வானம் பார்த்து மண்ணில் நடந்து
இன்னும் எத்தனை நாள்
பாதாளத்தில் வீழ்ந்து கொண்டிருக்கப் போகிறீர்கள்
ஞானம் தேடி காடு மலை ஓடி
இன்னும் எத்தனை யுகம்
வாழ்வை இழந்து கொண்டிருக்கப் போகிறீர்கள்
நான் இருப்பதும் இல்லாதிருப்பதும்
உலகுக்கு பிரச்சனையே இல்லை
என்னை வைத்துப் பிழைப்பவனும்
என்னை "வைதுப் " பிழைப்பவனும் தான்
உலகில் பெரும் பிரச்சனை
வேண்டுதல் நிறைவேற்ற அள்ளிக் கொடுக்கவோ
செருப்படி கொடுத்தால் சீரழித்துப் போகவோ
நான் அற்ப மனிதனில்லை
ஒலியாக ஒளியாக பொதுவாக இருந்தவனை
மொழியானதும் விளக்கானதும் நீங்கள்தான்
பிரித்துத் தொலைத்தீர்கள்
வெளியாக புரியாது தெளிவாக இருந்தவனை
கோவிலாக்கி சிலையாக்கி என்னைப்
சின்னாபின்னப்படுத்திவிட்டீர்கள்
நான் ஒருவனே என்று சிலரும்
நானே எல்லாம் என்று சிலரும்
என்னை நீங்களாகவே உருவகப் படுத்திக்கொண்டீர்கள்
மிகப் பெரியவனான எனக்கு
ஊடகமும் ஏஜேண்டுகளும் தேவையென முடிவு செய்து
என்னை மகா சிறியவனாக்கிவிட்டீர்கள்
உறுதியாகவும் சொல்கிறேன்
இறுதியாகவும் சொல்கிறேன்
எல்லோருக்குமாகவும் சொல்கிறேன்
என்னைப் படைத்து என்னைப் புகழ்ந்து
நீங்கள் எதுவும் அடையப் போவதுமில்லை
என்னை நீங்கள் அடையப் போவதும் இல்லை
உங்கள் நிம்மதிக்காக இல்லையென்றாலும்
என் நிம்மதிக்காக வேணும் என்னை சிலகாலம்
கண்டு கொள்ளாது விட்டு விடுங்களேன்
பிளீஸ்
38 comments:
நமக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியை, மனமுருக தியானித்தால் போதும். மதங்களால், விழாக்களால் பிரிக்க வேண்டாம். அருமையான கவிதை. இறைவன் பெயரை சொல்லி மனிதர்கள் படுத்தும் பாட்டை இறைவனே விரும்புவதில்லை என்று அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.
திருவரங்கத்தில் சிலர் சொல்வதுண்டு.... “அவர் தேமேன்னு படுத்து இருக்கிறார். மனிதர்கள் படுத்தும் படுத்தல்கள் தான் தாங்க முடியவில்லை என....”
அதை பிரதிபலிக்கும் கவிதை!
த.ம. 2
நல்லா சொன்னீங்க
உஷா அன்பரசு //
இறைவன் பெயரை சொல்லி மனிதர்கள் படுத்தும் பாட்டை இறைவனே விரும்புவதில்லை என்று அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.//
தங்கள் முதல் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
வெங்கட் நாகராஜ் //
திருவரங்கத்தில் சிலர் சொல்வதுண்டு.... “அவர் தேமேன்னு படுத்து இருக்கிறார். மனிதர்கள் படுத்தும் படுத்தல்கள் தான் தாங்க முடியவில்லை என....”
அதை பிரதிபலிக்கும் கவிதை!//
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
முத்தரசு //
நல்லா சொன்னீங்க//
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
திருந்துவார்கள் என்று நினைக்கிறீங்க... ...ம்ஹீம்... அவங்க பொழைப்பே இது தான்...
tm3
மிக அருமையா எழுதி இருக்கீங்க.....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி......
நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
உண்மையாகவே அவர் தெமேனென்றுதான் படுத்துக் கொண்டிருக்கிறார். அவர் பெயரால் எத்தனை பிரிவு சண்டை.
