்றி
அர்த்தமற்ற அச்ச உணர்வையும்
அதீத தொடர் கற்பனைகளையும்
வளர்த்துப் போவதைப்போல்
உன் காரணம் புரியாதொடர் மௌனம் என்னுள்
எதிர்மறை எண்ணப் புயலையும்தேவையற்ற அச்ச அலைகளையும்
வளர்த்துவிட்டுத்தான் போகிறது
அடர்வனத்தில் திசைகள் அறியாது
குழம்பித் திரிகிறேன் நான்
நீ பேசவேண்டியதே இல்லை போகிற போக்கில்
ஒரு அர்த்தமற்ற புன்னகையை மட்டுமாவது
உதிர்த்துவிட்டுப் போ
அது போதும் எனக்கு
கதிரவன் எழுமுன் தோன்றும்
அந்தப் பாலொளிப் பரவலில்
அர்த்தமற்றுப் பூரித்துத் திரியும்
அறிவற்றப் புள்ளினங்கள் போல்
மகிழ்ச்சிக் கடலில்
சிறிது நேரமாவது நானும்
திளைத்துத் தொலைக்கிறேன்
100 comments:
அடர் இருளுக்கும்
உன் தொடர் மௌனத்திற்கும்தான்
எத்தனைப் பொருத்தம் ?//
ஆகா...ஆரம்பமே முதலடிகள் பொருந்தி வர அருமையாக வந்திருக்கிறதே..
மிகுதியையும் படிப்போம்
//கதிரவன் எழுமுன் தோன்றும்
அந்தப் பாலொளிப் பரவலில்
அர்த்தமற்றுப் பூரித்துத் திரியும்
அறிவற்றப் புள்ளினங்கள் போல்
மகிழ்ச்சிக் கடலில்
சிறிது நேரமாவது நானும்
திளைத்துத் தொலைக்கிறேன்//
நாங்களும் திளைக்கிறோம் உங்கள் கவிதைகளில்...
மௌனம் கூட குறைந்த மொழி... என்ன ஒரு சிந்தனை...
தங்கள் பகிர்வினை மிகவும் ரசித்தேன்...
//இருளைக் குறைந்த ஒளி என்பான்
பாவேந்தன் பாரதி
அவன்வழியில் யோசிக்கையில்
உன் மௌனம் கூட எனக்கு
குறைந்த மொழியெனத்தான் படுகிறது//
அருமையாக இருக்கிறது கவிதை.
மெளனத்தையும் இருளையும் ஒப்பிட்டது மிக அழகு.
உன் மௌனம் கூட எனக்கு
குறைந்த மொழியெனத்தான் படுகிறது
சபாஷ்..
அறிவற்றப் புள்ளினங்கள் போல்
மகிழ்ச்சிக் கடலில்
சிறிது நேரமாவது நானும்
திளைத்துத் தொலைக்கிறேன்
தொலைக்கிறேன் என்று சொல்லும்போது தொனிக்கும் செல்லக் கோபம் கூட அழகு.
என் பார்வையில், இங்கே இரவில் மௌனப் பார்வையினால் கவிஞரைக் கொள்ளையிட்டுச் செல்லும் நிலவினை, அதனோடு இணைந்த இரவுச் சூழலினைக் கவிதையில் வடித்திருக்கிறார் கவிஞர்.
மெளனத்தையும் ஒரு மொழியாக்கிய உங்கள் பார்வை பெரிது... வாழ்த்துக்கள் ஐயா
அர்த்தமற்ற அச்ச உணர்வையும்
அதீத தொடர் கற்பனைகளையும்
வளர்த்துப் போவதைப்போல்
உன் காரணம் புரியாதொடர் மௌனம் என்னுள்
எதிர்மறை எண்ணப் புயலையும்
தேவையற்ற அச்ச அலைகளையும்
வளர்த்துவிட்டுத்தான் போகிறது//
ஒரு மனதாய் உள்ள ஒவ்வொருவரின் மனதில் வாழ்வில் அடிக்கடி தோன்றும் எண்ண அலைகள் இந்த வரிகளில் பிரதிபலிக்கிறது.... என் மனம் விட்டு அகலாத இந்த வரிகளை படைத்த தங்களுக்கு வாழ்த்துக்கள் சகோ
தமிழ் மணம் 5
அர்த்தமற்ற புன்னகைக்கே மகிழ்ச்சிக் கடலில்
சிறிது நேரமாவது நானும்
திளைத்துத் தொலைக்கிறேன்... என்கிற போது...அவனை நேசிப்பதை விட உலகத்தில் என்ன சாதித்து விட போகிறாள் புத்தி கெட்டவள்
பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிற ஒவ்வொரு இளைஞரின் மனசாட்சி பேசக்கூடிய கவிதை.... என் மனசாட்சியும் பேசக்கூடிய கவிதையும் தான்..... கலக்கலாக மனதின் டெலிபதியை பதிவிட்டமைக்கு நன்றி சகோதரா....
