Monday, September 26, 2011

மர்ம இடைவெளி



தொடக்கமும் முடிவும் தெரியாது
போகிற போக்கும் புரியாது
தொடர் நாடகம் ஒன்று
தொடர்ந்து நடக்கிறது

உரையாடலில்
பேசுபவனே கேட்பவனாகவும்
கேட்பவனே பேசுபவனாகவும்
மாறிக்கொள்ளுதலைப் போலவே

இந்நாடகத்தில்
பார்வையாளர்களே நடிகர்களாகவும்
நடிகர்களே பார்வையாளர்களாகவும்
மாறி மாறி
நாடகத்தை தொடர்ந்து நடத்திப் போகிறார்கள்

ஆயினும்
நாடகம் ஒத்திகையற்றததாய் இருப்பதால்
திடுமெனத் தோன்றும் எதிர்பாராத திருப்பங்கள்
அதிர்ச்சியூட்டிப் போவதால்
பலர் நிலை குலைந்து போகிறார்கள்

இயக்குநர் யாரெனத் தெரிந்தால்
முடிவினை அறியக் கூடுமோ என
புலம்பத் துவங்குகிறார்கள்

புலம்பித் திரிபவர்களுக்கு ஆறுதலாய்
கைகளில் பேரேடுகளைச் சுமந்தபடி
பலர் அரங்கினுள் வலம் வருகிறார்கள்

இதுதான் மூலக் கதையென்றும்
இதுதான் இயக்குநர் வந்து போனதற்கான
உண்மை அத்தாட்சி யெனவும்
இனி அவரின் வருதலுக்கான
உறுதிமொழியெனவும்
அறுதியிட்டுக் கூறுகிறார்கள்

பலர் இதை ஒப்புக்கொண்டு
உடன்பட்டுப் போகிறார்கள்

சிலர் மட்டும் இன்னும் அதிகம்
குழம்பிப் போகிறார்கள்

"ஒரு நாடகத்திற்கு எப்படி
பல கதைகள் இருக்கக் கூடும்
பல இயக்குநர்கள் எப்படிச் சாத்தியம் "

இவர்கள் கேள்விக்கு ப்திலேதும் இல்லை

ஒவ்வொருவரும் தத்தம் கதைப்படித்தான்
நாடகம் தொடர்கிறது
முடிவு கூட இதன் படித்தான் என
சாதித்துத் திரிகிறார்கள்

இவர்களின் பிரச்சாரத்தில்
குழுக்கள் கூடிப்போகிறதே தவிர
குழப்பம் தீர்ந்தபாடில்லை

இந்தக் குழுக்களுக்களுக்கு
சிறிதும் தொடர்பே இல்லாது
ஒரு புதிய குழு உரக்கக் கூச்சலிடுகிறது

" இது நிகழ் கலை
இதை எழுதியவன் எவனும் இல்லை
இதை இயக்குபவன் எனவும் எவனும் இல்லை
நடிகன் இய்க்குநர் எல்லாம் நாமே
நாடகத்தின் போக்கும் முடிவும் கூட
நம் கையில்தான் " என்கிறது

இது குழம்பித் திரிபவர்களை
இன்னும் குழப்பிப் பைத்தியமாகிப் போகிறது

பசியெடுத்த குதிரையின் உடலில்
ஓரடி நீட்டி கட்டப்  பட்டப்
புல்லினைப் பிடிக்க
குதிரை நித்தம் ஓடி ஓடி  ஓய்கிறது

ஓடினாலும் நின்றாலும்
அதன் வாய்க்கும் புல்லிற்குமான
இடைவெளி  மட்டும்
குறையாது இருத்தல் போல

கேள்விக்கும் புதிருக்குமான
மாய இடைவெளி மட்டும்
குறையாது
தொடர்ந்து கொண்டே இருக்கிறது

தொடக்கமும் முடிவும் தெரியாது
போகிற போக்கும் புரியாது
தொடர் நாடகம் மட்டும்
தொடர்ந்து கொண்டே  இருக்கிறது

101 comments:

MANO நாஞ்சில் மனோ said...

முதல் கவிதை...

MANO நாஞ்சில் மனோ said...

வாழ்க்கை ஒரு நாடகமேடை இல்லையா குரு...

MANO நாஞ்சில் மனோ said...

இங்கே பார்வையாளர்களே நடிகர்கள்....!!!

M.R said...

தானும் குழம்பி மற்றவரையும் குழப்பும் ஆட்கள் நிறைய பேர் உண்டு இப்பூமியில் /

வாழ்க்கை எனும் நாடகத்தில் தானே கதாநாயகன் என்ற நினைவில் மற்றவர்களுக்கு வில்லத்தனமாய் செயல் புரிவதில் நிறைய நபர்களுக்கு ஆனந்தம் .

வாழ்க்கை தத்துவத்தை அழகாய் சொல்லியிருக்கீங்க

தமிழ் மணம் மூன்று

Unknown said...

//ஓடினாலும் நின்றாலும்
அதன் வாய்க்கும் புல்லிற்குமான
இடைவேளி மட்டும் குறையாது இருத்தல் போல
கேள்விக்கும் புதிருக்குமான மாய இடைவெளி மட்டும்
குறையாது தொடர்ந்து கோண்டே இருக்கிறது//

மிகவும் அருமை சகோ!

உட்பொருள் கொண்டு உரைத்துள்ள இக்
கவிதையை சொற்பொருள் ஆராயின் வாழும்
மனிதரின் அவல வாழ்க்கை உலகில் எப்படி
என்பதை உய்த்து உணரமுடியும்
இது தத்துவக் கவிதை!

புலவர் சா இராமாநுசம்

தமிழ் உதயம் said...

வாழ்க்கையை சொன்னதாலோ என்னவோ - கவிதை மனித வாழ்வை போல நீண்டு விட்டது. அருமையாக இருந்தது கவிதை.

♔ℜockzs ℜajesℌ♔™ said...

நல்ல கவிதை சார் , முழுவதும் புரிய வில்லை என்றாலும் ஓரளவுக்கு புரிந்தது . .
தொடர்ந்து எழுதுங்கள் . . .
நன்றி

ADHI VENKAT said...

நல்ல கவிதை சார்.

//கேள்விக்கும் புதிருக்குமான மாய இடைவெளி மட்டும்
குறையாது தொடர்ந்து கோண்டே இருக்கிறது//

மிகச்சரியான கருத்து.
த.ம.6

சக்தி கல்வி மையம் said...

