Saturday, October 1, 2011

அஞ்ஞான விளிம்பு ...


எது அவரை தலைகீழாகப் புரட்டிப் போட்டது ?
சொல்லிய கதையா ?சொல்லிய விதமா ?கேட்ட விதமா ?
எல்லோரும்தான் ஹரிச்சந்தரன் கதை கேட்கிறோம்
காந்தியும்தான் கேட்டார்
அவர் மட்டும் எப்படி மகாத்மா ஆகிப் போனார் ?
எது அவரை மாற்றிப் போட்டது ?

எது அவரை ஞானியாக்கிப் போனது ?
நோயா? மூப்பா ? சாவா?
எல்லோரும்தான் மூன்றையும் தினம் பார்க்கிறோம்
கௌதமன் மட்டும் எப்படி மாறிப்போனான் ?
எது அவரை புதியவராக்கிப் போனது ?
அவலமா? அவை தந்த கழிவிரக்கமா ?
அதீத சிந்தனையா?
எது அவரை புத்தனாக்கிப் போனது ?

சூழல் எவரையும் மாற்றிவிடுமா?
மாறுபவருக்கு சூழல் ஒரு பொருட்டில்லையா ?
கேள்விகள் என்னுள் சூறாவளியாய்   சுழன்றடிக்க
நேரம் காலம் மறந்து கோவில் சன்னதியில்
குழம்பிப் போய்க் கிடந்தேன்
அருகில் வந்தமர்ந்த என் சித்தப்பா
ஆறுதலாகத் தலையைத் தடவி
"என்ன குழப்பம் சொல் முடிந்தால் தீர்க்கிறேன் " என்றார்

முழுவதையும் கேட்ட அவர்
"எனக்கும் அந்தக் குழப்பம் உண்டு
பாட்டி இறந்ததும்
சில மாதம் குழம்பித் திரிந்த தாத்தா
திடுமென ஒரு நாள் காசிக்கு
மரண யாத்திரை கிளம்பிவிட்டார்
நாங்கள் அதிர்ந்து போனோம்
அவரை திடுமென மாற்றிப் போட்டது எது ?
விரக்தியா ?வேதனையா ? ஞானத் தேடலா ?
அவ்ரை வழியனுப்ப போயிருந்த நான்
கடைசியாக இதே கேள்வியை கேட்டேன்
லேசாகச் சிரித்தபடி அவர் இருக்கைக்கு மேலிருந்த
வாசகத்தை காண்பித்தார்
"சுமையைக் குறை சுகமாய் பயணம் செய் " என்றிருந்தது

சுமை என்பதற்கும் சுகம் என்பதற்கும்
வேறு அர்த்தமும் உண்டென
நமக்கேன் இதுவரை புரியவில்லை ?
அவருக்கு மட்டும் எப்படிப் புரிந்தது ?
இந்த வாசகம் அவரை முடிவெடுக்கத் தூண்டியதா?
முடிவெடுத்த அவருக்கு வாசகம் கைகொடுத்ததா ?
எனக்கும் அந்தக் குழப்பம் உண்டு
உனக்குப் புரிந்தால் எனக்கும் சொல் "  எனச் சொல்லிப் போனார்

குழப்பம் கூடியதுதான் மிச்சம்
எனக்கேதும் புரியவில்லை
எது ஒரு சிலரை மட்டும்
தலைகீழாய் புரட்டிப் போடுகிறது ?
கருவிலே திருவா ?
வாய்க்கிற சூழலா ?


74 comments:

Anonymous said...

குழப்பம் உங்களுக்கு மட்டும் தானா..ரமணி சார்...

வெங்கட் நாகராஜ் said...

//எது ஒரு சிலரை மட்டும்
தலைகீழாய் புரட்டிப் போடுகிறது ?
கருவிலே திருவா ?
வாய்க்கிற சூழலா ?//

இது என்றுமே புரியாத புதிர் தான்!

குழப்பத்தினைக் கூட அழகிய கவிதையாகப் படைப்பதில் உங்களுக்கு குழப்பமே இல்லை!

நல்ல கவிதை பகிர்வுக்கு நன்றி.

ராமலக்ஷ்மி said...

//எது ஒரு சிலரை மட்டும்
தலைகீழாய் புரட்டிப் போடுகிறது ?//

புரியாத ஒன்றே.

சுந்தரா said...

//குழப்பம் கூடியதுதான் மிச்சம்
எனக்கேதும் புரியவில்லை//

இங்கும் அதே நிலைதான் :)

Lakshmi said...

சுமை என்பதற்கும் சுகம் என்பதற்கும்
வேறு அர்த்தமும் உண்டென
நமக்கேன் இதுவரை புரியவில்லை ?


இன்னமும் நாம் குழப்பத்திலேதானே இருக்கிரோம்.

G.M Balasubramaniam said...

