Saturday, December 22, 2012

உபதேசம்


அந்தச்  சனிப் பயல்
ஒவ்வொரு முறை கோபப்படும் போதும்
கோபத்தின் விளைவுகள் குறித்து
அவன் நெஞ்சில் பதியும் வண்ணம்
கடுமையாகப் பேசியிருக்கிறேன்

ஒரு சமயம்
அவன் சம்பந்தமே இல்லாமல்
கோபப்பட்டபோது
பொறுத்துக் கொள்ளமுடியாமல்
சட்டையைப் பிடித்து உலுக்கியிருக்கிறேன்

நேற்று கூட
ஒன்றுமில்லாத விஷயத்திற்கு
கோபப்பட்டதை
என்னால் தாங்கமுடியாது போக
கன்னத்தில் அறைந்தே விட்டேன்

அப்படியும் அவன் திருந்தியபாடில்லை

இப்போதெல்லாம்
அவன் போக்கை நினைக்கையில்
மனசு படபடக்கிறது
என்னுள் பற்றி எரிவது போல் உள்ளது
உடல் கூட நடுங்கத் துவங்குகிறது

பாழாய்ப் போனவன்
கோபத்தின் அதீத விளைவுகளை
என்றுதான் புரிந்து கொள்ளப் போகிறான்
கோபப்படுவதால் எந்தப் பலனும் இல்லையென்பதை
என்றுதான் புரிந்து தொலைக்கப் போகிறான்


53 comments:

T.N.MURALIDHARAN said...

கோபப் படாதே என்று அறிவுரை சொல்பவர்களும் கோபப் படாமல் இருக்க மாட்டீர்கள் என்பதை அழகாகச்ச் சொல்லிவிட்டீர்கள்

T.N.MURALIDHARAN said...

த.ம. 2

பழனி.கந்தசாமி said...

ரசித்தேன்.

சேக்கனா M. நிஜாம் said...

கோபம் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடியது மட்டுமல்ல சமூகத்தில் தனிமைப்படுத்திவிடக்கூடிய தன்மை வாய்ந்தது

கவிதை அருமை !

தொடர வாழ்த்துகள்...

சேக்கனா M. நிஜாம் said...

த.ம. 3

கவியாழி கண்ணதாசன் said...

நல்ல கருத்து நாணயமாய் சொல்லியுள்ளீர்கள்

ரமேஷ் வெங்கடபதி said...

அவசியத்திற்கு கோபப் படவில்லை என்றாலும் இவ்வுலகை எதிர்கொள்ள முடியாது !

நல்லதொரு விமர்சனப் பதிவு..வாழ்த்துக்கள் !

கோமதி அரசு said...

பாழாய்ப் போனவன்
கோபத்தின் அதீத விளைவுகளை
என்றுதான் புரிந்து கொள்ளப் போகிறான்
கோபப்படுவதால் எந்தப் பலனும் இல்லையென்பதை
என்றுதான் புரிந்து தொலைக்கப் போகிறான்//
நல்ல கவிதை.

சொல்வது சுலபம் கடைப்பிடிப்பது கஷ்டம் என்பதை அழகாய் கவிதை ஆக்கி விட்டீர்கள்.
கோபம் உடல் நலக் கேடு.

புலவர் சா இராமாநுசம் said...


சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி- வள்ளுவர் வாக்கு என்பதை விளக்கும் கவிதை! நன்று!

Ramani said...

கோமதி அரசு //

சொல்வது சுலபம் கடைப்பிடிப்பது கஷ்டம் என்பதை அழகாய் கவிதை ஆக்கி விட்டீர்கள்.
கோபம் உடல் நலக் கேடு//
.
இப்போது உபதேசிப்பவர்கள் யாரும் தன்னைப்
பார்த்துக் கொள்வதேயில்லை
சொல்ல முயன்றதை மிகச் சரியாக
பின்னூட்டமிட்டது மகிழ்வளிக்கிறது
வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஒவ்வொறு மனிதரும் தனக்குள் கேட்டுக்கொள்ளும் கேள்வி...

நல்லதொரு கவிதை

Sasi Kala said...

கை கால் போல கோபமும் ஒரு உறுப்பாகிப்போனது மனிதனுக்கு சிறப்பாக சொன்னீர்கள் ஐயா.

Ramani said...


T.N.MURALIDHARAN //

தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

பழனி.கந்தசாமி //

ரசித்தேன்//

தங்கள் உடன் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி


Ramani said...

சேக்கனா M. நிஜாம் //.

கவிதை அருமை !
தொடர வாழ்த்துகள்.../

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

கவியாழி கண்ணதாசன் //

நல்ல கருத்து நாணயமாய் சொல்லியுள்ளீர்கள்//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி


Ramani said...

