ஒரு நிலம் வாங்குவதற்கு முன்பு
என்ன செய்ய வேண்டும்?
1.1975 முதல் கணினியில் வில்லங்கச் சான்று (Encumbrance Certificate) போட்டுப் பார்க்க வேண்டும்;
1975 முதல் பின்னோக்கி,
1908 அல்லது 1858 வரை manual EC கட்டாயம் போட்டுப் பார்க்க வேண்டும்.
நிலத்தின் மதிப்பு 0 சுழியம் என்று இருந்தால்,
அது நிலக்கொடை இயக்கத்தில் நன்கொடையாகத் தரப்பட்ட நிலம்; அல்லது புறம்போக்கு
அல்லது வில்லங்க நிலம்.
வாங்காதீர்.
2. இரட்டை ஆவண நிலம்.
Power of attorney (POA யோடு
வரும் நிலத்தை வாங்காதீர்.
வாங்கியே தீர வேண்டும் என்றால்,
அதன் நகல் வாங்கி
அதில் குறிப்பிடப்படுள்ள முகவரியில் power எழுதிக் கொடுத்தவரை
நேரில் சந்தித்துப் பேசுங்கள்.
செல்லக் கூடியாதா என்று கேளுங்கள்.
அதாவது முகவரும் (agent )விற்கலாம், பவர் எழுதிக் கொடுத்தவரும் விற்கலாம்.
அப்படி விற்றால்
அது இரட்டை ஆவணம்.
வாங்காதீர்
3.உயில் பத்திர நிலம்.
எது இறுதி/கடைசி உயில் என்று கவனமாகப் பாருங்கள்.
பதிவு செய்யபட்ட உயில் மூலம் விற்பனை நடந்தால்,
அது ஒரு நில விற்பனைப் பத்திரம்.
பதிவு செய்யப்பட்ட உயிலுக்கு பிறகு வேறு ஏதாவது பதிவு செய்யாத உயில் இருக்கின்றதா? என
நிலம் விற்பவரின் உறவினர்களைக் கேட்க வேண்டும்.
பதிவு செய்யாத உயில் மூலம் விற்றால் அது செல்லாது.
4. ஏற்பாட்டு ஆவணம் Settlement பத்திரம் மூலம் நிலம் விற்பனைக்கு வந்தால், செட்டில்மெண்ட் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றதா என்று கவனமாகப் பாருங்கள்.
1990 முதல் 2015 வரை பத்திரப்பதிவு அலுவலகங்களில் செட்டில்மெண்ட் ரத்து செய்து
நிலத்தில் மேலும் சிக்கல் ஆக்கி விட்டாரர்கள்.
செட்டில்மெண்ட் பத்திரத்தை
நீதிமன்றம்தான் ரத்து செய்ய முடியும்.
EC யில் SRO=Sub register Office மூலம் ரத்து ஆகி இருந்தால்
அந்த நிலத்தை வாங்காதீர்.
உயில் பத்திரம் தாய் பத்திரம் ஆக இருந்தால்,
அந்தத் தாய் பத்திர உயில் மூலம்
விற்று இருந்தால்,
அந்தப் பத்திரத்துக்கு இணைப்பு உள்ளதா என்று பாருங்கள்.
5. 1987-UDR, 1995-நத்தம் நிலவரி திட்டம் முன்பு
நிலம் பத்திரத்தின் மூலம் வாங்கியவர் அதை revenue record எனப்படும் பட்டாவில்,
தற்போதைய உரிமையாளர் தான்தான் current owner என்பதைப் பதிவு செய்யாமல் இருந்தால்,
1987க்கு முந்தைய உரிமையாளர்,
அவரின் வாரிசுகள் பழைய பட்டா மூலம் விற்றால்.
அடுத்து நிலம் வாங்கி
பட்டாவில் பதிவு செய்யாமல் விட்டுவிட்ட
உண்மையான உரிமையாளர் அல்லது
அவரின் வாரிசுகள் விற்று இருந்தால்
அதுவும் இரட்டை ஆவணம்.
