Wednesday, December 7, 2011

தாய்மை ( 2 )


ஒவ்வொரு கணமும் அவன் செய்யும்
அளவிடமுடியா முயற்சியும்
அதனைத் தொடர்ந்து
அவனை வாரி அணைக்கும்
அளவிடமுடியா வளர்ச்சியும்
என்னை திக்கு முக்காடச் செய்து போகிறது

அதே சமயம்
அவனது அல்ட்சியமான ஒரு பார்வையும்
முகம் பாராது பேசிப் போகும்
ஒவ்வொரு சிறுச் சிறு பேச்சும்
பெறுகையில் பேருவகை கொண்ட என்னை
பரிதவிக்க வைத்துப் போகிறது

ஆயினும் என்ன
சின்னஞ்சிறு பிராயத்தில்
அவன் நடை பயில முயலுகையில்
தட்டுத்தடுமாறி வீழ்ந்ததையும்
ஒவ்வொரு முறை வீழும்போது
வாரி அணைத்து உச்சி மோந்து
மீண்டும் நடைபயில வைத்ததையும்
எண்ணி எண்ணி
தாயாக மீண்டும் பெருமிதம் கொள்கிறேன்

இன்று
ப்தவி தரும் சுக போகங்களில்
செல்வம் தரும் மதமதப்பில்
தட்டுத் தடுமாறும் அவன்
இன்றில்லையெனினும் நாளை
அல்லது அடுத்து ஒரு நாள்
அல்லது என்றேனும் ஒரு நாள்
அல்லது விழிமூடும் முன்னரேனும் ஒரு நாள்
ஒரே ஒரு நாள்
மகனாக இல்லையென்றாலும் கூட
ஒரு மனிதனாக வேனும்
நின்று காட்டாமலா போவான் ?

81 comments:

ரமேஷ் வெங்கடபதி said...

பறவை இனத்தைப் போல நாமும் பழகிக் கொள்ள வேண்டும்! பெற்றவர்க்கு கடமை! பிறந்தவருக்கு இருந்தால் அது பெற்றவர் அதிர்ஷ்டம்! த.ம 1 மற்றும் பதிவு!

மகேந்திரன் said...

தாய்மையின் உள்ளம்
வானின்று அளவிடமுடியா
பெருமை வாய்ந்தது...
அழகுற கவிதை புனைந்தீர்கள் நண்பரே..

இராஜராஜேஸ்வரி said...

மகனாக இல்லையென்றாலும் கூட
ஒரு மனைதனாகவேனும்
நின்று காட்டாமலா போவான் /

எதிர்பார்ப்புகள் குறைந்தால்
மனநிறைவு ஒளிரும்.....

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

மகனாக இல்லையென்றாலும் கூட
ஒரு மனிதனாகவேனும்
நின்று காட்டாமலா போவான் ? // கண்டிப்பாக..

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை.

RAMVI said...

//மகனாக இல்லையென்றாலும் கூட
ஒரு மனைதனாகவேனும்
நின்று காட்டாமலா போவான் ?//

கட்டாயம் நடக்கும். வயதானால் புரிந்து கொள்வார்கள்.

ananthu said...

அவள் தான் தாய் ... கவிதைக்கு நன்றி ...!

வெங்கட் நாகராஜ் said...

//மகனாக இல்லையென்றாலும் கூட ஒரு மனிதனாகவேனும் நின்று காட்டாமலா போவான்!// எவ்வளவு வருத்தம் அத்தாயின் மனதில்...

மிக நல்ல கவிதை...

ஹேமா said...

மனிதம் அழியத் தொடங்கும் இடம் இதுதான் இங்குதான் !

மாதேவி said...

தாய்மையின் நிலையை அழகாக எடுத்துக்காட்டி விட்டீர்கள்.

தாய்மை எப்போதுமே நம்பிக்கையுடன் காத்துக் கொண்டுதான் இருக்கும்.

திருந்தி வருவது பிள்ளையின் கைகளில்.

raji said...

மனிதம் எதிர்பார்க்கும் தாய்மை.நன்று.பகிர்விற்கு நன்றி

Madhavan Srinivasagopalan said...

காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு போல..தாயுள்ளத்தின் பரிதவிப்பு...

அழகாக சொன்னீர்கள் ஐயா..

//ஒரு மனைதனாகவேனும்
நின்று காட்டாமலா போவான் ?//
மனிதனாகவேணும் ?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அவர்களுக்கு அந்த நிலைவரும்போதுதான் இவர்கள் உணர்வார்கள்...

தாயின் ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பு...

தமிழ் உதயம் said...

மனதை சட்டென்று பாதித்தது கவிதை. தீராத ஏக்கம். தீர்ந்துவிடாத பாசம். நலம் சேர்க்கும்.

சி.கருணாகரசு said...

தாய்மை செழுமை பாராட்டுக்கள்

கே. பி. ஜனா... said...