ஏழாம் அறிவோடு...நீங்கள் திளைத்திருப்பது கொஞ்ச நேரமென்றாலும்...அழகு தான்...
ரமணி சார்...
அருமையான கவிதை. அவளின் மெளனம் நம்மை கலங்கத்தான் செய்திடும். அர்த்தமற்ற புன்னகையே ஆனந்தம் அளித்திடும். அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.
அனுபவித்தவர்களுக்கே புரிந்து கொள்ள முடியும்.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றிகள். vgk [தமிழ்மணம்: 6]
நிலவா காதலா-என
நினைத்திட ஆதலும்
உலவும் ஐயம்-நெஞ்சில்
உதித்திட ஓதலும்
வளமார் கவிதை-நீர்
வடித்துளீர் படி தேன்
உளமார் வாழ்த்தே-நான்
உரைத்தேன் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
நிரூபன் .
தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
வாக்குக்கும் மனமார்ந்த நன்றி
காட்டான்
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
வாக்குக்கும் மனமார்ந்த நன்றி
வெங்கட் நாகராஜ் //
தங்கள் வரவுக்கும் மனம் கனிந்த வாழ்த்துக்கும்
வாக்குக்கும் மனமார்ந்த நன்றி
என்ன ஒரு வித்தியாசமான சிந்தனை!!
கவிதையின் கடைசி பகுதி மிக அருமை.
அழகான விடியல் போலிருக்கிறது கவிதை
ஒப்பிடல்கள் அருமை
RAMVI //
தங்கள் வரவுக்கும் மனம் கனிந்த வாழ்த்துக்கும்
வாக்குக்கும் மனமார்ந்த நன்றி
நீ பேசவேண்டியதே இல்லை போகிற போக்கில்
ஒரு அர்த்தமற்ற புன்னகையை மட்டுமாவது
உதிர்த்துவிட்டுப் போ
அது போதும் எனக்கு///
குரு ம்ம்ம்ம்ம்ம்ம்ம் தூள்.......!!!
அடர் இருளுக்கும்
உன் தொடர் மௌனத்திற்கும்தான்
எத்தனைப் பொருத்தம் ?
நல்ல ஒப்பீடு அன்பரே
கவிதை அருமை.
மாய உலகம் //
தங்கள் வரவுக்கும் வாக்குக்கும்
தொடர் பின்னூட்டத்திற்கும்
என் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்
காட்டான் //
நச் சென பின்னூட்டமிட்டுள்ள
தங்களுக்கு மனமார்ந்த நன்றி
நீ பேசவேண்டியதே இல்லை போகிற போக்கில்
ஒரு அர்த்தமற்ற புன்னகையை மட்டுமாவது
உதிர்த்துவிட்டுப் போ
அது போதும் எனக்கு
அருமையாக உள்ளது அன்பரே.
ரெவெரி //
தங்கள் பின்னூட்டம் எனக்கு மிகுந்த
மன நிறைவை தருகிறது
வரவுக்கும் வாழ்த்துக்கும் வாக்கிற்கும்
மனமார்ந்த நன்றி
ரமணி அண்ணா, சூப்பரோ சூப்பர். வார்த்தைகள் சும்மா பூந்து விளையாடுது. தொடர வாழ்த்துக்கள்.
வை.கோபாலகிருஷ்ணன் //
படைப்பின் உள்ளார்ந்த பொருள் கண்டு
மிகச் சரியாக பின்னூட்டமைக்கும்
வரவுக்கும் வாழ்த்துக்கும் வாக்கிற்கும்
மனமார்ந்த நன்றி
நீ பேசவேண்டியதே இல்லை போகிற போக்கில்
ஒரு அர்த்தமற்ற புன்னகையை மட்டுமாவது
உதிர்த்துவிட்டுப் போ
அது போதும் எனக்கு//
என்னாச்சு குரு...?
