பாலை விரும்பிக் குடிப்பதுதான்
பூனையின் இயற்கைக் குணம்
அதை மாற்றுவதற்கு நாம்
அதிகம் மெனக்கெட வேண்டியதில்லை
முதலில் பாலைக் கொடுக்கையிலேயே
மிக மிக சூடாய் கொடுத்திடவேண்டும்
சூடு பொறுக்காது
பாலைக் குடிக்காது ஒடிவிடும்
திரும்ப பசியெடுத்து வருகையில்
மீண்டும் சூடாகக் கொடுக்கவேண்டும்
இப்படித் தொடர்ந்து செய்ய
சூடாக பாலிருக்கிறது என்பதை மறந்து
வெண்மையாக இருப்பதெல்லாம்
சுடும் என்று நம்பத் துவங்கிவிடும்
இனி வெண்மையாக எதைக் கண்டாலும்
பயந்து ஓடத் துவங்கிவிடும்
இனி நமக்கு கவலை இல்லை
பூனை எப்படி ஆனால் என்ன
நமக்கு பால் செலவு மிச்சம்
இப்படித்தான்
கேள்விகள் கேட்பதுதான்
குழந்தைகளின் இயற்கைக் குணம்
அதை மாற்றுவதற்கும் நாம்
அதிகம் மெனக்கெட வேண்டியதில்லை
முதல் கேள்வி கேட்கையிலேயே
அதை அடக்கி ஒடுக்க வேண்டும்
நம் கோபம் பொறுக்காது
கேள்வி கேட்காது அடங்கிவிடும்
மீண்டும் ஆர்வம் பொங்க
கேள்வி கேட்கத் துவங்கினால்
அரட்டி மிரட்டி அடக்க வேண்டும்
இப்படித் தொடர்ந்து செய்ய
கேள்வி கேட்பதே தவறு என
அப்பாவுக்கு கோவம் வருமென
அந்தப் பிஞ்சு மனதிற்குத் தெரிந்துபோகும்
இனி மனதில் கேள்வி எழுந்தாலே
அடக்கிக் கொள்ளப் பழகிவிடும்
இனி நமக்கு கவலை இல்லை
நம் குழந்தை முட்டாளானால் என்ன
நச்சரிப்பு தொல்லை இனி நமக்கில்லை
--------------- --------------
டிஸ்கி:குழந்தைகள் மனத்தை புரிந்து கொள்ளாது
சிறுவர்களாகவே இருக்கிற வயதில் பெரியவர்கள்
புரிந்துகொள்வதற்காக சிறுவர் மலர் விஷயம்போல
மிக மிக எளிமையாய் சொல்லப்பட்டுள்ளது
பெரியவர்கள் மன்னிக்க வேண்டும்
பூனையின் இயற்கைக் குணம்
அதை மாற்றுவதற்கு நாம்
அதிகம் மெனக்கெட வேண்டியதில்லை
முதலில் பாலைக் கொடுக்கையிலேயே
மிக மிக சூடாய் கொடுத்திடவேண்டும்
சூடு பொறுக்காது
பாலைக் குடிக்காது ஒடிவிடும்
திரும்ப பசியெடுத்து வருகையில்
மீண்டும் சூடாகக் கொடுக்கவேண்டும்
இப்படித் தொடர்ந்து செய்ய
சூடாக பாலிருக்கிறது என்பதை மறந்து
வெண்மையாக இருப்பதெல்லாம்
சுடும் என்று நம்பத் துவங்கிவிடும்
இனி வெண்மையாக எதைக் கண்டாலும்
பயந்து ஓடத் துவங்கிவிடும்
இனி நமக்கு கவலை இல்லை
பூனை எப்படி ஆனால் என்ன
நமக்கு பால் செலவு மிச்சம்
இப்படித்தான்
கேள்விகள் கேட்பதுதான்
குழந்தைகளின் இயற்கைக் குணம்
அதை மாற்றுவதற்கும் நாம்
அதிகம் மெனக்கெட வேண்டியதில்லை
முதல் கேள்வி கேட்கையிலேயே
அதை அடக்கி ஒடுக்க வேண்டும்
நம் கோபம் பொறுக்காது
கேள்வி கேட்காது அடங்கிவிடும்
மீண்டும் ஆர்வம் பொங்க
கேள்வி கேட்கத் துவங்கினால்
அரட்டி மிரட்டி அடக்க வேண்டும்
இப்படித் தொடர்ந்து செய்ய
கேள்வி கேட்பதே தவறு என
அப்பாவுக்கு கோவம் வருமென
அந்தப் பிஞ்சு மனதிற்குத் தெரிந்துபோகும்
இனி மனதில் கேள்வி எழுந்தாலே
அடக்கிக் கொள்ளப் பழகிவிடும்
இனி நமக்கு கவலை இல்லை
நம் குழந்தை முட்டாளானால் என்ன
நச்சரிப்பு தொல்லை இனி நமக்கில்லை
--------------- --------------
டிஸ்கி:குழந்தைகள் மனத்தை புரிந்து கொள்ளாது
சிறுவர்களாகவே இருக்கிற வயதில் பெரியவர்கள்
புரிந்துகொள்வதற்காக சிறுவர் மலர் விஷயம்போல
மிக மிக எளிமையாய் சொல்லப்பட்டுள்ளது
பெரியவர்கள் மன்னிக்க வேண்டும்
111 comments:
// இனி நமக்கு கவலை இல்லை
நம் குழந்தை முட்டாளானால் என்ன
நச்சரிப்பு தொல்லை இனி நமக்கில்லை //
மிக மிக.. உண்மை.. உண்மையான கருத்துக்கள்..