அருமையாகச் சொன்னீர்கள் ரமணி ஜி.
/-உறுதியாகவும் சொல்கிறேன்
இறுதியாகவும் சொல்கிறேன்
எல்லோருக்குமாகவும் சொல்கிறேன்/- ஏனோ தெரியவில்லை.இந்தப் பாடல் நினைவுக்கு வருகிறது. /= யாரென்ன சொன்னாலும் அஞ்சாதே நெஞ்சமே ஐயன் புகழைப் பாடு.ராக ஆலாபனம் பாடு. முடிந்தால் அடவோடும் சதிரோடும் ஆடு./- அவனை விட்டுவிட முடியுமா.?
இதில் பாரம்பரியம் நம்பிக்கை என்றெல்லாம் கதை அளப்பார்கள் சார்...
நம்பிகையில் கொண்டுசெல்ல வேண்டிய வாழ்வை சிலை வடித்து தும்பிக்கையில் அல்லவா கொண்டுசெல்கிறார்கள்
திண்டுக்கல் தனபாலன் //
.
திருந்துவார்கள் என்று நினைக்கிறீங்க... ...ம்ஹீம்... அவங்க பொழைப்பே இது தான்..//
தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Easy (EZ) Editorial Calendar //
மிக அருமையா எழுதி இருக்கீங்க.....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....//
தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
வல்லிசிம்ஹன் //
.
உண்மையாகவே அவர் தெமேனென்றுதான் படுத்துக் கொண்டிருக்கிறார். அவர் பெயரால் எத்தனை பிரிவு சண்டை.
அருமையாகச் சொன்னீர்கள் ரமணி ஜி.//
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
வெளியாக புரியாது தெளிவாக இருந்தவனை
கோவிலாக்கி சிலையாக்கி என்னைப்
சின்னாபின்னப்படுத்திவிட்டீர்கள்.
உண்மையை சிறப்பாக சொன்னீர்கள் ஐயா.
// உங்கள் நிம்மதிக்காக இல்லையென்றாலும்
என் நிம்மதிக்காக வேணும் என்னை சிலகாலம்
கண்டு கொள்ளாது விட்டு விடுங்களேன் //
படைத்தவனே அலறினால் பக்தன் என்ன செய்ய முடியும்.?
G.M Balasubramaniam //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான விரிவான பின்னூட்டத்த்ற்கும்
மனமார்ந்த நன்றி
சிட்டுக்குருவி //
இதில் பாரம்பரியம் நம்பிக்கை என்றெல்லாம் கதை அளப்பார்கள் சார்...
நம்பிகையில் கொண்டுசெல்ல வேண்டிய வாழ்வை சிலை வடித்து தும்பிக்கையில் அல்லவா கொண்டுசெல்கிறார்கள்//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான விரிவான பின்னூட்டத்த்ற்கும்
மனமார்ந்த நன்றி
Sasi Kala //
உண்மையை சிறப்பாக சொன்னீர்கள் ஐயா.//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்த்ற்கும்
மனமார்ந்த நன்றி
அருமை அய்யா. கடவுள் இன்று வணிகப் பொருளாகிவிட்டார். என்றைக்கு முதன் முதலாக கோவிலில் உண்டியலையும், தர்மதரிசனம், சிறப்பு தரிசனம் என்று நடைமுறைப்படுத்தினார்களோ, அன்றே இறைவன் நிம்மதி இழந்திருப்பான். இறைவன் மனிதனில் இருக்கிறான் என்பர். ஒரு பாடல் நினைவிற்கு வருகின்றது.
இருக்கும் இடத்தை விட்டு
இல்லாத இடம் தேடி
எங்கங்கோ அலைகின்றார்
ஞானத் தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே
சிறப்பான படைப்பு! கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவோம்!
சிறப்பான கவிதை!
// உங்கள் நிம்மதிக்காக இல்லையென்றாலும்
என் நிம்மதிக்காக வேணும் என்னை சிலகாலம்
கண்டு கொள்ளாது விட்டு விடுங்களேன்
பிளீஸ்// 10
நிஜமே !
