வெகு நாட்களுக்குப் பின் தையற்கடை வைத்திருந்த
என் நண்பரைப் பார்த்தேன்
வழக்கம்போல " தொழில் எப்படிப் போகிறது ?"
எனக் கேட்டும் வைத்தேன்
நண்பன் புலம்ப ஆரம்பித்துவிட்டான்
" முன்பெல்லாம் நம் சீதோஷ்ண நிலைக்கு
ஏற்றார்ப் போல அதிக நாள் உழைக்கும் படியான
துணியெடுத்து தைக்கக் கொடுப்பார்கள்
உடலுக்கு ஏற்றார்ப்போல
வடிவமைக்கச் சொல்வார்கள்
அவயங்கள் அசிங்கமாகத் தெரியாதவாறு
கொஞ்சம் பெரியதாகவும் தைக்கச் சொல்வார்கள்
இப்போது எல்லாம் தலை கீழ்
மினுமினுப்பு பளபளப்பு இருந்தால் போதும்
உழைப்பது குறித்து அக்கறையில்லை
உடலை ஒட்டி இருக்கும்படியாகவும்
அவயவங்கள் கொஞ்சம் தெரியும் படியாகவும்
முடிந்தால் பெரிதாகத் தெரியும் படியாகத்
தைக்கச் சொல்கிறார்கள்
கலாசாரச் சீரழிவுக்கு துணை போகிறோமோ என
அச்சம் என்னுள் இருளாய் பரவுகிறது
எனக்கு மனம் வெறுத்துப் போய்விட்டது
தொழிலை மாற்றலாம் என இருக்கிறேன் " என்றான்
அவனுக்கு ஆறுதலாக இரண்டு வார்த்தைகள்
கூறிவிட்டு நடக்கையில் நேர் எதிரே
என் இலக்கிய நண்பனைப் பார்த்துவிட்டேன்
முன்பெல்லாம் முன்ணனி இலக்கியப் பத்திரிக்கைகளில்
அவன் கவி இடம் பெறாத பத்திரிக்கைகளே இருக்காது
சினிமாவிலும் எழுதிக் கொண்டிருந்தான்
இப்போது ஏனோ அதிகம் எழுதுவதில்லை
காரணம் கேட்டுவைக்க
அவனும் புலம்பத் துவங்கிவிட்டான்
" முன்பெல்லாம் கவிதையெனச் சொன்னால்
காலம் வெல்லக் கூடியதாய் தரமானதாய்
இருத்தல் வேண்டும் என வலியுறுத்துவார்கள்
உள்ளதை உள்ளபடி உரைக்கக் கூடியதாய்
உண்மையை அழுந்தச் சொல்வதாய்
அவசியம் இருக்கவேண்டும் என்பார்கள்
அனைவரும் ஏற்கும்படியாகவும்
ஆபாசம் அறவே தவிர்க்க வேண்டும் என்பார்கள்
இப்போது எல்லாம் தலைகீழாகிவிட்டது
வக்கிர உணர்வை உடன் உசுப்பிவிடும்
வல்லமை மிக்க காமக் கவிதைகளாய்
அறிவை மழுங்கடிக்கக் கூடியதாகவும்
மனதின் அரிப்பிற்கு தீனி போடும்படியாகவும்
வார்த்தைகள் அவசியம் என்கிறார்கள்
முடிந்தால் வார்த்தைகள் கூட வேண்டாம்
ஆபாச சப்தங்கள் குறியீடாக இருந்தாலே போதும்
இளைஞ்ர்களையும் காமக் கிழடுகளையும்
வசீகரிப்பதாய் இருக்க வேண்டும் என்கிறார்கள்
சமூகம் கெட நானும் காரணமாகி விடுவேனோ என்
எனக்குள் ஒரு நெருடல் விஷமாய்ப் பரவுகிறது
எனக்கு வெறுத்துப் போய்விட்டது
எழுதுவதையே நிறுத்திவிடலாமென இருக்கிறேன்" என்றான்
இவனுக்கும் ஆறுதலாக நாலு வார்த்தைகள் சொல்லி
வீடு வந்து சேர்வதற்குள்
எனக்குள் குழப்பம் கூடிப்போனது
பரமனின் முதுகில் பட்ட அடி
அனைத்து ஜீவராசிகளின் மீதும் பட்டது போல
கலாச்சாரம் பண்பாடுகளின் மீது விழும் அடியும்
இப்படித்தான் பாகுபாடின்றி பரவித் தாக்குமா?
கவிஞனும் தையற்காரரும் கூட
ஏன் சட்டையும் கவிதையும் கூட
அதற்கு ஒன்றுதானா ?
97 comments:
இன்றைய நாகரீக மாற்றங்கள் பற்றிய நல்லதொரு சமுதாய சிந்தனையுடன் கூடிய கவிதை. மிகவும் ரசித்தேன்.