---> "தீதும் நன்றும் பிறர் தர வாரா..."
பெற்றோர்களின் கடமையை 'சூடாக' உணர்த்துகிறது வரிகள்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா...
நம் கடமையை நன்றாகவே உணர்த்தி இருக்கிறீர்கள்..
//இப்படித் தொடர்ந்து செய்ய
சூடாக பாலிருக்கிறது என்பதை மறந்து
வெண்மையாக இருப்பதெல்லாம்
சுடும் என்று நம்பத் துவங்கிவிடும்
இனி வெண்மையாக எதைக் கண்டாலும்
பயந்து ஓடத் துவங்கிவிடும்
// அருமையான உவமானம் ஐயா.
//இனி நமக்கு கவலை இல்லை
நம் குழந்தை முட்டாளானால் என்ன
நச்சரிப்பு தொல்லை இனி நமக்கில்லை// அருமையான கருத்திது.அழகிய வார்த்தைகளை இப்படி சர சரவென் கவிதையாய் கோர்த்து விடுகின்றீர்களே..சபாஷ்!!!!
கேள்வி கேட்பது குழந்தைகளின் உரிமை, அதற்கு பதில் சொல்லவேண்டியது நம் கடமை. கடமை தவறுவோர் முதலில் சாட்டை சுழற்றுவது உரிமை கோருவோர் மேல்தானே?
நாம் முட்டாளென்று தெரியாமலிருக்க பிள்ளைகளையும் முட்டாளாக்கிவிடுகிறோம். எவ்வளவு பெரிய தவறு இது? சூடு கண்ட பூனைக் கதையைக் கொண்டே சோம்பியிருக்கும் புத்திக்கு சூடு போட்ட உங்கள் முயற்சிக்குப் பெரும் பாராட்டுக்கள் ரமணி சார்.
ஒரு பிள்ளைக்கு தகப்பனாகிய எனக்கும் இது பயனுள்ளதாக இருக்கும் சகோ. முளையும் பயிரை கிள்ளி விடாமல் அதை தண்ணீர் ஊற்றி வளர்க்க வேண்டும் என்று அழகாக சொல்லியிருக்கீங்க சகோ. நன்றி
நல்ல சிந்தனை அன்பரே..
அழகாகச் சொன்னீர்கள்.
உண்மைதான்.
அளவுக்கதிகமாகக்
கேள்வி கேட்டால் அந்தக் குழந்தைக்குக் கிடைக்கும் பெயர்..
வாயாடி
அதிகப்பிரசங்கி
என்பதுவே..
//இனி நமக்கு கவலை இல்லை
நம் குழந்தை முட்டாளானால் என்ன
நச்சரிப்பு தொல்லை இனி நமக்கில்லை//
அருமை.
குழந்தைகளின் கேள்விகளுக்கு நாம் கட்டாயம் பதில் சொல்லவேண்டும்.அப்பொழுதுதான் அவர்கள் அறிவாளிகளாக வளர்வார்கள்.
நல்ல பகிர்வு.பகிர்வுக்கு நன்றி.
அழகான உவமையுடன் குழந்தைகளுடன் பெற்றோர்கள் எப்பிடி நடக்க வேண்டும் என்பதை விளக்கிய தங்களது பதிவிற்கு நன்றி
தமிழ் மணம் 4
ரமணி அய்யா,
சூப்ப்ப்பர்!
இப்படித் தொடர்ந்து செய்ய
கேள்வி கேட்பதே தவறு என
அப்பாவுக்கு கோவம் வருமென
அந்தப் பிஞ்சு மனதிற்குத் தெரிந்துபோகும்
இனி மனதில் கேள்வி எழுந்தாலே
அடக்கிக் கொள்ளப் பழகிவிடும்//
ஒரு முட்டாள் உருவாகிறான்...
செமையா வாங்கு வாங்குன்னு வாங்கியிருக்கீங்க குரு...!!
நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.
அருமையான கவிதை!
குழந்தைகளை இப்படித்தான் அவர்களின் ஆர்வத்தையும் புத்திசாலித்தனத்தையும் அடக்கி அதட்டி வைக்கும் பெற்றோருக்கு சரியான சாட்டையடி!
ரெம்ப ரெம்ப நல்ல(?) யோசனை. ஆனால் பெற்றோர்களுக்கு உறைக்கிறப்படி கொடுத்துள்ளீர்கள்.