புன்னகைக்கலைன்னா சொல்லுங்க இப்போவே அருவாளோடு வந்துர்றேன் ஆமா....
மறக்க நினைக்கினும்
ஏதோ ஒரு எழுத்து
கல்லூரி நாட்களுக்கு
பின்னோக்கி இழுக்கிறது!
கடந்த காலம்
ரசிகனுக்கு
ஒரு போதை! ஆம்!
தூண்டப்படும் போதை!
// உன் மௌனம் கூட எனக்கு
குறைந்த மொழியெனத்தான் படுகிறது //
good one..
அருமை
நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.
அழகான கவிதை
பல நேரங்களில் நாம் பார்க்கும் சிலரின் மொவுனமே கொள்ளை அழகுதானே...
மவுனத்தை சிறப்பிக்கும் கவிதை கலக்கல் பாஸ்.
பேசுவதை விட பல நேரங்களில் மொவுனமாக இருப்பதுதான்
நம்மளை காப்பார்ருது... ஹீ ஹீ
இருளும்,மௌனமும்.அழகிய கவிதை.படம் தங்களின் கவிதைக்கு மேலும் மெருகூட்டுகிறது. அருமையான வரிகள் ரமணி சார்.
புலவர் சா இராமாநுசம்.//
தங்கள் மேலான வரவுக்கும்
வாழ்த்துக்கும் வாக்கிற்கும்
மனமார்ந்த நன்றி
Madhavan Srinivasagopalan //
தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் வாக்கிற்கும்
மனமார்ந்த நன்றி
vanathy //
தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் வாக்கிற்கும்
மனமார்ந்த நன்றி
Murugeswari Rajavel .
தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
ரம்மி //
தங்கள் மேலான வரவுக்கும்
வாழ்த்துக்கும் வாக்கிற்கும்
மனமார்ந்த நன்றி
நண்டு @நொரண்டு -ஈரோடு//
தங்கள் மேலான வரவுக்கும்
வாழ்த்துக்கும் வாக்கிற்கும்
மனமார்ந்த நன்றி
Rathnavel //
தங்கள் மேலான வரவுக்கும்
வாழ்த்துக்கும் வாக்கிற்கும்
மனமார்ந்த நன்றி
துஷ்யந்தன் //
தங்கள் வரவுக்கும் விரிவான பின்னூட்ட
வாழ்த்துக்கும் வாக்கிற்கும்
மனமார்ந்த நன்றி
raji //
தங்கள் வரவுக்கும் ரசனையுடன் கூடிய
பின்னூட்ட வாழ்த்துக்கும் வாக்கிற்கும்
மனமார்ந்த நன்றி
MANO நாஞ்சில் மனோ//
என்னாச்சு குரு...?
புன்னகைக்கலைன்னா சொல்லுங்க இப்போவே அருவாளோடு வந்துர்றேன் ஆமா.
கொஞ்சம் பொறுமையா போய்ப் பாப்போம்
சரிவரலைன்னா இருக்கவே இருக்கு
நம்ம வழி
வரவுக்கும் வாழ்த்துக்கும் ரசிக்கத் தக்க
பின்னூட்டத்திற்கும் வாக்கிற்கும்
மனமார்ந்த நன்றி
முனைவர்.இரா.குணசீலன்//
தங்கள் வரவுக்கும் விரிவான பின்னூட்ட
வாழ்த்துக்கும் வாக்கிற்கும்
மனமார்ந்த நன்றி
மிகவும் அருமையான கவிதை. பலமுறை தொடர்ந்து படித்தாலும் சுவையாக இருக்கிறது.
அப்பாதுரை//
தங்கள் மேலான வரவுக்கும்
வாழ்த்துக்கும் வாக்கிற்கும்
மனமார்ந்த நன்றி
விழிகளை அகலத் திறந்திருந்தபோதும்
அடர்ந்த இருளில்
பொருட்கள் புலப்படாதது மட்டுமின்றி
அர்த்தமற்ற அச்ச உணர்வையும்
அதீத தொடர் கற்பனைகளையும்
வளர்த்துப் போவதைப்போல்
உன் காரணம் புரியாதொடர் மௌனம் என்னுள்
எதிர்மறை எண்ணப் புயலையும்
தேவையற்ற அச்ச அலைகளையும்
வளர்த்துவிட்டுத்தான் போகிறது
அடர்வனத்தில் திசைகள் அறியாது
குழம்பித் திரிகிறேன் நான்//
வாவ் ' அருமையான சிந்தனை
நல்ல கவிதை நண்பரே .