தொடக்கமும் முடிவும் தெரியாது
போகிற போக்கும் புரியாது
தொடர் நாடகம் மட்டும்
தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது.
// அசத்தலான வரிகள்...

Yaathoramani.blogspot.com said...

MANO நாஞ்சில் மனோ//

தங்கள் முதல் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

M.R //
தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும்
வாக்கிற்கும் மனமார்ந்த நன்

Yaathoramani.blogspot.com said...

புலவர் சா இராமாநுசம்//

தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும்
வாக்கிற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

தமிழ் உதயம்//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனம் கனிந்த நன்றி
நீளம் குறிித்த கருத்து எனக்குமிருந்தது
தவிர்க்க இயலவில்லை

Yaathoramani.blogspot.com said...

ℜockzs ℜajesℌ♔™ //

தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கோவை2தில்லி//

தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும்
வாக்கிற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வேடந்தாங்கல் - கருன் *!//

தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

சாந்தி மாரியப்பன் said...

//வாய்க்கும் புல்லிற்குமான
இடைவேளி மட்டும் குறையாது இருத்தல் போல
கேள்விக்கும் புதிருக்குமான மாய இடைவெளி மட்டும்
குறையாது தொடர்ந்து கோண்டே இருக்கிறது//

இடைவெளி குறைஞ்சா சுவாரஸ்யம் போயிடுமே :-))

குறையொன்றுமில்லை. said...

தொடக்கமும் முடிவும் தெரியாது
போகிற போக்கும் புரியாது
தொடர் நாடகம் மட்டும்
தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது


ஆமா நல்லா சொல்லி இருக்கீங்க.

சத்ரியன் said...

//குழுக்கள் கூடிப்போகிறதே தவிர
குழப்பம் தீர்ந்தபாடில்லை//

உண்மை!

Yaathoramani.blogspot.com said...

அமைதிச்சாரல் //

தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Lakshmi //

தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சத்ரியன் //

தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

முனைவர் இரா.குணசீலன் said...

தொடக்கமும் முடிவும் தெரியாது
போகிற போக்கும் புரியாது
தொடர் நாடகம் மட்டும்
தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது


வாழ்க்கைத் தத்துவத்தைப் புரிந்துகொள்வது அவ்வளவு எளிதானதல்ல..

புரிந்துகொண்டாலும் அதைப் அடுத்தவர் புரிந்துகொள்ளுமாறு சொல்லுவதும் அவ்வளவு எளிதானதல்ல...

அரிய சிந்தனை நண்பரே..

பல்வேறு தத்துவவியல் சிந்தனைகளை அசைபோடும்படியாகத் தங்கள் இடுகை அமைந்துது..

மகிழ்ச்சி..

கீதமஞ்சரி said...

அழகான வாழ்வியல் தத்துவம். குதிரையின் கண்ணுக்குக் காட்டப்பட்ட புல் உவமை வெகு கச்சிதம். வாழ்க்கையென்னும் நாடகத்தை ஆட்டுவிப்பவர் யார்? பல்வேறு மதங்கள், கடவுளர்கள், ஒத்த மதத்துக்குள் உட்பிரிவுகள், போதாதென்று புதுக்குழுவாய் நாத்திகவாதிகள்! என்ன செய்வான் பாமரன்? ஆரம்பம் முதல் இறுதிவரை மையக்கருவை விட்டு விலகாத அற்புதக் கவிதை. பாராட்டுக்கள் ரமணி சார்.

மகேந்திரன் said...

இது ஒரு முடிவற்ற செயல் என்பது
சத்தியமான ஒன்று.
இன்று நாம் பணம் சேர்க்க அலையும்
நிலையையே இதற்கு உதாரணமாக
எடுத்துக்கொள்ளலாம்./

/////பசியெடுத்த குதிரையின் உடலில்
ஓரடி நீட்டி கட்ட்ப் பட்ட புல்லினைப் பிடிக்க
குதிரை நித்தம் ஓடிக் கலைக்கிறது
ஓடினாலும் நின்றாலும்
அதன் வாய்க்கும் புல்லிற்குமான
இடைவேளி மட்டும் குறையாது இருத்தல் போல
கேள்விக்கும் புதிருக்குமான மாய இடைவெளி மட்டும்
குறையாது தொடர்ந்து கோண்டே இருக்கிறது////

அனுபவித்து உணர்ந்து எழுதப்பட்ட வார்த்தைகள்.
இதற்கான இடைவெளியை தருவிக்க எத்தனை ஐன்ஸ்டீன்
வந்தாலும் முடியாது நண்பரே.
அந்த மாய இடைவெளியை நம் முன்னோர்கள் நன்கு
அறிந்திருந்தார்கள்.
இரண்டு அடி நீள துணி இருந்தால் அதை கோவணமாக
கட்டிக்கொண்டு அன்றாட வாழ்வின் சிரமங்களை
துச்சமாக வாழ்ந்தார்கள்.
இன்றோ நம் எதிர்பார்ப்புகளை வளர்த்து
தரத்தை உயர்த்திக்கொள்ள நாம் எத்தனிக்கையில்
இதுபோன்ற இடைவெளிகளை நிரப்புவது
மிகக் கடினமான காரியமே..

அருமையாய் தொடுத்திருக்கிறீர்கள்.
இப்படி ஒரு கவிதை கொடுக்க உங்களால் தான் முடியும்.
கவிதையை விட்டு கண்களை எடுக்க மனம் வரவில்லை.

ShankarG said...

மர்ம இடைவெளி மிகவும் அற்புதம். வாழ்க்கையே ஒரு தொடர் நாடகம்தான். நல்ல கற்பனை. வாழ்க நலமுடன்.

சித்தாரா மகேஷ். said...

முதல்ல நான்கூட குளம்பித்தான் போனேன்.அப்புறம்தான் தெளிந்தேன்.வாழ்க்கையோட விளக்கம் அருமை.அருமையான கவிதை.

வை.கோபாலகிருஷ்ணன் said...

தமிழ்மணம் 7 to 8

’மர்ம இடைவெளி’ பற்றிய மர்மங்களை அறிந்து கொள்வது அவ்வளவு சுலபமல்ல.

அதை மட்டும் அறிந்து கொண்டு விட்டால் வாழ்வின் சுவாரஸ்யமே போய் விடுமே!

