Tuesday, June 4, 2019

தமிழ்நாட்டில் இந்தி

சிறு வயதில் நீச்சல் கற்றுக் கொள்வது எளிது.அப்படியே சைக்கிள் கற்றுக் கொள்வதும்...அந்தப் பருவத்தில் கற்றுக் கொள்ளாது பெரியவர்கள் ஆனதும் அதனைக் கற்றுக் கொள்ள அதிகம் மெனக்கெட்டவர்களையும் அல்லது கற்றுக் கொள்ள இயலாதே போனவர்களையும் அதற்காக வருத்தப்படுபவர்களையும் எனக்கு அதிகம் தெரியும். நாம் கடலையா /ஆற்றையா கடக்கப்  போகிறோம் அப்படி கடக்க வேண்டி இருந்தாலும் படகு இருக்கிறது கப்பல் இருக்கிறது எனச் சொல்வது இப்போது புத்திசாலித்தனமாக ஏன் பகுத்தறிவுடன் பேசுவதுப் போலப் படலாம். ஆனால் அழகிய ஏரியைக் கண்டதும்  சட்டென இறங்கி நீந்தத் துவங்கும் நண்பனைக் கண்டதும் ஏற்படும் ஒரு விரக்தி/ சைக்கிள் ஓட்டத் தெரியாதா அப்போது பைக் பழகுவது கடினமாக  இருக்கும் என பயிற்சியாளர் சொல்லத் தோன்றும் சங்கடம் அனுபவித்தால்தான் தெரியும்     அந்த வகையில் பள்ளி நாட்களில் விளையாட்டுத்தனமாக வேறு ஒரு  மொழியைக் கற்றுக் கொள்வது நிச்சயம் பின்னாளில் அதிகம் பயனுள்ளதாகவே இருக்கும்..அது சரி கற்றுக் கொள்வோம் அதற்கு ஏன் இந்தி..உலகத்திற்கான பொது மொழி ஆங்கிலம் என்பது போல் (வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு மொழிகள் பேசப்பட்டாலும்) இந்தியாவுக்கான பொது மொழியாக இந்தி இருக்கவே சாத்தியம்.(வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு மொழிகள் பேசப்பட்டாலும்) சிறுவயதில் ஒழுக்கத்தை கட்டாயப்படுத்தித்தான் கற்றுத் தரவேண்டும்.இங்கு இஷ்டப்பட்டால் என்கிற வாதம் சரிப்படாது.அப்படித்தான் வாழ்வுக்கு பயனுள்ளதையும்..தங்கள் தொழில் சார்ந்து பள்ளியில் ஹிந்தி அவசியம் என கட்டாயப்படுத்துகிற பகுத்தறிவுப் பாசாங்கிகள் வெளிஉலகில் அரசியல் ஆதாயத்திற்காக செய்கின்ற மாய்மாலங்களில் மயங்கிடாது பொறுப்பான தந்தையாக தாயாகச் சிந்தித்தால் இதிலுள்ள நியாயம் புரியும்..                                                          .(நானும் இந்தி போராட்டத்தில் கலந்து கொண்டவன் தான், ஆனால் இன்றுஅது முட்டாள்தனமாக தோன்றுகிறது தவறுசெய்து விட்டோம்-சாலமன் பாப்பையா! )

17 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தீதும் நன்றும் பிறர் தர வரலாம்...?

Yaathoramani.blogspot.com said...

தர்க்கரீதியாக மறுப்பு இருப்பின் சிறப்பு

மனோ சாமிநாதன் said...

நல்ல கருத்துக்களை தாங்கி வந்திருக்கும் பதிவு!

40 வருடங்களுக்கு முன், திருமணமான புதிதில் தமிழும் ஆங்கிலமும் மட்டுமே அறிந்த எனக்கு மகாரஷ்டிராவில் ஒரு கிராமத்தில் கணவருடன் குடியேறியபோது மொழி புரியாது கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போலிருந்தது. மெல்ல‌ மெல்ல ஹிந்தியில் பேசுவதற்கும் படிப்பதற்கும் கற்றேன். மகாரஷ்டிர மொழியும் கற்றேன். அங்கிருந்ததோ ஒரு வருடம் மட்டும் தான். ஆனால் அப்ப்டி கற்ற ஹிந்தி இன்றளவும் இங்குள்ள [ துபாய்] சாதாரண தொழிலாளிகளிடமும் சில சமயங்களில் இந்திய கடைகளிலும் பேசுவதற்கு பயன்படுகிறது! பயன்ப‌டுதல் மட்டுமன்றி அருமையான‌ பாடல்கள், படங்களையும் இன்று வரை மெய்மறந்து ரசிக்கவும் முடிகிறது!

வை.கோபாலகிருஷ்ணன் said...