//மனதின் அரிப்பிற்கு தீனி போடும்படியாகவும்
வார்த்தைகள் அவசியம் என்கிறார்கள்
முடிந்தால் வார்த்தைகள் கூட வேண்டாம்
ஆபாச சப்தங்கள் குறியீடாக இருந்தாலே போதும்
இளைஞ்ர்களையும் காமக் கிழடுகளையும்
வசீகரிப்பதாய் இருக்க வேண்டும் என்கிறார்கள்//
தங்களின் ஆதங்கம் புரிகிறது, சார்.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள்.
[தமிழ்மணத்தில் தற்சமயம் வாக்களிக்க முடியால் உள்ளது. இன்னும் பதிவு இணைக்கப்படவில்லை போல உள்ளது.] vgk
தமிழ்மணத்தில் இணைத்து வாக்களித்து விட்டேன்..
அர்த்தமுள்ளது தான் நிலைக்கும் என்பதை தாண்டி, ஆர்பாட்டமாய் இருப்பதும், ஆபாசமாய் இருப்பது தான் நிலைக்கும் என்ற சூழ்நிலைதான் உருவாகி விடுமோ என்ற கவலையைத்தான் நீங்கள் சுட்டிக்காட்டும் இரண்டும் நிகழ்வுகளும் உணர்த்துகின்றன.
காலத்தின் கோலம். வேறென்ன சொல்ல முடியும்.
வை.கோபாலகிருஷ்ணன் said...
தங்கள் முதல் வரவுக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி
அருமையான கருத்துக்கள்..
நன்றாக எழுதியுள்ளீர்கள்..
-- வாழ்த்துக்கள்..
பாரத்... பாரதி...//
தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் வாக்கிற்கும் மனமார்ந்த நன்றி
தமிழ் உதயம்//
தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் வாக்கிற்கும் மனமார்ந்த நன்றி
Madhavan Srinivasagopalan //
தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி
ஸ்ரீநிவாச ஐயங்காரின் ஆராய்ச்சியில் நமது சீதோஷ்னத்திற்கு துணியை உடம்பில் சுற்றிக்கொள்வது தான் உகந்தது என்றறிந்து உடுத்தினார்கள் என்கிறார். மேலும் பெண்கள் சேலை அணிவது மூலமும் ஆண்கள் வேட்டி உடுத்துவதன் மூலமும் அது நிரூபனம் ஆகிறது என்றும் எடுத்துரைக்கிறார்.
உங்களது பதிவு அற்புதம். அமர்க்களம். :-))
RVS //
தங்கள் வரவுக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி
அருமை .
நண்டு @நொரண்டு -ஈரோடு //
தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி
இருக்கலாமோ.. அப்படித்தான் தோணுது :-)
அமைதிச்சாரல் //
தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி
கவிஞனும் தையர்காரரும்
ஒன்றுதான்
புனைவதில் கருத்தாய்......
பொருள்பொதிந்த பதிவு நண்பரே...
மகேந்திரன் //
தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி
வணக்கமையா அருமையான கருத்தை சொன்னீர்கள்.. அதை நீங்கள் இரண்டு பாதிக்கப்பட்டவர்களின் புலம்பல் மூலம் சொல்வது கலாச்சார வழக்குக்கு ஆதாரம் தருவதுபோல் இருக்கின்றது... வாழ்த்துக்கள்
காட்டான்//
தங்கள் வருகைக்கும் அருமையான
பின்னூட்டத்திற்கும் என் மனமார்ந்த நன்றி
அருமையான கவிதை .பிடித்துள்ளது .தமிழ்மணம்-8
புதிய கலாச்சாரம் என்ற பெயரில் பரவும் கேடுகளை அழகான உதாரணத்துடன் பகிர்ந்து உள்ளீர்கள்
நன்றி நண்பரே
தமிழ் மணம் எட்டு
kobiraj //
தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் வாக்கிற்கும்
மனமார்ந்த நன்றி
M.R //
தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் வாக்கிற்கும்
மனமார்ந்த நன்றி
நாகரீக மாற்றத்தில் மாறாதது ஏது .....மக்கள் ரசனையும் தான் ! முக்கியமாக மேலைத்தேய கலாச்சாரங்களால் தம்மை அலங்கரித்துக்கொள்ள முனைகிறார்கள் ...இது சரியா பிழையா என்று தெரியவில்லை!!
அருமையான பதிவு.
வாழ்த்துக்கள்.
தலைமுறைகள் மாறும்போது ரசனையும், நுகர்வும் மாற்றமடைகிறது!
பழையன கழிதலும்..புதியன நுழைதலும்..
நம் உடலில் தொடர்ந்து கொண்டுதானெ இருக்கிறது! மனதும் உடலோடுதான் இருக்கிறது!
கந்தசாமி.//
தங்கள் வரவுக்கும் ஒரு சிந்தனையை
முன் வைத்துப் போகும் உங்கள் அருமையான
பின்னூட்டத்திற்கும் நன்றி
Rathnavel
தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி
மிகவும் வேதனை தருகிறது!
ரம்மி
தலைமுறைகள் மாறும்போது ரசனையும், நுகர்வும் மாற்றமடைகிறது!