குழந்தைகள் அறிவாளிகளாகத் திகழ அவர்கள் அதிகம் நம்மிடம் கேள்விகள் கேட்க வேண்டும். நாம் அதற்கு பொறுமையாக பதில் சொல்லித்தான் ஆக வேண்டும் என்பதை வெகு அழகாக எதிர்மறையாக ஆரம்பித்து நேர்மறையாக, நேர்மையாக விளக்கியுள்ளது எனக்கு மிகவும் பிடித்துள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள். [தமிழ்மணம்: 9] vgk
ஆரம்பத்தில் ஏதோ பூனைக் கதை என்று நினைத்தேன்.
ஆனால் மெசேஜ் அருமை.
குழந்தைகள் நச்சரிக்கின்றன என்ற கண்ணோட்டத்தில் மட்டும்தான் சில பெற்றோர்கள் பார்க்கின்றனர். அவர்கள் கேட்கும் கேள்விகள், குழந்தைகளின் அறிவை மட்டுமல்ல, பெற்றோர்களின் அறிவையும் வளர்க்கும் என்பதை பெரும்பாலானோர் புரிந்துகொள்வதில்லை.
முற்றிலும் உண்மை. கேள்விக்கு பதில் சொல்லமுடியாத பொறுமையின்மை, குழந்தைகளை முட்டாளாக்கிவிடுகிறது. இது பெற்றோருக்கு மட்டுமல்ல சில ஆசிரியரகளுக்கும் பொருந்தும். கவிதை சிந்திக்க வைக்கிறது.
அருமை .
பெரும்பாலான வீடுகளில் நடக்கும் விஷயத்தினை அழகிய கவிதை போல சுடச்சுட சொல்லி இருப்பது அழகு. கேட்டக் கேட்கத் தானே அறிவு வளரும்.... நல்ல சிந்தனை...
Madhavan Srinivasagopalan //.
தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
சிசு //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
வேடந்தாங்கல் - கருன் *!
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
ஸாதிகா//
தங்கள் உடன் வரவுக்கும் விரிவானவாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
கீதா //
அழகான விளக்கப் பின்னூட்டம் மூலம் படைப்புக்கு
பெருமை சேர்த்தமைக்கும் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
காந்தி பனங்கூர்//.
முளையும் பயிரை கிள்ளி விடாமல் அதை தண்ணீர் ஊற்றி வளர்க்க வேண்டும் என்று அழகாக விளக்கப் பின்னூட்டம் மூலம் படைப்புக்கு
பெருமை சேர்த்தமைக்கும் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி //
முனைவர்.இரா.குணசீலன் //
தங்கள் வரவும் வாழ்த்தும் எனக்கு
அதிக ஊக்கமளிக்கிறது
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
பெற்றோர்கள் அனைவரும் படிக்க வேண்டிய கவி...
நானும் இப்பவே படித்து மண்டையில் ஏத்தி வைக்கிறேன்....ஹீ ஹீ
RAMVI //
குழந்தைகளின் கேள்விகளுக்கு நாம் கட்டாயம் பதில் சொல்லவேண்டும்.அப்பொழுதுதான் அவர்கள் அறிவாளிகளாக வளர்வார்கள்.
அழகான விளக்கப் பின்னூட்டம் மூலம் படைப்புக்கு
பெருமை சேர்த்தமைக்கும் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
உங்கள் கவிதைகள் ஒவ்வொன்று அசத்தல் தான்,
வாழ்க்கையின் ரகசியங்களை சொல்லி தரும்
அழகு கவிதைகள் உங்களுடையது.
M.R //
அழகான உவமையுடன் குழந்தைகளுடன் பெற்றோர்கள் எப்பிடி நடக்க வேண்டும் என்பதை விளக்கிய தங்களது
தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
வாக்கிற்கும் மனமார்ந்த நன்றிபதிவிற்கு நன்றி
சத்ரியன் //
சுருக்கமாக ஒரு வார்த்தையில் சொன்னாலும்
மனம் குளிர பின்னூட்டமிட்ட தங்களுக்கு
என் உள்ளம் கனிந்த நன்றி
MANO நாஞ்சில் மனோ //
ஒரு முட்டாள் உருவாகிறான்...
நான் நாற்பது வரிகளில் சொல்ல முயன்ற விஷயத்தை
மிகச் சரியாக ஒரு வார்த்தையில் சொல்லி படைப்புக்கு
பெருமை சேர்த்தமைக்கு மனமார்ந்த நன்றி ...
Rathnavel //
ஐயா தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
என் மனமார்ந்த நன்றி
அன்பின் வழியது உயிர்நிலை-ஒத்த
பண்பின் வழியது நம்நிலை
என்பின் தோலது எனநட்பே-நம்
இருவர் மாட்டு உள பொட்பே
கருத்துக் கருதனை நனிபாடல்-உம்
கற்பனை வழியே தினந்தேடல்
பொருத்தமே பூணையின் வழிகண்டீர்-அதை
பொலிவுற இங்கே நீர்விண்டீர்
புலவர் சா இராமாநுசம்
மனோ சாமிநாதன் //
தங்கள் மேலான வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றி
மிகஸ் சிறந்த கருத்தை மிக எளிதாக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல ஏற்றி இருக்கிறீர்கள். இது போன்ற நல்ல பதிவுகள் வரவேற்கப் படுகின்றன..நன்றி ஐயா...
