Friday, May 14, 2021

மாடர்ன் எமன்...

 நம் உயிரெடுக்கும் எமன்

முன்போல பத்தாம்பஸலி இல்லை

அவன் மார்டன் ஆகி மாறி

இரண்டாண்டுகளுக்கு மேலாகிவிட்டது


எனக்கென்ன என நகரும் எருமையும்

எட்டி வீசமுடியாத பாசக்கயிறும்

தன் தொழிலுக்கு ஆகவில்லை என....


பிடித்துச் செல்லும்படியாக இருந்த

தன் உடமைகளை தூரக்கடாசிவிட்டு


அள்ளிச் செல்லும்படியான

கண்ணுக்குத் தெரியா 

கனரக வாகனத்திலும்


கொத்துக் கொத்தாய் 

அன்றாடம் அள்ள உதவும்

கொரோனா கிருமியுடன் தான்

அனுதினமும் அவன் வலம் வருகிறான்...


அவன் மாடனாக மாறியதை அறியாது

பத்தாம் பசலியாய்

வீடுவிட்டு வீதியில் திரிந்து

நாம்தான் 

அன்றாடம் பலியாகிக் கொண்டிருக்கிறோம்


மார்க்கண்டேயன்

சிவலிங்கத்தை அணைந்துத் தன்னைக்

காத்துக் கொண்டது போல்


தனிமைப்படுத்துதலை

இடைவெளி கடைப்பிடித்தலை

சுத்தம் பேணுதலை

அரவணைத்துக் கொண்டால் ஒழிய

நாம் தப்பிக்க வழியில்லை...


புரிந்து கொண்டால்

நாம் புத்திசாலிதனமாய் 

பிழைத்துக் கொள்ளலாம்


எமனை மீண்டும்

பத்தாம்பஸலியாக்கி

எருமையில் அலையவிடலாம்


இல்லையெனைல்...

இப்போது போல்

மர நுனியில் அமர்ந்து

முன் வெட்டும் முட்டாள் போல்


விரைவாக மருத்துவமனைகளில்

படுக்கைகளைக் கூட்டுவதில்

ஆக்ஸிஜன் ஆலைகள்

தகனமேடைகள் அதிகம் அமைப்பதில்

நாம் தான் விற்பன்னர்கள் என

மார்தட்டியபடி...


நம் உறவுகளையும்

நம் நண்பர்களையும்

முடிவாக நம்மையும்

இந்த மாடர்ன் எமனுக்கு

காவு கொடுக்கவேண்டியதுதான்..


எது வசதி........(அ ) எது சரி

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சும்மா இருப்பதே சரி...

ஸ்ரீராம். said...

எமன் அமென்ட்மென்ட்  போட்டு பழைய ஆர்டர்களை மாடிஃபை செய்து விட்டான் போல..   முன்னர் போட்ட மரண ஆர்டர்கள் காலாவதியாகி விட்டன.  கட்டுப்படியாகவில்லையாம்.  பாரம் தாங்காத பூமி கதறினாளாம். சீனாக்காரனிடம் பொறுப்பை ஒப்படைத்து அவசர அறுவடைக்கு ஆவண .செய்திருக்கிறானாம்,

bandhu said...

கடைசியில் எமனும் சீனாவிற்கு அவன் வேலையை Outsource செய்துவிட்டான்!

Post a Comment