ரமேஷ் வெங்கடபதி //

அவசியத்திற்கு கோபப் படவில்லை என்றாலும் இவ்வுலகை எதிர்கொள்ள முடியாது !
நல்லதொரு விமர்சனப் பதிவு/

/தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி


Ramani said...

புலவர் சா இராமாநுசம் //

சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி- வள்ளுவர் வாக்கு என்பதை விளக்கும் கவிதை! நன்று!/

/தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி/

Ramani said...

கவிதை வீதி... // சௌந்தர் //

ஒவ்வொறு மனிதரும் தனக்குள் கேட்டுக்கொள்ளும் கேள்வி///

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி/
Ramani said...

Sasi Kala //

கை கால் போல கோபமும் ஒரு உறுப்பாகிப்போனது மனிதனுக்கு சிறப்பாக சொன்னீர்கள் ஐயா.//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி/


Murugeswari Rajavel said...

ரமணி சாரின் ஒவ்வொரு கவிதையும் சிறப்பு.அதுவும் உபதேசம்னா சும்மாவா! கவி மகுடத்தில் தனி வைரம்.

இராஜராஜேஸ்வரி said...

கோபப்படாமல் இருக்க கோபத்துடன் உபதேசமா ..!

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை அய்யா அருமை.
கோபப்படாமல் இரு என்று கோபத்துடன் ஒரு கீதாஉபதேசம். அருமை. நன்றி அய்யா

அமைதிச்சாரல் said...

அருமை.. அருமை.

Lakshmi said...

ஆமா கோபபடுவதால் எதையுமே சாதிக்க முடியாதுதான்

ஹ ர ணி said...

அன்புள்ள ரமணி ஐயா...

வணக்கம், தொடர்ந்து என்னால் பதிவுலகிற்கு வரஇயலாத அளவிற்குப் பணிகள். இருப்பினும் அடிக்கடி நினைத்து வருந்துவதுண்டு. நான் படிக்காமல் தவறவிடும் பதிவுகளில் உங்களுடையதும் ஒன்று. சமுகத்தின் அவலங்களை, பிரச்சினைகளை, இன்னும் பலநிகழ்வுகளை எளிமையாக உரைப்பதில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான். இப்போது குளிர்கால விடுப்பு பத்து நாட்கள் உண்டு. அதற்குள் உங்களின் ஒரு மாதப் பதிவுகள்அத்தனையும் வாசித்துவிடுவேன், இப்படி பல பதிவுர்களின் பதிவுகளுக்கும் சென்று வாசிக்கவேண்டும். சந்திபோம். நன்றி. வழக்கம்போல அசத்தலான கருத்துப் பதிவு இப்போது... எப்போதும் கோபம் என்பதை உச்சரிக்கக்கூட வேண்டாம்.

G.M Balasubramaniam said...


கோபமுடையார் குணமுடையார் என்கிறார்களே. ..!எங்கோ எப்போதோ படித்தது. கோபத்தில் தண்டிக்கும்போது கம்பை ஓங்கி அடிக்க முற்படும் ஆசிரியர், பிரம்பு உடலில் படும்போது மிருதுவாக விழும்படிச் செய்ய வேண்டுமாம். நல்ல கவிதை நினைவுக்கு வரவில்லை. வாழ்த்துக்கள்.

G.M Balasubramaniam said...


அதாவது அடிப்பதுபோல் அடிக்க வேண்டும். தண்டிப்பதுபோல் தண்டிக்க வேண்டும். IT SHOULD BE ONLY A SHOW OF ANGER...!

Ranjani Narayanan said...

கோபம், கோபப்படுபவர்களையும் அழித்துவிடும் என்பதை அருமையான வரிகளில் சொல்லி இருக்கிறீர்கள், ரமணி.ஏன் அது யாருக்கும் புரிவதில்லை?

வரிவரியாய் ரசித்தேன்!

கே. பி. ஜனா... said...

கோபத்தின் மீதான தங்கள் கோபம் வெளிப்படுத்திய விதம் அழகு!

semmalai akash said...

பாழாய்ப் போனவன்
கோபத்தின் அதீத விளைவுகளை
என்றுதான் புரிந்து கொள்ளப் போகிறான்
கோபப்படுவதால் எந்தப் பலனும் இல்லையென்பதை
என்றுதான் புரிந்து தொலைக்கப் போகிறான்

அருமையான கருத்தை கவிதைமூலம் கொடுத்துவிடீர்கள் அருமை.

Ramani said...