செல்லாது.
6.வடிவம், உருவ மாற்றம் செய்த நிலமா? (Layout frame)
நத்தம் நிலமா, layout பிளாட்டா என்று பாருங்கள்.
DTCP approved or CMDA approved என்றால்
அவர்களுடைய இணையதளங்களில்
சரி பாருங்கள்.
கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் நேரில் LPA (local planning authority என்னும் DTCP அல்லது CMDA அலுவலகத்திற்குச் சென்று சரி பாருங்கள்.
அவர்களுடைய உரிமம் பெற்ற பிறகும் கூட
வரைபடத்தில் திருத்தம் செய்து இருப்பார்கள்
அதைச் சரி பாருங்கள்.
Layout ப்ளூ பிரிண்ட் இருந்தால் கொண்டு சென்று,
பூங்கா பள்ளி கட்டுவதற்கு
இடம் விட்டு இருக்கின்றார்களா என்று கேளுங்கள்.
நிறையப் பேர்
பூங்கா பள்ளி கட்ட இடம் ஒதுக்கி உரிமம் வாங்கிய பிறகு
அந்த வரைபடத்தைத் திருத்தி
அந்த இடங்களையும் மனைகளாகக் காட்டி விற்று விடுவார்கள் .
ஊர் ஆட்சி மன்றங்கள் approved இடங்கள் வாங்காமல் இருப்பது நல்லது. ஏனென்றால், வாங்கிய பின்பு
நீங்கள்தான் நிலத்தை வரையறை செய்ய அலைய வேண்டும்.
நத்தம் நிலம் என்றால்
VAO வைப் பார்க்க வேண்டும்.
உங்கள் சர்வே எண் UDR காலத்து 1987 ஆம் ஆண்டின் சிட்டா அடங்கலை, (FMB) நேரில் சென்று கேளுங்கள்.
இனாம் கிராமம் ஆக இருந்து
இனாம் ஒழிப்பின் மூலம்
நத்தம் நிலவரித் திட்டத்தின் கீழ் பட்டா வழங்கப்பட்ட நிலமா என்று பாருங்கள்.
அந்தப் பட்டா UDR காலத்து சிட்டா அடங்கல் பதிவு ஆகி இருக்கின்றதா? என்று பாருங்கள்.
நேரில் கேட்டும் VAO தரவில்லை என்றால்
RTI மனுவில் கேளுங்கள்.
RTI யில் கட்டாயம் கொடுக்க வேண்டும்.
4. EB, சொத்து வரி விற்பவர் பெயரில் இருக்கின்றதா? என்று பாருங்கள்.
இல்லை என்றால் மாற்றி,
அதன் பிறகு விற்கச் சொல்லுங்கள் .
5. நிலம் விற்பவர் பெயரில்
பட்டா இருக்கின்றதா?
கூட்டுப் பட்டா நிலம் எனில்,
பங்குதாரர்களுள்
யாருக்கு எவ்வளவு இடம்,
எந்த இடம் என்று பிரித்து இருக்க வேண்டும்.
பட்டா வாங்குவது நிறைய அலைச்சல்.
அதனால் விற்பவர் பெயரில்
பட்டாவை மாற்றச் சொல்லுங்கள்.
அதன் பின்பு நிலத்தை வாங்குங்கள்.
6. நிலத்தின் வகைப்பாடு கண்டிப்பாகப் பார்க்க வேண்டும்.
நஞ்சை, புஞ்சை,
நத்தம், நத்தம் புறம்போக்கு,
மேய்ச்சல், வாய்க்கால்,
ஓடை புறம்போக்கா,
நெல் போராடிக்கும் இடமா,
விளையாட்டுத் திடல், கோயிலுக்கு ஒதுக்கப்பட்ட நிலமா,
பொதுவில் மாடு கட்ட விடப்பட்ட இடமா, நிலவியல் பாதை(அரசு நிலம் ), நிலவியல் ஓடையா என்று பார்க்க வேண்டும்.