ஏதோ ஒரு நிகழ்ச்சி ஒருவனை முற்றிலுமாக மாற்றக்கூடியதா.?காந்திக்கும் புத்தனுக்கும் மாற்றத்துக்கான விதை வேண்டுமானால் விதைக்கப் பட்டிருக்கலாம் இந்த நிகழ்ச்சி மூலம். சுமையிலும் சுகம் காணும் பலர் நம் முன் நடமாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். வெளிச்சத்துக்குத்தான் வருவதில்லை. பூவனம் ஜீவியின் ஒரு சிறுகதை படித்தேன். அதிலும் ஒருவன் நல்லவனாக மாறுவதை அழகாகச் சொல்லிப் போகிறார். பிறக்கும்போது அனைவரும் நல்லவர்களே. சந்தர்ப்பமும் சூழ்நிலைகளுமே அவர்களை மக்களாகவோ. மாக்களாகவோ மாற்றுகிறது. சிந்திக்க வைக்கும் பதிவு. தொடர வாழ்த்துக்கள்.

Ramani said...

ரெவெரி //

தங்கள் உடன் வரவுக்கு
மனமார்ந்த நன்றி

Ramani said...

வெங்கட் நாகராஜ் //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

ராமலக்ஷ்மி //

தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

சுந்தரா //
தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

Lakshmi //
தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

MANO நாஞ்சில் மனோ said...

குரு, குழப்பத்துக்கே குழப்பம் உண்டாக்கி குழம்பி போகவச்சிட்டீங்க...

MANO நாஞ்சில் மனோ said...

பாட்டி இறந்ததும்
சில மாதம் குழம்பித் திரிந்த தாத்தா//

துணையின் பிரிவு, என்னை போல வெளியிடங்களில் இருப்பவர்களுக்கு நன்றாக புரியும்....

Ramani said...

G.M Balasubramaniam //

தங்கள் உடன் வரவுக்கு மனமார்ந்த நன்றி
இங்கு எல்லாமே எல்லையின்றியும்
அளவின்றியும் கொட்டியே கிடக்கின்றனர்
எடுத்துக் கொள்ளுதலையும் எடுத்துக் கொள்ளும் அளவையும்
எடுத்துக் கொள்ளும் காலத்தையும் கூட
அவரவரே முடிவு செய்து கொள்ளும்படிதான் இருக்கிறது அதில்
இயற்கையோ ஆண்டவனோ தலையிடுவதில்லை
அதைதான் சுற்றி வளைத்து சொல்ல முயன்றிருக்கிறேன்
தங்கள் விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி

தமிழ் உதயம் said...

. மகாத்மா காந்தி... அருமையான கவிதை. குழப்பமாக இருந்தால் என்ன. நமக்கொரு மகான் கிடைத்தாரே. மனிதனும் தெய்வமாகலாம் - தங்களின் செயற்கரிய செயல்களால்.

கோகுல் said...

சுமையைக் குறை சுகமாய் பயணம் செய்'
//
சத்தியமான வார்த்தைகள்.
//கருவிலே திருவா ?
வாய்க்கிற சூழலா ?

கருவில் திரு என்பது அடித்தளம்
வாய்க்கும் சூழல்
அடித்தளத்தின் வெளிப்பாடு.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

////
மகாத்மா ஆகிப் போனார் ?
எது அவரை மாற்றிப் போட்டது ?
//////

அது ஒரு ஞானத்தின் வடிவம்..

Ramani said...

MANO நாஞ்சில் மனோ //

தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

தமிழ் உதயம் //

தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

கோகுல் //

சத்தியமான வார்த்தைகள்.
//கருவிலே திருவா ?
வாய்க்கிற சூழலா ?

கருவில் திரு என்பது அடித்தளம்
வாய்க்கும் சூழல்
அடித்தளத்தின் வெளிப்பாடு.

மிகச் சரியாக நான் உட்பொருளாய்
வைத்துள்ளதை மிக அழகாக
சுருக்கமாக சொல்லிவிட்டீர்கள்
வாழ்த்துக்கள்

Ramani said...

கவிதை வீதி... // சௌந்தர் //

தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

ஸாதிகா said...

குழப்பம் கூடியதுதான் மிச்சம்
எனக்கேதும் புரியவில்லை
எது ஒரு சிலரை மட்டும்
தலைகீழாய் புரட்டிப் போடுகிறது ?
கருவிலே திருவா ?
வாய்க்கிற சூழலா ?//

எங்களுக்கும் அதே குழப்பம் தான் சார்!

ஒரு கருவை கையில் எடுத்துக்கொண்டால் கடுகு பொரிகின்றார்ப்போல் பட பட வென்று என்னமாய் கவிதைச்சரம் தொடுத்து விடுகின்றீர்கள்!அடேங்கப்பா!!

மனோ சாமிநாதன் said...

எல்லோருக்குள்ளும்தான் கருணையும் மனித‌ நேயமும் இருக்கின்றன! ஆனால் அவற்றைக் காப்பதற்கான தவவலிமையும் உயிர்த்துடிப்பும் உத்வேகமும் தன்னலம் கருதாத தியாகங்களும் எல்லோரிடமும் இருப்பதில்லை! குறிஞ்சி ம‌லர்களைப்போல ஒரு மகாத்மா, ஒரு மதர் தெரஸா!!