ஏதோ நிரந்தரமாக இந்த உலகில் தங்கப்போவது போலல்லவா திட்டங்கள் தீட்டுகிறோம், பாடுபட்டு உழைக்கிறோம், உண்ணாமல் உறங்காமல் சேமிக்கிறோம், சேமிப்பைப் பல மடங்காக்க முயல்கிறோம்.

இன்றிருப்பார் நாளை இருப்பது நிச்சயமில்லாத இந்த நம் வாழ்க்கையை அழகாக நீண்டதொரு கவிதையாக்கி வழங்கியுள்ளீர்கள்.

புரிந்து கொண்டேன்.

வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். நன்றிகள்.
vgk

Yaathoramani.blogspot.com said...

முனைவர்.இரா.குணசீலன்//

தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும்
வாக்கிற்கும் மனமார்ந்த நன்றி

ரெவெரி said...

தொடக்கமும் முடிவும் தெரியாது
போகிற போக்கும் புரியாது
தொடர் நாடகம் மட்டும்
தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது...

நல்ல வரிகள்...நல்ல சிந்தனை ரமணி சர்..

Yaathoramani.blogspot.com said...

கீதா //
படைப்பு மிகச் சரியாக புரிந்து கொள்ளப்படும் போதுதான்
படைப்பாளி பெருமை கொள்கிறான்
மிகச் சரியாக பின்னூட்டம் கொடுத்து
உற்சாக மூட்டியமைக்கு நன்றி

சென்னை பித்தன் said...

இதுதான் வாழ்க்கை!சிறப்பாகச் சொல்லி விட்டீர்கள்!

G.M Balasubramaniam said...

வாழ்க்கையே நாடகம். நாமெல்லாம் நடிகர்கள். உலகமே நாடகமேடை. !அப்படியானால் உடை மாற்றும் இடம் (க்ரீன் ரூம் )எங்கே இருக்கிறது. நான் கூறியதல்ல. எங்கோ படித்த நினைவு. எழுத எடுத்தாளும் கருக்கள் சிறப்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

Unknown said...

ஜீவ நாடகத்தை இயக்கும்
பரம்பொருளை
அன்பர்
இயற்கை என்பரெனில்
அதுவே
இறையாகட்டும்!

வெங்கட் நாகராஜ் said...

//தொடக்கமும் முடிவும் தெரியாது
போகிற போக்கும் புரியாது
தொடர் நாடகம் மட்டும்
தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது//

வாழ்க்கை நாடகத்தினை அழகாய்ச் சொல்லி இருக்கீங்க சார். எத்தனை உண்மை உங்கள் கவிதை வரிகளில்....

த.ம. 12.....

மாய உலகம் said...

கேள்விக்கும் புதிருக்குமான மாய இடைவெளி மட்டும்
குறையாது தொடர்ந்து கோண்டே இருக்கிறது

தொடக்கமும் முடிவும் தெரியாது
போகிற போக்கும் புரியாது
தொடர் நாடகம் மட்டும்
தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது//

முற்றிலும் உண்மையான ஒன்று.. வாழ்த்துக்கள் சகோதரா

பிரணவன் said...

கடவுளுக்கும் நமக்குமான இடைவெளி மிகக் குறைவுதான், சுய உணர்தலில் தான் சுயம் இருக்கின்றது. . . இறைவன் இவர் தான் என யாராலும் சுட்டிக் காட்டிட இயலாது. . .நல்ல படைப்பு sir. . .

இராஜராஜேஸ்வரி said...

பசியெடுத்த குதிரையின் உடலில்
ஓரடி நீட்டி கட்ட்ப் பட்ட புல்லினைப் பிடிக்க
குதிரை நித்தம் ஓடிக் கலைக்கிறது/

களைத்துப்போன குதிரையின்
கலைந்துபோன கனவுகள்..

இராஜராஜேஸ்வரி said...

நாமே எழுத்தி நாமே இயக்கி நாமே நடிக்கும் நாடகத்தின் தலைவன் இறைவன் என்னும் விந்தை!

raji said...

என்ன மாதிரியான ஒரு சிந்திக்கும் திறன்!
ஒப்பீடும் வார்த்தை லாவகமும் வியக்க வைத்து
மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டி படிப்பவர்களையும் சிந்திக்கத் தூண்டுகிறது.பல வரிகளையும் அதில் இருக்கும் உண்மைகளையும் மிகவும் ரசித்தேன்.
பகிர்விற்கு நன்றி

மாய உலகம் said...

பசியெடுத்த குதிரையின் உடலில்
ஓரடி நீட்டி கட்ட்ப் பட்ட புல்லினைப் பிடிக்க
குதிரை நித்தம் ஓடிக் கலைக்கிறது
ஓடினாலும் நின்றாலும்
அதன் வாய்க்கும் புல்லிற்குமான
இடைவேளி மட்டும் குறையாது இருத்தல் போல//

மனதின் ஆராய்ச்சி ஹைலைட்டாக போகிறது சகோ... பிரமிப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள் சகோ

காட்டான் said...

வணக்கமையா..
மனித வாழ்வின் முடிவைக்கூட அழகான கவிதை வடிவில் இப்படி தரமுடியுமென்பதெ எனக்கு ஆச்சரியமாய் இருக்கின்றது... இயக்குனர் எங்களிடம் கதை முடிவைச் சொன்னால்...??? வாழ்கையில் சுவாரசியம் இல்லைத்தானே... மனதை தொட்ட கவிதை வாழ்த்துக்கள்...

Yaathoramani.blogspot.com said...

முனைவர்.இரா.குணசீலன் //

த்ங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மகேந்திரன் //

படைப்பின் உட்பொருளை மிகச் சரியாக
அறிந்து பாராட்டி உற்சாகப் படும் படியாக
விரிவான பின்னூட்டம் இட்டமைக்கு
என் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ShankarG //

வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சித்தாரா மகேஷ்.//

வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் //

தங்கள் மேலான வரவுக்கும்
விரிவான பின்னூட்டமளித்து
படைப்பினை பெருமைப் படுத்தியமைக்கும்
வாக்கிற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சென்னை பித்தன் //

தங்கள் மேலான வரவுக்கும்
பின்னூட்டமளித்து
படைப்பினை பெருமைப்படுத்தியமைக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
வாழ்க்கை நாடகம் என்றால்
ஒப்பனை அறை எது என்ற சிந்திக்கும் படியான
அழகான கேள்வியை எழுப்பியமைக்கு
மனமார்ந்த நன்றி சந்தேகமே வேண்டாம்.
அவர் அவர் மனமே ஒப்பனை அறை
அங்குதானே நமது பல வகையான
முக மூடிகளை ஒழித்துவைத்து தேவையானபோது
தேவையானவைகளை அணிந்து கொண்டு
நம்மையும் ஏமாற்றிக் கொண்டு எதிர்படுபவரையும்
ஏமாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்
சிந்திக்கத் தூண்டும் பின்னூட்டமிட்டமைக்கு நன்றி

Yaathoramani.blogspot.com said...

