உனக்கு பேசவும் எழுதவும்
கொடுத்துள்ள உரிமையின் எல்லையை
சோதிக்க முயலாதே
அந்த எல்லை மிகச் சிறியது என உனக்கு
புரிந்தும் போகலாம்
அதனால் நீ நொந்தும் போகலாம்
எனவே அந்த வழி வேண்டாம் நமக்கு
உண்மையைத்தானே சொல்கிறேன் என
சிறுபிள்ளைத்தனமாய்
உளறித் தொலைக்காதே
நீ கைது செய்யவும் படலாம்
உன் வீடும் தாக்கப் படலாம்
ஊமையாய் இருக்கப் பழகு
காசு கொடுத்து கருமாந்திரம் நமக்கெதுக்கு
எழுதுபவன் வாசிப்பவன் எல்லாம்
சராசரியைத் தாண்டியவன் என
தப்புக் கணக்குப் போடாதே
நீ ஏமாந்துத் தொலைக்கலாம்
எழுத்தையே வெறுக்கலாம்
தெரிந்ததைப் பதுக்கப் பழகு
அதுதான் என்றும் சுகம் நமக்கு
மதம்" பிடித்தவனாயினும்
"மதம்" பிடிக்காதவனாயினும்
அவனவன் நிலையில் "மதம் 'பிடித்தவனே
நியாயம் பேசி ஏமாறாதே
நிம்மதி இழந்துத் திரியாதே
சராசரியாய் இருக்கப் பழகு
சங்கடங்களை விலக்கப் பழகு
பயனற்றதை சுவாரஸ்யமாகச் சொல்லிப்போ
ஆடிக்காற்றுப் போல எதன் மீதும்
மிகச் சரியாகப் படாது புழுதிக் கிளப்பிப் போ
மகுடங்களும் மலர் மாலைகளும் நிச்சயம் கிட்டும்
யானைவைத்து பிச்சை எடுப்பது போல்
அறிவைக் கொண்டு பிழைக்கப் பழகு
நிச்சயம் வஸந்த காலம் உன் வாசல் கதவைத் தட்டும்
62 comments:
சரியான பாதையில் சென்றால் சரித்திரம் நாளை சொல்லும்
இணையம் எல்லோருக்கும் பொதுவானது. யாருக்கும் சொந்தமில்லாதது. அறிவியலின் அடுத்தக் கட்டம் என்று அழைக்கும் இவற்றை பயனுள்ள வகையில் நம்முடைய நேரத்தையும், சிந்தனையையும் செலவிட்டு நாமும், நம்மைச் சார்ந்தவர்களும் பயனுற உறுதுணையாய் இருப்போம்.
எழுத ஆரம்பிக்கும் புதியவர்களுக்கு தன்னம்பிக்கைவூட்டி வழிகாட்டுகின்ற கவிதை !
தொடர வாழ்த்துகள்....
வசந்தம் வரட்டும் வாழ்வில்.
நேரத்துக்கேற்ற அவசியக் கவிதை.
//பயனற்றதை சுவாரஸ்யமாகச் சொல்லிப்போ//
:)))
சரியான நேரத்தில் சரியான கவிதை!
த.ம. 3
///பயனற்றதை சுவாரஸ்யமாகச் சொல்லிப்போ
ஆடிக்காற்றுப் போல எதன் மீதும்
மிகச் சரியாகப் படாது புழுதிக் கிளப்பிப் போ
மகுடங்களும் மலர் மாலைகளும் நிச்சயம் கிட்டும்////
அப்ப எனக்கு மகுடங்களும் மலர் மாலைகளும் நிச்சயம் கிடைக்கும் என நம்புகிறேன்.
வழக்கம் போலவே அருமை. தொடருங்கள்.
வணக்கம் சார்!
தங்களை இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்! தங்களுக்கு நேரம் கிடைக்கையில் வருகை தாரும்படி அன்போடு அழைக்கிறேன்!
http://blogintamil.blogspot.in/2012/11/4_22.html
இந்தப் பதிவு எல்லாப் பதிவர்களுக்காக சொல்லிப் போனதா, இல்லை யாரையாவது குறி வைத்துச் சொன்னதா. ? எப்படியாயினும் யாவருக்கும் பொருந்தும். ரசித்தேன்.
காலத்தின் கட்டாயம் அதுவெனில் நாணலாக மாறுவதே நல்லது..தக்க சமயத்தில் உரைத்த நீதிக்கவிதை!
நன்று...வாழ்த்துக்கள்!
kaviyazhi.blogspot.com //
தங்கள் முதல் வரவுக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
சேக்கனா M. நிஜாம் //
எழுத ஆரம்பிக்கும் புதியவர்களுக்கு தன்னம்பிக்கைவூட்டி வழிகாட்டுகின்ற கவிதை !//
தங்கள் உடன் வரவுக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
காலத்துக்கு ஏற்ற பதிவு.