சிந்திக்க வைக்கும் அருமையான கவிதை!

உங்கள் கவிதைகள் எப்போதுமே மனசினுள் புகுந்து அடியில் பதுங்கிக்கிடக்கும் எண்னச்சிதறல்களை வெளியில் கொன்டு வந்து கொட்ட வைத்து விடுகிறது!

முனைவர்.இரா.குணசீலன் said...

எது ஒரு சிலரை மட்டும்
தலைகீழாய் புரட்டிப் போடுகிறது ?
கருவிலே திருவா ?
வாய்க்கிற சூழலா ?

ஒவ்வொருவரும் தன்னைத்தானே கேட்டுக்கொள்ளவேண்டிய ஆழமான கேள்வி..

Rathnavel said...

அவரை திடுமென மாற்றிப் போட்டது எது ?
விரக்தியா ?வேதனையா ? ஞானத் தேடலா ?

அருமை

முனைவர்.இரா.குணசீலன் said...

அன்பு நண்பரே..

இன்று எனது 450வது இடுகை வெளியி்ட்டிருக்கிறேன்..

காணத் தங்களை அன்புடன் அழைக்கிறேன்..

மஞ்சுபாஷிணி said...

மனிதனைப்பற்றி அவன் மாறும் விதம்பற்றி சூழல் காரணமா இருக்குமோ என்றும் பிறப்பின் மகிமையா என்றும் சிந்தித்து விடையை நீங்க சொல்லுங்கன்னு எங்களுக்கு விட்டிருக்கீங்க ரமணி சார்... அழகிய சிந்தனை.. கொஞ்சம் பின்னோக்கி செல்லவைக்கிறது உங்கள் வரிகள்..... சிறப்பான நாளுக்கான சிறப்பான சிந்தனை வரிகள் ரமணி சார்.... இன்றாவது பின்னூட்டம் இட கொஞ்சம் முந்தி இருக்கிறேன் என்ற சந்தோஷம் மனதில்....

மஹாத்மா பிறக்கும்போதே ஞானி இல்லை கண்டிப்பாக... எல்லா சராசரி குழந்தைகளை போல தான் அவரும் வளர்ந்தார். எல்லா பெற்றோர்களிடமிருந்தும் குழந்தைக்கு கிடைக்கும் நல்லொழுக்கம் போல தான் இவருக்கும் கிடைத்தது.... ஆனால் அவருக்கு ஹரிச்சந்திரன் கதை சொன்ன விதம் அவரை சிந்திக்கவைத்திருக்கிறது... உண்மையை சொன்னால் அதனால் கிடைக்கப்போவது நல்லதா கெட்டதா என்பதை அவர் ஆராயவில்லை.. அப்படி அவர் ஆராய்ந்து செயல்பட்டிருந்தால் உண்மைக்கு இத்தனை மதிப்பு கொடுத்திருக்கமாட்டார். மஹாத்மாவின் தாயார் தினமும் சூரியனை வழிப்பட்டுவிட்டு தான் அன்றைய உணவை உண்பார். அப்போது சூரியன் வந்துவிட்டானா என்பதை அறிய குட்டி காந்தியை தான் பார்க்க சொல்வாராம். குட்டியூண்டு காந்தி ஓடுவார் வெளியே சூரியன் தெரிகிறது என்றதும் சூரியனை வழிப்பட்டுவிட்டு மஹாத்மாவின் தாயார் உணவு உண்பார். சில தினங்களில் மழை சதித்துவிடும். அன்றைய நாள் முழுக்க பட்டினியுடன் இருப்பார் காந்தியின் அம்மா... சோ பெற்றோர் எவ்வழி என்பதை தான் பிள்ளைகள் நடப்பது.... பெற்றோர் நல்வழியில் நடந்து பிள்ளைகளுக்கு இன்ஸ்பிரேஷன் ஆகும்போது பிள்ளைகள் கற்கும் நல்லவை ஏராளம்... அம்மாவுக்கு சத்தியம் செய்து கொடுத்தது போலவே மது, புலால் தொடுவதில்லை அவரால் சத்தியத்தை காப்பாற்ற முடிந்தது.... எல்லாராலும் இப்படி இருக்கமுடிந்திருந்தால் எல்லோருமே மஹாத்மா ஆகி இருப்பார்களே... உண்மை சொல்வதால் அதனால் கிடைக்கப்போகும் பயங்கரம் எப்படி என்பதை அரிச்சந்திரன் கதை மூலமாக அறிந்தும் இறுதியில் தெய்வத்தன்மையுடன் சிறந்து விளங்கிய ஹரிஷ்சந்திரன் போல் ஆகவேண்டும் என்பது அவர் மனதில் பதித்துக்கொண்டது...

மஞ்சுபாஷிணி said...