டிஸ்கி ; இந்த கால குழந்தைகளுக்கு மனதில் கேள்வி வந்தால் அப்பாவிடம் கேள்வி கேட்பதில்லை. Google -லிடம்தான் போய் கேள்விகள் கேட்கின்றன. அதனால் உங்களை போல் நல்லவர்கள் எழுதும் நல்ல பதிவுகள் மூலம்தான் அவர்களுக்கு நல்ல பதில்கள் கிடைக்கின்றன. அதனால் எல்லோரும் மிக நல்ல பதிவுகளை எழுத உங்கள் ப்ளாக் மூலம் வேண்டுகோள்விடுவிக்கிறேன். நன்றி
சூப்பர் வரிகள். பிள்ளைகள் என்ன கேட்டாலும், எவ்வளவு மடத்தனமான கேள்வியாக இருந்தாலும் பதில் சொல்வதை என் கடமையாக வைத்திருக்கிறேன். சில வேளைகளில் பதில் தெரியாத கேள்விகள் ( அந்தக் கார் ஏன் வேகமா போகுது இது போலக் கேள்விகள் ) எனில் நகைச்சுவையாக பதில் சொல்லி சமாளிப்பதுண்டு.
பெற்றோரெல்லாரும் கட்டாயம் படிக்கவேண்டிய 'சுளீர்' கவிதை!
உரை போல் அமைந்த உறைக்கும்படியான கவிதை.
வை.கோபாலகிருஷ்ணன் //.
தாங்கள் என் பதிவு ஒன்றுக்கு பின்னூட்டம் இடும்போது
குழந்தைகள் தவறாகப் பதில் சொன்னால் கூட
அவர்களை உடனடியாக மறுக்காமல் சரியான விடைக்கு
மிக அருகில் வந்துவிட்டாய் என ஆறுதலாக பதில் சொல்லி
உற்சாகப் படுத்தவேண்டும் என எழுதிஇருந்தீர்கள்
அந்த விஷயம் எனக்குள் வெகு நாட்களாக
இருந்துகொண்டே இருந்தது அதைத்தான்
இப்போது இப்படி ஒரு பதிவாக்கி இருக்கிறேன்
இன்னும் தங்கள் கதைகளிலும் பின்னூட்டங்களிலும்
மனதைக் கவர்ந்த பல விஷயங்கள் எழுதப்படாமல்தான் உள்ளன
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி
தமிழ் உதயம்.
தங்கள் மேலான வரவுக்கும்
வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றி
இந்திரா //
தங்கள் மேலான வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றி
சாகம்பரி //
இது பெற்றோருக்கு மட்டுமல்ல சில ஆசிரியரகளுக்கும் பொருந்தும். கவிதை சிந்திக்க வைக்கிறது
.தங்கள் மேலான வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றி
நண்டு @நொரண்டு -ஈரோடு //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
வெங்கட் நாகராஜ் //
பெரும்பாலான வீடுகளில் நடக்கும் விஷயத்தினை அழகிய கவிதை போல சுடச்சுட சொல்லி இருப்பது அழகு.
.தங்கள் மேலான வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றி
துஷ்யந்தன் //
பெற்றோர்கள் அனைவரும் படிக்க வேண்டிய கவி...
நானும் இப்பவே படித்து மண்டையில் ஏத்தி வைக்கிறேன்....ஹீ ஹீ
ஹி..ஹி க்கு அர்த்தம் புரிகிறது
சீக்கிரம் நல்லது நடக்க வாழ்த்துக்கள்
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
என் மனமார்ந்த நன்றி
புலவர் சா இராமாநுசம்//
ஐயா தங்கள் மேலான வரவுக்கும்
வாழ்த்துக் கவிதைக்கும் எனது
மனமார்ந்த நன்றி
Avargal Unmaigal //
சிறந்த கருத்தை மிக எளிதாக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல ஏற்றி இருக்கிறீர்கள். இது போன்ற நல்ல பதிவுகள் வரவேற்கப் படுகின்றன..
தங்கள் மேலான வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றி
vanathy //
தங்கள் மேலான வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றி
சுந்தரா //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
Murugeswari Rajavel //
பின்னுரையில் குறிப்பிட்டுள்ளதைப்போல
உரை நடையைப் போலவே இருக்கட்டும் என எண்ணித்தான்
இதை எழுதினேன்.வடிவங்களை எப்போதும் கரு
முடிவு செய்துகொள்ளும்படியாகவே விட்டுவிடுவதை
ஒரு கோட்பாடவே கொண்டிருக்கிறேன்
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
எனது மனம் கனிந்த நன்றி
நம் கடமையை நன்றாகவே உணர்த்தி இருக்கிறீர்கள்...
சந்தேகமின்றி நாம் அனைவரும் தெனாலிராமன்களே!
அருமை,ரமணி.
இப்படில்லாம் பெற்றோர் இருந்தா அந்தக்குழந்தைகள் ஐயோ பாவம்தான்
நமது பெற்றோர், நடந்த வழியில் தான் நாமும் நடக்கிறோம்! பொறுத்திருந்து கவனிப்போம் - நமது சந்ததியினராவது மாறுவரா என்று!