யானைவைத்து பிச்சை எடுப்பது போல்
அறிவைக் கொண்டு பிழைக்கப் பழகு
நறுக்கென்று இருந்தது.
விச்சு //
வசந்தம் வரட்டும் வாழ்வில்.//
தங்கள் உடன் வரவுக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ஸ்ரீராம். //
நேரத்துக்கேற்ற அவசியக் கவிதை.//
அதைக் கருதித்தான் எழுதினேன்
தங்கள் உடன் வரவுக்கும்
சரியான அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
வெங்கட் நாகராஜ் //
.
சரியான நேரத்தில் சரியான கவிதை! //
"அதைக் "கருதித்தான் எழுதினேன்
தங்கள் உடன் வரவுக்கும்
சரியான அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Avargal Unmaigal //
அப்ப எனக்கு மகுடங்களும் மலர் மாலைகளும் நிச்சயம் கிடைக்கும் என நம்புகிறேன்./
/தங்களைப் போல் எல்லை
கடந்தவர்களுக்கு இந்தத் தொல்லையில்லை
இவையெல்லாம் என்போன்ற சராசரிகளுக்குத்தான்
உடன் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
vanathy //
வழக்கம் போலவே அருமை. தொடருங்கள்.//
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
யுவராணி தமிழரசன் //
நல்ல பதிவர்களுக்கு இணையாக
அறிமுகம் செய்தமைக்கு
மிக்க நன்றி
\\ மதம்" பிடித்தவனாயினும்
"மதம்" பிடிக்காதவனாயினும்
அவனவன் நிலையில் "மதம் 'பிடித்தவனே//- நச் வரிகள்! அருமை!
அட்டகாசம்.. நல்ல நேரத்தில் நல்ல நினைவுறுத்தல் :-)
/// "மதம்" பிடித்தவனாயினும்
"மதம்" பிடிக்காதவனாயினும்
அவனவன் நிலையில் "மதம் 'பிடித்தவனே
நியாயம் பேசி ஏமாறாதே
நிம்மதி இழந்துத் திரியாதே
சராசரியாய் இருக்கப் பழகு
சங்கடங்களை விலக்கப் பழகு ///
அருமையான வரிகள்....
tm7
சராசரியாய் இருக்கப் பழகு
சங்கடங்களை விலக்கப் பழகு.
சரியான நேரத்தில் மிகச்சரியான பகிர்வு நன்றி ஐயா.
tha.ma.6
மக்களின் இன்றைய நிலை உங்களுக்கு சரியான கவிதைக்கரு கிடைத்துவிட்டது ரமணிசார்... எப்படி இருக்கவேண்டும்... எப்படி இருக்கக்கூடாது என்று ஒரு வேள்வியே நடத்திவிட்டீர்கள் ரமணிசார்.... வாழ்க்கை சுகமாகவும் வசந்தமாகவும் சுபிக்ஷமாகவும் இருக்க ஒரு காலத்தில் நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச்சென்றது உண்மை, நேர்மை, ஒழுக்கம் இதெல்லாம்.. ஆனால் இந்த கலியுகத்துக்கு இப்படி எல்லாம் இருந்தால் சரிப்பட்டு வராது... பரிணாமம் கவிதையை படிச்சபோது ரொம்ப பிடித்துவிட்டது. அதற்கு பாதி கருத்து எழுதி வைத்தேன். இன்று இந்த கவிதை படித்ததும் சரி இதற்காவது கொஞ்சம் சீக்கிரமாக கருத்து எழுதி விடலாம் என்ற உத்வேகத்தோடு எழுத முனைந்துவிட்டேன்....
முன்றைய காலத்தில் மன்னன் சரியான ஆட்சி நடத்தியதால் மக்கள் சுபிக்ஷமாக சௌக்கியமாக தன் நாட்களை கடத்தினர் நிம்மதியுடன்... இன்றைய அரசியல் சொல்லித்தரும் பாடம் என்னவென்றால் நல்லவனாய் இருந்துவிடாதே.. அப்படி நல்லவனாய் இருந்துவிட்டால் ஒன்று இருக்கவிடமாட்டார்கள்.... அல்லது இறுக்கி தன் கைப்பொம்மையாக வைத்துக்கொள்வார்கள்... இது எதற்கும் மசியவில்லை என்றால் இறக்கச்செய்து அனுதாப அலையை தனக்கு சாதகமாக்கிக்கொண்டு “ வாட்ஸ் அப் “ அப்டின்னு போய்க்கிட்டே இருப்பார்கள்....
முதல் பத்தி சொல்லவந்த கருத்து....