அதனால் தான் அவர் மஹாத்மா ஆனது. நாட்டின் சுதந்திரத்துக்காக எத்தனையோ பேர் பாடுபட்டிருக்காங்க.. ஆனால் மஹாத்மாவாக நிலைத்து நின்றது நம் காந்திதாத்தா தானே? ஏன்? பற்றற்று இருந்ததால்..... மக்களின் மேல் அவர் கொண்ட அதிகப்படி பாசத்தினால்... ஏழ்மையில் உழன்று உடுத்த உடை இல்லாத மக்களுக்கு இடையே நான் மட்டும் நன்றாக உடுத்துவதா என்று தன் உடைகளை முழுமையாக துறந்து ஒரு முழ வேட்டியை தன் உடையாய் கொண்டதால், ஆடம்பரமும் சொகுசும் வெறுத்ததால், இஷ்டப்பட்ட உணவு உண்டால் அவரை யார் என்ன சொல்லப்போகிறார்? ஆனாலும் அவருடைய உணவு இறுதிவரை வேர்க்கடலையும் ஆட்டுப்பாலும் என்று உறுதியுடன் இருந்தது, பதவி கிடைக்க வழி இருந்தும் வேண்டாம் என்ற வைராக்கியத்துடன் இருந்தது. தன்னை எல்லாருக்குமே பிடிக்கும் என்று நினைத்தவர் இல்லை, இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிக்க நினைத்தவரும் இல்லை. இன்னொருத்தரால் தன் உயிர் போனபோது கூட வன்மம் வைக்காத மனதுடன் இறையடி சேர்ந்தவர்.. மஹாத்மா என்றால் அது காந்தி மட்டுமே... அவர் நல்லவற்றை பெற்றோரிடம் கற்றது சிறிதே ஆனாலும் அது தான் பேசிக், அஸ்திவாரம்.... இன்னும் சில எத்தனையோ நிகழ்வுகள் தான் அவரை முழுமையாக மாற்றியது... நமக்கு தேசப்பிதா கிடைத்ததும்....


மூன்றும் தான், நோயுற்று மூப்படைந்து மரணத்தில் உழலும் மனிதனை பார்த்து ஐயோ இதே போல் எனக்கும் சம்பவித்துவிடுமோ என்று பயந்து தன் எல்லாவற்றையும் துறந்தார்.. ஆனால் தன் குடும்பம் ராஜ்ஜியம் எல்லாமே துறக்க வைத்தது எது என்று கேட்டால் பற்றற்ற நிலை.... எதன் மேலும் ஆசைப்படாமல் தன்னை ஒரு வட்டத்துக்குள் குறுக்கிக்கொண்டு விடாமல் மனிதர்கள் எல்லாம் பிறப்பவர் ஒரு நாள் என்றாவது இறப்பது உறுதி... ஆனால் அந்த இறப்பு எப்படி இருக்கவேண்டும் ஒவ்வொரு மனிதனுக்கும் என்பதை புத்தரின் வாழ்க்கை நெறி உணர்த்தியது..... எதுவும் வேண்டாம் என்று இருக்கும்போது இன்பம் துன்பம் இரண்டையும் சமனாக எடுக்கும் பக்குவம் மனதிற்கு வருகிறது.... சந்தோஷத்தில் குதிக்காமல் துன்பத்தில் துவளாமல் சமன் நிலையில் இருப்பவன் ஞானியாகிறான். மானிடரின் கண்ணுக்கு தெய்வமாகிறான்.... சராசரி மனுஷனால அப்படி இருக்கமுடியுமா சொல்லுங்க? தன் சொந்தம் தன் முன்னே துடிக்கும்போதோ அல்லது உயிரை விடும்போதோ அழாம இருக்கமுடியுமா? அழவைப்பது எது? பாசம்? தனக்கு கெடுதல் செய்தவரை மன்னிக்கமுடியாமல் தடுப்பது எது? நமக்குள் இருக்கும் ஈகோ? இதெல்லாம் மனிதனின் பலவித குணங்கள் இயல்புகள் எப்படி வேணும்னாலும் சொல்லலாம். ஆனால் ஒரு மனிதன் தெய்வமாவது பிறரின் துன்பத்தை தன் துன்பமாக எடுத்து அதை துடைக்க முயலும்போது மட்டுமே... புத்தர் அதீதமா சிந்தித்திருந்தால் அவர் அரசனாவே தான் இருந்திருப்பார். இப்படி உலகமே போற்றும் புத்தனாகி இருந்திருக்கமாட்டார். மனதை பக்குவப்படுத்தும் சமன் நிலைக்கு கொண்டு வந்து உலகையே காக்கும் ரட்சகனாகி இருந்திருக்கமாட்டார். மூப்பை மரணத்தை நோயை பார்த்து பயந்தது உண்மை. பக்குவப்படாத மனம் அப்போது. ஆனால் ஞானம் கிடைத்தப்பின் இறந்த மகனை உயிர்ப்பிக்க ஒரு தாய் அவர்கிட்ட வந்து கேட்கும்போது இறப்பை யாராலும் தடுக்கமுடியாது என்பதை புரியவைக்க இறப்பில்லாத வீட்டில் கடுகு வாங்கி வரச்சொல்லி உணர்த்தினவர்...ஞானம் தெளியவைத்தது.... புத்தனாக்கியது

மஞ்சுபாஷிணி said...