ரெவெரி //.
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
சென்னை பித்தன் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
Lakshmi //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
ரம்மி //
தங்கள் மேலான வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றி
என்ன ஒரு முடிவோடு தான் களமிறங்கினீங்களா ரமணி சார்?
ஆனால் இந்த வித்தியாசமான படைப்பு ம்ம்ம்ம்ம் ஹார்ட் டச்சிங்….
எங்கோ ஏதோ தப்பு நடக்குது… அதை தடுக்கமுடியாத வேதனை….
ஏன் இப்படி பண்றீங்கன்னு கேட்க முடியாத உரிமை…
அதனால?? சும்மா உட்கார்ந்துட முடியுமா?? அது நம் பிள்ளைகளுக்கு செய்யும் துரோகம் அல்லவா? அப்ப என்ன செய்யலாம்??
பாடம் புகட்டலாம்… எப்படி….
இப்படி….
இதோ இப்படியே தான்…
கண்ணுக்கு தெரிஞ்சு ஒரு பெற்றோர் இப்படி குழந்தையின் மூளையை மழுங்கடிக்கிறாங்க…
இன்னும் எனக்க்கு தெரியாம எத்தனை குழந்தைகளின் திறமைகள் புத்திசாலித்தனங்கள் முடக்கப்படுகிறதோ யாருக்கு தெரியும்….
விடக்கூடாது…
நச்னு கேக்கணும்.. படிக்கும்போதே இப்படி நடக்கும் பெற்றோருக்கு சுருக்குனு உறைக்கனும்… அது தான் நான் எழுதிய வரிகளுக்கு கிடைக்கும் வெற்றி… இப்படி ஒவ்வொருத்தராக திருந்த ஆரம்பித்தால்….
குழந்தைகளின் உலகத்தில் க்ரியேட்டிவிட்டி மலரும்.. கேள்விகள் பிறக்கும்… அது என்ன இது என்ன கேட்டு பதிலையும் தேடி அலையவைக்கும்….
அட குழந்தைங்கப்பா…. வேறெங்க போவாங்க?
பெற்றோரை தானே கேட்க முடியும்? இல்லன்னா ஆசிரியை.. இல்லன்னா நண்பர்களை… இல்லன்னா அக்கா அண்ணா….
ஆசிரியர் கிட்ட கேட்க பயம்…. சரி அம்மாப்பா கிட்ட? அவங்களுக்கு டிவி பார்க்கவே டைம் சரியா இருக்கும்… சீரியலில் அவங்களுக்கே பக்கத்து வீட்டு ஆண்ட்டி கிட்ட கேட்கவேண்டிய டவுட் நிறைய இருக்கு… என்னடி இன்னிக்கு பாலாம்பிகா ரெண்டாவது கல்யாணம் பண்ணிண்ட்ருவாளா? இப்படி சொத்தை கேள்விகள்…. சரி அப்பாக்கிட்ட கேளேம்பா… அப்பா தானே? அப்பாக்கு மாலை வாக் போகணும்… போய் வந்ததும் லேப்டாப்புல மூழ்கிடுவார்… அண்ணா அக்கா இருக்காங்களா? ஓஓஓ இருக்காங்களே? கேளேம்பா அவங்க கிட்ட… கேட்டேனே…. ஏ போடி உன் வயசு பிள்ளைக கிட்ட கேக்காம எங்க உயிரை வாங்குறே.. அப்புறம் சொல்லுடி நாளை ஃபேர்வெல் பார்ட்டிக்கு போட்டுக்க சுரிதாருக்கு மேட்சிங் கம்மல் வாங்க ஸ்பென்ஸர் ப்ளாசா போகலாமா?
இப்படி ஒருத்தர் ஒருத்தரிடமா அப்படி என்ன கண்ணா டவுட் கேட்டே??
அன்னா ஹசாரே அப்டின்னு ஒரு தாத்தா நம்ம காந்தி தாத்தா மாதிரியே அஹிம்சையா போராடுறாமே… ஏம்மா? ஏம்பா? ஏன் அண்ணா? ஏன் அக்கா? ஏன் டீச்சர்??
தொடர்கிறது ரமணி சார்...
சோ இப்படி ஒவ்வொரு குழந்தைகளின் கற்பனை உலகம் சுருக்கப்படுகிறது… அதுவும் துடிக்க துடிக்க…. மீறி உலகம் விரிந்து அதில் பூக்கள் மலர்ந்து மணம் வீச ஆரம்பிச்சிட்டால் குழந்தைகளுக்கும் ஆசையுடன் பூக்களை பறித்து விளையாட ஆசை வருகிறது… அம்மா நம்ம தோட்டத்துல ஒரு பூ ரெட் கலர்ல இருக்கே அதுக்கு அக்கா சைன்ஸ் பேர் சொல்றாங்க என்னபேரும்மா அது?