ரசனையும் நுகர்வும் மனம் மட்டும் சாராது
வாழும் மண்சார்ந்தும் இருப்பின் சரியாக இருக்குமோ
என்கிற ஆதங்கத்தில் எழுதியதே இது
நல்ல கருத்தை முன்வைத்து பதிவிட்டமைக்கு நன்றி
வக்கிர உணர்வை உடன் உசுப்பிவிடும்
வல்லமை மிக்க காமக் கவிதைகளாய்//
அப்படியான எழுத்தாளரை அரசியல்வாதிகளே மேடையேற்றுவதை என்ன சொல்ல?.. தேகம் நாவலுக்கு கனிமொழியும் , தமிழச்சியும்.. ஒஹ் தமிழ் வளர்க்கும் வித்தையோ?..
நல்ல கருத்து வாழ்த்துகள் சார்..
நாகரிகம் எந்தளவுக்கு முன்னேறி இருக்கு? நல்ல திறமை சாலிகளை இப்படி புலம்ப வச்சுட்டாங்களே?
சிலு சிலுப்பு, டப்பாற்குத்து, காம வக்கிரம் என்று இணையத்தில் கூட பாருங்கள் தரமற்ற ஆக்கத்திற்குக் கூட 60இ70 கருத்து விழுகிறதே! மரபோடு சேர்ந்து முறையாக எழுதினாலும் திரும்பியும் பார்க் மாட்டினம். எல்லாம் ஒன்று தான். கவலை தரும் நிலைமை தான் நல்லஆக்கம் வாழ்த்துகள் சகோதரா.
வேதா. இலங்காதிலகம்.
தமிழ்மணம் 13
சமூகம் இப்படித்தான் போகுதோ! என்று எனக்கும் குழப்பமாக இருக்குது புதியபாடல்கள் கேட்கமுடியுது இல்லை படம்பார்க்க முடியல இப்படிப்போனால் வெளிநாடு பரவாயில்லைப்போல!
அருமை.நல்ல ஒப்பீட்டில் தற்கால நிலைமை குறித்த அலசல்!விளாசல்!!
கே. பி. ஜனா... //
தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி
எண்ணங்கள் 13189034291840215795 //
தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி
Lakshmi //
தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி
kovaikkavi //.
தங்கள் வரவுக்கும் ஒரு சிந்தனையை
முன் வைத்துப் போகும் உங்கள் அருமையான
பின்னூட்டத்திற்கும் நன்றி
வை.கோபாலகிருஷ்ணன் //
தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் வாக்கிற்கும்
மனமார்ந்த நன்றி
Nesan //
தங்கள் வருகைக்கும் அருமையான
பின்னூட்டத்திற்கும் என் மனமார்ந்த நன்றி
Murugeswari Rajavel //
தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி
சட்டையும் கவிதையும் தாண்டி இன்னும் ஓவியர்களையும்,புகைப்படக் கலைஞர்களையும்,நாட்டியக் கலைஞர்களையும் இன்னும் இன்னும் பலரை தாங்கள் சந்தித்திருக்க வேண்டியது மிக மிக அவசியம்.அல்லது பதிவின் நீளம் கருதியோ அல்லது அவர்கள் கூறிய அந்த ஆபாசம் பற்றிய கருத்தை வெளிப்படுத்தக் கூசியோ தாங்கள் இத்துடன் முடித்துக் கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.மற்றபடி இம்மாதிரி விஷயங்களில் தங்கள் வலையின் தலைப்பு போல் தீதும் நன்றும்....
அருமையான கருத்துக்கள்...
வாழ்த்துக்கள்...
இப்போது எல்லாம் தலைகீழாகிவிட்டது
வக்கிர உணர்வை உடன் உசுப்பிவிடும்
வல்லமை மிக்க காமக் கவிதைகளாய்
அறிவை மழுங்கடிக்கக் கூடியதாகவும்
மனதின் அரிப்பிற்கு தீனி போடும்படியாகவும்
வார்த்தைகள் அவசியம் என்கிறார்கள்
முடிந்தால் வார்த்தைகள் கூட வேண்டாம்
ஆபாச சப்தங்கள் குறியீடாக இருந்தாலே போதும்
இளைஞ்ர்களையும் காமக் கிழடுகளையும்
வசீகரிப்பதாய் இருக்க வேண்டும் என்கிறார்கள்
சமூகம் கெட நானும் காரணமாகி விடுவேனோ என்
எனக்குள் ஒரு நெருடல் விஷமாய்ப் பரவுகிறது
சமூக நிலையை ஆழ்ந்து நோக்கிய ஆழமான கருத்துக்கள் அன்பரே.
உண்மைதான்.
இன்றைய நிலை வருத்தத்துக்கு உரிய ஒன்றாகத் தான் உள்ளது..
என்ன எழுதுகிறோம்
எதற்கு எழுதுகிறோம்
எப்படி எழுதுகிறோம்
என எந்த சிந்தனையும இன்றி ஏதேதோ எழுதுகிறார்கள்.
இசையமைப்பாளர்கள் ஒருபுறம்!
காமக் (கவிஞர்கள்)காட்டாறுகள் ஒருபுறம்!
என்ன செய்யும் மொழி..?