ஆமாம் சூழல் எவரையும் மாற்றிவிடும்.... மாறாதிருக்க அவர் தெய்வமில்லை என்றும் சொல்லமுடியாது....லக்‌ஷ்மணன் கிழித்த கோட்டை தாண்டாதே என்று சொல்லிவிட்டு போனதை சீதா கடைப்பிடித்தார் ஆயினும் இராவணன் கையில் அகப்பட்டார்.. எப்படி? பிக்‌ஷை படி தாண்டி வந்து இட சொல்லி இராவணன் வற்புறுத்தினதால் வேறு வழி இல்லாமல் கோடு தாண்டவேண்டியதாகிவிட்டது.. இராவணனின் அழிவுக்கு இது தான் காரணம்... எல்லா நற்குணங்களும் எல்லா திறமைகளும் ஈசனையே வசப்படுத்தும் இசைச்சக்ரவர்த்தி பிறன் மனை நோக்காமை என்பதில் நெறி தவறினான்... சூழல் ஒரு மனிதனை தீய பாதைக்கும் அழைத்து சென்று அழிக்கிறது.. நல்லவை காட்டி திருத்தவும் செய்கிறது.... ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்த குழந்தையை பிறந்ததில் இருந்தே சேரியில் கொண்டு விட்டால் குழந்தை எந்த குணத்துடன் இருக்கும் வளரும்? அங்கிருக்கும் சூழலை அனுசரித்து தானே வளரும்? எப்படிப்பட்ட சூழலிலும் தன்னை மாற்றிக்காதவர் தான் ஞானி ஆவது.... நல்லவர் என்றும் தெய்வம் என்றும் போற்றப்படுவது....காமராஜர் எப்படிப்பட்ட சூழலிலும் அரசியலில் நேர்மை தவறாமல் இருந்தார்.... சூழல் எப்படிப்பட்டதா இருந்தும் அவரை மாற்றவில்லையே... அவர் வீட்டில் மட்டும் நீர் வர ஏற்பாடு செய்தபோது திட்டி அந்த கனெக்‌ஷனை பிடுங்கி போட சொன்னாரே.. சூழலுக்கு தன்னை இழக்கலையே....இன்னும் கொஞ்சம் சேர்த்து அனுப்புப்பா காசு என்று அவர் தாயார் கேட்டு கடிதம் எழுதியபோது காய் வாங்கி சாப்பிட்டு வாழும் அளவுக்கு தான் உன் மகனின் சம்பாத்தியம் அம்மா என்று தன் எளிமையை இறுதிவரை கடைப்பிடித்தாரே.. இப்ப இருக்கும் அரசியல்வாதிகள் சூழலை காரணம் சொல்லி அடிக்கும் கொள்ளைகளை நான் கணக்கில் சேர்க்கவில்லை... சூழல் ஒரு மனிதனை எப்படி வேணுமானாலும் மாற்றும் கண்டிப்பாக...


மரணம் இறந்தவருக்கு உலகத்துடனான பந்தம் முற்றுப்பெறுவதற்கான அடையாளம்.... உயிருடன் இருப்பவருக்கோ இறந்தவர் மேல் கொண்ட அதீத பாசமும் காதலும் அன்பும் இனி கிடைக்காது என்ற விரக்தியில் தன்னை மாய்த்துக்கொள்ள வழி தேடும் வகை தான் இந்த வரிக்கான அர்த்தம் என்று நினைக்கிறேன் ரமணி சார்....பாட்டி இறந்ததுமே தாத்தாவுக்கு வாழ வழி இல்லையா? மற்ற சொந்தங்கள் இல்லையா? பிள்ளைகள் பேர பிள்ளைகளிடம் சுகமாக காலம் தள்ளி இருந்திருக்கலாமே? ஆனாலும் ஏன் காசிக்கு கிளம்பவேண்டும்? எத்தனை சொந்தங்கள் சேர்ந்தாலும் சரி... மனைவியின் அன்பை காதலை இனி யாரால் திருப்பி தரமுடியும் இது ஒரு காரணம்... இணையே போனப்பின் இனி இருந்து என்ன சாதிக்க போகிறோம் என்று மனதை இனி தெய்வத்தின் வழியில் திருப்பிக்கொண்டு சீக்கிரமே பந்தம் ஆசை எல்லாவற்றின் மீது கொண்ட பற்றை துறந்து இறைவனின் பதம் அடைந்துவிடுவோம் என்ற எண்ணம் தாத்தாவின் காசி யாத்திரைக்கு காரணமாக இருந்திருக்கலாம். சம்சாரம் என்ற பந்தம் ஒரு சுகமான சுமை... எப்போது??? கடமைகள் தீரும் வரை... கடமைகள் தீர்ந்தப்பின்னர் நம் உடலே நமக்கு சுமையாகி விடுகிறது... மிக அருமையான வரி சுமையை குறை சுகமாய் பயணம் செய்.... மனதில் உள்ள பற்றை நீக்கு... சுமை குறையும்..... இறைவனை சென்றடையும் பயணம் சுகமாய் அமையும்....

மஞ்சுபாஷிணி said...