1962-66 இல், அடியேன் 9th Std. to 11th Std. படிக்கும்போது, ஹிந்தி என்ற ஒரு பாடம் இருந்தது. அதில் பூஜ்யம் மார்க் எடுத்தாலும் பாஸ் போட்டுக்கொண்டுதான் இருந்தார்கள். இங்குள்ள அரசியல் வாதிகள் அதையும் கெடுத்தார்கள். இதனால் நானும் என் பிள்ளைகளும், பள்ளிகளில் ஹிந்தி கற்றுக்கொள்ளும் வாய்ப்பினை இழந்தோம். என் பேரன் பேத்திகளுக்காவது அந்த வாய்ப்புக்கிடைத்தால் நல்லது. என்ன நடக்குமோ .... தெரியவில்லை.

Yaathoramani.blogspot.com said...

விரிவான அருமையான கருத்து.வேண்டுமென்றேதெரிந்தே அரசியல் வாதிகளின் பாட்டுக்கு ஆடுவோருக்கு இது போன்ற பதிவுகளே தெளிவு கொடுக்கும்...

Yaathoramani.blogspot.com said...

நானும் ஏறக்குறைய அந்தக் காலத்தில் வகுப்பில் ஹிந்தி படித்தவன்தான்.எழுத்து முடித்து சிறு சிறு வாக்கியங்கள் படிக்கத் துவங்குகையில்தான் இந்தி எதிர்ப்புப் போராட்டம் வெடித்து அதைக் கெடுத்தது.அடுத்தத் தலைமுறைக்கும் இதுபோல் ஆகி விடக் கூடாதே என்கிற ஆதங்கத்தில்தான் இதை எழுதுகிறேன்.அருமையான பின்னூட்டம் மூலம் ஆசீர்வதித்தமைக்கு மிக்க நன்றி

'பசி'பரமசிவம் said...

இதை வெளியிடுவீர்களா?

இந்தியும் மற்ற மொழிகளைப் போல ஒரு சில மாநிலங்களின் மொழி. சில கிளை மொழிகளையும் சேர்த்து 40% பேசப்படுவதாகப் பொய்க் கணக்குக் காட்டப்பட்டது.
இன்னும் சிறிது காலத்திற்கு ஆங்கிலம் தொடர்பு மொழியாக இருந்தால் போதும்.
இணையத் தொழில் நுட்பம் வளர்ந்துவிட்ட நிலையில் உடனடி மொழிபெயர்ப்புக்கான கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தியோ ஆங்கிலமோ இல்லாமலே நமக்குள் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள முடியும்.
இனி எந்தவொரு மொழியையும் எவர் மீதும் திணிக்கும் முயற்சி வெற்றி பெறாது.
அறிவியல் நூல்களோ இலக்கிய வளமோ இல்லாத இந்தியை மற்ற மொழிக்கார்கள் மீது திணித்து ஆதிக்கம் செலுத்த நினைப்பது நியாயம் அல்ல.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

எந்த ஒரு மொழியையும் கற்பதில் தவறில்லை. வலிய திணிக்கும்போதுதான் உணர்ச்சிவசப்படுகின்ற நிலை நமக்கு ஏற்படுகிறது. இரண்டாண்டுகளுக்கு முன்னர் வட இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் சென்றபோது எங்கள் குழுவில் நான் மட்டுமே இந்தி தெரிந்தவன். மற்றவர்கள் அப்போது பட்ட சிரமமும், என்னுடைய இந்தி அடிப்படை அறிவும் அப்போது அதிகம் உதவின. முக்கியமாக கழிவறைக்குச் சென்றபோது ஆண்கள், பெண்கள் வேறுபாடு தெரியாமல் அனைவரும் சிரமப்பட்டனர். அங்கு இந்தியில் மட்டுமே எழுதப்பட்டிருந்தது. அப்போதுதான் 1980களில் பிராத்மிக் தொடங்கி நான் படித்த இந்திப்பாடங்களின் பயன் நினைவிற்கு வந்தன.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

எந்த ஒரு மொழியையும் கற்பதில் தவறில்லை. வலிய திணிக்கும்போதுதான் உணர்ச்சிவசப்படுகின்ற நிலை நமக்கு ஏற்படுகிறது. இரண்டாண்டுகளுக்கு முன்னர் வட இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் சென்றபோது எங்கள் குழுவில் நான் மட்டுமே இந்தி தெரிந்தவன். மற்றவர்கள் அப்போது பட்ட சிரமமும், என்னுடைய இந்தி அடிப்படை அறிவும் அப்போது அதிகம் உதவின. முக்கியமாக கழிவறைக்குச் சென்றபோது ஆண்கள், பெண்கள் வேறுபாடு தெரியாமல் அனைவரும் சிரமப்பட்டனர். அங்கு இந்தியில் மட்டுமே எழுதப்பட்டிருந்தது. அப்போதுதான் 1980களில் பிராத்மிக் தொடங்கி நான் படித்த இந்திப்பாடங்களின் பயன் நினைவிற்கு வந்தன.

bandhu said...

