எனக்கு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை
என் மகள் அங்கிருப்பதால் அமெரிக்கா செல்லும்
வாய்ப்புக் கிடைக்கும்.
போனால் ஒவ்வொரு முறையும் ஆறு மாத காலம்
இருந்து வருவேன்.
அடுத்து அடுத்துப் போகையில் ஆச்சரியப்படுகிற
விஷயங்கள் குறைந்து கொண்டே வந்தாலும்
முதல் முறை போயிருக்கையில் பார்க்கும்
எல்லாமே ஆச்சரியம் தருவதாக இருந்தது
அதில் குறிப்பாக போகிற
வழி குறித்தோ/செல்லும் நிறுவனத்தின்
வாடிக்கையாளர் சேவை குறித்தோ
யாரும் யாரிடமும்
எதும் விசாரிக்காது அனைத்து தகவல்களையும்
கூகுள் மேப் மூலம் தெரிந்து கொள்ளும் பழக்கம்
அனைவரிடமும் இருந்தது
ஆச்சரியப்படுத்துவதாகவே இருந்தது..
(அங்கு நம் போல முக்கு ரோட்டில் நிறுத்தி
இருப்பவரிடம் வழி கேட்கும் வாய்ப்பு
அறவே இல்லை என்பதால்
இதை விட்டால் அவர்களுக்கு வேறுவழியில்லை
என்பதும் அதற்குக் காரணமாய் இருக்கக் கூடும் )
அங்கு அவர்களுடன் பழகி எங்கு செல்வதாக
இருந்தாலும் கூகுள் மேப் துணை கொண்டு
செல்வதும் எந்தப் பொருள் வாங்க நினைத்தாலும்
அது குறித்த ரிவியூவை பார்த்துப் பின்
முடிவு செய்வதையும் கொஞ்சம் கொஞ்சமாகப்
பழகிக் கொண்டேன்..
பின் இங்கு ஆறு மாதம் இருக்க நேர்கையில்
எங்கு செல்வதாக இருந்தாலும் நானும் மேப்
பார்த்துச்\செல்லும் பழக்கத்தை
ஏற்படுத்திக் கொள்ளத் துவங்குகையில் தான்
இங்கு அதில் சில பிரச்சனைகள் இருந்தது தெரிந்தது
முக்கியமாக நான் தேடிய பெரும்பாலான
இடங்கள் மேப்பில் இடம் பெறாமல் இருந்தது
சில முறை மேப் சரியான பாதையை விட்டு
சுற்றுப் பாதையை அது காட்டியது
ரிவியூவிலும் அந்த நிறுவனத்தாரே
ஏற்பாடு செய்து மிகச் சிறப்பானதாக
பதிவு செய்திருப்பது அந்த நிறுவனத்தின்
செயல்பாடுகளை அறிந்த பின் புரிந்து கொள்ள
முடிந்தது..
வெளி நாட்டினரைப் போல மிகச் சரியாக
சேவையின் தரம் குறித்துப் பதிவு செய்யாததால்
நேருகிற இது போன்ற குழப்பத்தையும்.....
அசட்டையாக வழி குறித்துப் பதிவு
செய்பவர்களால் நேருகிற குழப்பத்தையும்
கோளாறு சொல்லிக் கொண்டிராமல்
நாமே இது குறித்து நிறையப் பதிவு\செய்தால்
என்ன என்கிற எண்ணம் வர நானே
பதிவு செய்யத் துவங்கினேன்
நான் எங்கு சென்றாலும் அங்கு செல்லும் பாதை/
அங்கு எடுத்த புகைப்படங்கள்/
அங்கு கிடைக்கும் வசதி அல்லது வசதிக் குறைபாடு
முதலான விஷயங்களை மிகச் சுருக்கமாகவும்
மிகச் சரியாகவும் பதிவு செய்யத் துவங்கினேன்
ஆறாயிரம் வீடுகள் உள்ள எங்கள் பகுதிக்க
\தெருப்பெயர்களே இல்லை.வெறும் எண்தான்
இதை கொண்டு புதிதாக வருபவர்கள் வீட்டைக்
கண்டுபிடிப்பது சிரமாக இருந்தது
இதைச் சரிசெய்யும் விதமாக எல்லா
தெரு முனைகளிலும் உள்ள கடைகள்
மற்றும் முக்கிய நிறுவனங்களை கூகுளில்
பதிவேற்றம் செய்துள்ளேன். அதன் காரணமாக
இப்போது யார் புதிதாக எம் பகுதிக்கு வந்தாலும்
அந்தக் குறிப்பிட்ட லொகேசனை அனுப்பி
அதிலிருந்து வீட்டின் இருப்பிடத்தை
மிகச் சரியாகச் சொல்லிவிட முடிகிறது
இப்படிப் பல விஷயங்களில் இருக்கும்
கோளாறுகளை குறை சொல்லிக் கொண்டிராமல்
கோளாறுகளைச் சரிசெய்ய நம்மால்
ஆனதைச்\செய்வோம் என ..
முயல் போல்
இல்லையென்றாலும் ஆமை போல்
தொடர்ந்து செய்ததால் இன்றைய நிலையில்
என் பக்கத்தினைப் பார்த்தவர்களின்
எண்ணிக்கை சுமார் எழுபத்திரண்டு இலட்சம்
இது இந்த ஆண்டுக்குள் ஒரு கோடியைத்
தொடும் வாய்ப்பிருக்கிறது
இதை இங்குப் பதிவதன் நோக்கம்
வாய்ப்புள்ளவர்கள் தத்தம் பகுதிகளையும்
இது போல் கூகுள் மேப்ப்பில் இணைக்கவும்...
வியாபார நிறுவங்களின் வாடிக்கையாளர்களின்
சேவையின் தரத்தை மிகச் சரியாகப்
பதிவும் செய்தால் அது நிச்சயம்
அனைவருக்கும் பயன்படும் ..
சமயத்தில் நமக்கே கூட.......
(இத்துடன் தகவலுக்காக என் கூகுள் கைட்
முகப்புப் பக்கத்தை இங்கே
பதிவு செய்துள்ளேன் )
8 comments:
நல்லதொரு முயற்சி பாராட்டுக்கள்
வாழ்த்துகள் ஐயா...
இங்குள்ள இடங்கள் பலவற்றை நானும் எப்போதோ பதிவு செய்துள்ளேன்...
Excellent initiative! சொல்லினால் மட்டும் இல்லாமல் செயலிலும் பிரமாதப்படுத்துகிறீர்கள்!
Excellent job..... congrats
நல்லதொரு முயற்சி. பாராட்டுகள்.
நல்ல செயல் முயற்சி. வாழ்த்துகள், பாராட்டுகள்
துளசிதரன்
சிறப்பான விஷயம். பாராட்டுகளும் வாழ்த்துகளும். இந்தியாவில் பல சமயங்கள் கூகிள் மேப் சுத்தலில் விட்டு விடும்! :) இப்படி பதிவு செய்வது நல்லது.
நல்ல முயற்சி .
பாராட்டுக்கள்.
Post a Comment