Friday, March 7, 2014

சமையலறைச் சுதந்திரம் சமூகத்தில் என்று ?

சமயலறையிலும் படுக்கையறையிலும்
சுதந்திரம் கொடுத்து சுகம் அனுபவிப்பவர்கள்
சமூக வாழ்விலும் கொடுத்து
நம்மையும் சுதந்திர வாசம்
என்று அறியச் செய்யப்போகிறார்கள்

பெண் சுதந்திரம் என்பது
கணவன் மனைவிக்குக் கொடுப்பதல்ல
ஒரு தகப்பன் தன் மகளுக்குக் கொடுப்பதுபோல் எனும்
பெரியாரின் வார்த்தைக்கான முழுமையானபொருள்
இந்த சமூகத்திற்கு என்று புரிந்துதொலைக்கப் போகிறது ?

அழகிய வயதுப் பெண்
உடல் முழுதும் நகையணிந்து
நள்ளிரவில் சுதந்திரமாக நடமாடக் கூடிய
சூழல் உள்ள நாடே ராமராஜ்ஜியம் என்கிற
காந்தியின் கனவு என்று நிஜமாகித் தொலைக்கும் ?

மொத்தத்தில்
அன்னியரிடமிருந்து கூட
சுதந்திரம் பெற்றிவிட்ட நமக்கு
இந்தச் சமூகத்திடம் இருந்து
என்று அது கிடைக்கப் போகிறது ?

அதுவரை இந்த மகளிர் தினம் என்பது
நிச்சயம் கொண்டாட்டத்திற்கான நாள் இல்லை
நம்மைக் கூர்படுத்திக் கொள்ளும் நாள் எனபதில்
அனைவரும் உறுதியாய் இருப்போம்

ஒரு நீண்ட நெடிய போராட்டத்திற்கு
நம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளும் நாள் என்பதில்
நிச்சயம் கவனமாக இருப்போம்

18 comments:

Unknown said...

#காந்தியின் கனவு என்று நினைவாகித் தொலைக்கும் ?#
இன்றும் நினைவாகத் தானே இருக்கிறது ?என்று நனவாகித் தொலைக்கும் என்று கேளுங்கள் !
த ம 2

Yaathoramani.blogspot.com said...

Bagawanjee KA //

முதல் வரவுக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
நல்வாழ்த்துக்கள் (தங்கள் பின்னூட்டம் கண்டு
வார்த்தைக்கு கொஞ்சம் அழுத்தம் கொடுத்திருக்கிறேன்
சரியா ? )

கவிதை வீதி... // சௌந்தர் // said...

16 திசைகளில் இருந்து தாக்குதல்களை சந்திப்பவர்கள் பெண்கள்....

எத்தனை யுகங்கள் வந்தாலும் இவர்களுக்கு முழுமையான சுதந்திரத்தை நம்மால் கொடுத்துவிட முடியாது...


பெண்களுக்கு ஆதரவாக இருப்போம்...

உலக மகளிர்களுக்கு என் வாழ்த்துக்கள்...

ஸ்ரீராம். said...

நிச்சயம் கவனமாக இருப்போம்.

திண்டுக்கல் தனபாலன் said...

/// நம்மைக் கூர்படுத்திக் கொள்ளும் நாள் எனபதில்... ///

அருமை ஐயா...

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

//இந்த மகளிர் தினம் என்பது
நிச்சயம் கொண்டாட்டத்திற்கான நாள் இல்லை
நம்மைக் கூர்படுத்திக் கொள்ளும் நாள் // உண்மைதான் ஐயா...அருமையான கவிதைக்கு நன்றி!

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

த.ம.6

Thulasidharan V Thillaiakathu said...

மொத்தத்தில்
அன்னியரிடமிருந்து கூட
சுதந்திரம் பெற்றிவிட்ட நமக்கு
இந்தச் சமூகத்திடம் இருந்து
என்று அது கிடைக்கப் போகிறது ?

காந்தியின் கனவு நிறைவேறும் என்ற நம்பிக்கை இல்லையே!

நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்கிறதா? ஆச்சரியம்தான்! பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், கொலையும், பட்டினியும் இருக்கும் வரை சுதந்திரம்??!!! சுதந்திரமே உன் விலை என்ன?!

அருமையான பகிர்வு!

த.ம.

அம்பாளடியாள் said...

சிறப்பான நற் கருத்திற்குத் தலை வணங்குகின்றேன் ஐயா .மேலும் தொடர என் இனிய வாழ்த்துக்கள் .

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

கொண்டாட்டத்திற்கான நாள் அல்ல, கூர்படுத்திக்கொள்ள என்ற தங்களின் கருத்து பாராட்டத்தக்கது. அந்த நிலையை நாம் எப்போது எட்டப்போகிறோம் என்பது கேள்விக்குறியே.

”தளிர் சுரேஷ்” said...

அருமையான கவிதை! இனிய பெண்கள் தின வாழ்த்துக்கள்! நல்லதொரு நிலை விரைவில் உருவாகட்டும்!

vimalanperali said...

தினங்களை கொண்டாடுகிற அளவிற்கு நாம் மகளிரை கொண்டாடுவதில்லை.தவிர தினங்களின் கொண்டாட்டக்கூச்சலில் மறைக்கபட்டுவிடுகிறதாய் அவர்கள் சங்கடங்கள்/+

கரந்தை ஜெயக்குமார் said...

காந்தியின் கனவு
இன்றும்
கனவாகவே இருக்கிறது

த.ம.9

kingraj said...

கொண்டாட்டத்திற்கான நாள் இல்லை
நம்மைக் கூர்படுத்திக் கொள்ளும் நாள் ;;;;மிக அருமையான சிந்திக்க வேண்டிய வரிகள் ஐயா.

தி.தமிழ் இளங்கோ said...

இனி ஒரு சுதந்திரம் பெண்களுக்கு வேண்டும்!

Yarlpavanan said...

"பெண் சுதந்திரம் என்பது
கணவன் மனைவிக்குக் கொடுப்பதல்ல
ஒரு தகப்பன்
தன் மகளுக்குக் கொடுப்பது போல் எனும்
பெரியாரின் வார்த்தைக்கான
முழுமையான பொருள்
இந்த சமூகத்திற்கு
என்று புரிந்துதொலைக்கப் போகிறது?" என்ற
கேள்வி
நன்றாகச் சிந்திக்க வைக்கிறதே!

மாதேவி said...

அருமையான பகிர்வு.

வாழ்த்துக்கள் .

Maria Regan Jonse said...

பெண்ணடிமைத்தனம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது.

Post a Comment