Friday, March 29, 2013

உள்ளும் புறமும்


இதைக் கதையாகக் கொள்வதுதான் நல்லது.
உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும்தான்
ஏன் ? எல்லோருக்குதான்.

வயது நாற்பதை வயதை ஒட்டிய சமயத்தில்
மனைவியின் தொடர் வற்புறுத்தலாலோ அல்லது
அடுத்து அடுத்து வீட்டுச் சொந்தக் காரர்களின்
அடாவடித்தனத்தால் வீடு மாற்றி மாற்றி
நொந்து போனதாலோ எனக்கும் சுயமாக
வீடு கட்டவேண்டும் என ஆசை இருந்தது
ஆனால் எதனாலோ அதிக ஆர்வமில்லை

இந்தச் சூழலில்

எனது அலுவலகத்தில் எனது வயதை ஒத்த
உதவியாளன்ஒருவன் இருந்தான்.
அவன் அந்த சமயத்தில் அவனுடையபையனுக்கு
 தீவீரமாகப் பெண் பார்த்துக் கொண்டிருந்தான்.
நேற்று என்னிடம் பெண் பார்க்கப் போவதாக விடுமுறை
சொல்லிவிட்டுப் போயிருந்ததால் அவன் வந்தவுடன்
 ஆர்வமாக"என்ன ஆயிற்று " எனக் கேட்டேன்

அவன் சலித்தபடி சொன்னான்
"பெண் அழகாயிருக்கிறதுவசதியான குடும்பம் தான்.
பவுனும் 30 க்கு  குறையாமல்போடுகிறேன் எனச்
சொல்கிறார்கள்.சம்பாதிக்கிற அண்ணன்கள்
இருவரும் தாட்டியமாக இருக்கிறார்கள்.
ஆனாலும்... 'எனச் சொல்லி நிறுத்தினான்

எனக்கு எரிச்சலாகிப் போனது.
"இதற்கு மேல் உனக்கு எப்படிச்   சம்பந்தம்
 வேண்டும் எனநினைக்கிறாய்  "
என்றேன் எரிச்சலுடன்

"எல்லாம் இருந்து என்ன சார்.வாடகை வீட்டில்
 இருக்கிறார்கள்வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு
 எப்படி சார் பெண்ணைக்கொடுப்பது " என்றான்

எனக்கு அவன் பதில் சட்டென யாரோ மண்டையில்
 தடி கொண்டுதாக்கியது போல இருந்தது.

நான் கௌரவமான ஒரு அரசுப் பணியில் இருக்கிறேன்
இரண்டு பெண்களையும் பொறியியல் கல்லூரியில்
 சேர்த்துபடிக்கவைத்துக் கொண்டுள்ளேன்.
மிகச் சிறப்பான முறையில்திருமணம் செய்து
 கொடுக்கக் கூடிய வகையில்திருமணத்திற்கு
த்தேவையான அனைத்தையும்
சிறிது சிறிதாக சேமித்தும் வைத்துள்ளேன்
வீடு கட்டுவதற்கு ஏதுவாக இரண்டு மூன்று
 இடங்களைவாங்கியும் வைத்துள்ளேன்
.பொறியல் துறையிலேயேஇருப்பதனால்
வடிவமைப்பதுகுறித்தோ வேலை ஆட்களிடம்
வேலை வாங்குவது குறித்தோ கவலை இல்லை

.ஆனாலும்

எப்போது வேண்டுமானலும் கட்டிவிடமுடியும் என்கிற
நமபிக்கையினாலோ அல்லது அலட்சியத்தினாலோ
 உடன்சொந்தமாக வீடு கட்ட நான் முயற்சிக்கவே இல்லை

இன் நிலையில் என் உதவியாளர் சொந்த வீடு
 இல்லாதவர்கள்வீட்டில் எப்படி சம்பந்தம் செய்வது
 என்கிற வார்த்தை என்னுள்ஒரு பெரும் பாதிப்பை
ஏற்படுத்திவிட்டது,இவன் அளவிலேயேஇப்படிப்பட்ட
எண்ணம் இருக்குமாயின் நான் மாப்பிள்ளை பார்க்கத்
துவங்குகையில் நல்ல சம்பந்தம் அமைந்து
 இதன் காரணமாகதட்டிப் போனால் என்ன செய்வது
என்கிற எண்ணம் வர அவனுடைய வார்த்தையை
 ஏதோ அசரீரியின் வாக்காக எடுத்துக்
-கொண்டு உடன் வீடு கட்டது துவங்கிவிட்டேன்.