முன்பெல்லாம் மக்கள் மீடியாவைப்பார்த்து பயப்படுவார்கள்.... பத்திரிகையில் நம் பெயர் புகழ் தரும்படி தான் வரவேண்டும் என்று விரும்புவார்கள்... தப்பித்தவறி நம் பெயர் தவறுதலாக குற்றவாளியாகவோ தவறு செய்பவராகவோ வந்துவிட்டால் அவமானத்தில் குன்றிப்போவார்கள்.... ஆனால் இப்போது நிலை அப்படி இல்லை.. மாறிவிட்டது... எல்லாவற்றிற்குமே சுதந்திரம் கொடுக்கப்படாத நிலையில் தான் சொல்வதை தான் எழுதவேண்டும் என்று வற்புறுத்தி எழுதவைத்து புகழ் சேர்த்துக்கொள்கிறார்கள்.. அறிந்த உண்மையை பத்திரிகையில் இடும் தைரியம் மனதில் இருந்தாலும் அதன்பின் நடக்கப்போகும் கொடுமைகளை நினைத்து மௌனியாக எல்லாவற்றையும் கண்டும் காணாது போல் இருந்து நடந்த அத்தனை தீயவைகளுக்கு ஒரு சாட்சியாக இருந்துவிடும்படி இருக்கும் நிலையை மிக அருமையாக சொல்லி இருக்கீங்க ரமணிசார்.... பேசவும் எழுதவும் கொடுத்துள்ள சுதந்திரம்??? ஆமாம் இதை சுதந்திரம் என்று சொல்வது தவறு... இன்று அரசியலில் நடக்கும் கொடுமைகளை நடுநிலையோடு எடுத்துச்சொல்லும் சுதந்திரம் யாருக்காவது இருக்கிறதா?? அப்படியே எடுத்துச்சொன்னாலும் அதன்பின் நிம்மதியாக உயிர் உடம்பில் இருக்க வளைய வர இயலுமா?? ஹுஹும் அதற்கு பதில் இல்லை என்று தான் கிடைக்கும்... கிடைக்கும் வாய்ப்பினை வைத்து பேசவோ எழுதவோ அதுவும் புகழ்ந்துத்தள்ளி பின் நம் நேரம் முடிந்ததும் முடங்கி உட்காரும் நிலை தான்.. அதுக்கேற்றார்ப்போலவே இருந்துவிடு என்று சொன்னவிதம் அருமை.... தெரிந்த உண்மைகளை உரக்கச்சொல்லி அதன்பின் வரும் பயங்கரங்களை அனுபவிப்பதை விட அந்த எல்லையை தாண்டாமலேயே இருந்துவிடு... முயற்சி கூட செய்யாதே என்ற இன்றைய நிலையினை நச் என்று சொல்லி இருக்கீங்க....
இன்னார் இப்படி தவறு செய்தார் என்று சொல்லிவிட்டு அதன்பின் ஏற்படும் அத்தனை கொடுமைகளையும் நாம் சினிமாவில் நிறையவே கண்டிருப்பதால் அது ஒரு பாடமாக நமக்கு இருக்கட்டும் என்றுச்சொன்னது அருமை... குழந்தைகளை பொய் சொல்லாதே பாப்பா என்று சொல்லி வளர்க்கிறோம்... ஆனால் இத்தனை சின்சியராக உண்மைப்பேச இயலுமா பெரியவர்களான நம்மால்? உண்மையை சொல்வதால் ஏற்படும் நன்மை எதுவுமே இல்லை என்றுச்சொல்லி... இப்ப இருக்கும் இன்றைய காலக்கட்டத்தில் நடக்கும் அத்தனை பயங்கரத்திற்கு பின்னால் எத்தனை உண்மைகள் மரிக்கப்பட்டதோ யார் அறிவார்? எங்கும் உண்மைகள் அமுக்கப்படுகின்றன.... பணத்தால்... பயமுறுத்தும் ஆயுதத்தால்.... கூலிப்படையினரால்..... உண்மைச்சொல்லப்போய் நம்மையே குற்றவாளியாக்கி தூக்கி சிறையில் அடைக்கும் கொடுமையும் நடக்கலாம்.. ட்விஸ்ட் எங்கு எப்போது நடக்கும் என்று யாரறிவார்? யாரையுமே விலைக்கு வாங்கக்கூடிய பலமும் அதிகாரமும் பணமும் இருக்கும் வரை... கொண்டாட்டம் தான் கெட்டச்செயல் புரிவோருக்கு... நல்லவை எல்லாம் அமுங்கி.. ஆளரவமற்ற இடத்தில் அனாதையாய் கிடக்கிறது... நல்லவைகளை மிதித்துக்கொன்று அட்டகாசம் செய்து அடக்குமுறையால் நம் குடும்பம் தாக்கப்படலாம்... சிறைக்கு செல்லும் அபாயம் ஏற்படலாம்.... எதுக்கு எதுக்கு? உண்மைய சொன்னால் அதனால் கிடைக்கப்போகும் நன்மை எதுவும் இல்லையென்றாலும் இழக்கப்போகும் பயங்கரம் அதில் இருக்கு என்பதை ஆணித்தரமாக சொன்ன பத்தி சிறப்பு...