ஏன் , எதற்கு, என்ன இப்படி கேள்விகள் கேட்டுக்கொண்டே போகும் பிள்ளைகள் சரியான பதிலைப்பெற்றுவிட்டால் தன்னுடைய க்ரியேட்டிவிட்டியை கூட தட்டிவிட்டுக்கொள்ளும்…
எங்கே போனாலும் அது என்ன இது என்ன இது ஏன் இப்படி அது ஏன் அப்படி… இப்படி இடைவிடாத கேள்விகள் கேட்டு அலுத்து போகவில்லை குழந்தைகள்…. ஓரிடத்தில் பதில் கிடைக்கலன்னாலும் சோர்ந்துவிடவில்லை… வேறிடம் தேடி ஓடுகிறது பதிலுக்காக… ஆனால் பதில் பெறுகிறதா என்றால்…..
அப்படி பதில்கள் பெற்றிருந்தால் இன்னைக்கு இப்படி ஒரு கவிதை உங்களால் வரையப்பட்டிருக்காது ரமணி சார்..
பல பேரின் நெஞ்சை சரியா குறி வெச்சு தாக்கிய வரிகள் கண்டிப்பா… தன் தவற்றை சரி செய்துக்கொள்ளும் முயற்சிப்பாங்க வேக வேகமா…
நாளை ஒரு விஞ்ஞானியாக, அறிஞராக, ஆராய்ச்சியாளராக நம் குழந்தை வந்தால் அது நமக்கு பெருமை தானே?
அப்ப குழந்தைகளின் அவசியங்களை தேவைகளை அதன் திறமைகளை வளர்க்க அதனுடைய முதல் ஸ்டெப் தான்…. நிறைய கேள்விகள் கேட்பது அம்மா அப்பாக்கிட்ட…
ரமணி சார் உங்க வரிகள் படிச்சப்ப நான் ஷாக் ஆகிட்டேன்… எத்தனை வருத்தம் கோபம் ஆதங்கம் இயலாமை இப்படிப்பட்ட கலவையான உணர்ச்சிகள் உங்களை இந்த கவிதை எழுதவைக்கும்போது ஏற்பட்டிருக்கும்… கண்டிப்பா…..
எங்கள் எல்லோரையுமே கேள்வி கேட்க வைத்த சரியான கவிதை ஐயா…
எங்க குட்டிப்பையன் நிறைய கேட்பான் ஐயா… இதோ இந்த கவிதையில் வருவது போல என்னென்னவோ கேட்பான்… ஆனால் நானும் இபான் அப்பாவும் திரு திருன்னு விழிப்போம்… எங்கம்மா மட்டும் என் பக்கம் இல்லன்னா நான் என்ன கதி ஆகி இருந்திருப்பேனோ..
இதோ இப்பவும் அம்மா இபானை படிக்கவைக்கும் குரல் கேட்டுக்கொண்டே இருக்கிறது…. இபானின் கேள்விகளுக்கெல்லாம் அம்மா தான் தயங்காமல் பதில் சொல்வது… தெரியலன்னாலும் விடுவதில்லை… நெட்ல தேடி எடுத்து கொடுப்பது … எங்கனா எதுனா படித்து… ரொம்ப கண்டிப்பானவங்க…
நாங்க வாங்காத அடி இல்லை.. அம்மா எங்களுக்கு கொடுத்தது கல்வி, ஒழுக்கம், இனிமை, அன்பு, கருணை…. இதோ இன்னைக்கு நல்லாருக்கோம் நாங்க…
இந்த கவிதை படிச்சுட்டேன். அம்மாவிடம் தினமும் எல்லோரின் படைப்புகளும் விஸ்தாரமா விமர்சிப்பேன்...… அம்மா பொறுமையா கேட்பாங்க. காதுகொடுத்து… அது எனக்கு ரொம்ப சந்தோஷம்…
முடிக்க முடியலை… ஆனா முடிக்கனும்… ஏன்னா இது பின்னூட்டம்… படைப்பு போல எழுத கூடாது… படைப்பாளிகளை மீறும்படி இருக்கவே கூடாது என்னிக்கும் பதிவுகள் இது அம்மா எனக்கு நேற்று சொன்னது…
பூனை சுடு பால் குடித்தால் திரும்ப வந்து குடிக்காது… ஆமாம் பயம் தான்… பயம் தான் காரணம்… அதே போல பெற்றோர்கள் ஆசிரியர்கள் யாரானாலும் சரி தன்னிடம் வந்து கேள்வி கேட்கும் குழந்தைகளை மிரட்டி திரும்ப நம்மிடம் வரவே முடியாதபடி செய்யும் உத்தி தான் பூனை பால் உவமை மிக மிக அருமை ரமணி சார்…
இருக்கு ரமணி சார்… கை கொடுங்க கண்ணில் ஒற்றிக்கொள்கிறேன்.. இன்றைய பெற்றோர்களின் மனசை அப்டியே சொல்லிட்டீங்க… அவர்களின் அசட்டையை பிள்ளைகளை விட டிவியில் இருக்கும் மோகத்தை எல்லாமே உணர வெச்சிட்டீங்க ரமணி சார் உங்க இந்த கவிதையில்…
அன்பு நன்றிகள் ரமணிசார்….
சொல்ல மறந்துட்டேன்...
தலைப்பு அட்டகாசம்....
