நான் அரிமா இயக்கத்தில் டிலைட் என்னும்
அரிமா சங்கத்தில்தலைவராகப் பொறுப்பேற்றுக்
கடந்த ஒன்பது மாதங்களில்
ஏறக்குறைய 11000 பேர் பயனடையும் படியாக
28 சேவைத்திட்டங் களை மூன்று இலட்சம் மதிப்பில்
சங்க உறுப்பினர்களின் பூரண ஒத்துழைப்புடன்
செய்து முடித்தேன்
அதில் 80 ஏக்கரில் சீமைக் கருவேல மரத்தை
வேரோடு அழித்ததும் , பொருளாதார நிலையில்
வசிதிக் குறைவான ஒரு மருத்துவக்
கல்லூரி மாணவிக்குமுப்பத்தைந்தாயிரம் மதிப்பில்
மருத்துவ உபகரணம்வழங்கியதும் ,
புதிய உறுப்பினர்களை இணைத்ததும்
புதிதாக ஒரு சங்கத்தைத் தோற்றுவித்ததும்
குறிப்பிடத் தகுந்த அம்சம்
இதனைப் பாராட்டும் விதமாக தேனியில் நடைபெற்ற
மண்டல மா நாட்டில் எனது சங்கச் செயலாளர் மற்றும்
பொருளாளருடன் மாவட்ட ஆளு நரால்
கௌரவிக்கப் பட்டேன்
அதனை எனது பதிவுலக நண்பர்களுடன் பகிர்ந்து
கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்
14 comments:
வணக்கம்
ஐயா.
வெற்றி மீது வெற்றி வந்து சேர எனது வாழ்த்துக்கள் ஐயா..தொடரட்டும் தங்களின் சேவை...த.ம2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாழ்த்துகள் ரமணி சார். தங்கள் சேவைக்கு அங்கீகாரம் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
மிகவும் மகிழ்ச்சி... வாழ்த்துக்கள் ஐயா...
மிக்கமகிழ்ச்சிமேலும் சிறக்க வாழ்த்துக்கள்...!
மிக்க மகிழ்ச்சி ரமணி சார். வாழ்த்துக்கள்.
உங்களது மகிழ்ச்சியில் நானும் பங்கு கொள்கிறேன். வாழ்த்துக்கள்
மிக்க மகிழ்ச்சி. பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள். சமூக சேவைகள் தொடர்ந்து தொய்வில்லாமல் நடைபெறட்டும்.
வாழ்த்துக்கள் ஐயா! தங்களது சேவைகள் மென்மேலும் தொடரட்டும்! நன்றி!
வலை உலகில் தங்கெளுக்கென ஒரு நல்ல இடத்தை பிடித்த நீங்கள் இந்த அரிமா சங்கத்திலும் இடம் பிடித்தது என்பது ஆச்சிரியமில்லையே எங்கு சென்றாலும் வெற்றி உங்களுக்குத்தான் வாழ்த்துகள் ரமணி சார்
மிக்க மகிழ்ச்சி...... மேலும் பல பாராட்டுகள் உங்களை வந்தடையட்டும்....
பாராட்டுக்கள்! உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்!
வாழ்த்துகள் ஐயா! தொடரட்டும் உங்கள் துயர் துடைக்கும் சேவைகள்!
congrats!!! and wish you a very happy thamizh new year!
வணக்கம் சகோதரரே.!
உங்கள் அரிமா சங்க சேவைகள் தொடர்ந்து, மேலும் மேலும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் தங்களை வந்தடைய இறைவனை மனதாற பிரார்த்திக்கிறேன்.
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
Post a Comment