கிட்டத்தட்ட அனைவர் மனதிலும் ஒரு முறையேனும் தோன்றியிருக்கும் இந்த எண்ணம்.
தமிழ் மணம் 16
M.R //
தங்கள் மேலான வரவுக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும்
வாழ்த்திற்கும் வாக்கிற்கும்
மனமார்ந்த நன்றி
சொல்லி வந்த உணர்வுகளோடு நயம்பட எழுதிய கவிதை கடைசி வரியில் ஆற்றாமையின் வெளிப்பாடோ.?
மௌனத்தை அழகாக வாசித்து அற்புதமான கவிதை தந்துள்ளீர்கள். நன்றி.
G.M Balasubramaniam //
தங்கள் மேலான வரவுக்கும்
வாழ்த்துக்கும் வாக்கிற்கும்
மனமார்ந்த நன்றி
தமிழ் உதயம் //
தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
///
நீ பேசவேண்டியதே இல்லை போகிற போக்கில்
ஒரு அர்த்தமற்ற புன்னகையை மட்டுமாவது
உதிர்த்துவிட்டுப் போ
அது போதும் எனக்கு
///
அருமையாக சிந்தித்து கவிதையை உருவாக்கி உள்ளீர்கள்.சபாஷ்.வாழ்த்துக்கள்.
ஸாதிகா//
தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
மௌனத்திற்கே இத்தன் அழகிய கவிதையா? பேசிவிட்டால் என்ன ஆவது? மென்மையான வார்த்தைகள் அருமை.
சாகம்பரி//
தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
அடர் இருளும் தொடர் மெளனமும் ஒப்பிடப்பட்ட முதலடியிலேயே முழுக்கவிதையும் முண்டியடித்துக்கொண்டு நிற்கிறது. இரண்டுமே எளிதில் விளங்காதது. இரண்டுமே நம்மை வேற்று சிந்தனையில் ஆதிக்கம் செலுத்தி, வெறுமை கவ்வச்செய்துவிடும். கவிதையின் வார்த்தைகள் மிக அழகு. ஊடே இழையோடும் ஊடலும் வெகு அழகு.
ஐயா,தங்கள் உற்சாகபின்னூட்டம் கண்ட உடன் இன்று.உடனே என்ன பதிவெழுதலாம் என்று யோசித்ததில் பிறந்தது இப்பதிவு.உற்சாகமூட்டலுக்கு மிக்க நன்றி.பதிவைப்பாருங்கள்
அழகான கவிதை. அருமை. வாழ்த்துக்கள் சார்.
ஒரு படைப்பாளிக்கு பரிசு என்பதே
அவன் படைப்பு மிகச் சரியாக புரிந்துகொள்ளப் படுவதுதான்
புரிந்து கொள்ளப்படுவதோடு மட்டுமல்லாது ஒரு
கவித்துவமான பின்னூட்டமும் கிடைக்கப் பெற்றால்
அதைவிட மகிழ்ச்சி அளிக்கக் கூடியது என்னவாக இருக்கும்
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி
ஸாதிகா//
தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
கோவை2தில்லி//
தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
மௌனமொழியின் அர்த்தம் புரியாமல் என்னவெல்லாம் பாடுபடுகிறது மனசு! தாங்கமுடியாத அந்தத் தவிப்பை மிக இயல்பாகக் கவிதையாக்கியிருக்கும் விதம் அருமை!
கவிதை அருமை.. புன்னகை கிடைத்ததா..:)
சுந்தரா //
தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
தேனம்மை லெக்ஷ்மணன் //
தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் ரமணி சார்…
ஏன் உங்களுக்கு சொல்கிறேன் என்றா பார்க்கிறீங்க? குருவிடம் கற்ற மாணாக்கன் போல் உங்க கிட்ட நல்லவை பலதும் கற்றதனால் தான் ரமணி சார்….
ஆரம்பமே அசத்தல்…. எப்போதும் போல் வித்தியாசமாக சிந்தித்தல்…..
