Monday, September 10, 2012

ஒட்டக் காய்ச்சிய உரை நடையே

ஒட்டக் காய்ச்சிய உரை நடையே

காதல் உணர்வு  பூக்கையில்
சேர்ந்தே பிறந்து பரவும்
மகரந்த மணமே

வண்ண வண்ண வார்த்தைப் பூக்களைச்
சந்தச் சரடில் சேர்த்திணைக்க வளரும்
மனங்கவர் பூமாலையே

கவிஞனும் கற்பனையும்
கந்தர்வ மணம்புரிந்து
கூடிக் களிக்கப் பிறக்கும்
அதியக் குழந்தையே

மடமை மரம் முறிக்க
சிந்தனைச் சிற்பிகளுக்கு வாய்த்த
 கூர்மிகுக்  கோடாலியே

தனிமைத் துயர் போக்கி
ஏகாந்த சுகத்தில் மிதக்கவிடும்
ரம்பையே ஊர்வசியே

குறிவைத்த இலக்கினை
மிகச் சரியாய்த்
தாக்கிக் தகர்க்கும் விசைமிகு  பாணமே

எண்ணச் சுமைகளை
எளிதாக ஏற்றிச் செல்ல
ஏதுவான எழில்மிகு வாகனமே

தூங்கச் செய்யவோ
ஏக்கத்தைச்  தூதாய்ச் சொல்லவோ
கவலையை மறக்கவோ
களிப்பில் மூழ்கிச் சுகிக்கவோ
வாழ்வை ரசிக்கவோ
ரசித்தததை சுருக்கமாய் விளக்கவோ

கவிதைபெண்ணே உன்னைவிட்டால்
உலகினில் மாற்று ஏது சொல்
என்றும்போல உன் அருளை
எமக்குநீ வாரிவழங்கிச் செல்

30 comments:

Sasi Kala said...

தூங்கச் செய்யவோ
ஏக்கத்தைச் தூதாய்ச் சொல்லவோ
கவலையை மறக்கவோ
களிப்பில் மூழ்கிச் சுகிக்கவோ
வாழ்வை ரசிக்கவோ
ரசித்தததை சுருக்கமாய் விளக்கவ....
இதை விட தெளிவாக யாராலும் சொல்ல முடியாது ஐயா.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

காதலை..
காமத்தை...
வீரத்தை..
கோவத்தை
சோகத்தை..
வருத்தத்தை..
நட்பை..
அன்பை..

இன்னும் இந்த பூமியில் பரவிக்கிடக்கும் அத்தனை ரசங்களையும் அற்புதமாய் தாங்கி செல்லும் ஆயுதம்...


கவிதை...
கவிதை...

மனசாட்சி™ said...

அழகா
சொன்னீங்க

Lakshmi said...

கவிதைபெண்ணே உன்னைவிட்டால்
உலகினில் மாற்று ஏது சொல்
என்றும்போல உன் அருளை
எனக்குநீ வாரிவழங்கிச் செல்

கவிதை எழுதும் கலை கைவந்தால் அவர்கள் பெரும் பாக்கிய சாலிகள் தான்

Lakshmi said...

கவிதைபெண்ணே உன்னைவிட்டால்
உலகினில் மாற்று ஏது சொல்
என்றும்போல உன் அருளை
எனக்குநீ வாரிவழங்கிச் செல்

கவிதை எழுதும் கலை கைவந்தால் அவர்கள் பெரும் பாக்கிய சாலிகள் தான்

துரைடேனியல் said...

அட...அட...அழகுக் கவிதை. அதுவும தாங்கள் தேர்ந்தெடுத்த தலைப்பு சுவையோ சுவை. ஒட்டக் காய்ச்சிய உரைநடைதான் கவிதை என்பது உண்மைதான். சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதே கவிதை. நன்று!

ரமேஷ் வெங்கடபதி said...

கவிதையை ரசிக்க வைக்கும் கவிதை..நன்று.வாழ்த்துக்கள்!

ஹேமா said...

தலைப்பு ரசிக்க வைக்கிறது.கவிதை எப்போதும்போல. கவிதைப் பெண்ணைக் காதலிக்கும் ரகசியமும் வெளிவந்திருக்கு !

அம்பாளடியாள் said...

யாதுமாகி நின்றாய் போற்றி ..
யாம் அறிந்த உணர்வே போற்றி ....
இப்படி எக்கச் சக்கம் போற்றி போட்டு
பாடவேணும்போல் போல் உள்ளது
கவிதை மீது உள்ள காதலால் ஐயா .
மிக்க நன்றி சிறப்பான இப் பகிர்வுக்கு .

s suresh said...

கவிதைப்பெண்ணுக்கு சிறப்பான வரவேற்பு! வாழ்த்துக்கள்!