நான் பிற மாநிலங்களில் இருந்தது சில வருடங்கள். அவை, மஹாராஷ்ட்ரா / மேற்கு வங்காளம். வேலை விஷயமாக சென்று வந்தது பீஹார் / உத்திரபிரதேசம் / டெல்லி. இவற்றில், முதலிரண்டில் ஹிந்தி முதன்மையான மொழியாக இல்லாவிட்டாலும், இந்தி பேச்சு மொழியாக எளிதில் புரிந்து கொள்ளப் பட்டது. இந்தி தெரிந்தால் எளிதில் சமாளித்துவிடலாம் என்பதே பெரும்பாலான மாநிலங்களின் நிலைமை. இதை கற்றுக்கொள்ள மறுப்பது வறட்டு பிடிவாதம். 'இந்தி தெரிந்ததால் மத்திய மந்திரி ஆக்கினேன்' என்று பேசிய வீணர்களின் வாதமே இந்தி வேண்டாம் என்பது!

நான் said...

இந்தி மொழிக்கான கணக்கெடுப்பில் தில்லுமுல்லு[இதைக் கண்டிக்காதது இந்தி பேசாத மாநிலங்கள் செய்த தவறு] நடந்ததற்கான ஆதாரம்[இந்து நாளிதழில் வெளியானது] தேவையெனின் கீழ்க்காணும் முகவரியைக் கிளிக் செய்து வாசிக்க வேண்டுகிறேன்.
https://pasiparamasivam.blogspot.com/2019/04/blog-post_30.html

வேறு வேறு மொழிக்காரர்கள் தமக்குள் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்வதற்கான கைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள செய்திகளும் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. கைவசம் ஆதாரம் இல்லை. அக்கருவிகள் முழுமையாக வடிவமைக்கப்பட்டு விரைவில் உலக மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்பதில் சிறிதும் சந்தேகத்துக்கு இடமில்லை.

அவர்கள் செய்த மோசடியை எதிர்த்துப் போராடாமல், இந்தியை எதிர்த்துப் போராடுவது தவறு என்று சொல்லிக்கொண்டிருப்பது மிகப் பெரிய தவறாகும்.

நம்மவர்கள் இந்தி படித்தாலும், இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவனுக்குத்தானே முன்னுரிமை தருவார்கள் இந்தியைப் போற்றும் ஆட்சியாளர்கள். இது குறித்தெல்லாம் இந்தியை ஆதரிப்பவர்கள் சிந்திக்காதது ஏன் என்று புரியவில்லை.


Anonymous said...

தமிழ் நாட்டுக்கு வந்து வேலை செய்கின்ற மற்ற மாநில மக்கள் தமிழ் படித்துவிட்டா வருகிறார்கள்? அவர்களுக்குத் தமிழ் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று ஏன் எந்த ஒரு வட இந்திய அரசியல்வாதியோ அல்லது குடிமகனோ சொல்வதில்லை?

தமிழ்ப்பூ said...

ஒரு மொழியைக் கற்பது ஒரு கூடுதல் விழியைப் பெறுவதற்குச் சமம். அதற்குத் தடையாக இருப்போரை ஒதுக்க வேண்டும்; ஒறுக்க வேண்டும்.

Anonymous said...

அப்படியானால் வடநாட்டு அரசியல்வாதிகளைத்தான் ஒடுக்கவும் ஒறுக்கவும் வேண்டும். மூன்றாவது மொழி என்னும் கண்ணை அவர்கள் வடநாட்டுக்காரர்களுக்குக் கொடுக்கவே இல்லையே. ஆங்கிலேயர்கள் இரண்டாவது, அல்லது மூன்றாவது மொழியைப் படிக்காமலேயே இருக்கிறார்கள். அவர்கள் குருடாகிவிட்டார்களா என்ன? இரண்டாவது மொழியான ஆங்கிலம் போதும் உலக அறிவைப் பெற.

கரந்தை ஜெயக்குமார் said...

இந்தி இந்தியா முழுமையும் பேசப்படுகிறது என்பதே தவறான கருத்து

vimalanperali said...

ஒன்றை கற்றுக்கொள்வது வேறு,
ஒன்றை திணிப்பது வேறு,

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

பன்மொழி அறிவு நல்லதுதான்..ஆனால் தாய்மொழிக்கு முதலிடமும், பிற மொழிகள் அடுத்தும் இருக்கவேண்டும். மொழி திணிப்பும் நன்று அல்ல. தமிழை தமிழ்நாட்டில் அழித்து ஹிந்தியைத் புகுத்தநினைப்பது தவறு.

Post a Comment