7. பட்டாவின் பயனாளி யார்?
முன்பு அது ஜமீன் நிலமா அல்லது இனாம் நிலமா
அல்லது ரயத்வாரி நிலமா என்று பார்க்க வேண்டும்.
மேஜர் இனாம்
ரயட்வாரி
1802 permanent settlement record காலத்தின்
ஜாகிர் இனாம் ,
ஜமீன் நிலமாக இருந்து
ரயத்வாரி யாக மாற்றம் பெற்றதா என்று பாருங்கள்.
வெள்ளைக்காரன் காலத்தில்
இனாம் ஒழிப்பில் இருந்து
ஜமீன் நிலமாக மாறியதா என்றும் ஆராய வேண்டும்.
இதற்கு VAO, தாலுகா & கலெக்டர் அலுவலகத்தில் இருக்கும்
B-record, OSR, RSR, SLR இன் நகல் தேவை.
உங்கள் நிலத்தின் சர்வே எண் குறிப்பிட்டு ஒரு மனு கொடுத்து,
50 ரூபாய் கட்டி வாங்கிக் கொள்ளலாம்.
------------
Minor இனாம்
விடுதலைக்கு முன்பு பிரிட்டிஷ்காரர்கள் கொடுத்த
DC land (எ) (Depressed Class) நிலமா? என்று பார்க்க வேண்டும்
தொழில் முறை இனாம் நிலம்
தச்சர், கருமான், நாவிதர், காவக்காரன்,கர்ணம்,தலையாரி,
வெட்டியான், சக்கிலியர்,புதிரை வண்ணார் இனாம் நிலமா? என்றும் பார்க்க வேண்டும்.
வெள்ளைக்காரன் காலத்தில்,
ஊழிய மானியங்களாகக் கொடுக்கப்பட்ட
பூசாரி, தேவதாசி,
பூ கட்டும் மானியம் நிலமா? என்று பார்க்க வேண்டும்.
சோஸ்திராம் மானியம் ஒழிக்கப்பட்ட நிலமா?
ஹாஜி இனாம் ஒழிக்கப்பட்ட நிலமா? என்றும் பார்க்க வேண்டும்.
------------
DC அல்லாத பிற இனத்தவருக்குக் கொடுக்கப்பட்ட
குறவர், கள்ளர் (குற்றப் பரம்பரை)
நிலமா? என்று பார்க்க வேண்டும்.
மேற்சொன்ன வகைப்பாடு அனைத்தும் வெள்ளைக்காரன் காலத்தவை.
---------
விடுதலைக்குப் பின் கொடுக்கப்பட்ட Assigment land.
Assignment land (எ ) ஒப்படை பட்டா நிலங்கள் எனில்
அதற்கு உண்டான (HSD பட்டா , D-பட்டா, நமுனா பட்டா, TKT பட்டா,F-பட்டா
B-memo பட்டா, அனுபந்த பட்டா, Assignment land என்னும் ஒப்படை நிலமா என்று பார்க்க வேண்டும்.
SC & ST பிரிவினருக்குக் கொடுத்த
AD assignment Land (Adi Dravidar )பட்டா உள்ள நிலமா என்றும் பார்க்க வேண்டும்.
F-பட்டா.
இது நிலசீர்திருத்தத் துறையால் வழங்கப் பட்டது.
நிலச் சீர்திருத்தத் துறை வேறு
வருவாய்த் துறை revenue வேறு.
ஜமீன் ஒழிப்பில் இருந்த நிலங்களை பயனாளிக்குக் கொடுத்தது என்பதை உறுதிப்படுத்தும் ஆவணமே F-பட்டா.
1970-B-Memo land =பீமா பட்டா.