// பரமனின் முதுகில் பட்ட அடி
அனைத்து ஜீவராசிகளின் மீதும் பட்டது போல
கலாச்சாரம் பண்பாடுகளின் மீது விழும் அடியும்
இப்படித்தான் பாகுபாடின்றி பரவித் தாக்குமா?
கவிஞனும் தையற்காரரும் கூட
ஏன் சட்டையும் கவிதையும் கூட
அதற்கு ஒன்றுதானா//
கலாசார சீரழிவு பற்றி தங்களின் கவலையை கேள்வியாடு முடிய, எழுதியுள்ள இப்
பதிவு மிகவும் பாராட்டுக்கு உரியது சகோ
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
raji //
தங்கள் வரவுக்கும் விரிவான
தரமான பின்னூட்டத்திற்கும்
வாழ்த்துக்கும் மிக்க நன்றி
Reverie //
தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி
முனைவர்.இரா.குணசீலன் //
தங்கள் வருகைக்கும் அருமையான
பின்னூட்டத்திற்கும் என் மனமார்ந்த நன்றி
புலவர் சா இராமாநுசம்//
தங்கள் வருகைக்கும் அருமையான
பின்னூட்டத்திற்கும் என் மனமார்ந்த நன்றி
மாறுதல் ஏற்க மறுப்பவர்களைப் பற்றிய சுவாரசியமான சிந்தனை.
உங்கள் எழுத்து நடை என்னை மிகவும் கவர்கிறது.
இப்படிதான் பலர் தங்களின் வாழ்கையை ஒன்றுமே இல்லாது போல பாவித்து கொள்ளு கின்றனர் சிறந்த இடுகை நல்லனம்பிக்கை வரிகளை விதைத்து இருகிறீர் எதோ வாழுகிறேன் என கூறுகிறவர்தான் மிகையாக இருக்கிறார்கள் இது சிறந்த வாழ்கைமுறையல்ல என்பதை சுட்டும் வரிகள் சிறப்பானது பாராட்டுகள் .
அப்பாதுரை //
தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்
மாலதி //
தங்கள் வரவுக்கும் விரிவான
பின்னூட்டத்திற்கும்
வாழ்த்துக்கும் மிக்க நன்றி
இரு வேறு தொடர்பில்லா துறைகளை எடுத்து ஒன்றாக முடிச்சு போட்டு அழகாக தந்துள்ளீர்கள்
வாழ்த்துக்கள்
கவி அழகன்//
தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி
நாகரீகம் என்று சமூகம் எப்படியெல்லாம் தாறுமாறாக நடைப்போட்டுக்கொண்டுள்ளது என்பதினை அழகாக கவிதைசரமாக்கி உள்ளீர்கள்.வழக்கம் போல் அருமையாக உள்ளது.வாழ்த்துக்கள்.
ஸாதிகா //
தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி
கலாச்சாரம் பண்பாடுகளின் மீது விழும் அடியும்
இப்படித்தான் பாகுபாடின்றி பரவித் தாக்குமா?
இப்படித்தான் வாழவேண்டும் என்றிருந்தது போக எப்படியும் வாழலாம் என்கிற நிலை வந்தது யாரால்..
அதனைப் பலரும் பங்கு போட்டுக் கொள்ள வேண்டியிருக்கும் இப்போது!
நாட்டின் இன்றைய அவல நிலையைக் காட்டும் கவிதையிலிருக்கும் உண்மை உணர்ந்து மருகும் அதே சமயம், கலாச்சார சீர்கேட்டுக்குப் பணியாமல் இன்னும் சில நல்ல உள்ளங்கள் வாழ்கின்றனரே என்ற ஆறுதலும் ஒருபக்கம் எழுகிறது. நாகரிகமென்பதைத் தவறாய்ப் புரிந்துகொண்டுவிட்டவர்களுக்கு என்றுதான் உறைக்குமோ? ஆதங்கம் வெளிப்படுத்தும் வரிகள் அருமை.
கலாசாரச் சீரழிவுக்கு துணை போகிறோமோ என
அச்சம் என்னுள் இருளாய் பரவுகிறது/
இருண்ட காலம் ஒளிபெற பிரார்த்திப்போம்.
பரமனின் முதுகில் பட்ட அடி
அனைத்து ஜீவராசிகளின் மீதும் பட்டது போல
கலாச்சாரம் பண்பாடுகளின் மீது விழும் அடியும்
இப்படித்தான் பாகுபாடின்றி பரவித் தாக்குமா?/
ஆணிவேரையே அரிக்கும் நோய்..
ரிஷபன்
தங்கள் வரவுக்கும் விரிவான
பின்னூட்டத்திற்கும்
வாழ்த்துக்கும் மிக்க நன்றி
கீதா..//
கால நீரோட்டத்தோடு இயைந்து போதல் எனச் சொல்லி
பிழைக்கத் தெரியாமல் இன்னும் பலர் இப்படி இருப்பதனால்தான்
பண்பாடு கலாச்சாரச் சீர்கேடு இன்னும் உக்கிரம் கொள்ளவில்லை
எனப்தைச் சொல்லவே இதை எழுதினேன்
மிகச் சரியாக பின்னூட்டமிட்டு வாழ்த்தியமைக்கு நன்றி
இராஜராஜேஸ்வரி//
தங்கள் வருகைக்கும் அருமையான
பின்னூட்டத்திற்கும் என் மனமார்ந்த நன்
உங்களின் சமுதாய அக்கறைக்கு தலை வணங்குகிறேன்... வாழ்த்துக்கள்...
