Friday, June 1, 2018

குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்

அதிகாலைச் சூரியனோடு
கைகோர்த்து நடை பயிலுங்கள்
அது உடலினை உறுதி செய்யும்

மாலை நேரத் தென்றலோடு
மனம் திறந்து பேசுங்கள்
அது மனப்பளுவைக் கனவாக்கிப் போகும்

முழு நிலவின் ஒளியோடு
கரையக் கற்றுக் கொள்ளுங்கள்
அது பல உன்னதங்களை அறிமுகம் செய்து போகும்

பூத்துச் சிரிக்கும் மண  மலரோடு
சினேகம் செய்து கொள்ளுங்கள்
அது வாழ்வின் அர்த்தத்தை தெளிவாக்கிப் போகும்

நீலக் கடலின்  பிரமாண்டத்தில்
இலயிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்
அது  பேரறிவாளனை உணரச் செய்து போகும்

காட்டோடும் மலையோடும்
தனித்திருக்கப் பழகுங்கள்
அது   அமைதியின்  அருமை  உணர்த்திப் போகும்

 இவை எதற்கும் நேரமில்லையெனில்
குழந்தைகளோடு  இணைந்திருக்க  முயலுங்கள்
நிச்சயம்  அது
இவை அனைத்தையும்  ஒன்றாகச் சேர்த்துத் தரும்

12 comments:

G.M Balasubramaniam said...

எத்தனை விஷயங்கள் கற்றுக் கொள்ள

Yaathoramani.blogspot.com said...

ஆம் கற்றுத் தறாது கற்றுக்கொள்ள வைக்கும் சில உன்னதங்களில் இது வும் .

வை.கோபாலகிருஷ்ணன் said...

அனைத்தும் அருமை.

இறுதியில் சொன்னது இனிமை.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

நல்ல அருமையான கவிதை. உண்மைதான். குழந்தைகளின் அருகாமைகள், அவர்களின் நேசங்கள், இயற்கையின் சீதனங்களை அள்ளித்தந்து அவற்றின் அருமை பெருமைகளை உணர வைக்கும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மை... அருமை...

ஸ்ரீராம். said...

நாமும் கற்றுக்கொண்ட விஷயங்கள்தான் இவை யாவும். மறந்து கடந்து விடுகிறோம்!

கோமதி அரசு said...

சர்வதேச குழந்தைகள் தினத்தில் அழகான கவிதை.
குழந்தைகள் உலகம் அருமையானது.
நாமும் குழந்தைகள் ஆகி விடுவோம்.

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான கவிதை....

Thulasidharan V Thillaiakathu said...

சிறப்பான வரிகள். ரசித்தோம்

iramuthusamy@gmail.com said...

குழந்தைகளோடு சேர்ந்து கொண்டாட எல்லா நிறைவும் தானே வரும் என்ற முத்தாய்ப்பு அருமை.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

குழந்தைகளோடு இருத்தல் என்பது அனைத்தையும் தந்துவிடும்...உண்மை

K. ASOKAN said...

அருமை குழந்தைகளோடு இருந்தால் இறைவனின் அருகில் உள்ளது போல உணரலாம் என்பதை கடைசி வரி சாட்சியாகிறது

Post a Comment