எல்லாம் தெரிஞ்சவங்க என்று யாருமில்லை.. உண்மையே... பிறரின் எழுத்துகளில் நாம் கற்பவை அதிகம் இருக்கிறது.. நாம் பெறப்போகும் அனுபவப்பாடங்கள் அதிகம் இருக்கிறது... நமக்கு தான் எல்லாம் தெரியும் என்ற மமதையை ஒரு பக்கம் ஒதுக்கிவிட்டு கற்றது கையளவு மட்டுமே... இனி கற்கப்போவது உலகளவு என்ற அடக்கத்துடன் படிக்க முனைந்தால் நாம் பெறப்போகும் பொக்கிஷங்கள் அதிகம்.. அதே போல் நமக்கு தெரிந்த நல்லவைகளை பகிர்வதில் தலைக்கனமோ தான் என்ற ஆணவமோ இல்லாது எழுதும்போது நம்மிடமிருந்த நல்லவை பிறருக்கு பகிர்ந்தோம் என்ற நிறைவு படைத்தவருக்கும் ஏற்படுகிறது.... அதுவே உல்டா ஆகும்போது..... எழுதுறவர்ல தொடங்கி வாசிப்பவர் வரை எல்லோருமே எல்லாம் தெரிந்த பிரம்மாக்களாக இருப்பார் என்ற தவறான சிந்தனையை தவிர்க்கச்சொன்னவிதம் சிறப்பு.... ஏன்னா ஒருத்தர் இப்படி தான் அப்டின்னு மனசுக்குள் நாம் ஒரு எண்ணத்தை வளர்த்திருப்போம்... ஆனால் அவரைப்பற்றிய நாம் விரும்பாதவைகள் கண்டாலோ படித்தாலோ கேட்க நேர்ந்தாலோ ஏற்படும் இடி மரணத்தை விட வலி மிகுந்ததா இருக்கும்... இப்படிப்பட்டவரையா நாம் ஒரு தெய்வம் போல நினைச்சுட்டு இருந்தோம் என்று நம்மையே நாம் வெறுக்கும் அளவுக்கு அவரின் நடவடிக்கைகள் அமையலாம்.... ஒருத்தர் இப்படித்தான் என்று நமக்கு தெரியவரும்போது அதை மனதில் வைத்துக்கொண்டு நம் நடவடிக்கைகள் அமையவேண்டும்... தெரிந்ததை ஆழ்மனதில் வைத்துக்கொண்டு.. முகத்தில் அந்த வலியோ வெறுப்போ தெரியாதவண்ணம் அடிமனசுல நெருப்பை போட்டு வெச்சுக்கிட்டு வெளியே சிரித்து பழகச்சொன்ன விதம் அருமை.. நாம் அறிந்த வேதனைகள் நம்மோடு இருக்கட்டும் அதை வெளிக்காட்டி யாரையும் கஷ்டப்படுத்திடவேண்டாம் என்று சொன்னது அழகு...
இந்த பத்தி படிக்கும்போதே என் மனம் அன்று அப்பாதுரை எழுதிய கடவுள் இல்லையடி பாப்பா கவிதை நினைவுக்கு வந்துவிட்டது ரமணிசார்... மனிதன் அன்பானவன்... எப்போது? மதம் என்ற படுகுழியில் வீழாதவரை.... மதம் மனிதனை காக்கவேண்டுமே தவிர அழிக்கக்கூடாது.. அப்படி அழிக்கக்கூடியது எதுவாக இருந்தாலும் அது மதமோ அல்லது கடவுளோ அது வேண்டாம் என்று ஒதுங்கி இருக்கச்சொன்னது எத்தனை அற்புதம்.... யானைக்கு மதம் பிடிப்பதனால் சுற்றி இருப்போருக்கு அவஸ்தைகள்.... அதே மதம் மனிதனுக்கு பிடிக்கும்போதோ???? இங்குச்சொல்லாடல் மிக அருமையாக இருக்கிறது.. ரசித்தேன்... மதம் பிடித்தவனாயினும் பிடிக்காதவனாயினும் அவனவன் நிலையில் “ மதம் “ பிடித்தவனே.. ஆஹா எத்தனை அருமையா சொல்லிட்டீங்க... மதம் ஆரம்பிப்பது எங்கே.... இது என் கடவுள் இது என்கடவுள் என்று தொடங்குவதில்... மதம் என்பது சாத்வீகமா இருந்து காக்கவேண்டியது போய் மதவெறியாக மாறி உயிரோடு எரிக்கவும் புதைக்கவும் வெறிப்பிடித்து எல்லோரை அழிக்கவும் தான் ஆகிவிட்டது என்றும்.... அந்த மதத்தைப்பற்றி பேச்செடுத்து பிடித்தவனிடமும் பிடிக்காதவனிடமும் போய் உன் தரப்பு நியாயத்தைப்பேசி அதுவும் கைகலப்பில் முற்றி நிம்மதி, உயிர் இழக்காதே என்ற படிப்பினையை சொல்வது அருமை....
