அவனை அவர்கள் முதன் முதலாகப்
பார்த்தபோது.....
பிறரை விட நிஜமாக வளராது
வளர்ந்ததாகக் காட்ட
கட்டைக் கால்களை
இணைத்துக் கொண்டிருந்தான்
எல்லோரும் கலைக்கூத்தாடி என
இகழ்ச்சியாய்ப் பார்த்தார்கள்
பின்னர் சில நாட்களில்
பிறர் பார்வையைக் கவர்வதற்காக
வண்ண வண்ண ஆடைகள்
அணிந்து திரிந்தான்
எல்லோரும் கோமாளியோ என
குழம்பியபடி ஒதுங்கினார்கள்
அடுத்து வந்த நாட்களில்
பிறர் கவனத்தை ஈர்ப்பதற்காக
சப்தமெழுப்பியபடியே
சுற்றிச் சுற்றி வந்தேன்
ஒருவேளை பைத்தியமோ என
பயந்தபடி விலகினார்கள்
முடிவாக
கவருதலுக்காக மட்டுமே
செய்கிற எல்லாமே
அதீத அற்பத்தனம் எனப்
புரியத் துவங்கியதால்
கும்பலைவிட்டு
கவனமாக ஒதுங்கத் துவங்கினான்
எட்ட நின்று அவனைக்
கவனித்தவர்கள் இப்போது
அவனருகில் வரத் துவங்கினார்கள்
நெருங்கியவர்களை
ஒரு பொருட்டாகவே கருதாது
சூழல் மறந்து சுயம் இழந்து
அவனுள் கரையத் துவங்கினான்
கவனிக்கத் துவங்கியவர்கள்
இப்போது அவன் காலடியில் அமரத் துவங்கினர்
பூரண விழிப்பைக் கண்டவன்
இமைகளைத் திறக்க
எதிர் நின்ற கூட்டம் கண்டு
அதிர்ந்துதான் போனான்
காலடியில் அமர்ந்தவர்கள்
எதையெதையோக் கொடுத்து அவனிடம்
எதையேனும் பெறுவதற்காக
கண்விழித்தபடி தவித்துக் கொண்டிருந்தார்கள்
முதன் முதலாக
அவனது இருப்பிடம் அது இல்லை என்றும்
தவிப்பவர்களுக்காக கொடுப்பதற்கு
தான் இன்னும் அதிகம்
பெற வேண்டியதைப் புரிந்து கொண்டான்
ஒரு நாள் அதிகாலையில்
சுபவேளையில்
மக்கள் கூட்டம் அவனைத்
தரிசிக்கக் கூடுகையில்;;
அவன் அங்கு இல்லாது இருந்தான்
24 comments:
//கவருதலுக்காக மட்டுமே
செய்கிற எல்லாமே
அதீத அற்பத்தனம்//
உண்மைதான் ஐயா..இதை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.
ஓ... எல்லா சாமியார்களும் இப்படித்தான் உறுவாகிறார்களோ....
உண்மையில் ஏதோ ஒரு வழியில் இப்படித்தான் இருக்கிறது அதனதன் பரிமாணங்கள்...!
ஊருக்கு ஊர் இவர்களின் கூட்டம் அதிகம் ஆகிறது-ஏமாறுபவர்கள் இருக்கும் வரை...
tm4
பரிணாமத்தின் வெளிப்பாடு பகிரங்கமாகவே உணர்த்தியது சில உண்மைகளை.
இவன்தான் உண்மையான சாமியாராக இருப்பான் என்று கருதுகிறேன்!!
மிக மிக அருமை.
கவர்வதற்காக எதைச்செய்தாலும் அது சில நாட்களிலேயே அலுத்தும் போய்விடுமே..
அருமையான பகிர்வு.
//முதன் முதலாக
அவனது இருப்பிடம் அது இல்லை என்றும்
தவிப்பவர்களுக்காக கொடுப்பதற்கு
தான் இன்னும் அதிகம்
பெற வேண்டியதைப் புரிந்து கொண்டான்//
தன்னைத்தான் அறிந்து கொண்டானோ?
த.ம. 8
அருமை...
நல்ல சாமியார் என்றால் இவரோ!!!
காலடியில் அமர்ந்தவர்கள்
எதையெதையோக் கொடுத்து அவனிடம்
எதையேனும் பெறுவதற்காக
கண்விழித்தபடி தவித்துக் கொண்டிருந்தார்கள்
கவருதலுக்காக மட்டுமே
செய்கிற எல்லாமே
அதீத அற்பத்தனம்
உண்மை
நல்ல வரிகள்....
மின்னல் சில நேரம் தான் வெளிச்சம் தரும்.
அருமையான கருத்துக்கவிதை இரமணி ஐயா.
பரிணாமம்
சில நேரங்களின்
பல பரிமாணங்கள்
காட்டிவிடுகிறது...
உங்களின் கருப்பொருளே
மனதை மயக்கிவிடுகிறது ஐயா ...
அவன் நம்பியவர்களை முட்டாளாக்கினான் முடக்கினான் ?
kaviyazhi.blogspot.com //
அவன் நம்பியவர்களை முட்டாளாக்கினான்
முடக்கினான் ?
அவனது இருப்பிடம் அது இல்லை என்றும்
தவிப்பவர்களுக்காக கொடுப்பதற்கு
தான் இன்னும் அதிகம்
பெற வேண்டியதைப் புரிந்து கொண்டான்//
எனக்கு அப்படித் தோணவில்லை
அவர்களுக்காகவே கூடுதலாக
முயற்சிக்கிறான் எனத் தான் நினைக்கிறேன்
வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
அசத்தல் கவிதை !
தொடர வாழ்த்துகள்...
கவருதலுக்காக மட்டுமே
செய்கிற எல்லாமே
அதீத அற்பத்தனம் //
உண்மையான் வரிகள்! நன்றி!
கவிதை ரொம்ப நல்லா இருக்கு
உலக நியதி!
அருமை
ஞானம் எப்படியெல்லாம் வருகிறது!
கவிதை சூப்பர் ரமணி சார்
ஒதுக்கி வைக்கப்படுகிற மனிதம் என்றாவது ஒரு நாள் நிச்சயம் எழுந்து நிற்கும்/
சிறப்பான கவிதை.
த.ம. 12
uruththalaana kavithai
Post a Comment