Wednesday, September 8, 2021

வெண்மைப் புரட்சியின் தந்தை


 இன்று செப்டம்பர் 9


இந்திய வெண்மை புரட்சியின் தந்தை என்றழைக்கப்படும் வர்கீஸ் குரியன் நினைவு நாள்.


பிறப்பு:நவம்பர் 26, 1921

இறப்பு:செப்டம்பர் 9,2012


      கேரள மாநிலம் கோழிக்கோடில் பிறந்தவர்.  

     கோபிசெட்டிபாளயத்

திலுள்ள வைரவிழா மேனிலைப்பள்ளியில் 

பள்ளிப்படிப்பை படித்தார்.  

     சென்னை 

லயோலாக் கல்லூரியில் 1940ஆம் 

ஆண்டுஇயற்பியலில் 

இளங்கலைப்

பட்டம் பெற்றார்.

      பின்னர் 

சென்னைப் பல்கலைக்கழகத்தில் 

இயந்திரவியல் 

பொறியியல் பட்டம் பெற்றார். 

        1946ஆம் ஆண்டு 

ஜாம்ஷெட்பூரில் உள்ள

 டாடா எஃகு தொழில்நுட்ப நிலையத்தில் பட்டமேற்படிப்பை முடித்தார்.

       பின்னர் அரசு உதவித்தொகையில் அமெரிக்காவின் 

மிச்சிகன் மாநிலப் பல்கலைக்கழகத்தில் 

படித்து இயந்திரவியல் பொறியியலில் எம்.எஸ் பட்டத்தை சிறப்புநிலையில் பெற்றார்.

       குஜராத்தில் குடியேறினார்.

       1949ம் ஆண்டு தனக்குக் கிடைத்த மிகப் பெரிய அரசு வேலையை விட்டு விட்டு கூட்டுறவு பால் பண்ணை மேம்பாட்டில் குதித்தார்.  

        இதுவே அமுல் 

பிறக்க வழி வகுத்தது. 

        மேலும் தேசிய பால்பண்ணை மேம்பாட்டு வாரியம் குஜராத்தில் உதயமானது. 

       அன்று முதல் அவரது கடுமையான உழைப்பு காரணமாக 50களில் தினசரி சில ஆயிரம் லிட்டர் பால் என்ற அளவில் இருந்த இந்தியாவின் பால் உற்பத்தி ஒரு நாளைக்கு 90 லட்சம் லிட்டர் என்ற இமாலய அளவை எட்டியது.

       இந்த அபாரமான திட்டத்தை அமுல் என்ற பெயரில் குஜராத்தில் உருவாக்கி அமல்படுத்தினார் குரியன். 

        இன்று இந்தியாவின் மிக முக்கியமான வர்த்தக பிராண்டுகளில் ஒன்றாக அமுல் திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

       இந்தியாவின் பால் துறை மிகப் பெரிய வளர்ச்சியையும், சாதனையையும் படைக்க குரியன்தான் முக்கியக் காரணம். 

      இதனால்தான் அவரது திட்டம் வெண்மைப் புரட்சி என்று அழைக்கப்படுகிறது.

       பால்பண்ணை மேம்பாட்டிற்காக குரியனுக்கு இந்தியாவில் மட்டுமன்றி 

பிற நாடுகளிலும் உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

     1963 ல் ரமன் மக்சேசே பரிசு சமூக தலைமைக்காக ,

     1965ல் பத்மஸ்ரீ

     1966 ல் பத்ம பூஷண்

     1986 ல் கிருஷி ரத்னா விருது (இந்திய குடியரசுத் தலைவரிடமிருந்து)

      1986 ல் வாடேலர் அமைதிப் பரிசு (கார்னெகி நிறுவனம்)

       1989 ல் உலக உணவுப் பரிசு

       1993 ல் ஆண்டின் பன்னாட்டு மனிதர் - உலக பால்பண்ணை கண்காட்சி, மாடிசன், ஐக்கிய அமெரிக்கா

      1999 ல் பத்ம விபூஷண்

       2007 ல் கரம்வீர் புரஸ்கார்

ஆகிய விருதுகள் பெற்றவர்.

       குரியன் 2012ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் நாள் மரணமடைந்தார்.

        *இவரை கௌரவிக்கும் வகையில் இந்திய அரசு இவரது பிறந்த நாளான நவம்பர் 26 ஐ ஒவ்வொரு ஆண்டும் தேசிய பால் நாளாக(National Milk Day) 2014ஆம் ஆண்டு முதல் கொண்டாடிவருகிறது.*

1 comment:

Post a Comment