அட என்னப்பா அதை செய்யாதே.. இதை செய்யாதே.. அதைச்சொல்லாதே உயிருக்கு ஆபத்து இதைச்சொல்லாதே நிம்மதி இழக்காதேன்னு சொல்றீங்களே அப்ப என்ன தான் செய்வது... என்னத்தான் சொல்வது? எப்படித்தான் வாழ்வது என்று கேட்போருக்கு மிக அருமையான பதிலாக அமைந்தது தான் கடைசிப்பத்தி....
ஒன்னுமே இல்லாத விஷயங்களைக்கூட உன் எழுத்தில் சுவாரஸ்யமாக ரசிக்கும்விதமாக சொல்லிச்செல்.... ஒன்றுக்குமே உதவாத குப்பையில் எறிவதில் கூட பயன் தரும் அற்புதமானவையாக மாற்றும ஆற்றலை உன்னுள் வளர்த்துக்கோ... வீசி எறியும் பயன்படாத பொருட்கள் மட்டும் தான் பயனுள்ளவையாக ரீசைக்ளிங் செய்யமுடியுமா? ஏன் பயன் இல்லை என்று ஒதுக்குபவையை நீ உன் முயற்சியில் அதை ஆற்றல் உள்ளதாக அவசியம் உள்ளதாக பிறருக்கு பயன் தருவதாக உருவாக்கிப்பாரேன்... நடுநிலையோடு இரு... எதன்பக்கமும் சாய்ந்துவிடாதே... சாயும் பக்கம் நல்லதா கெட்டதா என்று அறியும்முன்னரே நாம் இருக்கும் இடமே இல்லாதாக்கிவிடுவதால் எதன்மீதும் சாய்ந்துவிடாமல் தாமரை இலை நீர் போல பட்டும் படாமலும் இருக்கப்பழகு... ஆடிக்காற்றானாலும் எதன் மீதும் தொட்டுவிடாமல் பட்டுவிடாமல் ஆனால் நீ இருக்கும் இருப்பினை அனைவருக்கும் உணர்த்தும்வகையில் புழுதியை கிளப்பிப்போ... உன் முயற்சிக்கு வெற்றிகளும் கிட்டும்... கிடைத்த வெற்றி நிலைக்கவும் செய்யும்... ஆரவாரமில்லாத ஆர்ப்பாட்டமில்லாத தன்னம்பிக்கையுடன் நடுநிலையுடன் நீ செய்யும் ஒவ்வொரு செயலும் உன் வெற்றிக்கு வழி வகுக்கும்.... அவ்ளோ பெரிய உருவமுள்ள யானையை ஒரு மனிதன் எப்படி அடக்கிவைக்கிறான்? யானைக்கு தெரியாதா? தான் மிதித்தால் யானைப்பாகன் செத்துவிடுவான் என்று? தன் சுதந்திரத்தை அடக்கி தன்னை வைத்து தன் வயிறு வளர்க்கிறான் என்று தெரியாதா யானைக்கு? தெரியாது..... தெரியாது.. அப்படி தெரிந்தால் எந்த கோயிலிலும் எந்த யானையும் சங்கிலியில் தன்னை பிணைத்துக்கொண்டு இப்படி தேமேன்னு நிற்காது... பாகனின் வயிறு வளர்க்க தான் பிச்சை எடுக்காது.... அருமையான உவமை... யானையை பிச்சை எடுக்கவைத்து தான் பிழைப்பது போல.... தனக்குள் இருக்கும் பூரணமான அறிவை உபயோகப்படுத்தி ( நமக்குள் எத்தனை திறமைகள் அறிவுக்களஞ்சியங்கள் இருக்கிறது என்பதை நாம் அறிய முயற்சிப்பது இல்லை என்பதே உண்மை ) இந்த உலகில் புத்திசாலித்தனமாக யார் யாரிடம் எப்படி பழகவேண்டுமோ அப்படி பழகி யார் யாரிடமிருந்து எப்படி விலகி இருக்கவேண்டுமோ அப்படி விலகி இருந்து யார் யாரிடம் எப்படி தாமரை நீராய் ஒட்டி ஒட்டாமல் இருக்கவேண்டுமோ அப்படி இருந்து வாழ்க்கையில் முன்னேறும் வழியை நீ பார்... வஸந்தம் என்ன வெற்றியே உன் வசப்படும்னு மிக அருமையா சொல்லிட்டீங்க ரமணிசார்....
