Sunday, June 22, 2014

சிரிக்கத் தெரிந்த பிறவி

சிரிக்கத் தெரிந்த பிறவி உலகில்
மனிதப் பிறவியே-இதை
அறிந்தும் இங்கு சிரிக்க மறுத்தல்
பெரிய கொடுமையே
இதழ்கள் வலிக்கச் சிரித்து விட்டால்
இன்பம் இன்பமே-எதையும்
இதயம் தன்னில் மூடி வைத்தால்
என்றும் துன்பமே

வளர்ந்த நிலவு வானில் இருந்து
மெல்லச் சிரிக்குமே-அதன்
அழகு சிரிப்பில் மயங்கி மலரும்
மணந்து சிரிக்குமே-அதன்
மணத்தில் மயங்கி சோலை யெல்லாம்
சொர்க்க மாகுமே-அந்த
உணர்வை உணர்ந்த மனிதர் மனத்தில்
மகிழ்வு பூக்குமே

குழந்தை மனதில் தெய்வம் இருந்து
சிரிப்பைத் துவங்குமே-அது
குழந்தை இதழில் மெல்ல வழிந்து
இல்லம் நிறைக்குமே-அந்த
அழகை உணர துன்பம் எல்லாம்
அழிந்து ஒழியுமே-இந்த
உலகே உண்மை சொர்க்க மென்று
புரிய லாகுமே

விழிகள் இரண்டும் காண வென்றே
அறிந்தி ருக்கிறோம்-கொண்ட
செவிகள் இரண்டும் கேட்க வென்றே
புரிந்தி ருக்கிறோம்-இனி
இதழ்கள் இரண்டும் சிரிக்க வென்றே
உணர்ந்து கொள்ளுவோம்-இதை
உலகு அறியச் சொல்லி நாமும்
மகிழ்ச்சி  கொள்ளுவோம்

31 comments:

இராஜராஜேஸ்வரி said...

சிரிக்கச்சிரிக்கச்சொல்லிய மகிழ்ச்சிப்பகிர்வுகள் அருமை..பாராட்டுக்கள்..!

வை.கோபாலகிருஷ்ணன் said...

அது
குழந்தை இதழில் மெல்ல வழிந்து
இல்லம் நிறைக்குமே-அந்த
அழகை உணர துன்பம் எல்லாம்
அழிந்து ஒழியுமே-//

குழந்தையாய்ச் சிரித்துப் படித்து மகிழ்ந்தேன் . ;))))) பாராட்டுக்கள்.

”தளிர் சுரேஷ்” said...

அருமை! சிரித்தால் மனம் லேசாகிறது! பாரம் குறைகிறது! வாழ்த்துக்கள்!

Kasthuri Rengan said...

tha.ma 2

Kasthuri Rengan said...

குழந்தைகள் சிலர் கூட சிரிப்பதில்லை இப்போது ...
சிரிப்போம்...
நன்றி
www.malartharu.org

Avargal Unmaigal said...

அருமை..பாராட்டுக்கள்..!

Unknown said...

#இதழ்கள் இரண்டும் சிரிக்க வென்றே
உணர்ந்து கொள்ளுவோம்#
நன்றாக சொன்னீர்கள் ..கமல் அவர்களும் இதனை உணர்ந்துதான் தன் படங்களில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் தருகிறார் (இதழ்களால் வேறொரு காரியமும் செய்வார் ,அது வேறு விஷயம் !)
த ம 3






ஸ்ரீராம். said...

மலர்ந்த முகமே வாழ்க்கையின் இன்பம்!

கோமதி அரசு said...

குழந்தை மனதில் தெய்வம் இருந்து
சிரிப்பைத் துவங்குமே-அது
குழந்தை இதழில் மெல்ல வழிந்து
இல்லம் நிறைக்குமே-அந்த
அழகை உணர துன்பம் எல்லாம்
அழிந்து ஒழியுமே-இந்த
உலகே உண்மை சொர்க்க மென்று
புரிய லாகுமே//

குழந்தை போல் கள்ளமில்லாமல் சிரித்து மகிழ்வது நல்லதே!
கவிதை அருமை.

