Monday, April 1, 2013

உள்ளும் புறமும் (3 )

தூர  த்தில் இருந்ததாலா அல்லது முதல் குரல்
அப்படி இருந்தால்தான் பயமிருக்கும் என நினைத்து
மிரட்டல் தொனியில் பேசினானா எனத்
தெரியவில்லை கொஞ்சம் அருகில் வந்ததும்
"யார் சார் நீங்க எங்கே இந்தப் பக்கம் போறீங்க "
என்றான் குரலில் கொஞ்சம் பணிவு கூட்டி.

அவன் இந்த குட்டிப் பாண்டிச்சேரிக்கு ஆதரவாளனா
அல்லது எதிர்ப்பாளனா எனத் தெரியவில்லை
ஆயினும் இவனை விட்டாலும் இந்தப் பகுதி
ஏன் இப்படி ஆனது என மிகச் சரியாக
தெரிந்து கொள்ள வாய்ப்பில்லை என்பதால்
இவனிடன் கொஞ்சம் மனம் திறந்தே பேசிப் போகலாம்
என நினைத்து அந்த சிலையின் திட்டில்
அமரப் போனேன்

சட்டென பதறிய அவன் " அங்கே உட்காராதீர்கள்
நாங்கள் விளக்கேற்றி பொங்கல்  வைக்குமிடம்
இந்தத் திண்டில் உட்காருங்கள் " என பக்கத்தில்
இருந்த பட்டியக் கல்லைக் காட்டினான்

நானும் அந்தச் சூழலைப் புரிந்து கொண்டு
அந்தத் திட்டில் இருந்த திரு நீரை எடுத்து
நெற்றியில் பூசிக் கொண்டு அந்த தலைவரின்
சிலைக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு உட்கார்ந்தேன்
அவனும் எனக்கு அடுத்த கல்லில் அமர்ந்தபடி
"இப்போ சொல்லுங்க " என்றான்
அவனுக்கும் கொஞ்ச நேரம் பொழுது போக
ஒரு நபர் கிடைத்த திருப்தி எனப் புரிந்து கொண்டேன்

நான் பின் எனது சொந்த ஊர், வேலை பார்க்கும் இடம்.
இங்கு இடம் வாங்கியது,வீடு கட்டியது, இப்போது
இந்தச் சூழலைப் பார்த்ததும் ஏன் வீடு கட்டினோம் என
சங்கடப்படுவது என அனைத்தையும் விளக்கமாகச்
சொல்லிஅவன் முகத்தைப் பார்த்தேன்

அவன் எந்த விதக் குழப்பமும் இல்லாமல் சட்டென
"அவசரப்பட்டு தப்பு பண்ணிடீங்களே சார்.
இது  ரொம்ப மோசமான ஏரியா சார்.
அடிதடி வெட்டுக் குத்து பொம்பளை சமாச்சாரம்
குடி,திருட்டுத்தனம் எல்லாம் இங்கே சாதாரணம் சார்
இன்னும் குறஞ்சது ஐந்து பத்து வருஷத்துக்கு இந்த
ஏரியா முன்னேறுவது ரொம்பக் கஷ்டம் சார் "என்றான்

இவனிடம் பேசப்  பேசப் பேச எவ்வளவு பெரிய
முட்டாள்தனம் செய்து விட்டோம் எனப் பட்டது
இவனிடம் பேசாமல் போயிருந்தால் கூட கொஞ்சம்
நம்பிக்கை இழக்காமல் இருந்திருப்போனோ எனப் பட்டது

(தொடரும் )


47 comments:

கவியாழி கண்ணதாசன் said...

தொடருங்கள் படிக்கிறோம்

வை.கோபாலகிருஷ்ணன் said...

//"அவசரப்பட்டு தப்பு பண்ணிடீங்களே சார்.
இது ரொம்ப மோசமான ஏரியா சார்.
அடிதடி வெட்டுக் குத்து பொம்பளை சமாச்சாரம்
குடி,திருட்டுத்தனம் எல்லாம் இங்கே சாதாரணம் சார்
இன்னும் குறஞ்சது ஐந்து பத்து வருஷத்துக்கு இந்த
ஏரியா முன்னேறுவது ரொம்பக் கஷ்டம் சார் "என்றான்//

வீடு கட்டத்தான் அவசரப்பட்டு தப்புப்பண்ணிட்டீங்க.

”தொடரும்” போடவும் அவசரமா?

அப்புறம் என்ன ஆச்சு? என தெரிந்து கொள்ளாவிட்டால் மண்டையே வெடித்திடும் போல் உள்ளது.

