குழந்தைக்கு
செமிக்காது போய்விடுமோ எனக் கருதி
மிகத் தெளிவாய் உணர்ந்தே
பாலில் கூடுதலாய் நீரதைச் சேர்க்கிறேன்
கஞ்சப் பிசினாறி எனத்
தூற்றிப்போகிறது உலகு
கண்டுகொள்ளாது தொடர்கிறேன்
வெட்டுப்படுபவனின் பக்கமும்
நியாயம் இருக்கக் கூடுமெனக் கருதி
வெட்டருவாளை
அதிகக் கூர்ப்படுத்தாதே விடுகிறேன்
தொழிலில் தேர்ச்சியில்லை என
விட்டுவிலகுகிறது ஒரு பெருங்கூட்டம்
கலங்காது தொடர்கிறேன்
நியாயத்தின் பக்கமே
இருந்துவிட உறுதியுடனிருக்கையில்
நியாயங்கள் அணிமாற
நானும் மாறித்தொலைக்கிறேன்
பச்சோந்தியென பரிகசித்துப் போகிறது
பண்டிதர் பெருங்கூட்டம்
குழம்பாது தொடர்கிறேன்
எண்ணிக்கை
தரத்தை முடிவுசெய்வதில்லை என
காகமும் மயிலும் எனக்கு
ஆறுதல் சொல்லிப்போக
தொடர்ந்து நான் பயணிக்கிறேன்
வெற்றி என்பது உணர்வது
பெறுவதல்ல என்னும் இறுமாப்புடனே...
செமிக்காது போய்விடுமோ எனக் கருதி
மிகத் தெளிவாய் உணர்ந்தே
பாலில் கூடுதலாய் நீரதைச் சேர்க்கிறேன்
கஞ்சப் பிசினாறி எனத்
தூற்றிப்போகிறது உலகு
கண்டுகொள்ளாது தொடர்கிறேன்
வெட்டுப்படுபவனின் பக்கமும்
நியாயம் இருக்கக் கூடுமெனக் கருதி
வெட்டருவாளை
அதிகக் கூர்ப்படுத்தாதே விடுகிறேன்
தொழிலில் தேர்ச்சியில்லை என
விட்டுவிலகுகிறது ஒரு பெருங்கூட்டம்
கலங்காது தொடர்கிறேன்
நியாயத்தின் பக்கமே
இருந்துவிட உறுதியுடனிருக்கையில்
நியாயங்கள் அணிமாற
நானும் மாறித்தொலைக்கிறேன்
பச்சோந்தியென பரிகசித்துப் போகிறது
பண்டிதர் பெருங்கூட்டம்
குழம்பாது தொடர்கிறேன்
எண்ணிக்கை
தரத்தை முடிவுசெய்வதில்லை என
காகமும் மயிலும் எனக்கு
ஆறுதல் சொல்லிப்போக
தொடர்ந்து நான் பயணிக்கிறேன்
வெற்றி என்பது உணர்வது
பெறுவதல்ல என்னும் இறுமாப்புடனே...
28 comments:
அருமை ஐயா அருமை
வெற்றி என்பது உணர்வது
தம 2
வெற்றி என்பது உணர்வது பெறுவதல்ல என்னும் இறுமாப்புடன் --- அருமையான வரிகள்....எப்போதும் இறுமாப்புடனே இருங்கள்.
நான்குபத்திகள் ஆயினும் சொன்ன கருத்துக்கள் அனைத்தும் சிந்திக்கப் படவேண்டியவை. நிறைவு வரிகள் அற்புதம்
வெற்றி என்பது எதில் என்பதை அறிவதில்தான் நிறைய பேருக்கு மயக்கம் இருக்கிறது!
ஆமாம் அப்படியே,படைப்பவனுக்கு கொஞ்சம் இறுமாப்பு இறுக்கத்தானே செய்யும்?
வெற்றி என்பது உணர்வது
பெறுவதல்ல என்னும் இறுமாப்பு
அழுத்தமான பதிவு..!
வணக்கம் ஐயா!