Anonymous said...

Kavithai nanru.
சிரிப்பு உயர் மனித தரம்
செரிக்கும் துன்பம் இதனால்
தரிக்கும் ஆனந்தம் வெகுவாய்
விரிக்கும் அமைதி தெளிவாய்.
Vetha.Elanagthilakam.

kingraj said...

சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே !

ராமலக்ஷ்மி said...

சிரிப்பின் அருமையை சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

தி.தமிழ் இளங்கோ said...

நீங்கள் சொன்னபடி
//இதழ்கள் இரண்டும் சிரிக்க வென்றே
உணர்ந்து கொள்ளுவோம்//
அய்யா!
த.ம.6

RajalakshmiParamasivam said...

இனி சிரிப்பதற்கு காசு கேட்பார்கள் என்று நினைக்கிறேன் . சமுதாயம் அப்படித்தான் போய் கொண்டிருக்கிறது.

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

மிக அருமை ரமணி ஐயா.
நிலவும் குழந்தையும் எவ்வளவு மகிழ்ச்சியைப் பரப்புகின்றனர்..இதழ்கள் இருப்பது சிரிப்பதற்கே,- உண்மை..சிரிப்போம், சிரிக்க வைப்போம்.
நன்றி ஐயா.
த.ம.6

Iniya said...

ஆமாம் வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்பார்கள். உண்மை தான் எங்கே முடிகிறது.
பொம்பிளை சிரிச்சா போச்சு போயிலை விரிச்சா போச்சு என்றல்லவா சொல்கிறார்கள்.
அருமையான பதிவு நன்றி ! வாழ்த்துக்கள் ....!

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
கவிஞர் ஐயா

கற்பனையும் சொல்வீச்சும் கவித்துவத்தில் நின்று சம்சாரம் செய்கிறது எளிய கருப்பொருளை மிக அருமையாக கவித்துவத்தில் சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Anonymous said...

வணக்கம்
ஐயா

த.ம 8வது வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கரந்தை ஜெயக்குமார் said...

வாய்விட்டு சிரித்தால்
நோய்விட்டுப் போகும்
என்பார்கள்
சிரித்திருப்போம்
மகிழ்ந்திருப்போம்
நன்றி ஐயா
தம 9

திண்டுக்கல் தனபாலன் said...

சிரிப்பு - என்றும் சிறப்பு...

இளமதி said...

வணக்கம் ஐயா!

உள்ளத்தின் உணர்வு மகிழ்ச்சி நிரம்பியதாக
இருக்க வேண்டும். அப்போதுதான்
செயல்களும் யாவருக்கும் நன்மை பயக்கும்படியாக அமையும்.
அதன் அடையாளம் இந்தச் சிரிப்பு!
அதைப்பற்றிய தங்கள் கவிதை மிகச் சிறப்பு!

வாழ்த்துக்கள் ஐயா!

Thulasidharan V Thillaiakathu said...

சிரிக்கத் தெரிந்த பிறவி உலகில்
மனிதப் பிறவியே-இதை
அறிந்தும் இங்கு சிரிக்க மறுத்தல்
பெரிய கொடுமையே
இதழ்கள் வலிக்கச் சிரித்து விட்டால்
இன்பம் இன்பமே-எதையும்
இதயம் தன்னில் மூடி வைத்தால்
என்றும் துன்பமே//

இந்த வரிகளே பல அர்த்தங்களைச் சொல்லிவிட்டது! மிக மிக அருமையான கவிதை!

ஒரு புன் சிரிப்பு பல நட்புகளைப் பெற்றுத்தரும்!

A smile is the shortest distance between two people!

A smile is the window on your face to show that your heart is at HOME!

