அதிகப் பட்சம் உடலை
அஷ்டகோணலாக்குவதன் மூலம்
அல்லது அங்க சேஷ்டைகள் மூலம்
சிரிப்பை வரவழைப்பது ஒரு விதம் என்றால்
மிகச் சிறு அசைவுகளின் மூலம்
அல்லது ஒரு சிறு வார்த்தையின் முலம் அல்லது
ஒரு எழுத்து மாற்றத்தின் மூலம் நம்மை குபீரென
சிரிக்கவைப்பதும் ஒரு தனித்திறன் தான்
அந்த ஏழு நாட்கள் படத்தில் இறுதிக் காட்சியில்
ராஜேஸ் அவர்களை சந்திக்க மாடியின் கீழே
அமர்ந்திருக்கும் பாக்கியராஜ் அவர்கள்
அவருக்கும் முன் இருந்த மேஜையில் இருக்கும்
ஒரு பெண் சிலையை கையில் எடுப்பார்
அதன் முன் புறம் கொஞ்சம் செக்ஸியாக இருக்க
முகம் சுழித்து சட்டென அதன் பின்புறம் திருப்புவார்
அது இன்னும் கூடுதல் செக்ஸியாக இருக்க
சட்டென சிலையை இருப்பிடத்தில் வைப்பார்
சிறு முகச் சுழிப்பு தவிர வசனம் ஏதும் இன்றி
இருக்கும் அந்தக் காட்சிக்குத் தியேட்டரில் எழும்
சிரிப்பலை அடங்க வெகுநேரம் ஆகும்
.இந்தப் படம் பார்த்தவர்களுக்கு நிச்சயம்
இன்று வரை மறக்கமுடியாதக்
காட்சியாகத்தான் இருக்கும்
அடுத்து
காதலிக்க நேரமில்லை படத்தில் ரவிச்சந்திரன்
ஏழை எனத் தெரிய பாலையா அவர்கள் அவரை
மிக மரியாதைக் குறைவாகவே பேசுவார்
மிகப் பெரிய பணக்காரர் போல முத்துராமன் அவர்கள்
தன்னை ஸ்தாபிதம் செய்து கொண்டு தன்னுடைய
மகன் தான் ரவிச்சந்திரன் எனச் சொல்ல
பாலையா அவர்கள் சட்டென் மாறி
ரவிச்சந்திரனை மிக மதிக்கும்படியாக
"அசோகரு உங்க மகரா "என மகனில் வரும்
"ன் "கூட மரியாதைக் குறைவாகப் பேசுவதாகக்
காட்டிவிடும் என மகர் எனச் சொன்ன ஒரு சிறு
வார்த்தை மாற்றம் தியேட்டரில் ஏற்படுத்தும்
மிகப் பெரியசிரிப்பலை ஓய வெகு நேரமாகும்
இப்படி சிறு அசைவும் ஒரு சிறு எழுத்து மாற்றமும்
சிரிப்பை ஏற்படுத்துவது ஒரு வகை என்றால்
ஒரு வார்த்தையை மாற்றி மாற்றிச்
சொல்வதன் மூலமும் மிகப் பெரிய சிரிப்பலையை
உண்டாக்கிவிட முடியுமா எனில்
அது நிச்சயம் முடியும்
சுத்தமாக காது கேட்காத இருவர் ஆதி காட்டிக்
கொள்ளக் கூடாது என உதடின் மூலம் தெரிந்த
ஒரு வார்த்தையை வைத்துக் கொண்டு விளையாடும்
விளையாட்டைப் பாருங்களேன்
முதலாமவர்"
உன் பையன் என்ன மதுரைக்கா போயிருக்கான் ?