சொல்லாடலும் அசத்தல் ரமணி சார்….
அடர் இருளில் நம் புன்னகை கூட தெரிவதில்லை மனதில் இருக்கும் துக்கமும் புரிய போவதில்லை…. இருளில் நாம் நினைப்பதே தான் வாக்காகும்… வெளிச்சத்தில் வந்தாலும் முகம் கண்டு புன்னகை அறிய முடிந்தாலும் அகத்தில் இருக்கும் ரகசியம் அறிய முடியாதே?
இருள் கவிழ்ந்திருக்கும்போது ஒளியைத்தேடி கண்கள் பரபரப்பது போல மௌனம் உடைத்து மனதில் இருப்பதை அறிய முயலுவதை அழகிய கவிதையாக்கியது சிறப்பு….
அந்த அடர் இருளைக்கூட குறைந்த ஒளி என்று ஏன் சொல்ல முடிந்தது? குறைந்த ஒளியில் கொஞ்சமாவது எதிரில் நிற்பவை கண்ணுக்கு அகப்படுமே….. அந்த நம்பிக்கை தான் மௌன மொழியை தேயவைத்து மௌனத்தை குலையவைத்து ஒரு ஒளிக்கீற்று புன்னகையாவது தரச்சொல்லி வேண்டுகிறது மனம்….
உன் மௌனம் கூட எனக்கு குறைந்த மொழியென ஏன் படுகிறது? நம்பிக்கை கொண்ட மனம் என்றாவது ஏதேனும் ஒரு நிமிடத்தில் மௌனம் கலையாதா என்ற நம்பிக்கையில் நைப்பாசையில் அரற்றும் மனது மௌனத்தை ஏற்றுக்கொள்வதில்லை…
இருள் யாருக்குமே பயத்தை தோற்றுவிப்பது இயல்பு… ஆனால் இரு மனங்களில் ஒன்று மௌனத்தை மட்டுமே முகமூடியாய் இட்டுக்கொண்டால் நேசிக்கும் இன்னொரு மனம் தவிப்பதை அதன் துடிப்பை மிக அருமையாக வரிகளில் கொண்டு வந்திருக்கீங்க ரமணிசார்..
ஆம் இல்லை? இந்த ரெண்டில் ஒன்று தான் பதில்…. ஆனால் இல்லை என்ற பதிலை ஏற்கும் தைரியம் கண்டிப்பாக மனதுக்கு இல்லை…. அதனால் தான் இத்தனை அச்ச உணர்வும் குழப்பமும் மிரள்வதும்….
கிடைக்கும் பதில் இல்லை என்பதை விட இந்த புரியா மௌனமே கொஞ்ச நாள் தொடரட்டும் என்று மனதை சமாதானம் செய்துக்கொண்டாலும்…..
எத்தனை நாளைக்கு தான் இந்த மௌன நாடகம்? மௌனத்தை உடைத்து நேசத்தை சொல்லவில்லை என்றாலும் பரவாயில்லை… ஆனால் என் மனமும் அதில் நான் வைத்திருக்கும் நேசமும் அறிவாயா பெண்ணே என்று உள்ளுக்குள் எழும் கூச்சலை கேட்கும் திறன் மட்டும் இருந்திருந்தால் மௌனம் எப்போதோ கலைந்திருக்கும் கண்டிப்பாக….
ஆனாலும் நம்பிக்கைத்துளிர் வித்தாய் மனதில் இருப்பதால் தான்… உன் மௌனம் கலையும் வரை புரியாத ஒற்றை புன்னகையாவது? கண்சுருக்கி மனம் இளகி சிரிக்கும் ஒரே ஒரு ஒற்றைப்புன்னகை என் மனதை ஆறுதல் படுத்துமே என்று மனம் உருகி கரைந்து வரைந்த வரிகள் சிறப்பு ரமணிசார்…
இதற்கு உவமையாக சொன்ன கடைசி பத்தி வெகுவாக ரசித்தேன்…
அர்த்தமற்று பூரித்து திரியும்…. அருமை அருமை….
மனம் இருக்கும் நிலை அப்படி….. ஒரு சின்ன ஒளிக்கீற்றாய் தெரியும் புன்னகைக்கு இருக்கும் மகத்துவம் அறியவும் முடிகிறது….