B memo பட்டா நிலம் விற்பனை க்கு வந்தால் வாங்காதீர்.
அது நில உரிமைப் பட்டா அல்ல.
அது அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவன் என்ற நோட்டீஸ் மட்டுமே.
B-memo நிலத்தில் குடி இருப்பவர்களை எந்தநேரமும் அரசு காலி செய்யச் சொல்லும்.
Assignment பட்டாவில் உள்ள
கண்டிஷன் பார்க்காமல் வாங்காதீர்.
ஒப்படை நிலங்களை அரசாங்கமே திருப்பி எடுத்துக் கொண்டு விட்டாதா என்றும் பார்க்க வேண்டும்.
--------
1956- பூமி தான நிலம்
Manual EC
கட்டாயம் 1950-1965 வரை manual EC போட்டுப் பார்க்க வேண்டும்.
manual EC யில் மட்டும்தான்
பூமி தான போர்டுக்கு,
பெரும் நிலக்கிழார்கள் நன்கொடையாக கொடுத்த தான பத்திரம் (கிரயபத்திரம்) காட்டப்பட்டு இருக்கும்.
பூமி தான போர்டு பெயரில் பட்டா, சிட்டா ஆகியவை மாறி இருந்தால்
VAO அலுவலகத்தின் A-Record இல் காட்டும்.
ஏர் உழவன் பட்டா=பூமி தான நிலத்திற்கு ஆன குத்தகை பட்டா.
Manual EC யில் கிடைக்காத பூமி தான நிலங்களை பற்றிய தகவல்கள் revenue record யில் தான் கண்டுபிடிக்க முடியும்.
பூமி தான நிலம் என்றால்
சென்னை சைதாப்பேட்டை
பனகல் மாளிகையில் உள்ள
பூமி தான அலுவலகத்திற்குச் சென்று, நீங்கள் வாங்க விரும்பும் நிலத்தின் சர்வே எண்
பூமி தான வரையறைக்குள் வருகிறதா என்று பாருங்கள்.
Master ரெஜிஸ்டர் பார்க்க வேண்டும்.
பூமி தான நிலம் வாங்காதீர்.
பூமி தான நிலத்தை
பயனாளி விற்க அதிகாரம் இல்லை. பயனாளிக்குக் குத்தகை உரிமை மட்டுமே உண்டு.
எனவே, அது பூமி தான நிலம் என்று தெரியவந்தால் வாங்காதீர்.
-----------
Zero value நிலம்
-EC யில் நிலத்தின் மதிப்பு Zero மதிப்பு என்று இருந்தால் அது பூமி தானம் & புறம்போக்கு அல்லது வில்லங்க நிலம்.
-----------
கோயில் நிலம் -HR&CE நிலமா
வாங்க விரும்பும் நிலம் கோயில் நிலமா என்று பாருங்கள்.
கோயில் நிலம் என்றால்
பயந்து விடக் கூடாது
அது இறையிலி (100% கோயிலுக்கு சொந்தம்),
தேவதானம், தர்மதாயம் ஆக இருக்கக் கூடாது அவ்வளவே.
கோயில் நிலத்தில் கட்டளை என்று ஒரு பிரிவு உண்டு
இதையும் வாங்கக் கூடாது.
கட்டளை எப்படி உடைக்க வேண்டும் என்று தெரிந்தவர்கள் மட்டுமே வாங்கலாம்.
கோயில் மணியமாக இருந்து ரயத்துவாரி நிலமாக 1963 இல் மாறி இருந்தால்
அது கண்டிஷன் பட்டாவா என்று பார்க்க வேண்டும்.
இந்த நிலம் வாங்கும் போது கவனம் தேவை.
ஏன் என்றால் HR&CE நிறைய நிலங்களைத் திருப்பி எடுத்துக் கொண்டு உள்ளது.
