Wednesday, May 26, 2021

முதல் பிரசவம் ( தொடர்ச்சி ) 2/---

 ஆம் தமிழ் இலக்கிய மேற்படிப்புப் படித்துக்

கொண்டிருந்த நண்பர்  நாங்கள் ஜெயந்தன்

அவர்களைச் சந்தித்துத்

திரும்பிக் கொண்டிருந்த ஒரு நாளில்..

" பிறர் விளையாடுவதையே இரசித்தபடி இருந்தால்

நாம் என்றுதான் விளையாடுவது " என்றார்


நாங்கள் ஒன்றும் புரியாதபடி அவரைப் பார்த்தோம்


அவர் சிரித்தபடி" ஆம் நாம் பிறர் எழுதுவதையே

படித்தபடி பொழுதைக் கடத்திக் கொண்டிருந்தால்

நாம் என்றுதான் எழுதுவது " என்றார்..


"எழுதலாம்தான் ஆனால் அதை யார் படிப்பது ?"

என்றார் பட்டப்படிப்புப் படித்துக் கொண்டிருந்த

நண்பர்..


" நீ எழுதுவதை நான் படிக்கிறேன். 

நான் எழுதுவதை நீ படி..

நாம் எழுதுவதை நூலகம் வரும் நம்

நண்பர்கள் படிக்கட்டும் பின்

படிப்படியாய் ஊர்க்காரர்களை படிக்க வைப்போம் "

என்றார்...


பின் அவர் வழிகாட்டுதலின் படி ஒரு

கையெழுத்துப் பிரதி வெளியிடுவதென்றும்

ஒரு பிரதியை நூலகத்திலும் மற்றோரு பிரதியை

நண்பர்களின் சுற்றுக்கு விடுவதென்றும்

அதற்கு "புதுப் புனல் " எனப் பெயரிடுவது

எனவும் தீர்மானமாயிற்று...


இலக்கியக் கட்டுரையை பட்டமேற்படிப்புப்

படித்துக் கொண்டிருந்த நண்பர் எழுதுவது

என்று தீர்மானமாயிற்று..


(அவர்தான் பின் நாளில்  (எங்கள் ஊரில் 

முதன் முதலாக) முனைவர் பட்டம்பெற்று

மதுரைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஆன

முனைவர் திரு. சேதுப் பாண்டியன் அவர்கள் )


சிறுகதையை ஆங்கில இலக்கியத்தில்

பட்டப்படிப்புப் படித்துக் கொண்டிருந்த நண்பர்

எழுதுவது எனத் தீர்மானம் ஆயிற்று


(இவர்தான் எங்கள் ஊரிலிருந்து கணையாழில்

படைப்புகள்  வரும்படியாக தரமான படைப்புகளை

பின்னாளில் வழங்கிய படைப்பாளி....

கவிஞர்..சிறுகதை எழுத்தாளர். 

திரு. காண்டீபன் அவர்கள்.


.முன்பு கணையாழியில்\

அவ்வாண்டில் வந்த கதைகளில் சிறந்த கதை\

ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கௌரவிப்பார்கள்

அதில் ஒரு வருடம் அவருடைய "ஒன் பீரியட்"

என்கிற தேர்ந்தெடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது

குறிப்பிடத் தக்கது )


எங்களுடன் என்னைப் போல உயர்கல்வி

முடித்திருந்த நண்பரும் இணைந்து கொண்டார்

அவர்  நீங்கள் எதை எழுத வாய்ப்புத்

தருகிறீர்களோ அதை

எழுதுகிறேன் என அடக்கமாய்ச் சொல்லி

நிறுத்திக் கொண்டார்..அவர் நிறைகுடம்

என்பது போகப் போக எங்களுக்கு

மட்டுமல்ல எங்கள் ஊருக்கே புரிந்தது

ஆம் அவர்தான் எங்கள் ஊரில் முதன்முதலாக

ஐ.ஏ..எஸ் என்னும் உச்சம் தொட்ட

திரு.அழகர்சாமி அவர்கள்...


இப்படியாக பின்னாளில் ஊருக்குப் பெருமை

சேர்க்க இருந்த ஜாம்பவான்கள் இடையில் நானும்

இருந்தேன்..


எல்லோருக்கும் எல்லாம் ஒதுக்கீடு செய்தபின்

மீதம் இருந்தது அட்டைக்கு ஓவியம்

வரைவதும் கவிதையும் தான் பாக்கி

இருந்தது....


"ஓவியத்திற்கு நம் பள்ளி ஓவிய ஆசிரியரை

அணுகி நன்றாக வரையக் கூடிய  மாணவர்

ஒருவரை ஏற்பாடு செய்யலாம்.

கவிதையை நீயே எழுதிவிடு " எனச்

சொன்னதும் நான் மிரண்டு போனேன் ...


(தொடரும் )

3 comments:

ஸ்ரீராம். said...

சுவையான அனுபவங்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

எத்தனை வல்லவர்கள் சூழ்ந்து இருந்துள்ளீர்கள்...!

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா... நீங்களும் உங்களைச் சுற்றி இருந்தவர்களூம் எத்தனை திறமைசாலிகள்.

சிறப்பான, சுவையான அனுபவங்கள் தான். தொடரட்டும் அனுபவங்களின் பகிர்வு. மேலும் படிக்கக் காத்திருக்கிறேன்.

Post a Comment