நிச்சயமாய் இதை
நீ தான் எழுதினாயா என
அந்த அவனைச்
' செல்' லிட்டேன். 20
வைட்டிங்க் கில் கொஞ்ச நேரம்
வாட்ட வைத்து விட்டு
வாழ்க வளமுடன் சொல்லி
விசயம் என்ன சொல் என்றான். 30
அவனைக் கேட்டேன். 10க்குச் செல்.
அவனோ
'அவனியிலே நான்
படைத்த பலர்
பவர் ஆஃப் அட்டார்னி இல்லாமலேயே
எனக்காக ஆஜராகிறார்கள்.' என்றார்.
என்ன செய்வது என்றேன்.
' விட்டு விடுங்களேன் ' என்றார்.
எதை ?
என்னை உன்னை
எல்லாவற்றையும் ...
என்றார்.
சுப்பு ரத்தினம்.
கண்டு கொள்ளாது விடுவதினால் மட்டுமே கிடைப்பதுதான் நிம்மதியா என்ன?
//என்னை வைத்துப் பிழைப்பவனும்
என்னை "வைதுப் " பிழைப்பவனும் தான்
உலகில் பெரும் பிரச்சனை//
நன்றாகச் சொன்னீர்கள்
த.ம. 7
எல்லாவரிகளாலும் மிக அற்ப்புதமாக சொல்லிருக்கிறீர்கள், ஒவ்வொரு வரியிலும் எனது உணர்வைக்கண்டேன். சூப்பர் அண்ணா.
தாமதமான வருகை! மன்னிக்கவும்.
என்னென்பேன் எதேன்பேன்உங்கள் உள்ளக் கருத்துக்களின் உருவங்களை பேருண்மை என்பேன் . இறுதி வரிகளில் ஓகே ஓகே
கண் காணா கடவுளுக்கு நினைத்த உருவகம் கொடுக்கும் மனிதர்களுக்கு அந்தச் சக்தி சொல்லியிருக்கும் சங்கதிபோலிருக்கு கவிதை.அருமை ஐயா !
அருமை....
"பிழைப்பவர்கள்தான் பலர்" நன்றாகச்சொல்லியுள்ளீர்கள்.
அத்தனையும் உண்மை அருமையான கவிதை
//வானம் பார்த்து மண்ணில் நடந்து
இன்னும் எத்தனை நாள்
பாதாளத்தில் வீழ்ந்து கொண்டிருக்கப் போகிறீர்கள்// இது தான் மாற்றப்படவேண்டிய தேவை
காத்துல பறக்கும் தூசியை பற்றி ஏன் கவலை படுகிறீர்கள்
உங்களது உண்மையான ஆதங்கம் புரிகிறது திருந்துவார்கள்
என்னை உண்டென்கிறாய்
என்னை உருவமாக்கினாய்
என்னுள் உறைகிறேன் என்கிறாய்
என்னுள் இருந்து உரைத்து விடு என்கிறாய்
என்னை நீ ஏற்றிவிட்டால்
உன்னை நான் சப்பரத்தில் ஏற்றி
ஊர்வலம் செல்கிறேன் என்கிறாய்....
நான் நானாக இருக்க இங்கொரு
வழியில்லையா...
ஆஹா..
ஐயா நான் வழக்கமாக சொல்வதுதான்...
உங்களின் கவிதைக்கான கருப்பொருளில்
நான் எப்போதும் மயங்கிப் போகிறேன்....
இல்லாதது ஒன்று வந்து
நான் இல்லை என்று
சொல்லிவிட்டுப் போகிறது...
இரமணி ஐயா... எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீர்கள்...? அபாரம்! அற்புதம்!
வணங்குகிறேன் ஐயா.
மனிதன் யாரையும் நிம்மதியாக இருக்க விட மாட்டான்.
ஏதாவது ஒன்று வேண்டும்,அதை வைத்துக் கொண்டு அரசியல் செய்து குளிர் காய வேண்டும்.
கவிதை அருமை.
);
Post a Comment