Wednesday, June 29, 2016

சிரிப்பின் சுகமறிவோம்

சிரிக்கத் தெரிந்த பிறவி உலகில்
மனிதப் பிறவியே-இதை
அறிந்தும் இங்கு சிரிக்க மறத்தல்
பெரிய கொடுமையே
இதழ்கள் வலிக்கச் சிரித்து விட்டால்
இன்பம் இன்பமே-எதையும்
இதயம் தன்னில் மூடி வைத்தால்
என்றும் துன்பமே

வளர்ந்த நிலவு வானில் இருந்து
மெல்லச் சிரிக்குமே-அதன்
அழகு சிரிப்பில் மயங்கி மலரும்
மணந்து சிரிக்குமே-அதன்
மணத்தில் மயங்கி சோலை யெல்லாம்
சொர்க்க மாகுமே-அந்த
உணர்வை உணர்ந்த மனிதர் மனத்தில்
மனிதம் பூக்குமே

குழந்தை மனதில் தெய்வம் இருந்து
சிரிப்பைத் துவங்குமே-அது
குழந்தை இதழில் மெல்ல வழிந்து
இல்லம் நிறைக்குமே-அந்த
அழகை உணர துன்பம் எல்லாம்
அழிந்து ஒழியுமே-இந்த
உலகே உண்மை சொர்க்க மென்று
புரிய லாகுமே

விழிகள் இரண்டும் காண வென்றே
அறிந்தி ருக்கிறோம்-கொண்ட
செவிகள் இரண்டும் கேட்க வென்றே
புரிந்தி ருக்கிறோம்-இனி
இதழ்கள் இரண்டும் சிரிக்க வென்றே
உணர்ந்து கொள்ளுவோம்-இதை
உலகு அறியச் சொல்லி நாமும்
உயர்வு கொள்ளுவோம்

9 comments:

KILLERGEE Devakottai said...

அருமையான கவிதை கவிஞரே ரசித்தேன் வாழ்த்துகள்
இப்பொழுது அமெரிக்காவிலா ?

Avargal Unmaigal said...

@KILLERGEE Devakottaiகுரு இருப்பது அமெரிக்காவில் அல்ல தெய்வம் வசிக்கும் இடத்தில் அதுதானுங்க அவர் மகள் வசிக்கும் இடத்தில்

Yaathoramani.blogspot.com said...

KILLERGEE Devakottai //

மதுரைத் தமிழனின் உணர்வுப்பூர்வமான
வார்த்தைகள் நெகிழ்வூட்டுகிறது
ஆம் இங்கு நியூஜெர்சியில்தான் இருக்கிறேன்

(வரும் சனி ஞாயிறு வாஷிங்டன்
செல்ல உத்தேசம் )

வெங்கட் நாகராஜ் said...

அருமையான பகிர்வு.

அமெரிக்க அனுபவங்கள் பற்றியும் எழுதுங்கள் ஜி!

ஸ்ரீமலையப்பன் said...

அருமையான வரிகள்

கோமதி அரசு said...

அருமையான கவிதை.

”தளிர் சுரேஷ்” said...

அருமையான கவிதை ஐயா! பாராட்டுக்கள்!

Thulasidharan V Thillaiakathu said...

அருமை! அமெரிக்க அனுபவங்கள் தங்களிடமிருந்து வரும் என்ற ஆவலில் காத்திருக்கின்றோம்..

V. Chandra, B.COM,MBA., said...

சிரிப்பின் அழகைப் பற்றி மிக சிறப்பாக சொன்னீர்கள்.

Post a Comment