தொடருங்கள், பாராட்டுக்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

எங்களுக்கும் பயமாகத்தான் இருக்கு...

அடுத்தது அறிய ஆவல்...

கோமதி அரசு said...

அவன் இந்த குட்டிப் பாண்டிச்சேரிக்கு ஆதரவாளனா
அல்லது எதிர்ப்பாளனா எனத் தெரியவில்லை//

இப்போதும் அவன் யார் என்று தெரியவில்லை.
அடுத்து வரும் பதிவில் தெரிந்துவிடும் என நினைக்கிறேன்.

Avargal Unmaigal said...

தொடருங்கள் படிக்கிறோம்

G.M Balasubramaniam said...


இண்டெரெஸ்டிங்...! தொடர்கிறேன்.

T.N.MURALIDHARAN said...

எங்களையும் சேத்து பயமுறுத்தறீங்களே
கலக்குங்க சார்

அப்பாதுரை said...

விறுவிறுப்பும் சுவாரசியமும் கூடிக் கொண்டே வருகிறது.

அப்பாதுரை said...

குட்டிப் பாண்டிச்சேரி - அசல் பெயர் தானா? போன பதிவிலேயே கேட்க நினைச்சேன். குட்டில சிலேடை எதுவும் இல்லையே?

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/04/blog-post_2.html) சென்று பார்க்கவும்... நன்றி...

புலவர் இராமாநுசம் said...

வந்தேன் ஐயா!

வேடந்தாங்கல் - கருண் said...

தொடர் விறுவிறுப்பாக...

rajalakshmi paramasivam said...

இன்னும் அதே ஏரியாவில் தான் இருக்கிறீர்களா?

உஷா அன்பரசு said...

ஆனாலும் அப்படி இருந்த ஏரியா இரண்டு வருடங்களுக்குள்ளாகவே மாறி விட்டிருக்கும் என்று நம்புகிறேன்.. அன்னிக்கு பொட்டல் காடா இருந்த பகுதி இன்னிக்கு நில மதிப்பீடு எங்கியோ போகிற அளவுக்கு ஆகியிருக்குதானே? துணிவே துணை.. தொடருங்க.. விறு விறுப்பா இருக்கு.

கோவை2தில்லி said...

விறுவிறுப்பு பகுதிக்குப் பகுதி கூடுகிறது.....

அப்புறம் என்ன தான் பண்ணினீங்க? தெரிந்து கொள்ள ஆவலுடன்...

அமைதிச்சாரல் said...

விறுவிறுப்பாப் போகுது.. அடுத்தது நடந்தது என்ன?

புலோலியூர் கரன் said...

முழுதும் எழுத உங்களுக்கு நேரம் இருந்ததா இல்லையா என்று தெரியவில்லை நமக்கோ பொறுமை இல்லை என்பது மட்டும் இந்த பதிவில் தெளிவாகிறது........ வேறு வழி காத்திருக்கிறோம்.. :)

Ramani S said...

கவியாழி கண்ணதாசன் //

தங்கள் முதல் வரவுக்கும் வாக்கிற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani S said...

வை.கோபாலகிருஷ்ணன் //

தங்கள் கதைகளைத் தொடர்ந்து படித்த
ஆர்வத்தில்தான் நானும் கதை எழுத
ஆசைப்பட்டு எழுதுகிறேன்
(கான மயிலாட பார்த்திருந்த வான்கோழி)
குறிப்பாக உப்புச் சீடை கதையில் இருந்த
நிதானத் தொனி என்னை மிகவும் கவர்ந்தது
சரியாகச் செய்திருக்கிறேனா என முடிவில் நீங்கள்தான்
சான்றளிக்க வேண்டும்.வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Ramani S said...

திண்டுக்கல் தனபாலன் //

தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி


Ramani S said...

கோமதி அரசு //

இப்போதும் அவன் யார் என்று தெரியவில்லை.
அடுத்து வரும் பதிவில் தெரிந்துவிடும் என நினைக்கிறேன்./

/தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி


Ramani S said...

Avargal Unmaigal //

/தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ramani S said...

G.M Balasubramaniam //

இண்டெரெஸ்டிங்...! தொடர்கிறேன்./

தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//


பூந்தளிர் said...

தொடர் சுவாரசியமாகப்போகுது. நல்லா இருக்கு.

Ramani S said...

அப்பாதுரை //

விறுவிறுப்பும் சுவாரசியமும் கூடிக் கொண்டே வருகிறது.//

தங்கள் வரவும் வாழ்த்தும் அதிக உற்சாகமளிக்கிறது
காப்பாற்ற முயற்சிக்கிறேன்

Ramani S said...