வெற்றியின் சூட்சுமம் வீறாப்பாய்க் காட்டினீர்!
பற்றினேன் என்னுள் பதித்து!
மிக மிக அருமை!
உணர்ந்து கொள்ள வைக்கும் கவிதை!
வாழ்த்துக்கள் ஐயா!
வணக்கம்
ஐயா.
வெற்றியின் சூட்சுமம் பற்றி மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
த.ம5வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
எண்ணிக்கை
தரத்தை முடிவுசெய்வதில்லை // அருமை
சிந்திக்க வைக்கும் சிறப்பான வரிகள் ! வாழ்த்துக்கள் ஐயா .த.ம.7
"வெற்றி என்பது உணர்வது
பெறுவதல்ல என்னும் இறுமாப்புடனே..." என
நாமும் நடைபோடுவோம்!
கடைசி இரு வரிகள் மிக அருமை. மனம் தானே வெற்றியை உணர வேண்டும். . நன்றி பகிர்விற்கு.
எதுவும் அவரவர் மனநிலைக்கு ஏற்ப அமைவதே!
நலமா இரமணி!
வெற்றியைச் சந்திப்பவன் தோல்வியைச் சந்திக்காமல் இருந்திருக்க முடியாது.
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி பெற்றதில்லை!
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை..... (க.க)
காலச்சக்கரத்தில் வெற்றியை நாம் உணர்ந்தாலே போதும் என்ற உங்களின் கருத்து மிக அருமை இரமணி ஐயா.
அதிலும் ஒவ்வொரு உயர்ந்த கலைஞனிடமும் உள்ள இறுமாப்புடன்.....
வணங்குகிறேன் இரமணி ஐயா.
தமிழ்மண வாக்குப்பட்டையைக் காணவில்லையே......!!!!
அசத்தலான முடிவுதான்:) எல்லோருக்கும் புரிஞ்ச நல்லது!! அருமை அய்யா!
பெரிய விஷயத்தினைச் சொன்ன சிறிய கவிதை!
ரசித்தேன் ரமணி ஐயா.
வணக்கம்!
கொடுத்துப் பெறுவதா வெற்றி? உணர்வுடன்..போர்
தொடுத்துப் பெறுவதே வெற்றி! முதல்வந்து
நிற்பவா் எல்லாம் நெஞ்சம் நிறைந்தவரோ?
கற்பவா் காண்பார் கணக்கு!
ரசித்தேன். ருசித்தேன். படித்தேன்.
ஆழ்மன உணர்வே வெற்றி.தூற்றுவோர் தூற்றட்டும்.போற்றுவோர் போற்றட்டும்.
வெற்றி மாவீரனுக்கே.அது ஒவ்வொரு நல்மனம் உணரும்.
வணக்கம்!
வாக்குப் படத்தினை வாகையென நெஞ்சேந்திக்
காக்கும் கயமையை என்னென்பேன்?-தாக்குகின்ற
சொல்லேந்தி! எண்ணிச் சுமையேந்தி! உள்ளத்துள்
கல்லேந்தி வாழ்வதா காப்பு?
வெற்றி என்பது உணர்வது, பெறுவதல்ல
மிகவும் நியாயமான இறுமாப்பு.
பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
வெற்றி எதில் என்பது பலருக்கும் புரிவதில்லையே அதனால்தான் வாழ்வில் பலர் தடுமாறுகின்றார்கள்! மிகவும் ரசித்தோம்!
வெற்றி என்பது உணர்வது
பெறுவதல்ல என்னும் இறுமாப்புடனே /// அருமையான வரிகள்..
இந்த இறுமாப்பைதான் வித்யாகர்வம் என்கிறார்களோ ?த
த ம +1
/வெற்றி என்பது உணர்வது
பெறுவதல்ல/
அழகாகச் சொல்லிவிட்டீர்கள்.
பெரிய கருத்தை சிறிய கவிதையில் சிறப்பாய் உணர்த்திவிட்டீர்கள்! அருமை! வாழ்த்துக்கள்!
Post a Comment