மிகவும் சிறப்பான, நாங்க மிகவும் ரசித்த கவிதை சார்!!!!!!!!

இராய செல்லப்பா said...

இதழ்களுக்கு விதிக்கப்பட்ட இரண்டு காரியங்களில் முதலாவது, சிரிப்பது. உங்கள் கவிதையை படித்தபிறகு இரண்டாவது காரியத்தைச் செய்யத் தோன்றுகிறது.

முனைவர் இரா.குணசீலன் said...

விழிகள் இரண்டும் காண வென்றே
அறிந்தி ருக்கிறோம்-கொண்ட
செவிகள் இரண்டும் கேட்க வென்றே
புரிந்தி ருக்கிறோம்-இனி
இதழ்கள் இரண்டும் சிரிக்க வென்றே
உணர்ந்து கொள்ளுவோம்-இதை
உலகு அறியச் சொல்லி நாமும்
மகிழ்ச்சி கொள்ளுவோம்

அழகாகச் சொன்னீர்கள் நண்பரே.

சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country said...

சிரிப்பைப் பற்றி சிந்திக்கவைக்கும் கவிதை. மிக அழகாக உள்ளது.

ஹ ர ணி said...


குழந்தை மனதில் தெய்வம் இருந்து
சிரிப்பைத் துவங்குமே-அது
குழந்தை இதழில் மெல்ல வழிந்து
இல்லம் நிறைக்குமே

அன்புள்ள ரமணி ஐயா

வணக்கம். ஒரு வழியாக உங்கள் வலைப்பதிவிற்கு மறுபடியும் வந்துவிட்டேன். மேற்கண்ட வரிகள் அற்புதமான வரிகள்.மனதால் உணர்கிறேன். திரும்பததிரும்பச் சொல்வது இதைத்தான் உங்கள் பதிவிற்குள் வரும்போதும் வந்துவிட்டு திரும்பும்போதும் மனம் நிறைவாக உள்ளது. அமைதியான ஒரு மகிழ்ச்சி நிறைகிறது. நன்றிகள்.

சீராளன்.வீ said...

இவ்வாறு அழகாய் சொல்லி இருக்கீங்க அதற்கு கவிதையிலே கருத்திட முடியல்ல ..!

ஒவ்வோர் வரியும் உண்மை சொல்லுதே - அதன்
உள்ளிருக்கும் அர்த்தம் நெஞ்சில் ஊடறுக்குதே
இவ்வழகு வார்த்தைகளில் உணர்ச்சி பொங்குதே -அதை
அள்ளி அள்ளி நாவிலிட்டு ஆசை தீர்க்கிறேன் !

அருமை அருமை
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !
தா ம 14

கீதமஞ்சரி said...

சிரிப்பின் மகத்துவம் உணர்த்தும் அருமையான வரிகள். மற்றவர் மனத்தைப் புண்படுத்தாத வகையில் இதம் தரும் சிரிப்பும், இனியதொரு புன்முறுவலும் என்றும் தவழ்ந்திருக்கும் முகமே அழகின் உச்சம். பாராட்டுகள் ரமணி சார்.

Yarlpavanan said...

"குழந்தை மனதில் தெய்வம் இருந்து
சிரிப்பைத் துவங்குமே" என்ற
உண்மையை வரவேற்கிறேன்!
"சிரிக்கத் தெரிந்த பிறவி
உலகில்
மனிதப் பிறவியே" என்ற
கருத்தும் உண்மையே!
சிறந்த கவிதை

அருணா செல்வம் said...

அருமை அருமை.
கூடவே ஒரு ஜோக் சொல்லி இருந்தால்.....
(நிறைய இதழ்கள் பொய்யாகச் சிரித்துக்கொண்டு தான் இருக்கிறது இரமணி ஐயா.)

வெங்கட் நாகராஜ் said...

அருமை.....

குழந்தையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்....

Post a Comment