ஆறு மாதத்தில் புதிய வீட்டில் குடியேறியும் விட்டேன்
இதிலெல்லாம் எந்தப் பிரச்சனையும் இல்லை
.நான் வீடு கட்டியபகுதி புதிய குடியேற்றப் பகுதியாய்
 இருந்ததால் என் வீட்டை ஒட்டிஒரு இரண்டு பர்லாங்க்
 தூரத்திற்கு வீடு ஏதும் இல்லை
அது கூட  பெரிய பிரச்சனையாய் இல்லை.
என் வீட்டிற்குகிழக்கே இரண்டு பர்லாங்க் தூரத்தில்
 மிகப் பெரியமுள் காடு ஒன்று இருந்தது.
அதனால் இத்தனை பிரச்சனைகள் இருக்கும் என
 எனக்கு முதலில் தெரியாது.

(தொடரும்

40 comments:

அம்பாளடியாள் said...

கதை சுவாரசியமாக உள்ளது மேலும் என்ன நிகழ்ந்தது எனஅறியும் ஆவலைத் தூண்டுகின்றது விரைந்து எழுதுங்கள் ஐயா வாழ்த்துக்கள் சிறப்பான முடிவும் கிட்டிய கதையாக அமையட்டும் !

அமைதிச்சாரல் said...

சுவாரஸ்யமான ஆரம்பம்..

Ranjani Narayanan said...

கவிதையைத் தேடி வந்த எனக்கு கதை வியப்பைக் கொடுத்தது.

கே. பி. ஜனா... said...

தொடர்க!

r.v.saravanan said...

அருமையான தொடக்கம் சார்

சொந்த வீடு என்பது இப்போது வசதியுள்ளவன் என்பதற்கு அடையாளமாகி இருக்கிறது

தொடருங்கள்

உஷா அன்பரசு said...

கதை சுவாரஸ்யமாக இருக்கிறது. //என் வீட்டிற்குகிழக்கே இரண்டு பர்லாங்க் தூரத்தில்
மிகப் பெரியமுள் காடு ஒன்று இருந்தது.
அதனால் இத்தனை பிரச்சனைகள் இருக்கும் என
எனக்கு முதலில் தெரியாது.
// தொடரும் என்று முடித்து விட்டீர்களே..! இந்த கதை மூலமா நல்ல மேசேஜை தர போறிங்கன்னு புரியுது.. விரைவில் தொடருங்க ஐயா.. !

மாதேவி said...

கதைதொடக்கம் அருமை. படிக்கும் ஆவலை தூண்டுகிறது.

Avargal Unmaigal said...

கதை சுவாரசியமாக உள்ளது

திண்டுக்கல் தனபாலன் said...

சுவாரஸ்யமான ஆரம்பம்... தொடர்கிறேன்...

கவியாழி கண்ணதாசன் said...

இந்தப் பதிவு என் மண்டையில் ஆணி அடித்துவிட்டது நானும் யோசிக்கிறேன்

கோமதி அரசு said...

எல்லாம் இருந்து என்ன சார்.வாடகை வீட்டில்
இருக்கிறார்கள்வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு
எப்படி சார் பெண்ணைக்கொடுப்பது " என்றான்//

நீங்கள் சொல்வது உண்மை. நிறைய பேர் இப்படி சொல்லி கேட்டு இருக்கிறேன்.
தொடர்கிறேன்.

Sasi Kala said...

வாடகை வீட்டில் இருந்துகொண்டு அனுபவிக்கும் கொடுமைகளை பல ... பிள்ளைகள் வளர்வதற்குள் ஒரு சொந்த வீடு கனவு எனக்கும் உண்டு.

தொடருங்கள் ஐயா.

பூந்தளிர் said...

சொந்த வீடு என்பது பலரின்விருப்பம்தான். அதை கதை வடிவில் ரொம்ப அழகாக சொல்லி இருக்கீங்க நல்லா இருக்கு

வேடந்தாங்கல் - கருண் said...

கவிதையில் கதை வியப்பு ..

rajalakshmi paramasivam said...

சொந்த வீட்டுக் கதை நிறைய சுவாரஸ்யம் மிகுந்ததாய் இருக்கும். உங்களுடையது இன்னும்
சுவாரஸ்யம்.
அப்புறம் என்ன ஆச்சு?

kovaikkavi said...

mmmm...thodarunkal....
Vetha.Elangathilakam.

MANO நாஞ்சில் மனோ said...

கல்யாணத்தைக் கட்டிப்பார், வீட்டைக்கட்டிப்பார் என்று சொல்லக்கேட்டு இருக்கேன், அதற்கும் உங்கள் கதைக்கும் தொடர்பு இருப்பதாகவே உணர்கிறேன் குரு...!

Dr. Mano said...

கதை நல்ல சுறு சுறுப்பாய் போய் கொண்டிருந்தது தீடிர் என்று தொடரும் என்று போட்டு விட்டேர்களே -

கரந்தை ஜெயக்குமார் said...

கவிதை காண வந்தேன்
கதை கண்டு மகிழ்ந்தேன்.
அதிலும் முள் காடு பிரச்சினையா?
ஆர்வத்துடன் காத்திருப்பு தொடருகின்றது

s suresh said...