ரம்மி //


வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ் //

வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மாய உலகம் //

படைப்பின் உட்பொருளை மிகச் சரியாக
அறிந்து பாராட்டி உற்சாகப் படும் படியாக
விரிவான பின்னூட்டம் இட்டமைக்கு
என் மனமார்ந்த நன்றி

கவி அழகன் said...

அட நம்ம வாழ்க்கை பற்றிய கவிதை
என்ன ஒரு லாவகம் அப்படியே மெல்ல மெல்ல நகர்ந்து வாழ்வின் தத்துவங்களை சொல்லி வைக்கிறது

சான்சே இல்லை

Yaathoramani.blogspot.com said...

பிரணவன் //
வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

இராஜராஜேஸ்வரி //

த்ங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

raji //
படைப்பின் உட்பொருளை மிகச் சரியாக
அறிந்து பாராட்டி உற்சாகப் படும் படியாக
விரிவான பின்னூட்டம் இட்டமைக்கு
என் மனமார்ந்த நன்றி

மனோ சாமிநாதன் said...

//பசியெடுத்த குதிரையின் உடலில்
ஓரடி நீட்டி கட்ட்ப் பட்ட புல்லினைப் பிடிக்க
குதிரை நித்தம் ஓடிக் கலைக்கிறது
ஓடினாலும் நின்றாலும்
அதன் வாய்க்கும் புல்லிற்குமான
இடைவேளி மட்டும் குறையாது இருத்தல் போல
கேள்விக்கும் புதிருக்குமான மாய இடைவெளி மட்டும்
குறையாது தொடர்ந்து கோண்டே இருக்கிறது//

மிக அருமையான வரிகள்!

Yaathoramani.blogspot.com said...

மாய உலகம் //

மனதின் ஆராய்ச்சி ஹைலைட்டாக போகிறது சகோ... பிரமிப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள்

த்ங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

காட்டான் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
(என்னாச்சு தாங்கள் பதிவு போட்டு
ரொம்ப நாளாச்சு.ஆவலுடன் எதிர்பார்த்து..

Yaathoramani.blogspot.com said...

மனோ சாமிநாதன் //

த்ங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

செல்ல நாய்க்குட்டி மனசு said...

கவிதை முடிவு கூடுதல் அழகு

Unknown said...

நிதர்சனத்தின் வெளிப்பாடே இந்த கவிதையோ அண்ணே...நச்!

Yaathoramani.blogspot.com said...

நாய்க்குட்டி மனசு //
த்ங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

விக்கியுலகம் //

த்ங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

கதம்ப உணர்வுகள் said...

வறுமையின் நிறம் சிவப்புல ஸ்ரீதேவி தன்னன தையன்ன தத்தனன தையன தான தன்னன தன்னானா அப்டின்னு பாட…..உடனே கமல்…சிப்பி இருக்குது முத்தும் இருக்குது திறந்து பார்க்க நேரம் வந்தது ராஜாத்தி….அதில் கொஞ்சம் டஃப்பான ஸ்வரம் பாடுவாங்க தனன தான தனன தான தானா….உடனே கமல் அப்பாடியோ அப்டின்னு சொல்வார்…
 
இப்ப உங்க கவிதை வரிகள் படிச்சப்ப அந்த கமல் சொன்னமாதிரி அப்பாடியோ அப்டின்னு சொல்லும்படி இருக்கு…..

வாழ்க்கையின் நாட்கள் நமக்கு தெரிஞ்சு தான் நகர்கிறது காலை மதியம் மாலை இரவுன்னு…..

ஆனால் எப்படி நகர்கிறது என்பது தான் புரியாத புதிராக….

எப்படி புரியும்? நாமென்ன தெய்வப்பிறவிகளா அடுத்த நிமிஷம் என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுகிட்டு அதன்படி சுதாரிச்சுக்கிட்டு நாட்களை நகர்த்திச்செல்ல?

ரொம்ப அருமையா சொல்லி இருக்கீங்க ரமணி சார். உங்க படைப்புகளுக்கு கருத்து எழுதுவது என்பது எனக்கு எக்ஸாம் எழுதுவது போல. உங்க கிட்ட இருந்து பாஸ் மார்க் கிடைக்கிறவரைக்கும் டென்ஷனாவே இருக்கும்… நான் எழுதிய கருத்து கவிதை வரிகளை புரிஞ்சுகிட்டு தான் எழுதினேனா என்று பயமாவே இருக்கும்….

பிறப்பும் இறப்பும் வாழ்க்கையில் முக்கிய அம்சமாகி விட்ட நிலையில்….

ஒன்பது மாதங்கள் முடிந்தால் குழந்தை பிறப்பது நிச்சயம்..சொல்லமுடியுமா?? தீர்மானமாக??? குழந்தை பிறக்கும்போது விதி எப்படி செயல்படும் ஹுஹும் யாராலுமே கணிக்கமுடியாது…. இறப்பும் அப்படியே… அடுத்த நிமிஷம் என்னாகும்னு யாராலாவது முன்பே சொல்ல முடியுமா?

வாழ்க்கையில் நடக்கும்  ஒவ்வொரு நிகழ்வுக்கும் இறைவனை காரணம் காட்டி சொல்வோரும், விதியை காரணம் காட்டி சொல்வோரும், நீ இப்படி தப்பு செய்ததுனால தான் இப்படி ஆச்சுன்னு கரிச்சு கொட்டுவோரும், அதெல்லாம் ஒன்னுமில்லப்பா சாமியும் இல்ல பூதமும் இல்ல எல்லாம் சும்மா அப்டின்னு சொல்வோருமாக இப்படி ஒரு கலவையாக நிறைந்திருக்கிறது நம் உலகம்....

கதம்ப உணர்வுகள் said...

மதங்களை, தெய்வத்தை உருவாக்கியது மனிதனேன்னு வாதாடும் நாத்திகவாதிகளும், இல்ல இல்ல தெய்வம் இருக்குன்னு வாதாடும் கூட்டமும்.... சரி தெய்வம் இருக்குன்னா எங்க காட்டுன்னு விதண்டாவாதம் செய்யும் கூட்டம் தான் நாத்திகவாதிகள்.....