ஜெயசீலன் //
தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி
எல்லோருக்கும் நன்மை தரும் பொருளையோ, படைப்பையோ அல்லது சேவையையோ வணிகம் செய்தது அந்தக் காலம்.
எது எது யார் யாருக்குப் பிடிக்குமோ அதை அதை அவ்வாறே அவரவருக்கு விற்பது இந்தக் காலம்.
வியாபாரம் மாறிவிட்டது.
ஒப்பிட்ட உங்கள் பதிவு அருமை அருமை.
எது எது யார் யாருக்குப் பிடிக்குமோ அதை அதை அவ்வாறே அவரவருக்கு விற்பது இந்தக் காலம்.
ஒரு வரியில் இந்தக் கால வியாபாரச் சூழலை
மிக அழகாக விளக்கி பின்னூட்டமிட்டமைக்கு
எனது மனமார்ந்த நன்றி
தனக்கு லாபமென்றாலும் கூட
சமூகம் நட்டமடையக் கூடாது என எண்ணுகிற
பத்தாம் பசலிகள் சிலர் எல்லா துறையிலும்
இன்னும் இருப்பதனால்தான் சமூகம் இன்னமும்
அதள பாதாளத்தில் வீழாது இருக்கிறது என நினைக்கிறேன்
தங்கள் வரவுக்கும் தரமான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
கலாச்சார அழிவுகளை வழக்கம்போல தங்களின் பேனா அருமையாக சாடுகிறது! சமூக அவலங்களை எதிர்க்கும் தங்களின் முயற்சிக்கு எங்கேயாவது ஓரிடத்திலாவது பலன் கிடைத்தால் எத்தனை நன்றாக இருக்கும்!
மனோ சாமிநாதன்//
தங்கள் வரவுக்கும் விரிவான
பின்னூட்டத்திற்கும்
வாழ்த்துக்கும் மிக்க நன்றி
இவனுக்கும் ஆறுதலாக நாலு வார்த்தைகள் சொல்லி
வீடு வந்து சேர்வதற்குள்
எனக்குள் குழப்பம் கூடிப்போனது
பரமனின் முதுகில் பட்ட அடி
அனைத்து ஜீவராசிகளின் மீதும் பட்டது போல
கலாச்சாரம் பண்பாடுகளின் மீது விழும் அடியும்
இப்படித்தான் பாகுபாடின்றி பரவித் தாக்குமா?
கவிஞனும் தையற்காரரும் கூட
ஏன் சட்டையும் கவிதையும் கூட
அதற்கு ஒன்றுதானா ?
கலாச்சாரச் சீரழிவு என்பது பொதுவாக
எல்லோர் மனதையும் பாதிக்கும் இவைகளைக்
காக்கவல்லது ஆடையும் அறிவும் என்பதை
அழகாச் சொன்ன வரிகள் அருமை .மிக்க
நன்றி ஐயா பகிர்வுக்கு .............
தமிழ்மணம் 19
அம்பாளடியாள் //
தங்கள் வரவுக்கும் விரிவான
பின்னூட்டத்திற்கும்
வாழ்த்துக்கும் மிக்க நன்றி
நடப்பு நிலைமையை நச்சின்னு சொல்லி இருக்கீங்க அண்ணே!
விக்கியுலகம்//
தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி
கலாச்சார மாறுபாடு புதியதாய் ஒன்றும் பூத்துவிடவில்லை, பழமை என பல நல்ல விசயங்களையும் விட்டுச்சென்றதற்கு நாமும் உடந்தை என்பதை யாராலும் மறுத்துவிட முடியாது. . .கூட்டுக் குடும்ப வாழ்க்கை உடைந்ததில் இருந்து தொடங்கியது இந்த மாற்றம். . .இது என் அறிவிற்கு எட்டியவரை. . . பிழையாக இருந்தால் மன்னிக்கவும். . .
பிரணவன் //
தங்கள் வருகைக்கும் அருமையான
பின்னூட்டத்திற்கும் என் மனமார்ந்த நன்றி
கலாச்சார சீரழிவை கவிஞனும், தையற்காரரும் புலம்பியது நிதர்சனத்தை உணர்த்தியது.
மேம்பட பிரார்த்திப்போம்.
கோவை2தில்லி//
தங்கள் வருகைக்கும் அருமையான
பின்னூட்டத்திற்கும் என் மனமார்ந்த நன்றி
இரண்டு உவமானங்களில் உலகம் போகும் போக்கை அனாயசமா அழகா எளிய நடைல சிறப்பா சொல்லிட்டீங்க ரமணி சார் வரிகளில்….