கொஞ்சநாட்களாக வேலைப்பளு அதிகம்.... கருத்து எழுத இயலாமல் போகிறது ரமணிசார்.... அன்புவாழ்த்துகளுடன் கூடிய நன்றிகள் பகிர்வுக்கு...
அருமை....
அறிவுறையாகவும் கொள்ளலாம்
எழுதுபவன் வாசிப்பவன் எல்லாம்
சராசரியைத் தாண்டியவன் என
தப்புக் கணக்குப் போடாதே//அருமை..
\\ மதம்" பிடித்தவனாயினும்
"மதம்" பிடிக்காதவனாயினும்
அவனவன் நிலையில் "மதம் 'பிடித்தவனே//- ....
மதம்" பிடித்தவனாயினும்
"மதம்" பிடிக்காதவனாயினும்
அவனவன் நிலையில் "மதம் 'பிடித்தவனே
அருமை சார்
சுப்பு ரத்தினம்.
இவ்ளோ பேரு அட்டகாசமா பின்னூட்டம் எழுதினப்பறம்
இந்தக்கிழவன் என்னாத்த எழுதி
இன்னாத்த செய்யப்போறான் ?
அப்படின்னு நினைச்சுகினுதான்
" சும்மா இரு " சுப்பரத்தினம் அப்படின்னு பின்னூட்டம் போட்டேன்.
அதில பாருங்க....
சும்மா இரு அப்படிங்கறது டெலிட் ஆகி
சுப்பு ரத்தினம் மட்டும் வந்திருக்குது.
இப்பதான் எனக்கும் தெரிய வந்துச்சு.
ரமணர் சொன்ன
அந்த ரண்டு வார்த்தைலே அடங்கிப்போச்சுங்கோ
சொல்லு. ஆனா சொல்றதுக்கு முன்னாடி,
சொல்றதெல்லாம்
செல்லுபடியாகுமா அப்படின்னு யோசிச்சுப்பாரு.
இல்லையா ?மெனக்கிடாதே
சும்மா இரு.
சரி தானே சாரே !!
சுப்பு ரத்தினம்.
மிகவும் உண்மை ரமணி ஸார்..
மேலும் நம் கருத்துகளுக்குள் என்ன ஒரு ஒற்றுமை!
நான் என் குடும்பத்தினரிடம் அடிக்கடி சொல்வது..
இந்தியாவில் ஒருவன் மகிழ்ச்சியாக வாழ விரும்பினால் அவன் புத்திசாலியாக இருக்கவேண்டும்.ஆனால் மற்றவர்களுக்கு அவன் ஒரு முட்டாள் போல தெரியவேண்டும்.
sury Siva //
எனக்கு
ப்ளெய்னாக விட்டு
சுப்புரத்தினம் எனப் பின்னூட்டம் போட்டதே
நிறையச் சொல்லிப்போனது
தங்கள் வரவுக்கும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
G.M Balasubramaniam
எப்படியாயினும் யாவருக்கும் பொருந்தும்
. ரசித்தேன்.//
இன்றைய சூழலுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்
தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ரமேஷ் வெங்கடபதி //
..
காலத்தின் கட்டாயம் அதுவெனில் நாணலாக மாறுவதே நல்லது..தக்க சமயத்தில் உரைத்த நீதிக்கவித//
மிகச் சரியாகச் சொன்னீர்கள்
உள்ளத்தால் தேக்காக இருந்தாலும்
உலகின் பார்வைக்கு நாணலாக இருத்தலும்
நமது கண்பட் அவர்கள் சொல்வதைப் போல்
புத்திசாலியாக இருப்பினும் முட்டாளாக நடித்துப் போவதே
இந்தக் காலச் சூழலுக்கு சரியாக இருக்கும்போல உள்ளது
தங்கள் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
முனைவர்.இரா.குணசீலன் //
காலத்துக்கு ஏற்ற பதிவு.
யானைவைத்து பிச்சை எடுப்பது போல்
அறிவைக் கொண்டு பிழைக்கப் பழகு
நறுக்கென்று இருந்தது.//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
காலத்துக்கு ஏற்ற கவிதை.
நான் சொல்ல வந்ததை மாதேவி சொல்லிட்டாங்க! இப்போதைய சூழலுக்கு பொருந்தி வரும் கவிதை! நன்றி!
காகிதப் பூக்களில் உள்ள வாசம் போல்
கவிதை வஸந்தம் வீசுகிறது இரமணி ஐயா.
உஷா அன்பரசு //
அவனவன் நிலையில் "மதம் 'பிடித்தவனே//- நச் வரிகள்! அருமை!//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
அமைதிச்சாரல் //
..
