Tuesday, September 16, 2014

சந்தம் ஒன்னு நெஞ்சில் நின்னு

சந்தம் ஒன்னு நெஞ்சில் நின்னு
சொந்தம் கொள்ளும் போது-ஒரு
விந்தை போல சிந்து நூறு
வந்து கொஞ்சும் தானே


இராகத் தோடு தாளம் கூடி
மாயம் செய்யும் போது-என்றும்
வராது ஏய்த்த வார்த்தை எல்லாம்
வந்து கெஞ்சும் தானே


அறிவை மீறி உணர்வு ஏறி
ஆர்ப்ப ரிக்கும் போது-கவிதை
வெறித்து ஒடும் குதிரை யாக
சிலிர்த்துத் தாவும் தானே


அச்சில் வார்த்து எடுக்கச் சிரிக்கும்
அழகுச் சிலையைப் போல-சந்தம்
கச்சைக் கட்ட உளறல் கூட
கவிதை ஆகும் தானே

29 comments:

அம்பாளடியாள் வலைத்தளம் said...

வணக்கம் !

இன்பத் தமிழால் இனிக்கும் பொருளால்
கொஞ்சிக் கொஞ்சி மகிழ வைத்த கவிதை கண்டு
நெஞ்சம் இனிக்கும் தானே ?..!!:))

தேன் சுரக்கும் இப் பாவரிகளுக்குப் பாராட்டுக்களும்
வாழ்த்துக்களும் ஐயா !

மகேந்திரன் said...

சந்தங்கள் சிந்து நதி போல
நெஞ்சம் நிறைத்து பாய்கிறது...
இனிய வணக்கம் ரமணி ஐயா...

ஸ்ரீராம். said...

எல்லாம் கூடி வந்தால் கோடிக் கவிதை! :))))

Seeni said...

சிறப்புங்க அய்யா..

ரூபன் said...

வணக்கம்
கவிஞர் ( ஐயா)

கவிதையில் சந்தங்கள் சிந்து பாடுது... ஒவ்வொரு வரிகளையும் இரசித்துப்படித்தேன்... பகிர்வுக்கு நன்றி... த.ம5வது வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ஊமைக்கனவுகள். said...

சிந்தை கொள்ளும் உங்கள் சந்தக் கவிதை
பகிர்விற்கு நன்றி அய்யா!

Vimalan Perali said...

கவிதைகளாகும் உளறல்கள் சந்தம் எதிர் நோக்கியல்ல.ஆதரவு எதிர் நோக்கி காத்திருப்பதாகவே படுகிறது,பாடு பொருள் எதுவாயினும் அதில் ஒரு மையக்கருகுடிகொண்டிருக்குமானால் நிச்சயம் வெற்றி பெரும்/உளறலாகவே இருந்த போதும் கூட/அதற்கு உதாரணம் பழைய புதிய பாடல்கள் நிறைய இருக்கின்றனதான்.நன்றி வணக்கம்/

இளமதி said...

வணக்கம் ஐயா!

உங்கள் சந்தப் பாடல் எங்களைக் கட்டிப்போட்டுவிட்டது!
மிக அருமை! வாழ்த்துக்கள் ஐயா!

‘தளிர்’ சுரேஷ் said...

அருமை! இது போன்று எழுத உங்களால்தான் முடியும்! வாழ்த்துக்கள்!

G.M Balasubramaniam said...

சில ரது பதிவுகளில் சந்தம் மட்டும் வந்து கச்சை கட்டிய உளறலாகக் காண்பதும் உண்டு. உங்கள் பாடல் உங்கள்மனசின் வெளிப்பாடு. வாழ்த்துக்கள்.

கோமதி அரசு said...

உள்ளம் மகிழ்ந்து பாடும்போது மற்றவை எதற்கு?
மகிழ்ச்சியில் எழுந்த கவிதை அருமை.

அருணா செல்வம் said...

இனிமையான பாடல் இரமணி ஐயா.

மறுபதிப்போ.....?

Bagawanjee KA said...

கச்சைக் கட்டிய அழகுச் சிலை கவிதையை ரசித்தேன் !த ம 9

வெங்கட் நாகராஜ் said...

அருமையான கவிதை......

Yarlpavanan Kasirajalingam said...

தங்கள் சிறந்த பதிவை
எனது தளத்தில்
பணிவோடு பகிர்ந்துள்ளேன்!
இணைப்பு:
தேடல் முயற்சியும் தேறல் உணர்வும்
http://paapunaya.blogspot.com/2014/09/blog-post_18.html

புலவர் இராமாநுசம் said...

சந்தக்கவிதை சிந்தையில் போட்ட விதை! சரி! தங்கள் வலை அவ்வப்போது திறக்க மறுக்கிறது ஏன்?

மாதேவி said...

மிகவும் ரசனை. வாழ்த்துகள்.

Chandragowry Sivapalan said...

சந்தக் கவிதை சிந்தை எங்கும் சிந்தித் தெறிக்கிறது. உங்கள் செந்தமிழின் சொந்த நடை வந்து உலாவுகிறது. எந்தன் வந்தனையும் உங்கள் கவிக்கு சொந்தம் தேடிகிறது

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை ஐயா
நீண்ட நாட்களுக்குப் பின் தங்களின் பதிவினைக் காண்கிறேன்
மகிழ்ச்சி ஐயா

திகழ் said...

இரசித்தேன்

சிவகுமாரன் said...

ஆகா அருமை.

சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country said...

ரசிக்கும்படியான கவிதை. நன்றி. அண்மைக்காலமாக விக்கிபீடியாவில் எழுத ஆரம்பித்துள்ளதால் மறுமொழி இடுவதில் அதிக தாமதம். பொறுத்துக்கொள்க.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே!

என் வலைத்தளம் வந்து கருத்திட்டு என்னை மேலும் எழுத ஊக்கபடுத்திய உங்களுக்கு என் மனப்பூர்வமான நன்றிகள்..! சகோதரர் திரு. கில்லர்ஜி எனக்கு கொடுத்த “பல்திறப் புலமை விருதை” உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மிகுந்த பெருமையடைகிறேன்..! பெற்றுக் கொள்வதற்கு நன்றிகள்..

வணக்கத்துடன்,
கமலா ஹரிஹரன்..

சிகரம் பாரதி said...

thurogam story ennachu?

Anonymous said...

It's amazing in favor of me to have a site, which is valuabpe for
my knowledge. thanks admin

My blog ... Best Cat Toys

Durai A said...

சந்தம் படிப்பது சுகம்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

சந்தம் விளையாடும் கவிதை . பொருளோடு சேர்ந்து இனிமை

manavai james said...

அன்புள்ள அய்யா திரு.ரமணி அவர்களுக்கு,

வணக்கம். சந்தத்தில் சிந்திய கவிதை நெஞ்சத்தில் தஞ்சம் கொண்டது. பாராட்டுகள்.

எனது ‘வலைப்பூ’ பக்கம் வந்து படித்துப் பார்த்து கருத்திடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
நன்றி.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspot.in

Thulasidharan V Thillaiakathu said...

அழகிய கவிதை! பொருளும் அருமை!

Post a Comment