// ஒரு நாள்
ஒரே ஒரு நாள்...// அந்த ஆதங்கம்! அவள் மன வேதனை புரிகிறது! அவள் நம்பிக்கை சிலிர்க்க வைக்கிறது!
//ஒரு மனைதனாகவேனும்
நின்று காட்டாமலா போவான் ?// இந்த வரியில் ஒரு மனிதனாகவேனும்' என்று வருமென நினைக்கிறேன்.

M.R said...

தாய்மை பாசம் வார்த்தைக்குள் அடங்காத ஒன்று

மனதைத் தொட்ட பதிவு நண்பரே

த .ம 8

ஸ்ரீராம். said...

பணம் பதவி அந்தஸ்துக்கு முன் அம்மாவாவது பாசமாவது...!

துரைடேனியல் said...

Arumai.
TM 10.

A.R.ராஜகோபாலன் said...

ஆயினும் என்ன
சின்னஞ்சிறு பிராயத்தில்
அவன் நடை பயில முயலுகையில்
தட்டுத்தடுமாறி வீழ்ந்ததையும்
ஒவ்வொரு முறை வீழும்போது
வாரி அணைத்து உச்சி மோந்து
மீண்டும் நடைபயில வைத்ததையும்
எண்ணி எண்ணி
தாயாக மீண்டும் பெருமிதம் கொள்கிறேன்


தாய்மையை நீங்கள் சொன்ன விதம் அருமை சார், உங்களின் வார்த்தைகளிலேயே தாய்மை வழிந்தோடுகிறது சார்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

தமிழ்மணம்: 11

தாயுள்ளத்தின் தவிப்பும், அதற்கு அவள் தனக்குத்தானே தந்துகொள்ளும் சமாதானமும், தாயைப்போலவே மிகச் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. பாராட்டுக்கள். vgk

rufina rajkumar said...

ஏங்கும் தாயின் மனம் தெள்ளெனத் தெரிகிறது

Lakshmi said...

தாய்மையின் புனிதம் சொல்லும் கவிதை.

Ramani said...

ரமேஷ் வெங்கடபதி //..

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
தமிழ் மணத்தில் இணைத்து
முதல் வாக்களித்தமைக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

மகேந்திரன் //.

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

இராஜராஜேஸ்வரி //.

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

வேடந்தாங்கல் - கருன் *! //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

நண்டு @நொரண்டு -ஈரோடு //


தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

RAMVI //..

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

ananthu //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

வெங்கட் நாகராஜ் //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

ஹேமா //..

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

மாதேவி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

raji //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

Madhavan Srinivasagopalan //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பிழையைச் சுட்டிக்காட்டியமைக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

கவிதை வீதி... // சௌந்தர் //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

தமிழ் உதயம் //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

சி.கருணாகரசு //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

M.R //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

ஸ்ரீராம். //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

துரைடேனியல் //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

A.R.ராஜகோபாலன் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

வை.கோபாலகிருஷ்ணன்

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

rufina rajkumar //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

Lakshmi //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

PUTHIYATHENRAL said...

* உச்சிதனை முகர்ந்தால்”.!
* இந்தியாவின் பிரதமராகிறார் மகேந்த ராஜபக்சே!
* பெரியாரின் கனவு நினைவாகிறது
* இது ஒரு அழகிய நிலா காலம்! பாகம் ஒன்று!
* தமிழகத்தை தாக்கும் சுனாமி!
* தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!
* இந்தியா உடையும்! ஆனா உடையாது .
* ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?
* கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!
* போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!

அப்பாதுரை said...

எதையும் எதிர்பாராதது தாயன்பு .. இராஜராஜேஸ்வரி சொல்வது போல.
மகன் மனிதனாவானோ என்று ஏங்குவதும் தாயன்பு - ஹேமா சொல்வது போல.

கீதா said...

அதிர்ந்துபோன தாய்மையின் வழியே
முதிர்ந்த பெற்றோரின் ஏக்கம் யாவும்
உதிர்ந்து போகாமல் என்றேனும் ஓர்நாள்
குதிர்ந்துவருமென்றே நம்புகிறேன்,
திருந்திய மகனின் வருகைகண்டு
வருந்திய உள்ளங்கள் வாழ்த்தட்டும் உவகைகொண்டு!

இன்றைய பல பெற்றோரின் மனக்குமுறலைப் படம்பிடித்துக் காட்டும் கவிதை. மனம் மாறட்டும். மனிதம் பிழைக்கட்டும்.

Ramani said...

PUTHIYATHENRAL //

தங்கள் உடன் வரவுக்கு
மனமார்ந்த நன்றி

Ramani said...

அப்பாதுரை //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

கீதா //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

K.s.s.Rajh said...

