Wednesday, April 26, 2017

நடு நவீனத்துவம்

தலைப்புக் கொடுத்திருக்கிறேன்

வாக்கியத்தை
முன் பின்னாய்ப்  பிரித்து
வித்தியாசமாய்
அடுக்கி இருக்கிறேன்

புரட்சி,மானுடம்,வர்க்கம்
இவையெல்லாம்
இருக்கும்படியாய்
கவனம் கொண்டிருக்கிறேன்

தவறியும்
யாப்பமைதி
அமைந்து விடாதபடி
இலக்கணம் தவிர்த்திருக்கிறேன்

கூடுமானவரையில்
எத்தனை முறைப் படித்தாலும்
புரிந்துவிடாதபடி இருக்க
அதிகம் மெனக்கெட்டிருக்கிறேன்

மிகக் குறிப்பாய்
சென்றமுறை
நீங்கள்  எழுதியதாய்ச் சொன்னதை
நல்ல கவிதை எனப் புகழ்ந்திருக்கிறேன்

அப்படியும் நீங்கள்
இதை
நல்ல நடு நவீனத்துவக் கவிதையென
ஒப்புக்கொள்ளவில்லையெனில்

உடன் மறுபரிசீலனை
செய்வதைத் தவிர
எனக்கு வேறு வழியில்லை

நான் கவிதையைச் சொல்லவில்லை

நம் உறவைச்  சொல்கிறேன்

12 comments:

ஸ்ரீராம். said...

//கூடுமானவரையில்
எத்தனை முறைப் படித்தாலும்
புரிந்துவிடாதபடி இருக்க
அதிகம் மெனக்கெட்டிருக்கிறேன்//

ஆம். இது முக்கியம்!

:))

ஸ்ரீமலையப்பன் said...

புரியக்கூடாது அதுதான் நம் பலம்

வை.கோபாலகிருஷ்ணன் said...

//மிகக் குறிப்பாய் சென்றமுறை நீங்கள் எழுதியதாய்ச் சொன்னதை நல்ல கவிதை எனப் புகழ்ந்திருக்கிறேன்//

ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா!

நட்பின் ’நடு நவீனத்துவம்’ என்பதன் ஆணி வேரே
தங்களின் இந்த வரிகளில்தான் அடங்கி இருக்கின்றது. :)

பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

KILLERGEE Devakottai said...

வார்த்தை ஜாலத்தை இரசித்தேன்.

Yarlpavanan said...

சிந்தித்துப் பார்க்கிறேன்
நடு நவீனத்துவம்

Avargal Unmaigal said...

ஆஹா..........

கரந்தை ஜெயக்குமார் said...

ஆகா

ராஜி said...

புரியாத பிரியம்போல புரியாத கவிதையா?!

Kasthuri Rengan said...

ஆக
நச்

இராய செல்லப்பா said...

அருமையாகச் சொன்னீர்கள். ஒரு வலை நண்பர் தாம் எழுதுவதைக் கவிதை என்று கருதுவார். மற்றவர்களையும் அப்படியே நம்பவேண்டும் என்று எதிர்பார்ப்பார். அதைக் கவிதையென்று தெரியாமல், 'உங்கள் கட்டுரை அபாரம்' என்று பின்னூட்டம் இட்டுவிட்டேன். அவ்வளவுதான், அலைபேசியில் விட்டார் பாருங்கள்! நீங்கள் சொன்னமாதிரியே எங்கள் உறவு மறுபரிசீலனைக்கு உட்பட்டுத்தப்பட்டது என்றே தெரிகிறது. ஏனெனில் அதற்குப்அ பிறகு வர் என் வலைத்தளப்பக்கம் வருவதேயில்லை.

வெங்கட் நாகராஜ் said...

:)

ரசித்தேன் ஜி!

த.ம. +1

G.M Balasubramaniam said...

ரசிக்க வேண்டியதை விட்டு தவறுகளைக் காட்டினால் எதற்கு அந்தநட்பு

Post a Comment