-----------
ஜமீன் & மானியம் முற்றாக ஒழித்தது 1950 to 1960 களில்.
land reforms act.
இதற்கு நிலச் சீர்திருத்தம் என்று பெயர்.
ஜமீன் இடம் இருந்து அரசு எடுத்த உபரி நிலம்
கிராமக் கணக்கில் B register இல் இருந்து
A-register க்கு மாறும் போது
உபரி நிலம் , அனாதீனம், உரிமையாளர்கள் பெயர்கள் மாறி உள்ளது போன்ற சிக்கல் உள்ளதா என்றும் பார்க்க வேண்டும்.
-----
1963 minor இனாம் ஒழிப்புச் சட்டம்
இனாம் ஒழிப்பு to ரயத்வாரி பட்டா. உழுபவனுக்கே நிலம் சொந்தம் திட்டம்
RSLR இல் "கிராமத்தார்" என்று பட்டா தாக்கல் செய்யப்பட்டு
1963 minor இனாம் ஒழிப்புச் சட்டம்
மூலம் ரயட்வாரி பட்டாவாக மாறி
பின்பு 1987 UDR இல்
மீண்டும் RSLR இல் உள்ளது போன்று "கிராமத்தார்" என்று மாறி இருந்தால் அந்த நிலத்தை வாங்காதீர்.
அது தனி நபர் பட்டா என்று மாறி இருக்கின்றதா என்றும் பார்க்க வேண்டும்.
--------
1963 கோவில் நிலம்
(இனாம் ஒழிப்பு சட்டம், ஒழிப்பு மற்றும் ரயட்டுவாரியாக மாற்றுதல்) சட்டம்
தேவதாசி மானியம்
நிபந்தனை பட்டாவாக உள்ள நிலத்தைப் பயன்படுத்தி கொள்ளலாமே தவிர சொந்தம் கொண்டாட முடியாது.
ஊழிய மானிய நிலங்கள்
கண்டிஷன் பட்டா வா இல்லை normal ரயட்வாரி பட்டா நிலமா? என்று பார்க்க வேண்டும்.
இந்த நிலம் வாங்கும் போது
மிகுந்த கவனம் தேவை.
தமிழ் நாட்டின் நில நிர்வாக பற்றிய அறிவு உள்ள ஒரு வழக்கு உரைஞர்தான் உங்களைக் காப்பாற்ற முடியும்
--------
1961 ஒன்றிய அரசு
1972 தமிழ்நாடு நில உச்சவரம்புச் சட்டம்
வரையறைகுள் மாட்டிக்கொண்ட நிலமா என்று பார்க்க வேண்டும்.
UDR லே celing இடம் என்று இருக்கானு பார்க்க வேண்டும்.
Section 37B இல் வந்த நிலமா என்று பார்க்க வேண்டும்.
--------
1976 களின் Urban land seiling act
ULC ஆக்ட் இல் மாட்டி கொண்ட ULC நிலமா என்று பார்க்க வேண்டும்.
ULT என்று குறிப்பு இருந்தால்
சென்னை பரங்கிமலை ரயில் நிலையம் அருகில் உள்ள
உச்சவரம்பு அலுவலகத்தில்
சர்வே நம்பர் கொடுத்து விசாரிக்க வேண்டும்
தெரியாமல் வாங்கி விட்டேன் என்று நில ஆணையருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
ULC நிலம் தவறுதலாக நீங்கள் வாங்கினாலும்
நிலத்திற்கு வருவாய்த் துறை
revenue department (தாசில்தார், VAO )பட்டா மாற்றம் செய்து கொடுக்க மாட்டார்கள்.
எனவே எச்சரிக்கை.
8. நீதிமன்றங்கள் முடக்கிய நிலத்தை attached property வாங்காதீர்.
9. திருமண விலக்கு கோரி நீதிமன்றங்களில் வழக்கு உள்ளவரிடம் நிலம் வாங்காதீர்.