////இன்று
ப்தவி தரும் சுக போகங்களில்
செல்வம் தரும் மதமதப்பில்
தட்டுத் தடுமாறும் அவன்
இன்றில்லையெனினும் நாளை
அல்லது அடுத்து ஒரு நாள்
அல்லது என்றேனும் ஒரு நாள்
அல்லது விழிமூடும் முன்னரேனும் ஒரு நாள்
ஒரே ஒரு நாள்
மகனாக இல்லையென்றாலும் கூட
ஒரு மனிதனாக வேனும்
நின்று காட்டாமலா போவான் ?
////

ஏக்கம் கலந்த சிறந்த கவிதைவரிகள் அருமை

Ramani said...

K.s.s.Rajh //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

G.M Balasubramaniam said...

எதிர்பார்ப்பு இல்லாத சமயத்தில் சேயின் செயல் கண்டு, மகிழும் தாய், பிற்கால எதிர்பார்ப்புகள் ஏமாற்றம் கொடுக்கும்போது மனம் வருந்துகிறாள்.தாய்மையும் எதிர்பார்க்கிறது. எண்ணங்கள் பகிர்ந்த விதம் அருமை.

Ramani said...

G.M Balasubramaniam //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

சசிகுமார் said...

பதிவு அருமை...

Ramani said...

சசிகுமார் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

கோவை2தில்லி said...

தாய்மையை உணர்த்தும் நல்லதொரு கவிதை சார். பாராட்டுகள்.
த.ம - 14

Ramani said...

கோவை2தில்லி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

சத்ரியன் said...

தாயின் ஏக்கமும், நம்பிக்கையும் கலந்த நல்ல கவியாக்கம். அருமை.

இக்கவிதையைப் படிக்கும் ’மகன்களாவது’ தன் பெற்றோரை காப்பாற்றும் கடமையை தவறாது செய்யவேண்டும்.

Ramani said...

சத்ரியன் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Anonymous said...

தாய்மை மட்டுமல்ல, தந்தைமை கூட இப்படித்தான் ஏங்குகிறது. பிள்ளைமை உணராதது தான் வோதனை. நல்ல பாசப் பதிவு. நன்றி, வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

பிரணவன் said...

வீழ்ந்தவனை அரவணைத்து தூக்கி நிருத்திய அவள் தான் அன்றும் அழுகிறாள் இன்றும் அழுகிறாள். என்றாவது சரியாக நடந்துவிடுவான் என்று. . .அழுத்தமான பகிர்வு. . .

Ramani said...

kovaikkavi //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

பிரணவன் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

விக்கியுலகம் said...

அண்ணே நெகிழ்ச்சியான பதிவு!

Ramani said...

விக்கியுலகம் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

சசிகுமார் said...

பதிவு அருமை...

Ramani said...

சசிகுமார் //.

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

ஸாதிகா said...

பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்பார்களே

Ramani said...

ஸாதிகா //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

அமைதிச்சாரல் said...

அருமை.. அருமை..

Ramani said...

அமைதிச்சாரல் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

ரிஷபன் said...

ஒரே ஒரு நாள்
மகனாக இல்லையென்றாலும் கூட
ஒரு மனிதனாக வேனும்
நின்று காட்டாமலா போவான் ?

தாயின் மனசு அற்புதம்

jayaram thinagarapandian said...

//ஆயினும் என்ன
சின்னஞ்சிறு பிராயத்தில்
அவன் நடை பயில முயலுகையில்
தட்டுத்தடுமாறி வீழ்ந்ததையும்
ஒவ்வொரு முறை வீழும்போது
வாரி அணைத்து உச்சி மோந்து
மீண்டும் நடைபயில வைத்ததையும்
எண்ணி எண்ணி
தாயாக மீண்டும் பெருமிதம் கொள்கிறேன்//

தாய்மையின் உச்சகட்ட உணர்வு..
அருமை கவிதை சார்

Ramani said...

jayaram thinagarapandian //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

ரிஷபன் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

sasikala said...

ஆயினும் என்ன
சின்னஞ்சிறு பிராயத்தில்
அவன் நடை பயில முயலுகையில்
தட்டுத்தடுமாறி வீழ்ந்ததையும்
ஒவ்வொரு முறை வீழும்போது
வாரி அணைத்து உச்சி மோந்து
மீண்டும் நடைபயில வைத்ததையும்
எண்ணி எண்ணி
தாயாக மீண்டும் பெருமிதம் கொள்கிறேன்
மிகவும் அருமையான படைப்பு .

Ramani said...

sasikala //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

radhakrishnan said...

தாயின் பெருந்தன்மை யாருக்குவரும்?நல்லவன்தான்
ஏதோ என் போதாத காலம் என்று இதறகும் தன்னையே நொந்து கொள்ளும் மனம் மனம் வேறு
யாருக்கு வரும்?
இனிய கருத்துள்ள கவிதைக்கு நன்றி சார்

Ramani said...

radhakrishnan //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Post a Comment