ரொம்ப ரொம்ப அருமையா சிந்திக்கவைக்கிறமாதிரி கவிதை படைக்க உங்களுக்கு நிகர் நீங்க மட்டுமே ரமணி சார்... நேத்து மாலைல இருந்து இந்த கவிதை வரிகளை பலமுறை படித்துவிட்டேன். இன்னும் படித்துக்கொண்டும் இருக்கிறேன்...

நாளை என்ன நடக்க போகிறதுன்னு முன்னாடியே தெரிஞ்சு அல்லது தெரிஞ்சமாதிரி சும்மா பாவ்லா காட்டி சொல்வோர் சாமியார்கள்...

மதம்னா ஒன்னோடு நிறுத்தினா பரவாயில்லை... ஆளாளுக்கு ஒரு மதம் என்று சொல்லிக்கொண்டு நீங்க இப்படி நடங்க இவர் சொல்ற மாதிரி இருங்க என்று தன் பக்கம் இழுக்க முயல்வதும்... விதியை மாற்றி எழுதும் மதம் எங்களுடையது என்று சூளுரைப்பதும்....

மக்கள் நிஜமாவே ஒரு குழப்ப நிலையில் தான் இருப்பது....

தெய்வம் இருக்கிறது சரி... எத்தனை தெய்வம்? அல்லா ஏசு கிருஷ்ணன் இப்படி எத்தனை தெய்வங்கள் ஆளுக்கு ஒரு பக்கம் தன் மதம் தன் தெய்வம் என்று அமைதியாக இருந்துவிட்டால் பிரச்சனைகள் ஏற்பட வழியே இல்லையே....

முதல் வரியில் இருந்து இறுதி வரை மர்மமாகவே கவிதை வரிகளை அமைத்தபோதே தெரிந்துவிட்டது.. நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு ரமணி சார்....

வாழ்க்கை ஒரு நாடகமேடை... இதில் நம்முடன் இணைந்து நடிக்கும் நடிக நடிகையராக நாம் காணும் நம் உறவுகள் நட்புகள் நிகழ்வுகள்....

கதம்ப உணர்வுகள் said...

நாளை என்ன நடக்கும் என்று உறுதியாக தெரியாத நிலையில் ஸ்க்ரிப்ட் தொலைஞ்ச நடிகர்களாகவே நாம சுத்திக்கிட்டு இருப்போம் வாழ்க்கை நாட்களை கடத்திக்கொண்டும் இருப்போம்..

இருக்கிற பிரச்சனைகள் போதாதென்று அரசியல்வாதிகளும் மத துவேஷிகளும் மக்களை ஆட்டுமந்தையாக்கி வழி நடத்தும் செயலில் ஜரூராக இறங்க ஆயுத்தமாவதும்... அதனால் விளையும் கொடிய நிகழ்வுகளும் மரணங்களும்...

கரெக்டே ரமணி சார் நாடகம் ஒத்திகையற்று இருப்பதால் திடிர்னு நிலைகுலையும்படியான பல கொடிய நிகழ்வுகளும் நடப்பதுண்டு.... மும்பையில் தீவிரவாதிகளின் தாக்குதலால் உயிரிழந்த அப்பாவிகளின் எண்ணிக்கை கணக்கிலடங்காது...

அதே போல் இலங்கையில் நடந்த கொடுமையில் உயிரிழந்த உடைமை கற்பிழந்தவர்களின் நிலை, சுனாமி, பூகம்பம் இப்படி மனிதனும் இயற்கையும் தீவிரவாதமும் போட்டி போட்டுக்கொண்டு மக்களை பாடுபடுத்தும் இந்நிலையில்.....

இயக்குனர் யாரென்று தெரிந்தால் முடிவு தெரிந்துவிடுமே என்ற நப்பாசையில் பாவப்பட்ட மக்கள் பரிகாரம் தேடி ஓடி சரணடையும் இடம் சாமியார்கள்.... போலிச்சாமியார்களின் வசம் தன்னை இழந்துவிடுகிறார்கள் ஒரு சாரார்...அவரவர் தெய்வங்களை சரணடைய அவரவர் இது தான் சாக்கென்று தன் கொள்கைகளை பரப்ப அருமையான இந்த ஆட்டுமந்தைகள உபயோகப்படுத்திக்கொள்வார்கள்.....

சின்ன வயதிலிருந்தே தீவிரவாதத்தை உணவுடன் சேர்த்து ஊட்டி மூளையை முளையிலேயே மழுங்கடித்து கொல்லு அல்லது மடி என்ற தாரகமந்திரத்தை புகட்டி அப்படியே பிள்ளைகளும் வளர்ந்து தீவிரவாத செயலில் ஈடுப்பட்டு மடிகிறார்கள்....

பணம் இருப்பவன் வசதி படைத்தவன் புகழ் படைத்தவன் எல்லோரையும் அடக்கி தன் வழிக்கு கொண்டு வர முயல்கிறான். அடிமைகளாக்க தன்னால் இயன்றவரை பாடுபடுகிறான்....மக்கள் எந்த பக்கம் போவார்கள் என்ற பீதி... என்னாகும் என்ற நிலை.....

கதம்ப உணர்வுகள் said...

"ஒரு நாடகத்திற்கு எப்படி
பல கதைகள் இருக்கக் கூடும்
பல இயக்குநர்கள் எப்படிச் சாத்தியம் "

தெய்வங்கள் எத்தனை வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும். ஆனால் மதங்கள் எத்தனை, ஒவ்வொரு மதத்திற்கும் ஜாதிகள் எத்தனை, ஒவ்வொரு ஜாதிக்கும் உட்பிரிவு எத்தனை? இது இன்னும் இன்னும் இன்னும் மக்களை குழப்ப நிலைக்கு தள்ளி தான் விடுகிறது....

" இது நிகழ் கலை
இதை எழுதியவன் எவனும் இல்லை
இதை இயக்குபவன் எனவும் எவனும் இல்லை
நடிகன் இய்க்குநர் எல்லாம் நாமே
நாடகத்தின் போக்கும் முடிவும் கூட
நம் கையில்தான் "

எல்லோரையும் ஒரு பக்கம் தன்னிடம் இழுக்க முயன்றுக்கொண்டிருக்கும் ஆத்திகவாதிகள் இருக்க......