இரண்டாமவர்
:
இல்லையே அவன் மதுரைக்குத்தானே போயிருக்கான்
முதலாமவர்:
அதுதானே பார்த்தேன் .நான் கூட அவன் மதுரைக்குத்தான்
போயிருக்கான்னு நினச்சேன்
இதுபோல் நீங்கள் ரசித்த நகைச்சுவைக் காட்சிகளைப்
பகிர்ந்து அனைவரையும் மகிழ்விக்கலாமே
அஷ்டகோணலாக்குவதன் மூலம்
அல்லது அங்க சேஷ்டைகள் மூலம்
சிரிப்பை வரவழைப்பது ஒரு விதம் என்றால்
மிகச் சிறு அசைவுகளின் மூலம்
அல்லது ஒரு சிறு வார்த்தையின் முலம் அல்லது
ஒரு எழுத்து மாற்றத்தின் மூலம் நம்மை குபீரென
சிரிக்கவைப்பதும் ஒரு தனித்திறன் தான்
அந்த ஏழு நாட்கள் படத்தில் இறுதிக் காட்சியில்
ராஜேஸ் அவர்களை சந்திக்க மாடியின் கீழே
அமர்ந்திருக்கும் பாக்கியராஜ் அவர்கள்
அவருக்கும் முன் இருந்த மேஜையில் இருக்கும்
ஒரு பெண் சிலையை கையில் எடுப்பார்
அதன் முன் புறம் கொஞ்சம் செக்ஸியாக இருக்க
முகம் சுழித்து சட்டென அதன் பின்புறம் திருப்புவார்
அது இன்னும் கூடுதல் செக்ஸியாக இருக்க
சட்டென சிலையை இருப்பிடத்தில் வைப்பார்
சிறு முகச் சுழிப்பு தவிர வசனம் ஏதும் இன்றி
இருக்கும் அந்தக் காட்சிக்குத் தியேட்டரில் எழும்
சிரிப்பலை அடங்க வெகுநேரம் ஆகும்
.இந்தப் படம் பார்த்தவர்களுக்கு நிச்சயம்
இன்று வரை மறக்கமுடியாதக்
காட்சியாகத்தான் இருக்கும்
அடுத்து
காதலிக்க நேரமில்லை படத்தில் ரவிச்சந்திரன்
ஏழை எனத் தெரிய பாலையா அவர்கள் அவரை
மிக மரியாதைக் குறைவாகவே பேசுவார்
மிகப் பெரிய பணக்காரர் போல முத்துராமன் அவர்கள்
தன்னை ஸ்தாபிதம் செய்து கொண்டு தன்னுடைய
மகன் தான் ரவிச்சந்திரன் எனச் சொல்ல
பாலையா அவர்கள் சட்டென் மாறி
ரவிச்சந்திரனை மிக மதிக்கும்படியாக
"அசோகரு உங்க மகரா "என மகனில் வரும்
"ன் "கூட மரியாதைக் குறைவாகப் பேசுவதாகக்
காட்டிவிடும் என மகர் எனச் சொன்ன ஒரு சிறு
வார்த்தை மாற்றம் தியேட்டரில் ஏற்படுத்தும்
மிகப் பெரியசிரிப்பலை ஓய வெகு நேரமாகும்
இப்படி சிறு அசைவும் ஒரு சிறு எழுத்து மாற்றமும்
சிரிப்பை ஏற்படுத்துவது ஒரு வகை என்றால்
ஒரு வார்த்தையை மாற்றி மாற்றிச்
சொல்வதன் மூலமும் மிகப் பெரிய சிரிப்பலையை
உண்டாக்கிவிட முடியுமா எனில்
அது நிச்சயம் முடியும்
சுத்தமாக காது கேட்காத இருவர் ஆதி காட்டிக்
கொள்ளக் கூடாது என உதடின் மூலம் தெரிந்த
ஒரு வார்த்தையை வைத்துக் கொண்டு விளையாடும்
விளையாட்டைப் பாருங்களேன்
முதலாமவர்"
உன் பையன் என்ன மதுரைக்கா போயிருக்கான் ?
