Tuesday, November 13, 2018

உண்மையான ஒருவிரல் புரட்சி

 எங்கள் பகுதியை ஏழு பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் அந்தப் பகுதியில் ஒரு அட்மினை நியமித்து அந்தப் பகுதி மக்களை வாட்ஸ் அப்பில் இணைத்து அவர்கள் பகுதியில் நேரும் பொதுக்குறைகளைப் பதிவிடுமாறு ஏற்பாடு செய்துள்ளோம். பதிவின் தன்மைப் பொருத்து தகவலை உடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம்.அவர்கள் உடன் பகுதிப் பணியாளருக்கு உத்திரவிட உடன் அந்தக் குறைபாடு சரிசெய்யப்படுகிறது.எங்கள் பகுதிக்கு வாய்த்த அனைத்துத் துறை அதிகாரிகளும் பொது நல நோக்கு அதிகம் உள்ளவர்களாக இருப்பதால் அவர்களாகவே வாட்ஸ் அப் பக்கத்தில் தங்களை உடன் இணைத்துக்கொண்டு குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்கிறார்கள். உதாரணத்திற்கு நேற்று நடந்த ஒரு விஷயத்தை தகவலுக்காக பகிர்ந்துள்ளேன். முயன்றால் உங்கள் பகுதியிலும் இப்படி மக்களுக்குப் பணியாற்ற நிச்சயம் முடியும்..வாழ்த்துக்களுடன்                           
நாய் ஒன்று 2429 பிளாட்டுக்கு எதிரில் இறந்து கிடக்கின்றது அகற்ற ஏற்பாடு செய்யவும் நன்றி       ( 13/11 அன்று இரவு 9மணிக்கு வந்த தகவல் )                               
சம்பத்தப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது உடன் ஆவன செய்வார்கள் தகவலுக்கு நன்றி (அன்று இரவு 10 மணிக்கு அவரின் தகவலை சம்பத்தப்பட்ட அதிகாரிக்கு அனுப்பி விட்டு அவருக்கு நான்  அனுப்பிய செய்தி      )                                                             
 இறந்த நாய் உடன் அப்புறப்படுத்தப்பட்டது    (மறுநாள் காலை 9மணிக்கு சம்பத்தப்பட்ட அதிகாரியிடமிருந்து படத்துடன் வந்த செய்தி)                                                                                             .                                           உடன் நடவடிக்கை எடுக்க உத்திரவிட்ட அதிகாரிகளுக்கும் அப்புறப்படுத்திய ஊழியருக்கும்மிக்க நன்றி  (பத்து மணிக்கு நானிட்ட பதில்)                                   
 நன்றி தங்களின் துரித நடவடிக்கைக்கு எனது வாழ்த்துக்கள் (புகார் கொடுத்தவரின் பதில் கடிதம் 11மணிக்கு )

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான செயல்பாடு ஐயா...

குழுமத்திற்கு பாராட்டுக்கள்... வாழ்த்துகள்...

K. ASOKAN said...

அருமையான செயல் பாராட்டுகள்

Thulasidharan V Thillaiakathu said...

வாவ்! மிக மிக அருமையான செயல்திட்டம்....வாழ்த்துகள்! எல்லோருமே அந்தத்தப் பகுதியில் செய்யலாம்...சூப்பர் ஐடியா..

துளசிதரன், கீதா

நிஷா said...

அருமையான செயல்பாடுகள், தனி மனிதன் தனக்கான கடமைகளை உணர்ந்து சரியாக செயல்பட ஆரம்பிக்கும் போது மாற்றங்கள் சாத்தியமாகும். நன்று ஐயா. தொடருங்கள்.

மனோ சாமிநாதன் said...

மிகவும் அருமை!

Unknown said...

நன்று

Unknown said...

நன்று

G.M Balasubramaniam said...

இங்கும் சில நல்ல கூட்டுறாஅவு முயற்சிகள் நடக்கின்றன ஆனால் அதற்கும் விலையுண்டு விலை கேட்காமல் செய்கிறவர்கள் அருமை

Post a Comment