நாத்திகவாதிகள் இப்படி கிளம்புகிறார்கள் தெய்வம் என்பது இல்லை, தெய்வம் இல்லைன்னு சொல்லும் நாத்திகவாதி மதம் இல்லை ஜாதி இல்லை உட்பிரிவு இல்லைன்னு சொல்ற நாத்திகவாதி இருக்காரா?

இப்படி வாழ்க்கையின் மொத்த நாட்களும் இப்படி நம்மை நாமே இழக்க ஏதோ ஒரு கண்ணுக்கு தெரியாத இது போன்ற விஷக்கிருமிகளாக அவதரித்துக்கொண்டே தான் இருக்கின்றனர்.....

தினம் ஒரு நாடகம், ஒவ்வொரு நிகழ்வும் நாடகம், ஒவ்வொரு கதாப்பாத்திரங்களும் தினம் தினம் நாம் சந்திக்கும் முகங்கள்... ஒருசில முகவரி தொலைத்தவை, ஒரு சில முகவரி தேடி அலைபவை, ஒரு சில நம்மிடம் அடைக்கலம் தேடி வருபவை ஒரு சில நம்மை துடிக்க வைப்பவை, ஒரு சில நம்மை தெய்வமாய் நினைத்து வரம் கேட்பவை ஒரு சில நம்மை அழிக்க நினைப்பவை ஒரு சில நம்மை தீயவழியில் ஆட்டுவிக்க வாய்ப்பு தேடுபவை...ஒரு சில நம்மை நேர்வழியில் கொண்டு செல்ல பார்ப்பவை... இப்படி பல பல அட்வென்ச்சர்களை பார்த்துக்கொண்டே தான் செல்கிறோம்... நேற்று ஒரு சாவு இன்று ஒரு சாவு நாளை எத்தனை பேர் எப்போது எப்படி மரிப்பார்கள் என்பதை அறியமுடியா மர்ம முடிச்சுகளாக வாழ்க்கையே ஒரு மிஸ்ட்ரியாக அசத்தலாக கவிதை வரிகளில் உணர்த்திட்டீங்க.....

உங்களின் ஒவ்வொரு கவிதையிலும் உங்க கவிதைக்கு நீங்க உவமையா தரும் விஷயங்கள் நச் ரமணி சார். ரொம்ப ரசித்து படிப்பேன்.

புதுமையாகவும் இதுவரை நான் எங்குமே படித்திராத விஷயமாகவும் இருக்கும் நீங்க சொல்லும் உவமை...

இதோ
” அதன் வாய்க்கும் புல்லிற்குமான
இடைவேளி மட்டும் குறையாது இருத்தல் போல
கேள்விக்கும் புதிருக்குமான மாய இடைவெளி மட்டும்
குறையாது தொடர்ந்து கோண்டே இருக்கிறது

இப்படி...

எத்தனை சத்தியமான வார்த்தை இது.....

கதம்ப உணர்வுகள் said...

என்ன செய்தாலும் செய்யலன்னாலும் எப்படி இருந்தாலும் இருக்கலன்னாலும் குதிரையின் வாய்க்கும் புல்லுக்குமான இடைவெளி மட்டும் குறையாது இருத்தல் போல.....

மக்களின் குழப்பங்களுக்கும் பதிலுக்குமான மாய இடைவெளி ஏன்னா கண்ணுக்கு தெரிவதில்லையே..

தெரிஞ்சுட்டா அதன் பின் வாழ்வதில் சுவாரஸ்யம் இல்லையே...கதைப்புக்கின் கடைசி பேஜ்ல இருக்கும் முடிவு தெரிஞ்சுட்டு கதை படிப்பது சுவாரஸ்யமா இருக்குமா?

சாதாரண மனுஷ பிறவி நாம.... நாமளும் இப்படி தான்.....

நாளும் பதிலை தேடி களைத்து போகிறோம்.. அலுத்தும் போகிறோம்... ஆனால் வாழ்க்கை என்ற மிஸ்ட்ரி இன்னமமும் தொடர்ந்துக்கிட்டே தான் இருக்கு..இறப்பும் பிறப்புக்கும் இடையில் தான் மனிதன் ஆடும் நாடகங்களும் ஒத்திகையில்லா ஒப்பனைகளில்லா விசித்திரங்களும் இறைவன் பார்த்து ரசித்துக்கொண்டு நாட்களை கடத்திக்கொண்டு இருக்கிறான்...

கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம்..
கண்ணில் கண்ட மனிதர்கள் எல்லாம் நலமா என்றாராம்...
ஒரு மனிதன் வாழ்க்கை இனிமை என்றான்...
ஒரு மனிதன் அதுவே கொடுமை என்றான்...
படைத்தவனோ உடனே சிரித்துவிட்டான்....

ஆனால் நான் சிரிக்கும் மனநிலையில் இல்லை ரமணி சார்.....

கதம்ப உணர்வுகள் said...

மூன்று நாட்களாக பிள்ளையின் ஸ்கூல் ட்ரான்ஸ்பர்டேஷனில் நடக்கும் விவாதங்கள் அதனால் உண்டான அமளிதுமளிகள் ஹிந்து முஸ்லிம் விவகாரம் பெரிதாக்கி பிள்ளைகள் சண்டைப்போட்டுக்கொண்டு இபானேஷை அடிச்சு முடியை பிடித்து தள்ளி கழுத்தை நெறித்து இரண்டு தினங்களாக இபானேஷ் ஜுரத்துடன் பள்ளி செல்கிறான் ரமணி சார்.... எங்கே முளைக்கிறது இந்த மத துவேஷங்கள் என்று வேதனையுடன் நினைத்து பார்க்கிறேன்... என் பிள்ளை ஹிந்துவாய் பிறந்தது அவன் குற்றமா :(

நாங்கள் குடி இருக்கும் ப்ளாட்டிலும் இத்தனை நாட்கள் இபானுடன் ஸ்நேகமாக விளையாடிக்கொண்டிருந்த ஆஃப்கன், எகிப்தியர், பாகிஸ்தானி என்று எல்லோரும் இப்ப இபானேஷ் ஹிந்து என்று தெரிந்துவிட்டதால் விளையாட்டில் சேர்த்துக்கொள்வதில்லை :(

பிள்ளைகளுக்கு நல்லதை சொல்லிக்கொடுக்க தாய் தந்தை முயலவேண்டும்... மதம் வேண்டாம் மனிதம் மலரும் மனதுடன் இருக்கச்சொல்லி அன்பாய் சொல்லித்தரவேண்டும்...