\\சுமை என்பதற்கும் சுகம் என்பதற்கும்
வேறு அர்த்தமும் உண்டென
நமக்கேன் இதுவரை புரியவில்லை ?
அவருக்கு மட்டும் எப்படிப் புரிந்தது ?
இந்த வாசகம் அவரை முடிவெடுக்கத் தூண்டியதா?
முடிவெடுத்த அவருக்கு வாசகம் கைகொடுத்ததா ?\\

இந்த வரி எனக்கு மிக மிக பிடித்த வரி..... எப்படி சிந்திக்கிறீங்க ரமணி சார்... மனிதன் தான் உயிராய் உயர்வாய் உடலாய் உணர்வாய் இருக்கும்வரையும் சிந்திக்கிறீங்க... இதற்கு அப்பாலும் மனிதன் என்பது அது வாகி விட்டப்பின்னரும் ஏற்படும் நிலையையும் எப்படி தீர்க்கமா சிந்திக்கமுடிகிறது உங்களால்??

இந்த கவிதை மட்டும் விடையை நீங்க சொல்லுங்கன்னு எங்க கையில் விடும்போதே நினைத்தேன்... ஒவ்வொருவரின் எண்ண ஓட்டங்களும் கண்டிப்பாக வித்தியாசப்படும்... எல்லோரின் சிந்தனையும் ஒரு போல இருக்காது என்பது உறுதி... சூழல் ஒரு மனிதனை சிந்திக்கவைத்து நல்வழிக்கு மாற்றி சென்றால் அந்த மாற்றமும் அந்த மாற்றத்திற்கு அமைந்த சூழலும் ஏற்றுக்கொள்ளவேண்டிய ஒன்று....ஆனால் ஒரு மனிதனை பாதை மாறி தவறான வழிக்கு கொண்டு செல்லும் சூழல் அமைந்தால் அதில் மனிதன் தடம் புரளாமல் இருந்தால் அவன் தெய்வத்திற்கு இணையாக போற்றப்படுவான்.. எல்லாவற்றிர்கும் ஒரே காரணம் ” பற்று ”.

கருவிலே உருவாவது களிமண் தோற்றமே.... அதை புடம் போடுவதும் நேர்வழியில் செல்லவைப்பதும் தவறான வழிக்கு போகவைப்பதும் அமையும் சூழலை பொறுத்ததே... கண்டிப்பாக வாய்க்கிற சூழலே காரணம் மனிதனை நிலைகுலைய வைப்பது.... எதிலும் தன்னை இழக்காமல் தன்னை நிலைநிறுத்தி வைத்துக்கொள்பவன் ஞானியாகிறான்....

எங்களை மிக அருமையாக சிந்திக்கவைத்து செயல்படவும் வைத்த அற்புதமான வைர வரிகள் ரமணி சார். அழகிய பகிர்வுக்கு அன்பு நன்றிகள் ரமணி சார்....

VENKAT said...

குழம்பியிருப்பவர் உங்கள் கவிதை நாயகன். தெளிவாயிருப்பவர் நீங்கள்.மாயம் என்பதை மிகச்சரியாகப் புரிந்துகொள்ளும்வரை தெளிவு பிறக்காது. மாயம் மனிதனுக்குள்ளும் வெளியும் இருக்கலாம்.செயல்பாடு மட்டும் தான் பிறருக்குத் தெரிகிறது. மாறுதலுக்கு வளர்ப்பு மட்டும் காரணியாகாது. உள்ளுணர்வுகளின் வேகம் வளர்ப்பின் மதிப்புக்களையும் மாற்றிவிடும்.

நானும் தெளிவாய்க் குழப்புகிறேனா?

Ramani said...

அன்பார்ந்த சுபாஷினி அவர்களுக்கு
தங்கள் நீண்ட பின்னூட்டம் கண்டேன்.மகிழ்ச்சி
தங்களால் ஒரு பொருள் குறித்து தொடர்சியாகவும்
ஆழமாகவும் சிந்திக்க முடிகிறது என்பதற்கு
இந்தப் பின்னூட்டமே அத்தாட்சி.
இன்னும் எத்தனை யுகங்கள் ஆனாலும்
எத்தனை முனிவர்கள் பண்டிதர்கள்
ஞானிகள் பிறந்து வந்தாலும் கேள்விகளுக்கான
சரியான பதிலோ வாழ்விற்கான மிக சரியான
அர்த்தமோ விளங்கப் போவதில்லை
விளங்கவேண்டிய அவசியமும் இல்லை
வாழ்க்கையின் சுவாரஸ்யமும் ரகசியமும் அதுதான்
அதுதான் வாழ்வின் சிறப்பே கூட
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
தொடர்ந்து சந்திப்போம்

Ramani said...

ஸாதிகா //

ஒரு கருவை கையில் எடுத்துக்கொண்டால் கடுகு பொரிகின்றார்ப்போல் பட பட வென்று என்னமாய் கவிதைச்சரம் தொடுத்து விடுகின்றீர்கள்!அடேங்கப்பா!!

தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

மனோ சாமிநாதன் //

உங்கள் கவிதைகள் எப்போதுமே மனசினுள் புகுந்து அடியில் பதுங்கிக்கிடக்கும் எண்னச்சிதறல்களை வெளியில் கொன்டு வந்து கொட்ட வைத்து விடுகிறது

தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி!

Ramani said...

முனைவர்.இரா.குணசீலன் //

தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

Rathnavel //
தங்கள் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

பிரணவன் said...

உன்மைதான் sir, இங்கு எல்லாமுமே எல்லையற்று தான் கிடக்கின்றது. குடும்ப சூழலுக்காக அயாராது உண்மையாக உழைப்பவன் சொந்தங்கள் மத்தியில் தலைமையானவன் ஆகின்றான். சமூகத்திற்கென உண்மையாய் உழைப்பவன் நல்ல தலைவன் ஆகின்றான். தன்னை அறிய அயராது உழைப்பவன் ஞானி ஆகின்றான். . . இவை அனைத்துமே கடுந்தவம் தான் sir. . .

துஷ்யந்தன் said...

பாஸ் ஆச்சரியாமாய் இருக்கு
எப்படி உங்களால் மட்டும் இப்படி
கவிதையாய் கொட்ட முடியுது
உங்கள் கவிதைகள் எல்லாம் முத்துக்கள் போன்றது பாஸ்.அட்டகாசம்.... வாழ்த்துக்கள் பாஸ்.

மகேந்திரன் said...

மாயையின் பிம்பம் தான் சூழல்
சூழலினால் நம் வாழ்வில் மாற்றங்கள் ஏற்படுமெனில்
எல்லாமே இயற்கையாய் நடப்பதாகத்தானே
பொருள். அஞ்ஞானம் அகற்றிடும் விஞ்ஞானம்
சூழலுக்கே மாறுபாட்டை கொடுக்கவல்லது..

நண்பரே எப்படித்தான் உங்களுக்கு இப்படி கருவெல்லாம் கிடைக்குதோ, சும்மா சொல்லக்கூடாது. சும்மா அருமையா எழுதுறீங்க நண்பரே.
அழகிய வாழ்வுக்கான உளவியல் கவிதை.

காட்டான் said...

வணக்கம் ஐயா அருமையான பதிவு எங்கிருந்துதான் இப்படி வித விதமாய் கருக்களை கொண்டு பதிவு எழுதுகிறீர்களோ தெரியவில்லை..?? கவிதை அருமை வாழ்த்துக்கள் ஐயா..

Ramani said...

பிரணவன் //..
தங்கள் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

துஷ்யந்தன் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

மகேந்திரன் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

காட்டான் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

M.R said...

குழப்பமான ஒன்றுதான் நண்பரே பகிர்வுக்கு நன்றி
நண்பரே

தமிழ் மணம் 14

Ramani said...

M.R //
தங்கள் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

சுந்தர்ஜி said...
This comment has been removed by the author.
சுந்தர்ஜி said...

விதைப்பவன் ஒரு கைமுழுக்க விதைகளை எடுத்துக் கொண்டுசென்று விதைத்தான்.

சில விதைகள் வழியிலே விழுந்தன.பறவைகள் அவற்றை உண்டன.

சில விதைகள் பாறை மீது விழுந்தன. அவை வேர்விடவோ தளிர்க்கவோ கதிர்கொள்ளவோ செய்யவில்லை.

சில விதைகள் முட்களுக்கிடையே விழுந்தன. முட்கள் அவற்றை நெருக்கின.புழுக்கள் அவற்றை தின்றன.

சில விதைகள் நல்ல மண்ணில் விழுந்து நல்ல கதிர்களை முளைக்கவைத்தன. அவை அறுபது பங்கும் நூற்றியிருபது பங்கும் விளைந்தன.

இப்படித்தான் வேதாகமத்தின் வரிகளை அசைபோடவும் அதற்கடுத்த தளத்தில் சிந்திக்கவும் வைத்தது உங்கள் இடுகை.

சிந்தனையின் கடிவாளம் உங்கள் கையிலேயே எப்போதும் இருப்பதாய் அறிகிறேன் ரமணியண்ணா.

விக்கியுலகம் said...

நல்ல கவிதை

கோவை2தில்லி said...

//எது ஒரு சிலரை மட்டும்
தலைகீழாய் புரட்டிப் போடுகிறது ?
கருவிலே திருவா ?
வாய்க்கிற சூழலா ?//

புரியாத ஒன்று தான்.

அருமையான கவிதை.

Ramani said...

VENKAT //

குழப்புவது போல ஒரு தெளிவான பதிவைக்
கொடுத்தமைக்கும் தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

சுந்தர்ஜி //

தங்கள் மேலான வரவுக்கும் விரிவான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

விக்கியுலகம் //
தங்கள் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

கோவை2தில்லி //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

vanathy said...

ரமணி அண்ணா, சூப்பர் போங்கள். எப்படி இப்படி எல்லாம் அழகா எழுதுறீங்க?

ராஜி said...

