Friday, January 18, 2019

நவீனத் தோட்டிகளாய்..

முன்பெல்லாம்
மாதமொரு முறை
சுத்தம் செய்தால் போதும்
எனும் அளவு
நிரம்பி வழியும்
இ.மெயில்கள்...

இப்போதெல்லாம்
வாரமொருமுறை
சுத்தம் செய்யும் அளவு
நிரம்பி வழிகிறது

எரிச்சலுடன்
தேவையானவைகளை மட்டும் 
இருக்க விட்டு
மற்றவற்றையெல்லாம்
ஒதுக்கி நிமிர்கிறேன்

எதிர் ஜன்னல்வெளியில்
காக்கிச் சட்டையணிந்த தோட்டி
இரண்டு மேடுகள் கடந்து
மூன்றாம் குப்பைமேட்டைக்
கிளறிக் கொண்டிருக்கிறான்.

அவன் பின்னால் கிடந்த
இரண்டு குப்பைக் குவியல்கள்
முகநூலையும் வாட்ஸ்-அப்பையும்
நினைவுறுத்திப் போக
மீண்டும் பொறுக்கக் குனிகிறேன்

4 comments:

KILLERGEE Devakottai said...

ஹா.. ஹா.. ஹா.. எல்லோர் நிலைப்பாடும் இதுவே...

திண்டுக்கல் தனபாலன் said...

அதே... அதே...

வை.கோபாலகிருஷ்ணன் said...

நம் ஒவ்வொருவரின் இன்றைய நிலைமையையும்
(குப்பையேயாயினும்) அதனை வெகு அழகாக, சிந்தாமல், சிதறாமல், நாறாமல்
உங்களுக்கே உரித்தான பாணியில் தோலுரித்துக் காட்டி விட்டீர்கள்.

படித்ததும் ஓர் மகிழ்ச்சி. எங்குமே குப்பைதான் போலிருக்கு என்பதை அறிய, மனதுக்குள் ஓர் சின்ன ஆறுதல்.

படைப்புக்குப் பாராட்டுகள். வாழ்த்துகள்.

ஸ்ரீராம். said...

குப்பைகள் எல்லா இடத்திலும் சகஜம்! குப்பைகள் என்று தெரிந்துவிடுவதில் ஒரு சந்தோஷம்.

Post a Comment