அதிகம் படிச்ச மூஞ்சூறு
கழனிப்பானையிலே என ஒரு பழமொழி உண்டு
மூஞ்சூறு எங்க படிக்கப்போகப்போகுது ?
கிராமங்களில் பானையில் சோறாக்குகையில்
அதிகம் கொதித்த முன்சோறு விரைவிரையாய்ப் போய்
உண்பதற்கு லாயக்கற்றுப் போகும்
அதை எடுத்து கழனிப்பானையிலே மாட்டுக்கென
போட்டுவிடுவார்கள்
ஒரு அளவு மீறி அலட்டிக் கொள்கிற எதுவும்
பயன்படாமல் ஒதுக்கப்பட்டுவிடும் என்கிற
அர்த்தத்தில்தான்....
அதிகம் படிந்த முன்சோறு கழனிப்பானையிலே
எனச் சொல்வார்கள்
அதுதான் காலப் போக்கில் அதிகம் படிச்ச மூஞ்சூறு
கழனிப்பானையிலே என மாறி நம்மைக் குழப்புகிறது
7 comments:
முன்சோறு மூஞ்சூறு ஆன கதை... இது வரை அறியாதது. இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
இது வரை அறியாத தகவல் மற்றும் கதை விளக்கம். நன்றி பகிர்ந்தமைக்கு
துளசிதரன்
கீதா
அருமை
'அதிகம் படிச்ச' 'ஒரு அளவு மீறி அலட்டிக் கொள்கிற எதுவும்
பயன்படாமல் ஒதுக்கப்பட்டுவிடும் ' .. ஏதோ ஒரு அமைச்சரை பற்றி சொல்வது போல் தோணுகிறது!
முன்சோறு மூஞ்சூறு ஆகிவிட்டதா? ஹா.. ஹா.. ஹா... வெங்கட் போல், துளஸிஜி, கீதா போல் இந்த விளக்கம் நானும் இப்போதுதான் அறிகிறேன்.
மிக அருமையான விளக்கம்! இதுவரை தெரியாததும்கூட!
அருமை...
Post a Comment