நண்பனிடம், நான்: “ஸீஸன் ஆரம்பிச்சாச்சு.. வாடா சபாக்கு கச்சேரி போலாம்...!”
நண்பன்: “எனக்கு கர்னாடிக் மியுசிக் இலக்கணமே தெரியாதேடா... subtitle இல்லாம இங்கிலீஷ் படம் பாக்றா மாதிரி ஒண்ணும் புரியாது எனக்கு..!”
“பெரிய விஷயம் இல்லடா.. மியுசிக்னாலே ஏழு ஸ்வரம்தானே..?”
“முதல்ல ‘ஸ்வரம்’னா என்னன்னு சொல்டா..!”
“Sound production ஏழு நிலைகள்ள பண்லாம்...! கீழ base - ‘ச’, ஷட்ஜமம். மேல high - ‘நி’, நிஷாதம்.. கீழேயிருந்து மேலே போற progression - ச.ரி.க.ம.ப.த.நி – ஆரோகணம். மேலேயிருந்து கீழே progression - நி.த.ப.ம.க.ரி.ச - அவரோகணம். அந்த 7 நிலைகளுக்கும் கொடுத்திருக்கிற ‘ச ரி க ம ப த நி'ங்கிற label தான் ‘ஸ்வரம்...!"
“ஸ்ருதி’ன்னா என்னா..?"
“சவுண்டுங்கிறது ஒரு ரேடியோ மாதிரின்னா, அதுல பல frequencies தான் ‘ஸ்ருதி’..! அதையும் broadடா 7 நிலைகளா சொல்றாங்க.. நாம 1,2,3..7 கட்டைகள்னு சொல்றோம்... westernல அதையே Scaleனு சொல்றாங்க . இப்படி ‘ஸ்ருதி’க்கு fixed definition இருக்றதால, பாடறவங்க, accompaniments எல்லாமும் குறிப்பிட்ட ஸ்ருதி ஃபிக்ஸ் பண்ணிக்கிட்டு பாட / வாசிக்கும் போது கேட்க நல்லா இருக்கும்..!"
“ராகம்னா என்ன...?”
“ஸ்வரங்கள் சொன்னேன்ல..? அந்த 7 ஸ்வரங்களோட வேற வேற combinations தான் ராகங்கள்..! அதாவது ஆரோகணம், அவரோகணம் progression, 7 ஸ்வரங்களும் இருந்தோ, இல்ல, சில சில ஸ்வரங்கள் இல்லாமலோ கோர்க்கும் போது, மாறுபட்ட tunes வரும்.. அதுதான் ராகம்..! ஒரு ராகத்துக்கான defined ஸ்வரங்கள பாடும்போது என்ன basic டியுன் வருதோ, அதே tuneல பாட்டோட வரிகளைப் பொருத்திப் பாடணும்..!"
“எல்லா ஸ்வரமும் இருக்கறது என்ன ராகம்..?”
“எல்லா ஸ்வரமும் இருக்கறது 72 ராகம் இருக்கு, அத மேளகர்த்தா ராகங்கள்னு சொல்றங்க..”
“அதெப்டி..? நீ சொல்றபடி பாத்தா அது ஒரு unique combination தானே..?”
“சிலது தவிர, ஒவ்வொரு ஸ்வரத்திலேயும் 3 variations இருக்கு.. உதா: ‘ரி’ங்கிற ஸ்வரத்துல ‘ரி1’, ‘ ரி2’, ‘ரி3’ ன்னு மூணு இருக்கு.. ஸோ, permutations, combinations..! ராகத்தோட constituents வேற சிலவும் இருக்கு.. எனக்கு ரொம்ப தெரியாது..!”
“சரி… ‘தாளம்’கறது என்ன..? எல்லாரும் மூணு விரல் நீட்றாங்க... அப்புறம் முன்ன பின்ன கையை தட்றாங்க.. என்னது அது..?”