இரண்டாமவர்
:
இல்லையே அவன் மதுரைக்குத்தானே போயிருக்கான்
முதலாமவர்:
அதுதானே பார்த்தேன் .நான் கூட அவன் மதுரைக்குத்தான்
போயிருக்கான்னு நினச்சேன்
இதுபோல் நீங்கள் ரசித்த நகைச்சுவைக் காட்சிகளைப்
பகிர்ந்து அனைவரையும் மகிழ்விக்கலாமே
15 comments:
சினிமா காட்சிகளான ’அந்த ஏழு நாட்கள்’ பாக்யராஜின் அந்தச்செயலும் + ’காதலிக்க நேரமில்லை’ பாலையாவின் அந்த மகர் என்ற சொல்லும் நானும் வெகுவாக ரஸித்துள்ளவைகளே. பகிர்வுக்கு நன்றிகள்.
இதற்கும் மை.ம.கா.முதல் சதி லீலாவதி சில கமல் படங்களைச் சொல்லலாம். அபூர்வ ராகங்கள் படத்தில் நாகேஷ் டாக்டர்.குடிகாரர். குடிப்பது அவர் தம்பி என்று சொல்ல வைத்திருப்பார். குடிக்கும் காட்சிகளில் அவர் நடிப்பு மிகவும் ரசிக்க வைக்கும்.
வணக்கம்
ஐயா.
நகைச்சுவைபற்றி மிக சுவைப்பட நல்ல விளக்கத்துடன் பகிர்ந்துள்ளீர்கள்.. வாழ்த்துக்கள் ஐயா
ஒரு நகைச்சுவையாக எல்லோரும் அறிந்ததுதான்
கிளிகள் எல்லாம் ஏன் பச்சையாக இருக்காம்
சட்டியில் போட்டு ஆவிக்காதகாரணத்தால் பச்சையாக இருக்காம்..
--------------------------------------------------------------------
ஒரு நோயாளிக்கு வைத்தியர் கூறிய அறிவுரை.
ஒரு நானைக்கு ஒரு முட்டை பச்சையாக குடிக்கவேண்டும் என்று சொன்னார்.
------------------------------------------------------------
அதற்கு அந்த நோயாளி சொன்னார் எங்களுடைய கோழி எல்லாம் வெள்ளை முட்டைதான் போடுது என்று....
இது எப்படி இருக்கு...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
த.ம +3வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சில நகைச்சுவைக் காட்சிகள் பார்க்கும்போது புன்னகைக்க வைக்கும் . சில காட்சிகள் நினைக்கும்போதே நகைக்க வைக்கும் அங்க ஹீனத்தை நகைச் சுவை என்பது போல் சித்தரிப்பது disgusting.
நகைச்சுவை ரசனையுடன்.
சிறப்பான காட்சிகளின் மூலம் நகைச்சுவைகளை பகிர்ந்து கொண்டமை சிறப்பு! சிறந்த பதிவு! நன்றி!
நகைச்சுவை பகிர்வு ரசிக்கும்படி இருந்தது.
காதலிக்க நேரமில்லை
மறக்கக் கூடிய படமா
நன்றி ஐயா
தம 4
ரசிக்க வைக்கும் காட்சி...
சிறந்த எடுத்துக்காட்டுகளுடன்
சிறந்த பகிர்வு
அருமை. நீங்களும் முனைவர் பட்டம் வாங்கும் முனைப்பில் இருக்கிறீர்கள் போல? நமது வலைத்தளத்தில்: http://newsigaram.blogspot.com
அருமையான உதாரணங்கள். இப்போது நினைத்தாலும் முறுவல் வரவழைக்கும் காட்சிகள். பகிர்வுக்கு நன்றி ரமணி சார். பழைய திரைப்படங்களில் நிறைய காட்சிகள் இதுபோல் இருந்தாலும் சட்டென்று நினைவில் வர மறுக்கின்றன.
சிறப்பான உதாரணங்கள்.....
பல காட்சிகள் ரசிக்கும்படியாக இருந்தாலும் சில காட்சிகள் சிரிப்பு என்ற பெயரில் இருந்தாலும் ரசிக்க முடிவதில்லை.
Post a Comment