எப்டி உங்களுக்கு மட்டும் இப்படி எல்லாம் தோணுது ரமணி சார்?
குழந்தைகளின் கேள்வியும்
பெற்றோரின் தவிர்ப்பும்
பெற்றோரின் கோபத்தைப் பார்த்து
தனக்குள்ளே எழும் தார்மீகக்
கேள்விக்கணைகளை
தனக்குள்ளே பூட்டி வைத்து
பின்னர் காலம் வருகையில்
அது வெடித்து சிதற வைக்கும்.
பெற்றோரின் கடமையை
அழகுபடக் கூறியிருக்கிறீர்கள்.
நன்றி நண்பரே.
பாராட்ட வார்த்தைகளே இல்லை. செம சாட்டையடிக் கவிதை :-)
கேள்விக்கேட்கும் குழந்தைகளுக்கு விளக்கம் கொடுத்தால் தான் அது அறிவாளியாக வளரும்... தட்டி தட்டி வளர்ப்பதால் தன்னம்பிக்கை குறைந்து வாழ்வில் முன்னேற முடியாமல் முடங்கிபோய்விடும் ... பெரியவர்களுக்கு வைத்த குட்டு... தேவையானதே சகோதரரே
tm 19
கவிதை மிக எளிமை, கருத்தோ அருமை!
டிஸ்கி தேவையில்லைங்க. சுட்டிக்காட்டினால் போதும் தரம் எளிதில் விளங்கும்.
superb!
பின்னூட்டப் பிஎச்டி மஞ்சுபாஷிணி.
தங்கள் வரவுக்கும் தெளிவான விரிவான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
நடிப்பவனைவிட பார்வையாளன் புத்திசாலி
படைப்பாளியை விட படிப்பவன் புத்திசாலி என்பதில்
அசைக்க முடியாத கருத்துடையவன் நான்'
இப்போதுள்ள அவசர காலச் சூழலில் அனைவரும்
அனைத்தும் தெரிந்திருந்தாலும் கூட
நாம் வீட்டை விட்டு வெளியில் செல்பவர்களிடம்
அதை எடுத்துக்கொண்டாயா இதை எடுத்துக்கொண்டாய என
ஞாபகப் படுத்துவதைப் போல சில விஷயங்களை
அவர்களுக்கு ஞாபகப் படுத்தவேண்டியுள்ளது
இது நிச்சயம் அறிவுறுத்துதல் இல்லை
என்வே மிகப் பெரிய விஷயமாக எடுத்துக்கொண்டு
பட்டும்படாமலும் ஆனாலும் மனதில் நிற்கும்படியாகச்
சொல்லிப்போகமுடியுமா என்கின்ற முயற்சிதான் என் பதிவுகள்
தங்கள் விரிவான பின்னூட்டங்கள்
நான் நினைத்துச் சுருக்கிய விஷயங்களை அப்பிடியே
விரித்துப் போடுவதால் சரியாகச் சொல்லிப் போகிறேன் என்கிற
நம்பிக்கையை என்னுள் விதைத்துப் போகிறது
அதற்காக எனது மனப்பூர்வமான நன்றி
மகேந்திரன்//
பெற்றோரின் கடமையை
அழகுபடக் கூறியிருக்கிறீர்கள்.
தங்கள் மேலான வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றி
அமைதிச்சாரல்//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
மாய உலகம்//
தங்கள் வரவுக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும்
வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மனமார்ந்த நன்றி
பன்னிக்குட்டி ராம்சாமி//
தங்கள் மேலான வரவுக்கும்
வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றி
JOTHIG ஜோதிஜி
தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி
சிலர் பதிவில் வடிவங்களத் தேடி களைத்துபோய் விடுகிறார்கள்
அவர்களுக்காக இதை எழுதினேன்
இனி தவிர்த்துவிடுகிறேன் நன்றி
அப்பாதுரை //
நீங்கள் ஆழ்கடலில் முத்தெடுத்துக் கொண்டுள்ளீர்கள்
நான் கரையோரம் சிப்பி பொறக்கிக்கொண்டுள்ளேன்
இருப்பினும் என் பதிவுக்கும் வந்து வாழ்த்துரைகள் சொல்லி
உற்சாக மூட்டிச் செல்வதற்கு மனமார்ந்த நன்றி
exactly.well said Ramani sir.
raji //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
நீங்க சொல்றது சரிண்ணே...பொறுமைஇல்லாததே இதற்க்கு காரணம்...பகிர்வுக்கு நன்றி!
விக்கியுலகம் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
வணக்கமையா ஏன் இப்படி ஒரு வசனநடையில எழுதினீர்கள்?????????
ஹி ஹி ஹி அட நான்னும் கேள்வி கேட்க பழகிறேங்க.. நல்ல கருத்த நீங்க எளிமையாக சொல்லி இருக்கீங்க எல்லோரையும் சென்றடைவதற்காக.. வாழ்த்துக்கள் ஐயா.
காட்டான் குழ போட்டான்
காட்டான் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
நல்ல அறிவுரை. குழந்தைகள் கேள்வி கேட்டுக் கொண்டே தான் இருப்பார்கள். நாம் அதற்கு பொறுமையாக பதிலளித்தால் தான் அவர்கள் அறிவு வளரும்.