அட்டகாசம்.. நல்ல நேரத்தில் நல்ல நினைவுறுத்தல் :-)
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
திண்டுக்கல் தனபாலன் //
அருமையான வரிகள்....//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
Sasi Kala //
சரியான நேரத்தில் மிகச்சரியான பகிர்வு
நன்றி ஐயா.//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
சிட்டுக்குருவி //
அருமை....
அறிவுறையாகவும் கொள்ளலாம்//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
மாலதி //
அருமை../
/தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
r.v.saravanan //
அருமை சார்///
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
சொல்லு. ஆனா சொல்றதுக்கு முன்னாடி,
சொல்றதெல்லாம்
செல்லுபடியாகுமா அப்படின்னு யோசிச்சுப்பாரு.
இல்லையா ?மெனக்கிடாதே
சும்மா இரு.
சரி தானே சாரே !!
மிகச் சரிதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையானஉற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
Ganpat //
இந்தியாவில் ஒருவன் மகிழ்ச்சியாக வாழ விரும்பினால் அவன் புத்திசாலியாக இருக்கவேண்டும்.ஆனால் மற்றவர்களுக்கு அவன் ஒரு முட்டாள் போல தெரியவேண்டும்/
/மிகச் சரியாகச் சொன்னீர்கள
நான்தான் காதைச் சுற்றி மூக்கைத் தொட்டுள்ளேன்
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
மாதேவி //
காலத்துக்கு ஏற்ற கவிதை.//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
s suresh //
நான் சொல்ல வந்ததை மாதேவி சொல்லிட்டாங்க! இப்போதைய சூழலுக்கு பொருந்தி வரும் கவிதை! நன்றி!//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
அருணா செல்வம் //
..
காகிதப் பூக்களில் உள்ள வாசம் போல்
கவிதை வஸந்தம் வீசுகிறது இரமணி ஐயா.//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
இன்றைய நடைமுறையை எண்ணி எழுதிய கவிதை! உணர்கிறேன்! என்றாலும், நாமும் நம் பொறுப்பை உணர்ந்து எழுத வேண்டும்! நமக்கென நாம் ஒரு கட்டுப்பாட்டோடு எழுதினால் யாரைக் கண்டும் அஞ்சத் தேவையில்லை என்பதே என் கருத்து மற்றபடி தங்கள் கவிதை தேவையான அறிவுரைதான்! ஐயமில்லை!
நமக்கத் தெரிந்ததை காட்டுவது போதும்.
தோரணம் ...தேவையில்லைத் தான்..
சிந்தனைப்பதிவு நன்று.
வேதா. இலங்காதிலகம்.
சில நேரங்களில் கிணறு வெட்டப்போய் பூதம் கிளம்பியகதையாய் என்பார்களே அதுபோல் உங்கள் கவிதையின் சாரத்தை மற்றவ்ர்கள் புரிந்துகொன்டுள்ள விதத்திலிருந்து தெரிந்துகொள்ளமுடிகிறது, இணையத்தில் கொட்டிக்கிடக்கும் சுதந்திரத்தையும் அதை முமையாய் பயன்படுத்தமுடியாமையையும் ஆதங்கத்தோடு வெளிப்படுத்தியுள்ளீர்கள் ஆனால்
காத்துக்கொண்டிருப்பவர்கள்போல் கிட்டத்தட்ட அனைவருமே அப்படித்தான் இருக்கவேண்டும் என்பதைபோல் ஆமோதித்து எழுதியிருப்பது வருத்தம்ளிக்கிறது.
"மிகச் சரியாகச் சொன்னீர்கள்
உள்ளத்தால் தேக்காக இருந்தாலும்
உலகின் பார்வைக்கு நாணலாக இருத்தலும்
நமது கண்பட் அவர்கள் சொல்வதைப் போல்
புத்திசாலியாக இருப்பினும் முட்டாளாக நடித்துப் போவதே
இந்தக் காலச் சூழலுக்கு சரியாக இருக்கும்போல உள்ளது"
அதை தாங்கள் வழிமொழிவதிப்போல் பதிலளிப்பது மேலும் வருத்ததையே கூட்டுகிறது. உபயோகப்படாத தேக்கு எதுக்குசார்! என்னவோ போங்க சார்!
புலவர் சா. ராமாநுசம் "இன்றைய நடைமுறையை எண்ணி எழுதிய கவிதை! உணர்கிறேன்! என்றாலும், நாமும் நம் பொறுப்பை உணர்ந்து எழுத வேண்டும்! நமக்கென நாம் ஒரு கட்டுப்பாட்டோடு எழுதினால் யாரைக் கண்டும் அஞ்சத் தேவையில்லை என்பதே என் கருத்து மற்றபடி தங்கள் கவிதை தேவையான அறிவுரைதான்! ஐயமில்லை!"