“Beatதான்டா தாளம்..! நம் எல்லோருக்குள்ளேயும் தாளம் defaultட்டா இருக்கு..! கொஞ்சம் நேரம் கேட்டவுடனே ஒரு பாட்டோட தாளம் புரிஞ்சிடும்..! ‘ஆதி’ தாளம்தான் ரொம்ப பேசிக், நிறைய யூஸ் பண்ற தாளம்.. 1 2 3 4, 1 2 3 4.. அதத்தான், ஒரு தட்டு 3 விரல் (4), அப்றம் முன்ன பின்ன ரெண்டு தடவை தட்றது (4) ன்னு செய்றாங்க.. நிறையா தாளங்கள் இருக்கு..! எனக்கு எல்லாம் தெரியாது.. "
“டேய்.. உண்மையை சொல்லு... உனக்கு எவ்ளோ கர்னாடிக் மியுசிக் தெரியும்..?”
“5% தான் தெரியும்.. சபா கச்சேரி போறவங்கள்ள 95% பேருக்கு அவளோதான் தெரியும்..! பாட்டு, டான்ஸ், ஓவியம், சிற்பம்னு எல்லா கிளாசிகல் ஆர்ட்ஸுமே நம்ம மூளை, மனசு ரெண்டுத்துக்கும் அப்பீல் ஆகும்..! டெக்னிகல் எதுவும் தெரியாமலே நாம் மனசால இன்வால்வ் ஆக முடியும்..! சங்கீதம் grows on you..! கர்நாடக சங்கீதம்கறது பெரிய கடல்..! எல்லாம் தெரிஞ்சாத்தான் கச்சேரி போகணும்னா பத்து பேரு கூட தேற மாட்டாங்க..! போலாம் வா..!” (படித்தது பகிரப் பிடித்தது)

15 comments:
கடைசி பாரா எனக்கும் பொருந்தும். எழுத்தின் நடை ரொம்பப் பழகியது போல இருக்கிறது. யார் எழுதியது என்றும் பகிர்ந்திருக்கலாமோ....!
சப்டைட்டில் இல்லாமல் ஆங்கிலப் படம் பார்ப்பது போல... ஹா ஹா ஹா உண்மைதான். ஆனால் எனக்கு அதிலும் ஒரு பிரச்னை. முக்கி முக்கி சப்டைட்டில் படித்துக் கொண்டிருந்தால் படத்த்தில் கான்சன்ட்ரேட் செய்ய முடியாமல் போகும். காட்சி என்ன நகர்கிறது என்று பார்க்க முடியாமல் போகும்!!!!
உண்மைதான்
என்ன இசை ஆராய்ச்சியா.
மூலவர் தெரியவில்லை.பகிர்ந்ததைப் பகிர்ந்ததால் பெயரைக் குறிக்கவில்லை
ஆம் கோடுகளில் கவனம் போனால் ஓவியத்தை முழுமையாய் இரசிக்க இயலாததைப் போலவே
வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் வாழ்த்துக்கள்
எழுதியவிதம் பிடித்திருந்தது. மற்றபடி நான் இது விசயத்திலும் நான் ஞானசூன்யமே
பாடலை ரசிக்கும் மனநிலை இருந்தால் போதும்.
பகிர்வு அருமை.
மனதிற்கு இதம் தந்தால் போதும்...
இதைப்படித்தால் ராகம் தாளம் எல்லாம் தெரிந்துவிடுமா
அ ஆ தெரிந்து கொண்டால் படிக்கப்பழகலாம் தானே
இலக்கணம் அறியாதும் கவிதையை இரசித்தல் சாத்தியமே
ஆம் அதுவே மிக மிக முக்கியம்
எல்லாம் தெரிந்த சினிமாப்பார்க்கப்போகிறோம்,
சொல்கிற விஷயமும் சொல்லப்படுகிற விஷயமும் புரிந்து கொள்ளும் படி எளிமையாய் போவதில் ஆட்சேபனை இருக்க முடியும்,?
Post a Comment