அப்பாதுரை //

குட்டிப் பாண்டிச்சேரி - அசல் பெயர் தானா? போன பதிவிலேயே கேட்க நினைச்சேன். குட்டில சிலேடை எதுவும் இல்லையே?/

/குடிக்க வருகிற கூட்டத்தைவைத்து
பஸ் கண்டக்டர்கள் வைத்த பெயர்
பிரபலமாகிப் போனது.வேறு பொருள் இல்லை
வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Ramani S said...

திண்டுக்கல் தனபாலன் //

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...//

தகவலுக்கு மிக்க நன்றி
தாங்கள் குறிப்பிட்டுத்தான் பதிவைப் பார்த்தேன்
இந்தக் கரண்ட் கட் நேரத்திலும் உங்களால் எப்படி
அத்தனைப் பதிவுகளையும் படிக்க முடிகிறது
பின்னூட்டமிடுகிறது ரகசியத்தைச் சொன்னால்
எல்லோருக்கும் வசதியாக இருக்கும்
வாழ்த்துக்களுடன்'''

Ramani S said...

புலவர் இராமாநுசம் //


தங்கள் வரவும் வாழ்த்தும் அதிக உற்சாகமளிக்கிறது
காப்பாற்ற முயற்சிக்கிறேன்


Ramani S said...

வேடந்தாங்கல் - கருண் //

தொடர் விறுவிறுப்பாக..//

தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

மாதேவி said...

இப்படி ஒரு போடு போட்டு விட்டானே ...அடுத்து தொடர்கின்றோம்.

குட்டன் said...

இன்றுதான் படித்தேன்.தொடர்ந்து கட்டாயம் படிக்கத்தூண்டி விட்டீர்கள் ரமணி சார்!

நிலாமகள் said...

ஐயோ பாவம்!

Sethuraman Anandakrishnan said...

aduththathu enna?kasappa inippa?ethirnokkum....

Ranjani Narayanan said...

சில நபர்கள் இப்படித்தான். நம்மிடம் இருக்கும் கொஞ்சநஞ்ச தன்னம்பிக்கையையும் போக்கி விடுவார்கள்.
கவலைப் படாதீர்கள்; நாங்கள் எல்லோரும் கூடவே வருகிறோம்.
ஒரு த்ரில்லரைப் படிப்பதுபோல இருக்கிறது!

Ramani S said...

rajalakshmi paramasivam //
.
இன்னும் அதே ஏரியாவில் தான் இருக்கிறீர்களா?'

அந்த வீட்டில்தான் இருக்கிறோம்
தொடரின் முடிவு வித்தியாசமாக இருக்கும்
என நினைக்கிறேன்
'

Ramani S said...

உஷா அன்பரசு //

தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

Ramani S said...

கோவை2தில்லி //

.
விறுவிறுப்பு பகுதிக்குப் பகுதி கூடுகிறது.//

தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

Ramani S said...

அமைதிச்சாரல் //

விறுவிறுப்பாப் போகுது.. அடுத்தது நடந்தது என்ன?

தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//


Ramani S said...

புலோலியூர் கரன் //

தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

Ramani S said...

பூந்தளிர் //

தொடர் சுவாரசியமாகப்போகுது. நல்லா இருக்கு.//

தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

Ramani S said...

மாதேவி //
.
இப்படி ஒரு போடு போட்டு விட்டானே ...அடுத்து தொடர்கின்றோம்.//

தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/

Ramani S said...

குட்டன் //

இன்றுதான் படித்தேன்.தொடர்ந்து கட்டாயம் படிக்கத்தூண்டி விட்டீர்கள் ரமணி சார்!/

/தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/


Ramani S said...

நிலாமகள் ///

தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/

Ramani S said...

Sethuraman Anandakrishnan ..
.
aduththathu enna?kasappa inippa?ethirnokkum..//

தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/


Ramani S said...

Ranjani Narayanan //.
சில நபர்கள் இப்படித்தான். நம்மிடம் இருக்கும் கொஞ்சநஞ்ச தன்னம்பிக்கையையும் போக்கி விடுவார்கள்.
கவலைப் படாதீர்கள்; நாங்கள் எல்லோரும் கூடவே வருகிறோம்.
ஒரு த்ரில்லரைப் படிப்பதுபோல இருக்கிறது!//

தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/

Sasi Kala said...

முன்பே விசாரித்திருக்கலாம் போல..

Ramani S said...

Sasi Kala //

தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/

Post a Comment