தையற்காரர் மனம் விட்டு தன் ஆதங்கத்தை உங்க கிட்ட சொல்லிட்டார்… உண்மையே…. உடலை முழுதாய் உடை ஏன் உடுத்துகிறோம். பிறர் கண்களில் பார்வை பிறழ்வதை தவிர்க்க தானே… ஆனால் நாமே காட்சி பொருளாகி நம் உடலை காட்டி பிறரை கவரும் சிந்தனை உள்ளோர் என்ன செய்வாங்க இப்படி தான் உடைகளை தைச்சுப்பாங்க…..
ஸ்கூல்ல நல்லவேளை சீருடை திட்டம் வெச்சிருக்காங்க. இல்லன்னா வகுப்பில் உட்காரமுடியாதபடி இருக்கும் அவ்வளவு மோசமாக தொடை தெரியும்படி முதுகு தெரியும்படி உடை உடுத்தி உடன் படிக்கும் மாணவர்களின் மனதை கெடுத்து இது எங்கு போய் முடியுமோ என்பது போல…..
இப்பெல்லாம் பெற்றோர் பேச்சை எங்கப்பா பிள்ளைகள் கேட்கிறாங்க? தன்னிஷ்டப்படி தான் உடைகளை எடுக்கிறாங்க உடுத்துறாங்க போறாங்க வராங்க…. பெற்றோர் வெறும் பணத்தேவைக்கு மட்டுமே என்பது போலாகிவிட்டது இந்த காலத்தில்…
எழுத்துலகிலும் இதே வேதனை தான்… முன்பெல்லாம் குமுதமாகட்டும் விகடனாகட்டும் படிக்கவே அத்தனை அருமையா இருக்கும்.. ஆனா இப்ப என்னடான்னா புக் அட்டைலயே அசிங்கமான காட்சி பார்க்கலாம்…
அந்த காலத்து வரிகளுக்கும் இந்த காலத்து வரிகளுக்கும் தான் எத்தனை வித்தியாசம்…..
கண்ணதாசனின் வரிகளில் காதல் காமம் எல்லாமே இருக்கும் ஆனால் வரம்பு மீறாமல் இருக்கும்… வலைச்சரத்தில் நீங்க எழுதிய தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் அந்த பாட்டி வரிகள் எடுத்துக்காட்டி நீங்க அன்று பதிந்த பகிர்வு எனக்கு நினைவுக்கு வருகிறது ரமணி சார்….
நல்லதை சொல்ல எல்லோருமே முயலவேண்டும்…. பெற்றோர்கள் அதற்கு வழிக்காட்டியா இருக்கணும்…. இந்த காலத்துல பிள்ளைகள் ஸ்கூலுக்கு கூட மொபைல் கொண்டு போவதும் எஸ் எம் எஸ் பகிர்ந்துக்கொள்வதும்… பயங்கரம் என்பது வீட்டில் இருந்தே ஆரம்பிக்கிறது….
தாய் தந்தையரின் பார்வை எப்போதும் பிள்ளைகள் மேல் இருக்கவேண்டும்.. ஆனால் பாவம் அவர்களுக்கு அதற்கு டைமே இருப்பதில்லை…. தன் வேலை தன் சுகம் தன் சௌக்கர்யம் இதை பார்த்துக்கொள்வதால் பிள்ளைகள் தன்னிஷ்டப்படி கம்ப்யூட்டர் வீட்டில் நெட் உபயோகிப்பதும் அதில் வரும் காமா சோமா உடைகளை பார்த்து ஆசைப்படுவதும்…..
கிழிந்த உடைகளை நாம் போடவே மாட்டோம் அந்த காலத்தில்.. ஆனா இப்ப போட்டு கிழிச்சுக்கிறாங்க. கேட்டா ஃபேஷனாம்பா….
எங்குமே இப்ப ஸ்டைல் என்ற பெயரில் உடைகளை குறைத்துக்கொள்வதும் ஆங்கிலத்தை சிக்லெட்டோடு கடிச்சு துப்புவதும் யா வ்வாட் யா இப்படி பேசி எதிராளியின் கவனத்தை தன் மேல் திருப்புவதும்….
ஸ்கூல் காலேஜ் கட்டடித்து சினிமாவுக்கு போவதும்….
உலகம் போகிற போக்கு தான் எங்கே? வேதனை மட்டுமே மிஞ்சுகிறது….
என் பொண்ணு பாடறதை கேளேன் அப்டின்னு சொல்லி எங்க பாடும்மா அப்டின்னு கேட்டா குட்டி குழந்தை வந்து கால் பெருவிரலை கோலம் போட்டுக்கொண்டே இடுப்பை ஆட்டிக்கொண்டே அம்மாடி ஆத்தாடி உன்ன எனக்கு தரியாடி … இப்படி பாடும்… இது பாடல் வரிகளாம்… அதை கண்டு தாய் பெருமையில் பூரித்து போவார்…
ஜெயகாந்தன் வரிகள் இன்றும் நிலைத்து இருக்கு மக்கள் மனதில்…
ஆனால் இப்ப வரும் ஆபாச வரிகள் நிறைந்த கதைகளோ அல்லது படமோ நம்மால் ஜீரணிக்க முடிவதில்லை….
