Sunday, May 16, 2021

இரு புதிருக்கு ஒரே விடைபோல

 கனத்த

வெறுமை நிறைந்த அமைதியை

மயான அமைதி என்போம்


பரபரப்பும்

நெருக்கடியும் நிறைந்த இடத்தை

பிரதான சாலை என்போம்


இப்போது இரண்டும் இடம் மாறி


மயானம்

பரபரப்பான சாலையாய்


சாலைகள்

வெறுமை சூழ்ந்த மயானமாய்..


தண்ணீரில் விளையாடிய மீனை

தரையில் போட்ட கதையாய்..

தரையில் உறவாடிய மானை

தண்ணீரில் போட்ட கதையாய்...


தடுமாறுகிறோம்

தத்தளிக்கிறோம்

புரியாத புதிருக்கு விடைதேடி...

புலராத இரவுக்குள் ஒளிதேடி....


ஆயினும் இப்போதும்

எதுவும் கையை மீறவில்லை

கரையைத் தாண்டவில்லை


பரவக் காரணமான நாமே

இப்போது முயன்றால் கூட

அதன் அழிவுக்கும் காரணமாகிவிடக் கூடும்..


ஆம்..இரண்டு புதிருக்கு

விடை ஒன்றே என்பதுபோல்

இருவூருக்கும் வழி ஒன்றே போல்


கொடிய இந்த இரு சூழல்

கூண்டோடி அழிய ஒழிய

அதற்கான வழியும் ஒன்றே


ஆம் இந்தக் கொடிய

கொரோனா சங்கிலிப் பின்னலை

தகர்த்தெரிந்தாலே போதும்


ஆம் சமூக விலகலை

ஒரு நொடியும் விடாது

கடைபிடித்தாலே போதும்....


இனியேனும்

இதைச் செய்யப் பயில்வோம்

நம் சமூகம்

விரைவில் உய்ய முயல்வோம்

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஆம் உண்மை...

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பாகச் சொன்னீர்கள் ஐயா. தீநுண்மியின் பரவலைத் தடுப்பது மக்கள் ஒவ்வொருவரின் கையிலும் தான் இருக்கிறது.

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மை
உண்மை

Thulasidharan V Thillaiakathu said...

சமூக விலகல் ஆம் அது தான் தற்போதைய தேவை

துளசிதரன்

Post a Comment