இதுதான் சார் உண்மை இதைத்தான் நாம் உணரவேண்டும் உணராதவர்களுக்கு நீங்கள் உணர்த்தவேண்டும். தவறிருந்தால் வருந்துகிரேன்.
agaligan //
நீங்கள் புரிந்து கொண்டு கோபப்பட்டதும் சரி
அயினும் காலச் சூழல் இப்படி உள்ளதே
என்ற கோபம் தந்த எரிச்சலில் எழுதியதுதான் இது
மிகச் சரியாக மனதில் பட்டபடிவிமர்சனம் செய்த பெண்கள்
பட்டபாட்டைத்தான் கண் கூடாகப் பார்த்தோமே
சராசரியாய் இருப்பதற்கா இவ்வளவு யோசிக்கிறோம்
இவ்வளவு எழுதுகிறோம்
தங்கள் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
kovaikkavi //
நமக்கத் தெரிந்ததை காட்டுவது போதும்.
தோரணம் ...தேவையில்லைத் தான்..
சிந்தனைப்பதிவு நன்று//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
திரு agaligan,
ஒரு சிறு விளக்கம் அளிக்க விரும்புகிறேன்..
பல ஆண்டுகளுக்கு முன் வந்த ஒரு திரைப்பட பாடலின் பல்லவி இது..
மேலும் கீழும்,கோடுகள் போடு,அதுதான் ஓவியம்;நீ சொன்னால் காவியம்.
ஓவியம் என்றல் என்னவென்று தெரிந்தவர் இல்லையடா!
குருடர் உலகில் கண்கள் இருந்தால் அதுதான் தொல்லையடா!
ஒரு பிரசித்தி பெற்ற பெர்ஷியன் பழமொழி.
He who knows not, and knows not that he knows not, is a fool. Shun him.
He who knows not, and knows that he knows not, can be taught. Teach him.
He who knows, and knows not that he knows, is asleep. Wake him.
He who knows, and knows that he knows, is a prophet. Follow him.
பெரும்பாலான இந்தியர்கள் முதல் வகையை சேர்ந்தவர்கள்.
இன்னும் கழிவு நீர் வடிகால் கூட சரியாக இல்லாத நாடு நம்முடையது .ஆனால் நாம் இன்னும் எட்டு ஆண்டுகளில் வல்லரசாக ஆசைப்படுவோம்.60 சதவிகித மக்களுக்கு மாத வருமானம் ரூ.ஆயிரத்திற்கும் கீழ்.ஆனால் நாம் செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்ப ஆசைப்படுவோம்.
இங்கு ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ,ஆல்தோட்ட பூபதியால் தேர்தலில் தோற்கடிக்கப்படுவார்.பிறகு வெற்றிபெற்றவர் விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்ப அமைச்சராவார்.
நன்றி..
Ganpat //
தங்கள் விளக்கம் மிக மிக அருமை
கண்டுபிடிப்புகளில் ஒன்றிரண்டு
தலைவர்களில் ஒன்றிரண்டு
அறிஞர்களில் ஒன்றிரண்டு
தீர்க்கதரிசிகளில் ஒன்றிரண்டு பேரை வைத்துக் கொண்டு
அதுவும் ஐம்பது நூறாண்டுகளுக்கு
முன்பிருந்தவர்களாக வைத்துக் கொண்டு
கோடிக்கணக்கானவர்களை கடையனுக்கும் கடையனாக
வைத்துக் கொண்டு இன்னும் எத்தனை நாள்
பெருமை கொண்டாடித் திரியப் போகிறோம்
சிந்திக்கவைத்த அருமையான பின்னூட்டத்திற்கு
மனமார்ந்த நன்றி
மீண்டும் மீண்டும் உங்கள் பெருந்தன்மை என்னை திக்கு முக்காட வைக்கிறது ரமணி ஸார்.உங்களுக்காக பிரத்யேகமாக நான் எழுதிய வரிகள் இதோ:
இன்றைய இந்தியா.
நேர்மையான முட்டாள்கள் ஒருங்கிணைந்து,
அயோக்கிய முட்டாள்களை தேர்ந்தெடுக்க,
அவர்களும் ஒருங்கிணைந்து,
சில அயோக்கிய புத்திசாலிகளை,
தங்கள் தலைவர்களாக தேர்வுசெய்து,
நாட்டை சுரண்டத்தொடங்க,
மீதி உள்ள நேர்மையான புத்திசாலிகள்,
தேர்தலில்
போட்டியும் போடாமல்,
ஓட்டும் போடாமல்,
நடப்பதைப்பார்த்து நாளும் வெதும்பி,
புரண்டு,புலம்பி,புகார் பல செய்து,
நாலு பின்னூட்டம் இட்டு,
நாளை ஓட்டுவர்.
ada.. z
Post a Comment