Friday, June 13, 2014

காரணம் மறந்த காரியங்கள்...

நம் நடன மகிழ்வுக்கு
ஒத்திசைவாய் இருக்குமென
நாம் கட்டிக் கொள்ளும்
காலச் சதங்கை
அதன் போக்கில் போவோமெனில்
நம்மை கணந்தோரும் ஆடவிட்டு
நிச்சயம் மூச்சிறைக்க வைக்கும்

சுமை இறக்கி இளைப்பாற
உதவியாய் இருக்குமென
நாம் சார்ந்திருக்கும்
உறவுச் சுமைகல்
சற்று அசந்துச் சாய்வோமெனில்
அதுவே கனத்தச் சுமையாகி
நம்மைக் கதற கதற வைக்கும்

அக்கரைப் போய்ச்சேர
ஆதரவாய் இருக்குமென
நாம் விரும்பி ஏறிய
நட்புப் படகு
துடிப்பின் விசையை இழந்தோமெனில்
நம் திசையை அது தீர்மானித்து
நம்மை அலைக்கழிக்க வைத்துவிடும்

நம்பிக்கை வளர்க்கவென்று
அவசியத் தேவையென
நாம் விரும்பித் தொடரும்
சம்பிரதாயங்கள் கூட
வெற்றுச் சடங்குகளாகிப் போயின்
அவநம்பிக்கையைப் பெருகவிட்டு
நம்மைஅது அற்பப் பிறவியாக்கிவிடும்

சொல்வதற்கு ஏதுமிருந்தும்
சொல்லத்தான் வேண்டுமென
நாளும் நச்சரிக்கும்
படைப்பது கூட
பயனற்ற கரு கொண்டதாயின்
நம் படைப்பைக் கூளமாக்கி
நம் மதிப்பைச் சூறையாடிப்போகும்

25 comments:

ஸ்ரீராம். said...

அருமை.

ராஜி said...

நம்பிக்கை வளர்க்கவென்று
அவசியத் தேவையென
நாம் விரும்பித் தொடரும்
சம்பிரதாயங்கள் கூட
வெற்றுச் சடங்குகளாகிப் போயின்
>>
நிதர்சன உண்மைப்பா!

அம்பாளடியாள் said...

அக்கரைப் போய்ச்சேர
ஆதரவாய் இருக்குமென
நாம் விரும்பி ஏறிய
நட்புப் படகு
துடிப்பின் விசையை இழந்தோமெனில்
நம் திசையை அது தீர்மானித்து
நம்மை அலைக்கழிக்க வைத்துவிடும்

உண்மையை மிகச் சரியாக உணர்த்தி நிற்கும் சிறந்த படைப்பிற்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ரமணி ஐயா !

G.M Balasubramaniam said...

பாதியைச் சொல்லி மீதியை கற்பனைக்கு விடும் பாங்கு ரசிக்க வைக்கிறது

அப்பாதுரை said...

பின்னூட்டமும் அவ்வாறே என்பதால் பாராட்டுக்களுடன்..

வை.கோபாலகிருஷ்ணன் said...
This comment has been removed by the author.
தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

ஒவ்வொன்றும் உண்மை, அருமை ஐயா.
த.ம.+1

வை.கோபாலகிருஷ்ணன் said...

//பயனற்ற கரு கொண்டதாயின். நம் படைப்பைக் கூளமாக்கி நம் மதிப்பைச் சூறையாடிப்போகும்//

அடடா, இது தெரியாமல் இன்று பலரின் மதிப்புகள் ஏற்கனவே சூறையாடிப்போகிவிட்டனவே !

இனியாவது அவர்கள் சிந்தித்து எழுதட்டும். இல்லை எழுதாமலேயே போகட்டும்.

நல்லதொரு முக்கியமான விஷயத்தை நயம்படச் சொல்லி முடித்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மைகள் ஐயா...

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

தமிழ்மணம் 7

இற்றை நிலையை இயம்பும் கவிக்கூற்றில்
உற்றேன் உளத்துள் உடைப்பு!

இராஜராஜேஸ்வரி said...

பயனற்ற கரு கொண்டதாயின்
படைப்பே வீண்தானே..!

”தளிர் சுரேஷ்” said...

மிக அருமையான கவிதை! அனைத்து உதாரணங்களும் உண்மைகள்! சிறப்பான படைப்பு! நன்றி!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தாங்கள் சொன்ன நிலையில் நட்புப் படகு
ஒன்று நம்மை அலைக்கழிக்க வைத்துவிட்டதை அனுபவத்தில் கண்டுள்ளேன். படித்தபின் மனதிற்கு ஆறுதலாக இருந்தது.

Kamala Hariharan said...

சுமை இறக்கி இளைப்பாறும் சுமைகல் சற்று அசந்து சாய்ந்தால் அதுவே பெருஞ்சுமையாகும்! அர்த்தமுள்ள, உண்மையான வரிகள். படைப்பது பயனற்ற கருவாயின் படைப்புகள் ௬ளமாகி நம் மதிப்பை சூறையாடி போகும்! எச்சரிக்கையான வரிகள்.சிறந்த காரணங்களுடன் ௬டிய கவிதை! நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.

Kasthuri Rengan said...

வாழ்வின் அனுபவச் சாறு
ஒவ்வொரு வரியிலும்
அருமை அய்யா
http://www.malartharu.org/2014/06/rural-children.html

Kasthuri Rengan said...

த.ம எட்டு..
http://www.malartharu.org/2014/01/gold-vein.html

Yarlpavanan said...

"படைப்பது கூட
பயனற்ற கரு கொண்டதாயின்
நம் படைப்பைக் கூளமாக்கி
நம் மதிப்பைச் சூறையாடிப்போகும்" என்பது
சிறந்த வழிகாட்டல்

எனது புதிய பதிவுகளைப் பார்வையிட
visit: http://ypvn.0hna.com/

மகிழ்நிறை said...

படைப்பாளிகள் படிக்கவேண்டிய அரிச்சுவடி!
அருமை சார்!

கரந்தை ஜெயக்குமார் said...

//சுமை இறக்கி இளைப்பாற
உதவியாய் இருக்குமென
நாம் சார்ந்திருக்கும்
உறவுச் சுமைகல்
சற்று அசந்துச் சாய்வோமெனில்
அதுவே கனத்தச் சுமையாகி
நம்மைக் கதற கதற வைக்கும்///
இன்றைய வாழ்வியல் யதார்த்தம் ஐயா
நன்றி
தம 9

அம்பாளடியாள் said...

தந்தையர் தின வாழ்த்துக்கள் ரமணி ஐயா !

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
ஒவ்வாரு வரியிலும் சொல்லிய கருத்துக்கள் மனித வாழ்வியலுடன் பின்னியுள்ளது.. மிக அருமையாக கருத்தை சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா.

இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள் ஐயா.

த.ம 10வது வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

KILLERGEE Devakottai said...

அற்புதமாக உள்ளது ஐயா
www.killergee.blogspot.com

அருணா செல்வம் said...

எப்படித்தான் யோசிக்கிறீர்களோ.....!!!!

அருமை. அருமை.
வணங்குகிறேன் இரமணி ஐயா.

vimalanperali said...

பயனற்ற கருக்கள் கருக்கொள்ளும் உருவைப்பொறுத்தது,மனோநிலையையும் பொறுத்தது/

வெங்கட் நாகராஜ் said...

பயனற்ற கரு கொண்டதாயின் படைப்புகளும் கூளம்....

உண்மை தான் ரமணி ஜி.

Post a Comment