குழப்பம் கூடியதுதான் மிச்சம்
எனக்கேதும் புரியவில்லை
எது ஒரு சிலரை மட்டும்
தலைகீழாய் புரட்டிப் போடுகிறது ?
கருவிலே திருவா ?
வாய்க்கிற சூழலா ?
>>>
அதுதானே வாழ்வின் சூத்திரம். அதை நாம் புரிந்துக் கொண்டால் கடவுளுக்கு ஏது வேலை

Ramani said...

vanathy //

தங்கள் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

ராஜி //

தங்கள் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

சந்திரகௌரி said...

மனிதனும் மகான் ஆவான் என்று சொல்லக் கேட்டிருக்கின்றோம். எப்படி ஆவான் என்பதுவே வினா? ஒவ்வொருவரும் பிறக்கும் போது ஒரே மாதிரித்தான் பிறக்கின்றார்கள். வாழும் வாழ்க்கையிலேதான் மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும் ஏற்படுகின்ற சூழல் தாக்கங்கள் அவர்களுக்கு மாற்றங்களைக் கொண்டுவந்து விடுகின்றது. இவ்வாறுதான் மகாத்மா, புத்தபிரான் தோன்றினார்கள். இதிலிருந்து தெரிகின்றது சூழல் மனிதவாழ்வில் ஏற்படுத்துகின்ற மாற்றங்கள். இவ்வாறே கலாசாரங்களும் மாற்றம் பெற்றன. ஆழமான விடயத்தை அழகாகச் சொல்லி எம்மையும் அதனுள் ஈடுபடுத்திய பாங்கு என்னைக் கவர்ந்தது. தொடருங்கள். புதிய பதிவு இடுகின்ற போது எனக்கும் அறிவித்துவிடுங்கள். பார்ப்பதற்கு ஏதுவாக இருக்கும் வாழ்த்துகள்

Riyas said...

பகிர்வுக்கு நன்றி

Ramani said...

சந்திரகௌரி //

தங்கள் மேலான வரவுக்கும் விரிவான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

பகிர்வுக்கு //

தங்கள் வரவுக்கு
மனமார்ந்த நன்றி

ShankarG said...

ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதோ ஒன்றில் தீவிர ஆர்வம் ஏற்படுகையில் அதில் முழுமையாய் ஈடுபடத் துவங்குகிறான். அவனது பயணமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது அதன் இறுதி ஆழத்தைத் தொட்டு விடும் முயற்சியில். அஞ்ஞான விளிம்பு நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

raji said...

சூழல் அனைவருக்கும்தான் உண்டாகிறது.ஆனாலும் ஒவ்வொருவரும் அதை நோக்கும் கோணம் வேறல்லவா?அதுதான் அவர்களை மாற்றி தருகிறது

Ramani said...

ShankarG //..

தங்கள் மேலான வரவுக்கும் விரிவான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

raji . //

தங்கள் வரவுக்கும் விரிவான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Madhavan Srinivasagopalan said...

// சுமை என்பதற்கும் சுகம் என்பதற்கும்
வேறு அர்த்தமும் உண்டென
நமக்கேன் இதுவரை புரியவில்லை ? //

நம்மள மாதிரி சாதாரணமான ஆளுங்களுக்கு அவ்ளோ சீக்கிரமா புரியுமா என்ன ?

kavithai (kovaikkavi) said...

கருவிலே திருவா ?
வாய்க்கிற சூழலா ?அடேங்கப்பா எத்தனை கேள்வி..? சூழல்..அம்மா அப்பா வாழ்கின்ற வாழ்வு அனைத்துமே மனிதனை மாற்றுகிறது எனலாம்.இவையெல்லாம் புரியாத புதிரும் விளங்காத கேள்விகளும் தான். சுகத்தையும், சுமையையும் சரியாகப் புரிந்தாலும் வாழ்வு சுமையாகாது. நல்ல பதிவு. வாழ்த்துகள். கூகிள் குறோம் பாவித்து கருத்திடுகிறேன். சரிவருகிறது போல தெரிகிறது..வேதா. இலங்காதிலகம்.
http://www,kovaikkavi.wordpress.com

Murugeswari Rajavel said...

அஞ்ஞான விளிம்பு'தலைப்பே மனதைத் தைக்கிறது. எந்த வரியை,எந்த வார்த்தையைக் கோடிட்டுக் காட்ட? அத்தனையும் சிறப்பு.விரைவில் உங்கள் கவிதைகளைத் தொகுத்து வெளியிடுங்கள் ரமணி சார்.

Ramani said...

Madhavan Srinivasagopalan //

தங்கள் வரவுக்கும் விரிவான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

kavithai (kovaikkavi) //

தங்கள் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

Murugeswari Rajavel //

தங்கள் வரவுக்கும் விரிவான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

jayaram thinagarapandian said...

//சுமை என்பதற்கும் சுகம் என்பதற்கும்
வேறு அர்த்தமும் உண்டென
நமக்கேன் இதுவரை புரியவில்லை ?//
இது போல புரியாத ஒரு சில கேள்விகளை புரிய வைய்த்தமைக்கு நன்றி

Ramani said...

jayaram thinagarapandian //

தங்கள் வரவுக்கும் விரிவான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Post a Comment