கோவை2தில்லி.//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.
மாதேவி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
சூடு வைத்து விட்டீர்கள்.
ரிஷபன் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
என்ன ஆயிற்று..?
வலைவழி வரவில்லை
புலவர் சா இராமாநும்
இனி நமக்கு கவலை இல்லை
நம் குழந்தை முட்டாளானால் என்ன
நச்சரிப்பு தொல்லை இனி நமக்கில்லை/
நல்ல அறிவுரை.எச்சரிக்கை.!!
இராஜராஜேஸ்வரி
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
ரொம்ப லேட்டா வந்ததால், ரொம்ப சிம்பிளா ஒரு பின்னூட்டம்.
வெகு ஜோர் சார்.
இந்த டெக்னிக் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் தொடர்கிறது.
ஏன் என்ற கேள்வி இங்கு கேட்டாலே வாழ்க்கை இல்லை.
VENKAT //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
கேள்வி கேட்பதே தவறு என
அப்பாவுக்கு கோவம் வருமென
அந்தப் பிஞ்சு மனதிற்குத் தெரிந்துபோகும்
இனி மனதில் கேள்வி எழுந்தாலே
அடக்கிக் கொள்ளப் பழகிவிடும்
இனி நமக்கு கவலை இல்லை
நம் குழந்தை முட்டாளானால் என்ன
நச்சரிப்பு தொல்லை இனி நமக்கில்லை
மிக சரியாகச் சொன்னீர்கள் ஐயா .பெரியவர்கள்
குழந்தைகளை இவ்வாறு நிகழத்தினால் அவர்களுடைய
எதிர்காலம் என்னவாகும் என்பதனை அறிவுரையாய்
சொன்னால் கேளாத சில பெரியவர்களுக்கு பட்டும்
படமாலும் தவறை உணர்தியவிதம் அருமை!......
வாழ்த்துக்கள் ஐயா .என் தளத்தில் இரண்டு பாடல்வரிகளை வெளியிட்டுள்ளேன் அதற்க்கு உங்கள் பொன்னான கருத்தை அதிகம் ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன் .உங்கள் வரவு நல்வரவாகட்டும் .மிக்க நன்றி ஐயா இப் பகிர்வுக்கு ...........
அம்பாளடியாள் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்திற்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும் என்
மனம் கனிந்த நன்றி
அருமையான படைப்பு sir. . . நிச்சயம் பல தொந்தரவுகளுக்கு பயந்தே அதை தொடாதே, எடுக்காதே, என்று பல கட்டளைகளை விடுத்தே அவர்களின் சுதந்திரத்தை பரித்துவிடுகின்றனர்கள். . .
அப்பாதுரை said...
பின்னூட்டப் பிஎச்டி மஞ்சுபாஷிணி.
100 பின்னூட்டங்கள் வந்து விட்டது நான் மிக மிக பிந்தி வருகிறேன். முதலில் என்னடா இவர் ரெம்ப மோசமாக எழுதுகிறாரே பிள்ளைகளில் ஈவிரக்கமில்லாமல் என்று எண்ணினேன். உண்மை தான் இப்படித் தானே எத்தனை பெற்றோர் தம் பிள்ளைகளை முளையிலேயே நசுக்குகின்றனர். உணர்ந்து திருந்தட்டும். குழந்தை பராமரிப்பு பற்றி 3 வருட செமினார் படிப்பு முடித்து 93ல் இருந்து 2008 வரை வேலை செய்தேன். 3லிருந்து 12 வயது பிள்ளைகளுடன் (கூடுதலாக டெனிஸ் பிள்ளைகளுடன்) 1மணிக்கு பாடசாலை முடிய ஓய்வு நேர வகுப்புகளிலும் 5 மணி வரை. நல்ல ஆக்கம். வாழ்த்துகள்
வேதா. இலங்காதிலகம்.
னல்ல பதிவு...னம் கடமை இது!
kovaikkavi //
தங்கள் வரவுக்கும் வாழ்த்திற்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும் என்
மனம் கனிந்த நன்றி
பிரணவன்
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
பெரும்பான்மை பெற்றோர்கள் எதிர்கால விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் சர்வ சாதாரணமாய்ச் செய்யும் தவறை நன்றாக எடுத்துச் சொல்கிறது இந்தக் கவிதை. வாழ்த்துக்கள்.
ShankarG //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
அற்புதமான கருத்துக்கள்! ஆழ்ந்த சிந்தனை! நெற்றிப்பொட்டிற் அறைந்தார் போல் பெற்றோரை அறிவுறுத்தும் வரிகள். நாம் பிறரின் பிழை கண்டறிவது மிகவும் எளிது. நம் பிழையைக் காண... இது போன்ற கவிதைகள் தான் காலத்தின் கண்ணாடி!
எளிமையான நடையாக இருந்தாலும் ஆழமான
நாம் பின்பற்ற வேண்டிய விஷயம்.
நெல்லி. மூர்த்தி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
ஸ்ரவாணி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
Post a Comment