வீடு கட்டிய கதை சுவாரஸ்யம்! தொடர்கிறேன்! நன்றி!

புலோலியூர் கரன் said...

கதையாக கவிதை
கவிதைக்குள் கதை ..

எப்படி சொல்ல அருமை....

த.ம 7

அப்பாதுரை said...

மீண்டும் பதிவெழுத வந்தமைக்கு நன்றி. வாழ்த்துக்கள்.
அடுத்த பதிவுக்குக் காத்திருக்கிறேன்.

சிவகுமாரன் said...

சட்டென யாரோ மண்டையில்
தடி கொண்டுதாக்கியது போல இருந்தது.-- எனக்கும்.
சொந்தமாக இடம் கூட இல்லை. பிறகெங்கே வீடு கட்டுவது. - என் மகனுக்கு பெண் தேடுவது ?

கீதமஞ்சரி said...

பெண் பார்க்கப்போன இடத்தில் குளியலறைக் கதவு சரியில்லை என்ற காரணத்தால் ஒரு திருமணப்பேச்சு நின்றுவிடக் கேட்டிருக்கிறேன். பையனின் தாயார் சொன்னதாவது... என் பிள்ளை மாமனார் வீட்டில் தங்கும் நாட்களில் அவன் சங்கடப்படும்படியான நிலை வரக்கூடாது.

ஹூம்... சொந்த வீடு என்பது இப்போது ஒரு அத்தியாவசியத் தேவையாகிவிட்ட நிலையில் இது ஒரு அவசியப்பதிவுதான். பலருக்கும் உங்கள் அனுபவம் பயன்படும். தொடருங்கள் ரமணி சார்.

நிலாமகள் said...

அதனால் தான் வீட்டைக் கட்டிப் பார்; (பின்) கல்யாணம் பண்ணிப் பார் என்றார்களோ... @ கீதா...குளியலறைக் கதவு கூட திருமணத் தடையா???!!!

இராஜராஜேஸ்வரி said...

ஏதோ அசரீரியின் வாக்காக எடுத்துக்
-கொண்டு உடன் வீடு கட்டது துவங்கிவிட்டேன்.

அனுபவப் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்ல சுவையான விறுவிறுப்புடன் கூடிய துவக்கம். பாராட்டுக்கள். தொடருங்கள். நானும் தொடர்வேன்.

T.N.MURALIDHARAN said...

தங்களின் தனிப்பாணியிலான நடையில் கதையின்(அனுபவங்கள்) முதல் பகுதி சிறப்பான தொடக்கம். ரசிக்க காத்திருக்கிறோம்.

கோவை2தில்லி said...

முள் காடால் பிரச்சனையா? சுவாரசியமாக செல்கிறது. சொந்த வீடு என்பது எல்லோருக்கும் உண்டான விருப்பம் தான். ஆனால் அதனால் திருமணத் தடையா!!!!!

Ramani S said...

அம்பாளடியாள் //
.
கதை சுவாரசியமாக உள்ளது மேலும் என்ன நிகழ்ந்தது எனஅறியும் ஆவலைத் தூண்டுகின்றது விரைந்து எழுதுங்கள் ஐயா வாழ்த்துக்கள் சிறப்பான முடிவும் கிட்டிய கதையாக அமையட்டும்


!தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

Ramani S said...

அமைதிச்சாரல்//

சுவாரஸ்யமான ஆரம்பம்..//

!தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

Ramani S said...

Ranjani Narayanan //

கவிதையைத் தேடி வந்த எனக்கு கதை வியப்பைக் கொடுத்தது.//

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

Ramani S said...

கே. பி. ஜனா...//

தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

Ramani S said...

r.v.saravanan //

அருமையான தொடக்கம் சார் //

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/Ramani S said...

உஷா அன்பரசு //

கதை சுவாரஸ்யமாக இருக்கிறது
தொடரும் என்று முடித்து விட்டீர்களே..! இந்த கதை மூலமா நல்ல மேசேஜை தர போறிங்கன்னு புரியுது.. விரைவில் தொடருங்க ஐயா..//

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/


Ramani S said...

மாதேவி //

கதைதொடக்கம் அருமை. படிக்கும் ஆவலை தூண்டுகிறது./

/தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/

Ramani S said...

Avargal Unmaigal //

கதை சுவாரசியமாக உள்ளது//

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/

Ramani S said...

திண்டுக்கல் தனபாலன்
.
சுவாரஸ்யமான ஆரம்பம்... தொடர்கிறேன்..//.

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/

Ramani S said...

கவியாழி கண்ணதாசன் //

இந்தப் பதிவு என் மண்டையில் ஆணி அடித்துவிட்டது நானும் யோசிக்கிறேன்//

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/

Ramani S said...

கோமதி அரசு //

நீங்கள் சொல்வது உண்மை. நிறைய பேர் இப்படி சொல்லி கேட்டு இருக்கிறேன்.
தொடர்கிறேன்.//

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/Post a Comment