மங்காத்தா படத்தில் அஜீத் நடிக்கும்போது நாயகி திரிஷாவை முத்தமிட்டு நடிக்கும் காட்சியில் சாரி என்னால அப்படி நடிக்கமுடியாது என்று சொன்னபோது அஜீத்தை சபாஷ் என்று சொல்ல தோணித்து….
இப்படி எல்லாம் உல்டா ஆகவேண்டும்.. ஆகும் கண்டிப்பா…வரிகளில் யாருக்கும் எளிதில் புரியும்படி வரிகள் அமைப்பது உங்க ஸ்பெஷாலிட்டி ரமணி சார்….
பிறந்தநாள்னா கோவிலுக்கு போய் அர்ச்சனை செய்துட்டு வருவோம். இப்ப அப்படியா இருக்கு? பார்ட்டி வைக்கணும் வெளியே ஹோட்டலில் உணவுக்கு சொல்லி அதை கோலாகலமாக்கி காலம் போகும் போக்கை என்னவென்று சொல்வது தலையில் கைவைத்துக்கொண்டு உட்கார்ந்துடவேண்டியது தான்..
அப்ப எல்லாம் எம்ஜிஆர் அவர்கள் எப்படி பிரபல்யம் ஆனார்னா அவர் படத்தில் வரும் பாட்டுகள் எல்லாம் கருத்துள்ள எல்லோருக்கும் மெசெஜ் சொல்லும்படி இருக்கும்… ஆனா இப்ப??? தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா இது ஒரு பாட்டு… இதை ரசிக்கும் கூட்டம்…
எப்படியோ இதனுள் நாமும் மூழ்கிவிடாமல் எழவேண்டும் என்பதே என் விருப்பம்… ரமணி சார் உங்க சிந்தனைகள் எப்போதுமே உயர்வாக இருக்கிறதை உங்க வரிகள் சாட்சியாகி கம்பீரமாக நிற்கிறது…. படிப்போரும் சிந்திக்க துவங்கிவிடுகிறோம்… அச்சச்சோ நாமும் இப்படியா? இல்லை தானே என்று தன்னை தானே சுயபரிசோதனை செய்ய வைக்கிறது ரமணி சார் உங்க ஒவ்வொரு படைப்பும்…
கேரளாவில் புகழ்பெற்ற நடிகர்கள் மம்முட்டியும் மோகன்லாலும் தங்கள் புதுபடங்கள் ரிலிசாகும் நேரத்தில் நடிகை ஷகிலா நடிக்கும் படத்தை வெளியிடவேண்டாம் என்று வேண்டி கேட்டுக்கொண்டதன்படி இவர்கள் படம் ரிலிசான பிறகு கொஞ்சம் நாட்கள் கழித்து தான் ஷகிலா படம் ரிலிசானதாம்.. இதை விட கொடுமை வேறு என்னவா இருக்கமுடியும்.. மனிதன் தன்னை ஆபாசத்தில் மூழ்கவைத்துக்கொள்ளவும் செய்கிறான்., கோவிலில் அதற்கான லஞ்சத்தையும் போட்டுவிடுகிறான்….
கலாச்சாரம் சீர்குலைய எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்பதை அனாயசமாக சொல்லிவிட்டீர்கள் ரமணி சார்…. உடைகள் குறைகிறது ஆபாச வார்த்தைகளில் எஸ் எம் எஸ்கள் இன்றைய யுவதிகளின் மனதை கெடுக்கிறது…… அதன் விளைவு வீட்டை விட்டு கண்டவனை நம்பி அவனை பற்றி எதுவும் அறியாது ஓடி போகவும் துணிவு கொள்ள வைக்கிறது…
இன்னும் சில இடங்களில் பணத்துக்காக எழுத்துகள் கற்பிழக்கும் கோரம் அரங்கேறுகிறது..
அரசியலும் சாக்கடையாகிவிட்டது….
நம் நாடே கலாச்சாரத்துக்கு பெயர் போனது… ஆனால் இப்ப அப்படி சொல்லவே முடியாது
நான் இங்கு குவைத் வந்த முதல் நாளே நண்பர் வீட்டுக்கு போனோம். நான் குனிந்து இருகைக்கூப்பி வணக்கம் என்று சொன்னபோது அவர்களும் அதை போலவே செய்தார்கள்…நான் கட்டி இருந்த புடவையை ஆசையாக தொட்டு தொட்டு பார்த்தார்கள். என் மூக்குத்தியை ரசித்து தொட்டு பார்த்து அழகாக இருக்கிறது என்று அபிநயம் பிடித்தார்கள்…. இந்தியர்கள் எப்படி இத்தனை அழகாக உடுத்துகிறீர்கள் என்று கேட்டார்கள்… கேட்டது அரபியர்…பெருமையாக உணர்ந்தேன் அவர்கள் அப்படி கேட்டபோது…
உங்கள் படைப்புகள் எல்லாமே சிறப்பான கருத்தை இதுவரையாரும் சொல்லாத விஷயத்தை ஆராய்ந்து அலசி பகிர்வதை நான் ஆச்சர்யமாக வாசிப்பதுண்டு….இந்த கவிதையின் கடைசி பத்தி கொஞ்சமும் எதிர்ப்பார்க்காதபடி பரமனின் முதுகில் பட்ட அடி எல்லோர் முதுகில் பட்டது போல் அட அழகிய உவமானம் இது....ரசிக்கவைத்த வரிகள் ரமணி சார்...
