Wednesday, March 29, 2017

கவிதையின் சிறப்பு

விதையினைப் பொருத்து மட்டுமல்ல
அதன் வளர்ச்சி
அதுவீழும் நிலம் பொருத்தும்தான்

உயிரினைப் பொருத்து மட்டுமல்ல
அதன் இயக்கம்
அதைத்தாங்கும் உடல் பொருத்தும்தான்

அழகினைப் பொருத்து மட்டுமல்ல
அதன் பெருமை
அதனை ஆராதிப்போர் மனம் பொருத்தும்தான்

நதியினைப் பொருத்து மட்டுமல்ல
அதன் புனிதம்
அதுபாயும் ஸ்தலம் பொருத்தும்தான்

கடவுளைப் பொருத்து மட்டுமல்ல
அதன் கீர்த்தி
அது உறையும் கோவில் பொருத்தும்தான்

................................................
...............................
..................................................

கவிதையைப் பொருத்து மட்டுமல்ல
அதன் சிறப்பு
அதனை இரசிப்போர் நிலையினைப் பொருத்தும்தான்

4 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
அருமை

G.M Balasubramaniam said...

கவிதையைப் பொறுத்து மட்டுமல்ல
அதன் சிறப்பு
அதனை இரசிப்போர் தரம் பொறுத்தும்தான் கவி
தையை ரசித்தும் ருசித்தும் பகிர்கிறீர்கள்

Yarlpavanan said...

"கவிதையைப் பொறுத்து மட்டுமல்ல
அதன் சிறப்பு
அதனை இரசிப்போர் தரம் பொறுத்தும் தான்" என்பதே
உண்மை!

Thulasidharan V Thillaiakathu said...

அழகினைப் பொறுத்து மட்டுமல்ல
அதன் பெருமை
அதனை ஆராதிப்போர் மனம் பொறுத்தும்தான்//
அருமை அருமை

Post a Comment