வண்டியில் இபானை அடிச்ச பிள்ளையுடன் இன்று பேசினேன்... அந்த பிள்ளையின் அம்மாவிடமும் பேசினேன். அன்பாய் அமைதியாய் பொறுமையாய் பேசினேன். பிள்ளைகள் இன்று சண்டையிடும் நாளை கூடிக்கொள்ளும் என்று நினைத்து தான் இத்தனை நாட்கள் அமைதியாக இருந்தேன். இது அப்படியே வளரவிட்டால் பிள்ளைகள் மனதில் துவேஷங்கள் வளர்ந்துவிடும் என்றே நான் பேசினேன்.

அருமையான கரு ரமணி சார் நீங்க தேர்ந்தெடுத்தது.. சமுதாய சிந்தனையுடன் வலம் வரும் உங்க படைப்புகள் என்றும் தனித்தன்மையுடன் மிளிர காரணம் இதோ திகட்டாமல் தித்திக்க தரும் அருமையான கவிதைகள் தான் ரமணி சார்......


அன்பு நன்றிகள் அழகிய வரிகளும் வாழ்க்கையையே மிஸ்ட்ரியாக்கி படிப்போரை சிந்திக்கவைத்த அற்புதமான படைப்பு ரமணி சார்.

நூத்துக்கு நூறு..... போனஸ் மார்க் பதினைந்து அழகிய குதிரை புல் உவமானத்திற்கு....

சாகம்பரி said...

//புலம்பித் திரிபவர்களுக்கு ஆறுதலாய்
கைகளில் பேரேடுகளைச் சுமந்தபடி
பலர் அரங்கினுள் வலம் வருகிறார்கள்//
உண்மை. கதையும் புரியாதரை இயக்குனரை தெரியாதவரை நடப்பதே நடிப்பாகிவிடுகிறது.

சாகம்பரி said...

//இதுதான் மூலக் கதையென்றும்
இதுதான் இயக்குநர் வந்து போனதற்கான
உண்மை அத்தாட்சி யெனவும்
இனி அவரின் வருதலுக்கான
உறுதிமொழியெனவும்//
ஏதோ ஒன்றை கதையாகவும் யாரோ ஒருவரை இயக்குனராகவும் ஒப்புக் கொள்வதுடன் முடியவில்லையே. யார் சிறந்தவர் போட்டி ஆரம்பிப்பதுதான் அடுத்த நாடகம் ஆகிறது. தன் கதை தேடியது போக அடுத்தவருடைய -இயக்குனருக்கேகூட- கதை எழுதும் பேதமை ஆரம்பிக்கிறது.

சாகம்பரி said...

இடைவெளிதான் முடிவறியா நாடகத்தின் கதாநாயகியாகிவிடுகிறது. அணுகுவதோ அகலுவதோ நாடகத்தை முற்றும் போட வைத்துவிடும். இடைவிடாமல் இந்த இடைவெளியை பராமரிப்பது யார்? மறுபடியும் முற்று பெறாத சிந்தனையை கவிதை தூண்டுகிறது.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

ரமணி அண்ணா!சௌக்கியமா? நெடுநாளாயிற்று உங்களைப் படித்து.

மர்ம இடைவெளியை மாய இடைவெளி என்றே நான் புரிந்து கொள்கிறேன்.புதிருக்கும் விடைக்கும் இடையிலான இடைவெளிதான் வாழ்வின் ரகசியம் என்றும் புரிகிறது.

இது தொடர்பாய் முன்பு நான் எழுதிய கவிதை ஒன்றையும் உங்களின் சிந்தனையின் தொடர்வினையாய் இங்கே இணைக்கத் தோன்றியது.

ஒரு நூல்க்கண்டின்
துவக்கமா முடிவா?
ஒரு மரத்தின்
அடிவேரா நுனி மரமா?
வீழும் இலையா?
வாழும் கிளையா?
இசைக்கு முந்தைய
பேரமைதியா-
பிந்தைய
பெருங்கிளர்ச்சியா?
சொல்லைக் கடந்த
வலியா-
சொல்லைத் தவிர்த்த
நிலையா?
பசிக்கு முந்தைய
உணவா-
நிறைவுக்குப்
பிந்தைய பசியா?
சுண்டிய நாணயத்தின்
மேற்புறமா கீழ்புறமா?
மூடிய கதவின்
உட்புறமா வெளிப்புறமா?
நிறைவின் மேல்
சிறு துளியா-
குறைவின் மேல்
ஒரு கடலா?
இலையசைக்கும் காற்றா-
காற்றசைக்கும் இலையா?
நதி நடக்கும் மணலா-
மணல் சுமக்கும் நதியா?
வான் துறந்த துளியா-
துளி சுவைத்த மண்ணா?
உறங்குகையில் கனவா-
கனவினுள் விழிப்பா?
வண்டு உண்ட கனியா-
கனி உண்ட வண்டா?
கரை தொடும் அலையா-
கடல் திரும்பும் நுரையா?
துவங்காத இவ்வரியா-
முடிவில்லா அதன் பொருளா?

Yaathoramani.blogspot.com said...

சாகம்பரி //
தாங்கள் மிகச் சரியாக குறிப்பிட்டிருப்பதைப் போல
கூடுமானவரையில் என்னுடைய படைப்புகளில்
ஒரு முற்றுப்பெறாத சிந்தனையிலேயே
முடித்திருப்பேன்
எனக்கு முதலில் கேள்விபோல் துவங்கிய சிந்தனையை
முற்றுப் பெறவிடாது அதை அடுத்தவரிடம்
கடத்துத்துவதே ரொம்பப் பிடிக்கும்
அதனால்தான் பெரும்பாலான படைப்புகளில்
முதல் அடியே மீண்டும் ஈற்றடியாக வந்து நின்று
படிப்பவரை மீண்டும் குழப்பும்
நான் நாலு பக்கத்திற்கு சிந்தித்து அதை
ஐம்பது வரிக்குள் சுண்டக் காய்ச்சுவதற்குத்தான்
ரொம்பச் சிரமப் படுவேன்
அதையே படித்தவர்கள் மீண்டும் விரித்துச் சொல்லுகையில்
மனம் குதூகலம் கொள்ளும்
மஞ்சுபாஷினி அவர்களின் பின்னூட்டம்
குறிப்பாக இதைச் செய்யும்
தங்களுடைய கவிதைகளிலும் பின்னூட்டங்களிலும்
இதை நான் கண்டு வியந்திருக்கிறேன்
வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சுந்தர்ஜி //.