Murugeswari Rajavel //

ரமணி சாரின் ஒவ்வொரு கவிதையும் சிறப்பு.அதுவும் உபதேசம்னா சும்மாவா! கவி மகுடத்தில் தனி வைரம்.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

இராஜராஜேஸ்வரி //

கோபப்படாமல் இருக்க கோபத்துடன் உபதேசமா /
/
சொல்ல முயன்றதை மிகச் சரியாக
பின்னூட்டமிட்டது மகிழ்வளிக்கிறது
வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

கரந்தை ஜெயக்குமார் //

அருமை அய்யா அருமை.
கோபப்படாமல் இரு என்று கோபத்துடன் ஒரு கீதாஉபதேசம். அருமை. நன்றி அய்யா/

/சொல்ல முயன்றதை மிகச் சரியாக
பின்னூட்டமிட்டது மகிழ்வளிக்கிறது
வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

அமைதிச்சாரல் //

அருமை.. அருமை.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

Lakshmi //

ஆமா கோபபடுவதால்
எதையுமே சாதிக்க முடியாதுதான்//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

ஹ ர ணி //

நான் படிக்காமல் தவறவிடும் பதிவுகளில் உங்களுடையதும் ஒன்று. சமுகத்தின் அவலங்களை, பிரச்சினைகளை, இன்னும் பலநிகழ்வுகளை எளிமையாக உரைப்பதில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான்//.

தங்களால் என் பதிவு தொடரப்படுவதும்
தங்களது விரிவான உற்சாகமூட்டும் பின்னூட்டமும்
மிக உயர்ந்த விருதினைப் பெற்ற பெருமிதத்தை தருகிறது வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

G.M Balasubramaniam //

அதாவது அடிப்பதுபோல் அடிக்க வேண்டும். தண்டிப்பதுபோல் தண்டிக்க வேண்டும். IT SHOULD BE ONLY A SHOW OF ANGER...!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

Ranjani Narayanan //

கோபம், கோபப்படுபவர்களையும் அழித்துவிடும் என்பதை அருமையான வரிகளில் சொல்லி இருக்கிறீர்கள், ரமணி.ஏன் அது யாருக்கும் புரிவதில்லை?வரிவரியாய் ரசித்தேன்!//

மனம் கவர்ந்த அருமையான பின்னூட்டம்
மிகச் சரியாகச் சொல்வதற்காகத்தான்
ஒவ்வொரு பத்தி முடிவிலும் கொஞ்சம் கொஞ்சமாக
உபதேசிப்பவரை கோபம் ஆக்கிரமிக்கத்
துவங்குவதைச் சொல்லும்படியாக
வார்த்தைகளைப் பயன்படுத்தி இருந்தேன்
மிகச் சரியாக நான் சொல்லமுயன்றதை அறிந்து
ஊக்கமளித்தது அதிக மன நிறைவைத் தந்தது
மிக்க நன்றிRamani said...

கே. பி. ஜனா... //

கோபத்தின் மீதான தங்கள் கோபம் வெளிப்படுத்திய விதம் அழகு!///

சொல்ல முயன்றதை மிகச் சரியாக
பின்னூட்டமிட்டது மகிழ்வளிக்கிறது
வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

Ramani said...

semmalai akash //

அருமையான கருத்தை கவிதைமூலம் கொடுத்துவிடீர்கள் அருமை.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

மாற்றுப்பார்வை said...

பயனுள்ள தகவல்

Ramani said...

மாற்றுப்பார்வை //

பயனுள்ள தகவல்

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

ezhil said...

கோபம் குறித்த அருமையான பகிர்வு.. தவிர்க்கப் பார்க்கிறோம் இருந்தாலும் உடன்பிறந்தாளைப்போல் அடிக்கடி எட்டிப் பார்க்கிறாள்.

Ramani said...

ezhil /

/தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

rajalakshmi paramasivam said...

கோபத்தின் விளைவுகளை அழகிய கவிதையாக வடித்துள்ளீர்கள்.
அருமை.
ஆனால் அந்த சமயத்தில் பாரதி சொன்ன
ரௌத்திரம் பழகு என்பதை மனம் பிடித்துக் கொள்கிறது.
நல்ல கவிதை

ராஜி

Seeni said...

athu saringa ayyaaa...

Ramani said...

rajalakshmi paramasivam //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani said...

Seeni //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

அருணா செல்வம் said...


ஊருக்குத் தான் உபதேசம் என்பதை இதை விட அருமையாக யாராலும் சொல்ல முடியாது இரமணி ஐயா.

அருமையான கவிதை.

Ramani said...

அருணா செல்வம் //

ஊருக்குத் தான் உபதேசம் என்பதை இதை விட அருமையாக யாராலும் சொல்ல முடியாது இரமணி ஐயா.அருமையான கவிதை.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி


ஹேமா said...

கோபத்தின் பலன் எத்தனை இழப்புக்கள்.கோபம் தீர்ந்தபின் யோசித்து எதுக்கு ?

Ramani said...

ஹேமா //

கோபத்தின் பலன் எத்தனை இழப்புக்கள்.கோபம் தீர்ந்தபின் யோசித்து எதுக்கு ?/

/தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றிPost a Comment