அப்போது நான் உயர் நிலைக் கல்வி முடித்து
விடுமுறையில் இருக்கும் நேரம்.
நான் ஆறாம் வகுப்பு படிக்கும் காலத்திலிருந்தே
நூலகம் செல்லும் வழக்கம் இருந்ததால்
இந்த விடுமுறைக் காலத்தில் காலை
எட்டும் மணிக்கு நூலகம் திறக்கும் பொழுதில்
உள்ளே நுழைந்தால் மதியம் அடைக்கும் வரை
அங்கேதான் எனக்கு ஜாகை
பள்ளி இறுதி வகுப்பு முடித்திருந்தாலும்
டிராயர் சட்டையில்தான் இருப்பேன் என்பதால்
என்னைச் சிறுவனைப் போல்தான்
எல்லோரும் மதிப்பர்.
அதன் காரணமாகவே அவ்வப்போது
நூலகத்திற்கு யாரும் வந்தால்
டீ வாங்க நூலகர் என்னைத்தான் அனுப்புவார்..
நானும் சலிக்காது எத்தனை முறை என்றாலும்
கடைக்குச் சென்று வருவேன்
அதற்குக் காரணமிருந்தது..
அப்போது நூலை வீட்டுக் கொண்டு சென்று
படித்து வர டோக்கன் பதியவேண்டும்
அதற்கு ஐந்து ரூபாய் ஆகும்..
நான் அந்த டோக்கன் போடாமலேயே
புத்தகம் எடுத்துச் சென்று படிக்க நூலகர்
எனக்கு சிறப்பு அனுமதி தருவார்...
எங்கள் நூலகர் எழுத்தாளராகவும் இருந்ததால்
ஆகச் சிறந்த நூல்கள் பலவற்றை அரசு
ஒதுக்கீட்டின்படி இல்லாவிட்டாலும் கூட
ஊரில் நன்கொடை வசூலித்து வாங்கி
நூலகக் கணக்கில் சேர்த்து வைப்பார்..
அதன் காரணமாகவே நோபல் பரிசு
பெற்று பல நாவல்களின் தமிழ்ப் பதிப்பை
அந்த வயதிலேயே படிக்கும் வாய்ப்புக்
கிடைத்தது ( உ/ம் கடலும் கிழவனும்/
தாசியும் தபசியும் /சித்தார்த்தா )
நான் தேர்ந்தெடுத்துப் படிக்க எடுத்துச் செல்லும்
நூல்களைத் தெரிந்து கொண்ட நூலகர்
எங்கள் ஊரில் அப்போது ஆங்கில இலக்கியம்
பட்டப் படிப்பும்/தமிழ்ப் பட்டமேற்படிப்பும்
படித்துக் கொண்டிருந்த இருவரிடம் என்னை
அறிமுகப் படுத்திவைத்தார்...
அவர்களுடன் பழகிய பழக்கத்தில் அவர்கள்
நூலக நேரம் முடிந்தது அருகில் இருந்த
கால் நடை மருத்துவ மனைக்குச் செல்வர்
அப்போது என்னையும் வரச் சொல்லி
அழைத்துச் செல்வர்..
அப்போது அந்த மருத்துவ மனையில்
மருத்துவராக எழுத்தாளர் ஜெயந்தன் அவர்கள்
இருந்தார்கள்.அப்போது அவர் குறித்து
அதிகம் தெரியாது என்றாலும் கூட
அவர்களது பேச்சின் மூலம் அவரையும்
அப்போது அந்த காலக் கட்டத்தில்
இலக்கிய இளவல்களாக இருந்த
பாலகுமாரன்..தி/ச.ராசு/ அம்பை
இன்னும்பல எழுத்தாளர்கள் குறித்த
செய்திகளை அறிந்து கொள்ளவும்
அவர்களுடைய படைப்புகளை படிக்கும்
ஆர்வமும் கூடியது..
இப்படியாக நாட்கள் கடந்து கொண்டிருந்த
அந்தக் கோடை விடுமுறை நாளில்
பட்டமேற்படிப்புப் படித்துக் கொண்டிருந்த
நண்பருக்கு ஒரு ஆசை தோன்றியது
( தொடரும் )
6 comments:
அருமையான நூலகர்... இனிய நினைவுகள் அருமை...
நினைவுகள் தொடரட்டும். நீங்கள் சொல்லும் நூலக அனுபவங்கள் எனக்கும் உண்டு.
சிறப்பான தொடக்கம். நினைவலைகள் நன்று.
நூலகர் - இப்படியானவர்கள் நிறையவே தேவை.
நல்ல நினைவலைகள். அருமை. நல்ல நூலகர். தொடருங்கள்.
துளசிதரன்
நல்ல நூலகர். நூலக அனுபவங்கள் வெகு சுவாரசியமாக இருக்கிறது. எழுத்தாளர் ஜெயந்தன் கால்நடை மருத்துவராக இருந்தாரா?
கீதா
கீதா
ஆம்...
Post a Comment