இரண்டு நாட்களாக
என்னை நிம்மதியாய் இருக்கவிடாது
உறுத்திக் கொண்டே இருக்கிறது "அது"
"அது" கவிதைக்குச் சரியாய் வருமா ?
இல்லை கதையாகத்தான் சரியாய் வருமா ?
அதிகம் யோசிக்க வைக்கிறது "அது "
எப்படி யோசித்தபோதும்
"அது " இரண்டுக்கும் சரியாக வரும் போலவும்
இரண்டுக்கும் சரியாக வராது போலவும் தோன்ற
மெல்ல அதை எடுத்து
வழக்கம்போல்
மனப்பரணில் கிடத்தி வெளியேறுகிறேன்.....
ஏற்கெனவே கிடத்தப் பட்டவைகளின்
ஏக்கப் பார்வைகளைத்
வலுக்கட்டாயமாய்த் தவிர்த்தபடி...
8 comments:
அருமை...
கவிதையா, கதையா - இரண்டுமே இல்லை என ஆகிவிட்டதே. கடைசி வரிகள் நன்று.
தொடரட்டும் பதிவுகள்.
மனப்பரணில் இப்போது கிடக்கும் அது என்றேனும் வெளியில் வராமல் போகுமா என்ன?!
துளசிதரன்
அருமையா சொல்லிவிட்டீர்கள். இப்போதைக்கு அது இரண்டுமாகவும் இல்லை. வரட்டுமே! இப்போதில்லை எனினும் எப்போதேனும்!
கீதா
மனப்பரணிலிருந்து மீண்டும் இறங்கிவந்து பதிவேற்றத்தில் கால் பதிக்காமல் போகுமா என்ன? கதை கவிதை கட்டுரை 'எது'வானாலும் சீக்கிரம் "அது" வரவேண்டும்.
பரணில் இருந்து இறங்கட்டும்
பார்ப்பவர்கள் கருத்துக்குள் பதியட்டும்
எழுதியவுடன் உங்கள் பணி முடிந்து விட்டது
தீர்மானிப்பது வாசகர்களே .
அது கவிதையாகலாம் இல்லை கதையாகலாம்
மிக அருமை!
அருமை
Post a Comment