Saturday, May 29, 2021

முதல் பிரசவம் ( 6 /- )

 11 ஆம் வகுப்பில் பிரிட்டனில் தொழிற்புரட்சிக்

குறித்து பாடம் எடுத்த எங்கள் சரித்திர ஆசிரியர்

எங்களுக்கு புரிதலும் ஈடுபாடும் வேண்டும் 

என்பதற்காக..


பிரிட்டனில் தொழிற்புரட்சி தோன்றியதும்

எப்படி விவசாயம் முக்கியத்துவத்தை 

இழக்க ஆரம்பித்தது... 

புதிதாக எப்படி ஒரு புதிய தொழிலாளி முதலாளி இனம்

உருவானது என்பதை. எங்கள் ஊர் நிகழ்வுடன்

ஒப்பிட்டு அருமையாகப் பாடம் நடத்துவார்..


அதன் காரணமாகவே என்னால் எங்கள் ஊர்

குறித்து ஒரு கழுகுப்பார்வையிலும்

அணுக்கப் பார்வையிலும் மிகச் சரியாக

உற்று நோக்க முடிந்தது.. 

புரிந்து கொள்ளவும் முடிந்தது


ஆம் முற்றிலும் விவசாயம் சார்ந்தே அனைத்துமாக

இருந்த எங்கள் ஊரில் முதன் முதலாக

ட்ர்க்கி டவல் என்னும் பூத்துண்டு தறியை

ஒருவர் போட ஆரம்பித்தார்...


பத்துக்கும் மேற்பட்டத்தறி ஒரே இடத்தில் போட்டதால்

அது தொழிற்கூடம் போல ஆக ...

அதன் தொர்ச்சியாய் 

கணக்குப் பிள்ளை/ தினக் கூலி வாரக் கூலி மாதக் கூலி/ 

இத்யாதி இத்யாதி சமாச்சாரங்கள் ..

அந்த முதலாளியின்  பொருளாதார வளர்ச்சி....


இப்படிப்பலப் பல விஷயங்கள் கவர்ச்சிகரமானத்

தோன்றியதால் தனியாக குடிசைத் தொழில் போல

ஒருதறி வைத்து வேலை செய்து கொண்டிருந்த

செட்டியார்களில் பலரும் ஜக்காட் எனும்

டர்க்கித் தறிக்கு மாற.ஆரம்பித்தார்கள்...


அதுவரை நிலச் சுவான்தார்களையே நம்பி இருந்த

கூலி கூட அவர்களது மனோபாவம் பொருத்துப்

பெற முடிந்த நிலையில் மௌனமாக சகித்துக்

கொண்டிருந்த இளைஞர்களின் கவனம்

தறிப் பக்கம் திரும்பத் துவங்கியது


அதன் காரணமாக மெல்ல மெல்ல எங்கள் ஊர்

குடியானவர்கள் ஊர்என்கிற முகம் கலைத்து 

தொழில் நகரமாக மாறத்துவங்கியது..


மாதக் கணக்கில் உழைத்துப் பெறுகிற

சம்பளத்தை பதினைந்து நாளில் பெற முடிந்ததும்

அதையும் உரிமையுடன் பெற முடிந்ததும்


மெல்ல மெல்ல அதிக இளைஞர்களை 

ஜாதி வேறுபாடின்றி தறியின் பக்கம் இழுக்க/

பணப் புழக்கம் அதிகரிக்க...

அதன் தொடர்ச்சியாய் ஊரிலேயே 

செலவழிக்கும்படியான வாய்ப்புகளும் பெருக..

அதன் நிழலாய் பற்றாக் குறையும் வளர..

அதன் காரணமாய்க் கூலி உயர்வு குறித்த

எண்ணங்களும் முயற்சிகளும் சச்சரவுகளும்

போராட்டங்களும் தலையெடுக்கத் துவங்க....


இதனைத் தீர்க்கும் சாமர்த்தியம் விவசாய

விஷயங்களில் இருந்த அளவு இந்தத்

தொழிற்பிரச்சனைகளைத் தீர்க்க 

காங்கிரஸ் மற்றும் தி.மு.க இயக்கம்

சார்ந்தவர்களுக்கு உதவாததால்....


அந்த வெற்றிடத்தை நிரப்பும் திறனும்

இந்தத் தொழில் சார்ந்த சூட்சுமங்களும்

அனுபவமும்  உடையவர்கள் தேவைப்பட்டார்கள்


அதற்கு ஏற்கெனவே கைத்தறி நகராகவே

இருந்த செல்லூரில் அனுபவப்பட்ட

தொழிற்சங்கத் தலைவர்களின் கவனம்

எங்கள் ஊர்ப்பக்கம் திரும்ப....


கட்சியில் ஏற்கெனவே இருந்தவர்களின்

வயதும் மனோபாவமும் இந்தப் புதிய சூழலுக்கு

பொருந்தாது எனவும் அதற்கு கொஞ்சம்

இளைஞராகவே இருந்தால் நல்லது என

முடிவு செய்து கட்சியின் பகுதி நேரப்பணியாளராகத்

தேர்ந்தெடுக்கப் பட்டவர்தான் தோழர் வாசு..


இவர் மிகச் சிறிதாகச் செய்து கொண்டிருந்த

சோப் பவுடர் மற்றும் பினையில் வியாபாரத்தை

வீடு வீடாகச் சென்று விற்பதுடன்

கட்சி இதழ்களான தீக்கதிர் செம்மலர் ஆகியவைகளை

கேட்பவர்களுக்கு வினியோகிப்பவராகவும் இருந்தார்.


நடு நிலைப் பள்ளி அளவே படித்திருந்தாலும் கூட

உலக அரசியல் பேசுவதிலும் ,ஜெயகாந்தன் படைப்புகள்/

வால்கா முதல் கங்கை வரை / தாய்/

முதலான நூல்களை விமர்சன நோக்கில்

விரிவாகப் பேசும் அளவு இலக்கிய அறிவும்

பெற்றிருந்தது அப்போதே எங்களுக்கு

ஆச்சரிய மூட்டும் விஷயமாகவே இருந்தது.


என்வே அவர் எங்கள் கைப்பிரதி குறித்து

சொல்ல முனைந்த விஷயத்தில் நாங்கள் அலட்சியம்

கொள்ளவில்லை..


கவனமாகவே கேட்டுக் கொண்டிருந்தோம்

அது பயனுள்ளதாகவும் இருந்தது..


ஆம் கைப்பிரதியின் உள்ளடக்கத்தை

முற்றிலும் மாறச் செய்யக் கூடியதாகவுமே

இருந்தது.. 


( தொடரும் )

3 comments:

வெங்கட் நாகராஜ் said...

ஒரு நகரம் அடைந்த மாற்றம் - எத்தனை விஷயங்கள். மேலும் தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.

ஸ்ரீராம். said...

அவரைப்பற்றிய அறிமுகம் கொஞ்சம் நீண்டு விட்டது!   எனினும் சுவாரஸ்யம்.

திண்டுக்கல் தனபாலன் said...

நிகழ்வுகள் பல தகவல்களை தருகிறது... அருமை...

Post a Comment