அந்த நிலத்தை அவர் மனைவி maintenance (ஜீவனாம்சம்) வேண்டி மனு செய்து இருந்தால்
நீங்கள் போட்ட பணம் காலி.
எனவே விற்பவர் இடம்
இந்த விவரத்தைக் கேளுங்கள். ஒரிஜினல் பத்திரதைக் காட்டச்சொல்லி பத்திரத்தின் பின் புறம் கோர்ட் சீல் இருக்கின்றதா என்று பாருங்கள்.
10. அந்த நிலத்தின் சர்வே என்னை கொண்டுபோய்
நிலம் அமைந்துள்ள கிராம VAO கிட்ட அந்த நிலத்தோட FMB, பட்டா, சிட்டா,
A ரெகார்ட் வாங்குங்கள்.
11. அந்த இடத்தில் சாலை அமைக்க தண்ணீர் த் தொட்டி கட்ட
பிற்காலத்தில் அரசுத் திட்டங்களுக்கு எடுத்துக் கொள்ள வாய்ப்பு இருக்கின்றதா என்று கேளுங்கள்?.
பாலுமாகேந்திரவின் "வீடு " படத்தை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
VA டாக்குமெண்ட் தர வில்லை என்றால்,
12. மேற்கூறிய ஆவணங்கள் அனைத்திற்கும் அட்டெஸ்ட் copy வேண்டும் என்று VAO office மற்றும் தாசில்தார் ஆபீஸில்
RPD போஸ்ட் அல்லது நேரடி மனுவோ அல்லது RTI யில் கேட்டு நகல் வாங்கிக் கொள்ளுங்கள்.
(கண்டிப்பாக attest copy வேண்டும் )
13..அடுத்து நிலத்தின் 1858 காலத்து
OSR, RSR A-Record எடுக்க முடிந்தால் இன்னும் நல்லது.
1908,1936 ஆண்டின் SLR, RSLR A- Record, FMB
80 முதல் 100 ஆண்டுகளுக்கு வேண்டும்.
1987 ஆம் ஆண்டின் FMB, A-record, சிட்டா அடங்கல் கட்டாயம் எடுக்கணும்.
இதன் நகல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கேளுங்கள்.
1.அது வெள்ளைக்காரன் காலத்தில்
DC land @பஞ்சமி நிலம் ஆக இருந்தால் போட்ட பணம் எல்லாம் காலி.
சுப்ரீம் கோர்ட் போனாலும் கேஸ் நிற்காது.
2. அடுத்து அது ஜமீன் ஒழிப்பு & கோயில் மானிய ஒழிப்பில் அரசால் எடுக்கப்பட்டு ஆனால் revenue record இல் அரசு நிலம் என்று பதிவேற்றம் செய்யப்படாமல் இருக்கும் நிலமா என்று பார்க்க வேண்டும்.
ஏன் என்றால் இவர்கள் revenue record இல் பதிவேற்றம் செய்யாத ஓட்டையை பயன்படுத்தி
UDR சர்வே செய்ய வந்த தனியார் கம்பெனி அதிகாரிகளுக்குப் பணம் கொடுத்து
UDR இல் திரும்பவும் ஜமீன் பெயரே ரயத்துவாரி யாக மாற்றிக் கொண்டார்கள்.
14.அடுத்து பத்திரப்பதிவு அலுவலகத்தில்
அந்த நிலத்தின் மீது யாராவது பத்திரம் பண்ணக் கூடாது என்று தடை மனு கொடுத்து இருக்ககன்றார்களா? என்று பாருங்கள்.
15.. அந்தப் பத்திரம் முழுமையான ஆவணமா
ஸ்டாம்ப் டூட்டி கட்டி இருக்கின்றதா என்று பாருங்கள்.
16.அடுத்து நிலம் இருக்கும் இடத்தை குறைந்தது 10 தடவை பாருங்கள். அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் நிலத்தின் மீது ஏதாவது பிரச்சனை, வில்லங்கம், ஆக்கிரமிப்பு இருக்கின்றதா என்று கேளுங்கள்.