மௌனம் என்று நீங்க நினைப்பது போல அங்கே புறத்தில் மௌனமுகமூடி அணிந்து தவிப்பை அறிந்து உள்ளுக்குள் இடும் சந்தோஷக்கூச்சலை கண்டிப்பாக எத்தனை நாளைக்கு தான் மறைக்கமுடியும்? அல்லது மறுக்கமுடியும்? கண்டிப்பாக ஒரு நாள் மௌனம் கலையும் புன்னகை மிளிரும் இரண்டு மனமும் ஒன்று சேரும்…
மௌனத்தால் ஒரு மனம் எப்படி எல்லாம் தத்தி தத்தளித்து கரைந்து உருகி அரற்றும் வரிகளாக மனதில் இருக்கும் அந்த நேச உணர்வை அப்படியே வரிகளில் கொண்டு வந்துட்டீங்க ரமணி சார்.....
மிக அழகிய சிந்தனை வரிகள் ரமணி சார்… அன்பு வாழ்த்துகள்…
மஞ்சுபாஷிணி//
ஒரு உண்மையைச் சொல்லட்டுமா
உங்கள் ஒரே ஒருமுறை பதிவின் படத்தைப் பார்த்து
இதற்கென நாம் ஒரு கவிதை எழுதலாமா என
யோசிக்கப் பிறந்த கவிதை
அதே படத்தைப் போட்டால் சரியாக இருக்காது
என்றுஎன் பெண்தான் இந்தப் படத்தை தேர்தெடுத்துக் கொடுத்தாள்
ஆகவே இக்கவிதை பிறக்கக் காரணமே தங்கள் பதிவுதான்
எனவே உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி
வழக்கம்போல கவித்துவமான பின்னூட்டம் தந்து
படைப்புக்கு பெருமை சேர்த்தமைக்கு மனமார்ந்த நன்றி
//விழிகளை அகலத் திறந்திருந்தபோதும்
அடர்ந்த இருளில்
பொருட்கள் புலப்படாதது மட்டுமின்றி
அர்த்தமற்ற அச்ச உணர்வையும்
அதீத தொடர் கற்பனைகளையும்
வளர்த்துப் போவதைப்போல்
உன் காரணம் புரியாதொடர் மௌனம் என்னுள்
எதிர்மறை எண்ணப் புயலையும்
தேவையற்ற அச்ச அலைகளையும்
வளர்த்துவிட்டுத்தான் போகிறது
அடர்வனத்தில் திசைகள் அறியாது
குழம்பித் திரிகிறேன் நான்//
அருமையான வரிகள்
ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்
நீ பேசவேண்டியதே இல்லை போகிற போக்கில்
ஒரு அர்த்தமற்ற புன்னகையை மட்டுமாவது
உதிர்த்துவிட்டுப் போ
அது போதும் எனக்கு. . .அருமையான வரிகள் sir. . . அவளின் பார்வையில் அடங்கியிருக்கின்றது அனைத்து அர்த்தமும். . .
நானே நினைச்சேன் ரமணி சார் இதை சொல்ல கவிதையின் வரிகளில் இதை சொல்ல மறந்துட்டேன்...
ஹை அட நம்ம கவிதைக்கு போட்ட படம் போலவே இவரும் சேம் பிஞ்ச் போட்டிருக்காரேன்னு நினைச்சேன்...
ஆனால் இந்த படத்துக்கு நீங்க யோசித்த வரிகள் தான் அசத்தல் ரமணி சார்....
கவிதைக்கு தான் படம் என்பது போய் நீங்க படத்தை பார்த்து இப்படி ஒரு கவிதை அசத்தலா எழுதுவீங்கன்னு ஹுஹும் சான்ஸே இல்ல ரமணி சார்....
படம் பார்த்தப்ப கண்டிப்பா நான் சேம் பிஞ்ச் நு நினைச்சேன் ஆனா அதுக்கப்புறம் என் மூளை போகலை... யோசிக்க தெரியாம உங்க கவிதை வரிகள் என்னை வாசிக்க வைச்சது...
சேலஞ்சிங்கா நீங்க செய்தது அருமையான அழகான கவிதையா எங்களுக்கு கிடைச்சிட்டுது ரமணிசார்...
ராக்கெட் ராஜா //
தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
ராக்கெட் ராஜா//
தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
பிரணவன்
தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
அருமையாக இருக்கிறது கவிதை!
