Thursday, October 19, 2017

நரகாசுரன்

" கோடிக்கணக்கில் குடித்துக் குடித்து உடலைக் கெடுத்துத் தொலைத்து  கோடிக்கணக்கில் வெடித்து வெடித்து சுற்றுச் சூழலைக் கெடுத்துத் தொலைத்து..ம்ம் இவர்களது சந்தோஷமும் கொண்டாட்டமும் இப்படித்தான் இருக்குமெனத் தெரிந்திருந்தால் சத்தியமாய் நாராயணா  என் மரணத்தைக் கொண்டாடும்படியான வரத்தை கேட்டே இருக்க மாட்டேன் "என  அலுத்துக் கொண்டான் நம் நகர வாசிகளின் கொண்டாட்டம் கண்ட நரகாசுரன்

7 comments:

KILLERGEE Devakottai said...

அருமை அருமையாக சொன்னீர்கள்.

Nagendra Bharathi said...

அருமை

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

உண்மைதான்.

வேகநரி said...

நல்ல பதிவு.
குடித்து தான் கொண்டாட வேண்டும், வெடி வெடித்து சுற்றுபுற சூழலை நாசமாக்கி தான் கொண்டாட வேண்டும், கடன் வாங்கியும் கொண்டாடலாம் என்கின்ற தவறான சிந்தனைகள் மாற்றமடைய வேண்டும்.

ராஜி said...

குடி ஓகே. பட்டாசு பத்திய உங்க கருத்தை நான் எதிர்க்கிறேன்பா. வண்டிகளில், ஃப்ரிட்ஜ், ஏசி, குப்பை, இதுலாம் கெடாத சுற்றுச்சூழல் பட்டாசாலயா கெடுது?!

G.M Balasubramaniam said...

நரகாசுர வதம் மட்டுமல்ல தீபாவளி கொண்டாடக் காரணம் பதிவு ரசிக்க வைத்தது

யுவராணி தமிழரசன் said...

அதிலும் இம்முறை பட்டாசு விற்பனை அவ்வளவு ஜோராக இல்லையென்றாலும் மது விற்பனையும் வருமானமும் படு ஜோர்!நரகாசுரன் மரணத்தை கொண்டாடுவதை விட்டுவிட்டு சுற்றுச்சூழலாவது உடல்நலமாவது!

Post a Comment