இதை ஏற்கனவே யாராவது வாங்கி இருக்கிறார்களா
தற்போதைய உரிமையாளர் யார் என்று கேளுங்கள்
17.அடுத்து நிலம் விற்பவர் வீட்டுக்கு அருகில் இருப்பவர்களிடம்
அவருக்கு எத்தனை உடன்பிறந்தோர், மனைவி, குழந்தைகள்?
விற்பவருக்கு இந்த நிலம் எப்படி வந்தது?
விற்பவரின் உடன் பிறந்தவர்களுக்கு பங்கு இருக்கின்றதா ? என்று கேளுங்கள்.
18. மேற்கூறிய ஆவணங்கள் எல்லாம் வாங்கி விட்டு
உங்கள் நிலத்தின் பத்திரப்பதிவு அலுவலக பகுதியில் நல்ல வழக்கு உரைஞரைப் பாருங்கள்.
அவர் எங்கே படித்தார்
எந்த ஆண்டில் இருந்து தொழில் செய்கிறார்
எத்தனை பத்திரம் பதிந்து இருக்கிறார், எத்தனை லீகல் ஒப்பீனியன் கொடுத்து இருக்கிறார் போன்ற கேள்விகள் கேளுங்கள்
புரோக்கர் சொல்லும் வழக்கு உரைஞர் இடம் செல்லாதீர்.
வழக்கு உரைஞருக்குப் பணம் கொடுக்க அழுகக் கூடாது.
அந்தப் பணம் தான் நிலத்தின் முதலீடு நீங்கள் விற்பவருக்குக் கொடுக்கும் பணம் அல்ல.
19. எல்லாம் சரியாக அமைந்து விட்டால் அடுத்து அரசு பதிவு பெற்ற நில அளவையர் (சர்வேயர்) பாருங்கள்
அவர் நிலத்தை அளந்து, encroachment, deviation எல்லாம் சொல்லுவார்.
பின்பு படத்தை வரைந்து தருவார்.
20. தயவு செய்து டாக்குமெண்ட் writer வைத்து பத்திரம் எழுதலாமா என்று நிதானமாக யோசிக்கவும்..
பத்திரம் எழுதும் உரிமம் 1990களில் இருந்து தரவில்லை என்று கேள்வி . சந்தேகம் என்றால்
அவரது உரிமம் எண் கேளுங்கள்.
பாதி பேர் பத்தாம் வகுப்பு தாண்டாதவர்கள்
மீதிப் பேர் ஆந்திரா, கருநாடகவில் பணம் கொடுத்து LLB டிகிரி வாங்கினவர் எல்லாம் பழைய டாக்குமென்டில் இருந்து copy paste செய்கின்றார்கள்
========
காசு போனாலும் நல்ல வழக்கு உரைஞர் வைத்து எழுதுங்கள்.
கொஞ்சம் தவறினாலும் பல லட்சம், கோடியை இழந்து விடுவீர்கள்.
முறையான ஆவணங்களை பெற அரசு அலுவலகங்களுக்கு நடப்பது
நமது நன்மைக்கே.
வழக்கு உரைஞர், நில அளவையர்,
நிலம் விற்பவரின் அண்டை வீட்டார், நிலம் இருக்கும் இடத்தின் அண்டை வீட்டார் இடம் பேசாமல்
புதிய சொத்து வாங்காதீர்.
திருத்தப் பதிவு
அருணகிரி
9444 39 39 03
22 ஆகஸ்ட் 2021
5 comments:
முருகா...!
சிறப்பான தகவல்கள்.
பயனுள்ள தகவல்கள்...
yappa paditha;e thalai sutthudu. Plot venamba
மிகவும் உபயோகமான பதிவு.இனிய நன்றி!
Post a Comment