இன்று என் தளத்தில்!
பாதைகள் மாறாது! சிறுகதை
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_10.htmlநண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை.

திண்டுக்கல் தனபாலன் said...

ரசிக்க வைக்கும் வரிகள் சார்...

/// மடமை மரம் முறிக்க
சிந்தனைச் சிற்பிகளுக்கு வாய்த்த
கூர்மிகுக் கோடாலியே ///

அருமை... நன்றி...

G.M Balasubramaniam said...


குறி வைத்த இலக்கினைச் சரியாகத் தாக்குகிறதா.? உங்கள் நம்பிக்கைக்குப் பாராட்டுக்கள்.

தொழிற்களம் குழு said...

------------- ---------------------------------- ---------------
உங்கள் பதிவுகளை தமிழ்பதிவர்கள் திரட்டியிலும் இணையுங்கள் சகோ...
-------------------------------------------------- ---------- --

வெங்கட் நாகராஜ் said...

அதுதானே... கவிதையில் சொல்ல முடியாதது எது....

அதுவும் உங்களுக்கு?

மிகவும் இனிய கவிதை...

இராஜராஜேஸ்வரி said...

கவிதைபெண் ரசிக்கவைக்கிறாள் !

தி.தமிழ் இளங்கோ said...

// கவிதைபெண்ணே உன்னைவிட்டால்
உலகினில் மாற்று ஏது சொல் //

” எமக்குத் தொழில் கவிதை “ - என்றான் பாரதி

குட்டன் said...

த.ம.12
//கவிதைபெண்ணே உன்னைவிட்டால்
உலகினில் மாற்று ஏது //
நிச்சயம் இல்லை

ramkaran said...

//கவிஞனும் கற்பனையும்
கந்தர்வ மணம்புரிந்து
கூடிக் களிக்கப் பிறக்கும்
அதியக் குழந்தையே//

புதுக் கவிதை களவு மணம்புரிந்து வரும் குழந்தை என்றால், மரபுக் கவிதை கற்பு மணம்புரிந்து வரும் குழந்தையா?? என்று சிந்திக்க வைக்கும் வரிகள்.

பாராட்டுக்கள்.

Avargal Unmaigal said...

மிகவும் இனிய கவிதை!!!!

Uzhavan Raja said...

ரசிக்க வைக்கும் அருமையான வரிகள் சார்..

AROUNA SELVAME said...

ஒட்டக் காய்ச்சிய உரைநடை தான் கவிதை....!!

ஆழ்ந்த கருத்து! அழகான விளக்கம்.
அருமை ரமணி ஐயா.

கரந்தை ஜெயக்குமார் said...

கவிதைபெண்ணே உன்னைவிட்டால்
உலகினில் மாற்று ஏது சொல்....
ஆம் மாற்று இல்லைதான்.
கவிதாயினியின் பூரண அருள் பெற்றவர்தான்
நீங்கள் சந்தேகமேயில்லை. நன்றி

T.N.MURALIDHARAN said...

ஓட்டக் காய்ச்சிய பால் சுவையில் அமிர்தம். ஓட்டகாய்ச்சிய உரைடையில் பிறக்கும் கவிதை அதைவிட இனிமை என்பதை அழகான புதுமையான உவமையாக சிந்தித்திருக்கிறீர்கள் ரமணி சார்!

T.N.MURALIDHARAN said...

த.ம.13

இந்திரா said...

ஏதாவது நாலு வரிய செலக்ட் பண்ணி குறிப்பிடலாம்னா எல்லா வரிகளுமே நல்லாயிருக்குங்க.
பாராட்டுக்கள்..

Anonymous said...


கவிதைப் பெண்ணிடம் கதி நீ
என்று கிடக்கும் அழகே அழகு !

Rathnavel Natarajan said...

திரு ரமணி சாரின் அழகு கவிதை.
வாழ்த்துகள்.

kavithai (kovaikkavi) said...

எண்ணச் சுமைகளை
எளிதாக ஏற்றிச் செல்ல
ஏதுவான எழில்மிகு வாகனமே..''
இப்படிப் பல வரிகள். மிக்க நன்று .சுவை.
நல்வாழ்த்து. (10லிருந்து 14 வரை விடுமுறை யெர்மனியில்)
வேதா. இலங்காதிலகம்.

கீத மஞ்சரி said...

ஒட்டக்காய்ச்சிய உரைநடை! கவிதைக்கு இப்படியொரு இனிய இலக்கணம் வரைந்த கவிஞர் தாங்களாகத்தான் இருப்பீர்கள். இந்த ஒற்றை வரியில்தான் எத்தனைப் பொருள்! வாசிக்க வாசிக்க கவிதையின் வெவ்வேறு பரிமாணங்களைக் கண்டு அசந்துபோனேன். பாராட்டுகள் ரமணி சார்.

Post a Comment