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
தங்களது படைப்புகளில் இருக்கும் சிந்தனை நெருக்கம்
மற்றும் சொல்லாட்சி பல சமயங்களில்
என்னை பயப் படவைக்கும்
நாமெல்லாம் எழுதவேண்டுமா என யோசிக்க வைக்கும்
தங்களது இந்தப் படைப்பும் அப்படியே
தங்கள் வரவையும் வாழ்த்தையுமே மிகப் பெரிய
அங்கீகாரமாகக் கொள்கிறேன் நன்றி

Yaathoramani.blogspot.com said...

மஞ்சுபாஷிணி //

மிக்க நன்றி
தங்கள் சிந்தனையின் வேகமும் ஆழமும்
பிரமிப்பூட்டுகிறது.விரிவான அருமையான
பின்னூட்டமிட்டு படைப்பை கௌரவப்படுத்தும்
உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது எனத் தெரியவில்லை
வாழ்த்துக்கள்

கதம்ப உணர்வுகள் said...

அன்பு நன்றிகள் ரமணி சார்.... ஹப்பா நான் பாஸ்....

Anonymous said...

''..தொடக்கமும் முடிவும் தெரியாது
போகிற போக்கும் புரியாது
தொடர் நாடகம் மட்டும்
தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது...'''
எல்லாமே நாடகம் தான். சடித்து வெற்றி காண்பது எமது திறனே. தொடரட்டும் பணி. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.

Yaathoramani.blogspot.com said...

kovaikkavi //

த்ங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

அப்பாதுரை said...

நாடகமேடையும் நடிகர்களும் புரிகிறது. நன்று. உங்கள் கவிதையைப் படித்து ரசிக்க முதல் வருகை.
மஞ்சுபாஷிணியின் பின்னூட்டங்களைப் படித்து ரசிக்கத் தனியாக வருகை.
சுந்தர்ஜியின் பின்னூட்டத்தைப் படித்து ரசிக்கத் தனியாக வருகை.

Yaathoramani.blogspot.com said...

அப்பாதுரை //

த்ங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

சுஜா செல்லப்பன் said...

கவிதை அருமை....வாழ்க்கை பற்றி வேறு கோணத்தில் சிந்திக்க வைத்தது உங்கள் கவிதை...நல்ல சமுதாய சிந்தனை கொண்ட கவிதை...மேலும் தொடர வாழ்த்துக்கள் !

Anonymous said...

கேள்விக்கும் புதிருக்குமான மாய இடைவெளி மட்டும்
குறையாது தொடர்ந்து கொண்டே இருக்கிறது...

அது குறைந்துவிட்டால் வாழ்க்கையில் சுவையெது..?


கவிதை நல்ல இருக்கு

Yaathoramani.blogspot.com said...

சுடர்விழி //

த்ங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சின்னதூரல் //

த்ங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

kowsy said...

வாழ்க்கைத் தத்தவத்தை அளந்து கவிதையாய் கலக்கியிருக்கின்றீர்கள். அச்சடித்த வார்த்தைகளுக்குள் ஆயிரம் தத்துவங்கள் அடங்கியிருக்கின்றன. வாழ்க்கைக்குள் அடங்கி இருத்தல் போல. ஓட்டம் முடிவடையும் போது இறுதியில் எல்லாம் மாயை என்று உணர்ந்து கொள்ளும் நிலை தோன்றும். நாம் கடந்துவந்த வாழ்க்கையே இதற்கு அத்தாட்சியாக அமையும

அன்புடன் மலிக்கா said...

வாழ்க்கைக்குள்ளிருக்கும் மறைபொருள் ரகசியங்கள்
விசித்திரமானவைகள். ஆழம் காணமுடியாதவைகளும் மாயவித்தைகளும் கண்முன்னே காட்சியான நாடங்களும் அனைத்தையும் அணுஅணுவாக அனுபவிக்க அனுப்பட்டுள்ளோம். உணரப்பட்ட வரிகளாய் ஒவ்வொன்றும் ullathu.. வாழ்த்துகளும் பாராட்டுகளும்..

Unknown said...

அரிய சிந்தனை அழகான கவிதை வடிவில் அருமையாக தந்துளீர்கள் அருமை சார் i லவ் இட்

Yaathoramani.blogspot.com said...

சந்திரகௌரி..//

த்ங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ராக்கெட் ராஜா //

த்ங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

அம்பாளடியாள் said...

சிலர் மட்டும் இன்னும் அதிகம்
குழம்பிப் போகிறார்கள்
"ஒரு நாடகத்திற்கு எப்படி
பல கதைகள் இருக்கக் கூடும்
பல இயக்குநர்கள் எப்படிச் சாத்தியம் "
இவர்கள் கேள்விக்கு ப்திலேதும் இல்லை
ஒவ்வொருவருவரும் தத்தம் கதைப்படித்தான்
நாடகம் தொடர்கிறது
முடிவு கூட இதன் படித்தான் என
சாதித்துத் திரிகிறார்கள்
இவர்களின் பிரச்சாரத்தில்
குழுக்கள் கூடிப்போகிறதே தவிர
குழப்பம் தீர்ந்தபாடில்லை

அருமையான பகிர்வு மிக்க நன்றி ஐயா
பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ............

அம்பாளடியாள் said...

தமிழ்மணம் 17

Yaathoramani.blogspot.com said...

அம்பாளடியாள் //

த்ங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

ஸாதிகா said...

//தொடக்கமும் முடிவும் தெரியாது
போகிற போக்கும் புரியாது
தொடர் நாடகம் மட்டும்
தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது//

வாழ்வியலை அழகாய் படம் பிடித்து காட்டி இருக்கின்றீர்கள் கவிதை வடிவில்.வாழ்த்துக்கள் சார்.

Yaathoramani.blogspot.com said...

ஸாதிகா //

த்ங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

RAMA RAVI (RAMVI) said...

உலகமே ஒரு நாடக மேடை அதில் நாமெல்லாம் நடிகர்கள்.
அருமையாக உள்ளது ரமணி சார். நன்றி பகிர்வுக்கு.

Yaathoramani.blogspot.com said...

RAMVI //.

த்ங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Unknown said...

தற்கால நிகழ்வுகளின் தாக்கமாய் உணர்ந்தாலும் எக்காலத்துக்கும் பொருந்திய வரிகள்.

K. ASOKAN said...

அருமையான பதிவு

K. ASOKAN said...

அருமையான பதிவு

Post a Comment