விக்கியுலகம்//
தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
''....அந்தப் பாலொளிப் பரவலில்
அர்த்தமற்றுப் பூரித்துத் திரியும்
அறிவற்றப் புள்ளினங்கள் போல்
மகிழ்ச்சிக் கடலில்
சிறிது நேரமாவது நானும்....''
மிக வித்தியாசமாக...நல்லது...பாராட்டுகள்....
வேதா. இலங்காதிலகம்.
kovaikkavi //
தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
இளமையான கவிதை சகோ, ரொம்ப ரசித்துப் படித்தேன் கடைசி எட்டு வரிகளையும். நன்றி
காந்தி பனங்கூர்//
தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
உன் மௌனம் கூட எனக்கு
குறைந்த மொழியெனத்தான் படுகிறது
ஒரு அர்த்தமற்ற புன்னகையை மட்டுமாவது
உதிர்த்துவிட்டுப் போ
அருமையான வரிகள்
வருகை தொடரும்!மிக நன்று!
yகதிரவன் எழுமுன் தோன்றும்
அந்தப் பாலொளிப் பரவலில்
அர்த்தமற்றுப் பூரித்துத் திரியும்
அறிவற்றப் புள்ளினங்கள் போல்
மகிழ்ச்சிக் கடலில்
சிறிது நேரமாவது நானும்
திளைத்துத் தொலைக்கிறேன்
உன் மௌனம் கலைத்தொரு புன்னகையை
சிந்திவிடு தாயே இவர்மனம் குளிர ............
மிக்க நன்றி ஐயா தங்களின் அருமையான
கவிதைப் பகிர்வுக்கு .......
தமிழ்மணம் 20 வாழ்த்துக்கள் ஐயா ................
r.v.saravanan //
தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
சீனுவாசன்.கு//
தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
அம்பாளடியாள்//
தங்கள் மேலான வரவுக்கும்
வாழ்த்துக்கும் வாக்கிற்கும்
மனமார்ந்த நன்றி
'புன்னகை முழுமையாகக்கூடக் கிடைக்க வேன்டுமென்பதில்லை. அது அர்த்தமற்று கிடைத்தாலும் எனக்கு ஆனந்தம் தான் என்று முடிக்கும் இந்த அருமையான கவிதைக்கு இனிய வாழ்த்துக்கள்!!
உங்கள் மகள் தேந்தெடுத்த புகைப்படமும் மிகவும் அழகும் அர்த்தமும் கொண்டது!
மனோ சாமிநாதன் //.
தங்கள் மேலான வரவுக்கும்
வாழ்த்துக்கும் வாக்கிற்கும்
மனமார்ந்த நன்றி
அடர் இருளுக்கும்
உன் தொடர் மௌனத்திற்கும்தான்
எத்தனைப் பொருத்தம் ?/
அழகான வரிகளுக்குப் பாராட்டுக்கள்..
புரியாத மௌனத்திற்காக மனம் குழம்பும் குழப்பத்திற்கு எத்தனை ஒப்பீடுகள். காலைவேளை புள்ளினங்கள், இருளில் அகலத் திறந்திருக்கும் விழிகள், அப்பப்பா ஒன்றை நினைக்க அது ஒன்றாகி விடுவது போல் மனம் காணும் கற்பனையே உண்மைக் காரணத்தை மழுங்கடிக்கச் செய்துவிடும். எனவே மௌனமே நீ மௌனித்துப் போ என்பது போல் புன்னகைத்துவிட்டாவது போ என்று அழகாகக் கூறியிருக்கின்றீர்கள். உங்கள் கவியாற்றலுக்கு வாழ்த்துகள்
இராஜராஜேஸ்வரி.
தங்கள் மேலான வரவுக்கும்
வாழ்த்துக்கும் வாக்கிற்கும்
மனமார்ந்த நன்றி
சந்திரகௌரி //
தங்கள் மேலான வரவுக்கும்
வாழ்த்துக்கும் வாக்கிற்கும்
மனமார்ந்த நன்றி
காட்டான்
வித்தியாசமான பின்னூட்டத்திற்கு எனது
மனமார்ந்த நன்றி
சந்திரகௌரி //
கவித்துவமான உங்கள் பின்னூட்டத்தை
மீண்டும் ஒருமுறை படித்து ரசித்தேன்
மனமார்ந்த வாழ்த்துக்கள்
Post a Comment