இதுபோன்று நல்லவைகள் எங்கள் கண்ணில் படுமாறு படைப்பை தொடர்ந்து தருமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறேன் ரமணி சார்….
அன்பு நன்றிகள் பகிர்வுக்கு. சிறப்பான படைப்புக்கு அன்பு வாழ்த்துகள் ரமணி சார்…
ரமணி சார் தவறாக நினைக்காதீங்க இத்தனை பதிவு போட்டேன்னு...
மொத்தமும் போட்டால் அக்செப்ட் ஆகமாட்டேன்கிறது ரமணி சார்....
உண்மையை உரைத்த கவிதை.....
மாற்றங்கள் எப்படி எல்லாம் ஏற்பட்டு விட்டன....
நினைக்க நினைக்க வருத்தமே மிஞ்சுகிறது...
மஞ்சுபாஷிணி //
ஒரு படைப்பை இத்தனை முழுமையாக உள்வாங்கி
விமர்சனம் செய்பவர்கள் பதிவுலகில் நீங்கள்தான்
என உறுதியாகச் சொல்லலாம்
கவிதையாகவும் இல்லாமல் கட்டுரையாகவும் இல்லாமல்
சொல்ல வேண்டியதை மட்டும் மிகச் சுருக்கமாகவும்
தெளிவாக குழப்பாமலும் சொல்லலாம என யோசித்து
இப்படி ஒரு வடிவத்தில் பதிவை கொடுத்துவருகிறேன்
தங்கள் பின்னூட்டத்தைக் கொண்டுதான்
இது சரியாக சென்றடைகிறது என்கிற முடிவுக்கு நான்
வந்தேன் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி
வெங்கட் நாகராஜ்//
தங்கள் வருகைக்கும் அருமையான
பின்னூட்டத்திற்கும் என் மனமார்ந்த நன்றி
இன்று கை தட்டி விசிலடிக்கும் கூட்டெமெல்லாம் இது போன்ற செயலுக்காக என்பது கொஞ்சம் வெக்க கேடான விசயம்.... முறையாக வாழ நினைத்தால் முலையில் கிடக்க சொல்கிறார்கள் மூடர்கள்... தெருவில் கவுன்சிலராக இருப்பவன் ஊழல் செய்வதை கூட பக்கத்து வீட்டுக்காரன் பாராட்டவே செய்கிறான் பொழைக்கதெரிந்தவன் என்று... பாதையில் கிடக்கும் ஆணியை எடுத்து ஓரமாய் போட்டால் ஆணியை புடுங்க வேண்டாம்.. உனக்கெதுக்கு வேண்டாத வேலை என்று... மறைமுகமாக ஆபாசம் ரசித்தது போய் இன்று நேரடியாக ரசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.... திறமைகள் கூட ஆபாசத்துடன் சேர்த்து பிசைந்து கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்... ஆபாசம் என்று ஒன்று கண்ணில் பட்டால் தானே ரசிக்க ஆரம்பிப்பார்கள்... காட்டுபவர்கள் தன்மானத்துடன் நிறுத்திவிட்டாலே இதற்கு விடை கிடைத்துவிடும். என்ன செய்வது இச்சமூகத்தில் தன்மானதை விற்று வாழ வேண்டியிருக்கு... நண்பர்களின் ஆதங்கம் நல்லவர்களுக்கே எடுபடும்... பகிர்வுக்கு நன்றி சகோதரரே
மாய உலகம் //
தங்கள் வரவுக்கும் விரிவான
பின்னூட்டத்திற்கும்
வாழ்த்துக்கும் மிக்க நன்றி
கலாச்சார மாற்றத்திற்கும், சீரழிவிற்க்கும் நேரடிப் பங்களிப்பு அளிக்க மறுப்பவரும் மறைமுகமாய் அவற்றிற்குத் துணை போவது காலத்தின் நிர்பந்தமாய் ஆகி வருவதை தவிர்த்தல் கடினம் என்றே எண்ணத் தோன்றுகிறது. தையல்காரரையும், கவிஞரையும் ஒப்பிட்ட விதம் மிக்க அழகு. கருத்தாழம் நிறைந்த பதிவு. பணி தொடர வாழ்த்துகிறேன்.
ShankarG //
தங்கள் வருகைக்கும் அருமையான
பின்னூட்டத்திற்கும் என் மனமார்ந்த நன்றி
மஞ்சுபாஷிணி //
தங்கள் வருகைக்கும் அருமையான
பின்னூட்டத்திற்கும் என் மனமார்ந்த நன்றி
இராஜராஜேஸ்வரி //
தங்கள் வருகைக்கும் அருமையான
பின்னூட்டத்திற்கும் என் மனமார்ந்த நன்றி
Post a Comment