Sunday, November 28, 2021

எது ருசி...எழுத்தா ?..குழம்பா?

 *வத்தகுழம்பு:* 😇


வத்தகுழம்பு, இது இருந்து விட்டால் ஒரு ஆழாக்கு சாதம் கூட அசால்டாக இறங்கும். வத்த வத்த வைப்பதால் வத்தகுழம்பா இல்லை வத்தல் போட்டு வைப்பதால் வத்தகுழம்பா?


வத்தகுழம்பிற்கு ஏற்றது மணதக்காளி வத்தலோ சுண்டைக்காய் வத்தலோ தான். சின்ன வெங்காயம் கூட பரவாயில்லை. பூண்டு உண்பவர்கள் அதையும் வெங்காயத்துடன் சேர்த்து கொள்ளலாம். ஆனால் இவை எல்லாம் பஞ்சாங்கத்தை ஐபோனில் பார்ப்பது போன்ற உணர்வு. வத்தல் மட்டுமே ஓரிஜினல். மத்தபடி காய்கறி கூட நோ நோ தான்.


வத்தலுக்கு அடுத்தபடியாக முக்கியம் நல்லெண்ணை. மீதி எண்ணை எதற்குமே கட்டாயம் தடா. புது புளியும் வேண்டாம் பழைய புளியும் வேண்டாம். ஒரு டீன் ஏஜ் புளி அசத்தும். வத்தகுழம்பிற்கு கை பக்குவம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அதை வைக்கும் சட்டி. 


கும்பகோணம் கல்சட்டி பெஸ்ட். மங்களகரமாக வைக்கலாம் கமகம வத்தக்குழம்பு. கும்பேஸ்வரர் கோவில் கடைகளில் கட்டாயம் கிடைக்கும். 


குழம்பிற்கு வறுக்கப்படும் வத்தலை முதலில் வறுத்து அதிலேயே புளியிடாமல், தனியாக எடுத்து வைத்து கொண்டு கடைசியாக சேர்ப்பது குழம்பிற்கே புது அவதாரத்தை தரும். குழம்பு கொதிக்கும் பொழுது சேர்க்கப்படும் கறிவேப்பில்லை ஜன்ம சாபல்யம் பெறும். மூட கூடாது, அடுப்பை சிம்மில் வைத்து கொதித்து கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் அழகை பார்க்க கண் கோடி வேண்டும். எண்ணெய் பிரிந்த பின் இறக்கி வைக்கப்பட்ட வத்தகுழம்பு இங்கிலாந்து வரை இழுக்கும். பின்னர் அதில் வறுத்த வத்தலை சேர்த்ததோடு மட்டுமில்லாமல் ஒரே ஒரு ஸ்பூன் பச்சை நல்லெண்ணெய் சேர்த்தால் அந்த மணத்திற்கு எந்த மலரும் ஈடாகாது.


வத்தகுழம்பு வைக்க தெரிந்து இருப்பதை விட முக்கியம் அதை சாப்பிட தெரிவது. சாதத்தை அழுத்தி பிசைந்து, வத்தக்குழம்பு சாதம் சாப்பிடுபவன் அடுத்த ஜன்மத்தில் பல பாவத்திற்கு ஆளாவான். இன்று பிறந்த குழந்தையை தூக்குவதை போல் மிகவும் அழுத்தம் கொடுக்காமல், சாதத்தை பிசைய வேண்டும். பிசைய என்று வார்த்தையை கூட அழுத்தாமல் படிக்க வேண்டும். என்ன தான் சாப்பாட்டிற்கு நெய் என்பது மன்னனின் மகுடம் போல என்றாலும் இங்கே அதற்கு வேலை இல்லை. இது நல்லண்ணை ராஜாங்கம். சுடச்சுட சாத்தத்தோடு ஒரு தாராளமான ஸ்பூன் நல்லெண்ணை விட்டு சாதத்தை உதிர்த்த பின் அதன் மேலே வத்தகுழம்பை விட்டு நிற்க, சாம்பார் சாதம் மாதிரி மொத்தமாக பிசைய வேண்டாம். அப்பப்போ கொஞ்சம் கொஞ்சமாக பிசிறி பிசிறி சாப்பிட, நல்ல மழையில் SPB குரலில் இளையராஜா Melodies கேட்பது போல், Sidedish க்கு இங்கே வேலை இல்லை. இல்லாமல் முடியாது என்போர்க்கு அப்பளம் 0K. சுட்டது இன்னும் சூப்பர்.


இன்னும் சிறப்பு தயிர் சாதத்தை மையாய் மசித்து, கையில் சிறிது சாதம் எடுத்து கொண்டு நடுவிலே சிறு பள்ளமிட்டு அதை வத்த குழம்பால் நிரப்பி, அடடா சூப்பர் ஸ்டார் படத்தை அவருடனேயே உட்கார்ந்து பார்த்த பரவசம்.


சாத்திற்கு மட்டுமல்ல, அடைக்கு கூட வத்தகுழம்பு நல்ல combination.

வெங்கட்பிரபுவும் பிரேம்ஜியும் போல.


முடித்த பின் கடைசியாக தட்டில் ஒரே ஒரு கரண்டி மட்டும் விட்டு வழித்து நக்கப்படும் ஒரு நல்ல வத்தக்குழம்பின் மணமும், ருசியும், worldcupல் தோனி அடித்த 6 போலே என்றுமே நினைவில் நிலைத்திருக்கும்.

*படித்ததில் பிடித்தது*

*பகிர்வு*

*எழுத்தாளர் திரு.சுஜாதா  போல் எழுதியது யாராய் இருக்கும்... *🌷🕉️🚩

7 comments:

ஸ்ரீராம். said...

சுவைதான்.  அதுவும் சுவை சரியாக இருந்தால் கடைசியில் வெறும் தட்டில் ஒரு கரண்டி எல்லோரும் செய்யக்கூடியதே...  ஆனால் இது சுஜாதா எழுதியது அல்ல.  

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

ஆகா, நல்ல மணமுள்ள வத்தக்குழம்பை நிதானமாக ரசித்து ருசித்து சாப்பிட்டது போல் இருக்கிறது பதிவு. சற்றே நகைச்சுவையுடன் கூடிய பதிவை ஆர்வமுடன் ஒரு வரி விடாமல் படித்து ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

திண்டுக்கல் தனபாலன் said...

ஆகா...!

Thulasidharan V Thillaiakathu said...

வற்றல் இட்டுச் செய்யப்படும் குழம்பு தான் வற்றல்/வத்தக் குழம்பானது. வற்றல் இல்லாமல் ஏதேனும் காய் போட்டுக் கொதிக்க/வற்ற வைத்துச் செய்வதும் வற்றல் அல்லது புளிக்குழம்பு?

இது பல முறை வாட்சப்பில் வந்து ரசித்ததுண்டு இப்போதும் மீண்டும் ரசித்தேன். கண்டிப்பாக இது சுஜாதா எழுதியதில்லை. அவர் எழுத்து நடை/பாணி இதில் கொஞ்சம் கூட இல்லை.

கீதா

Jayakumar Chandrasekaran said...

RVSM?

Yaathoramani.blogspot.com said...

என் அபிப்ராயமும் அதுவே..

ஸ்ரீராம். said...

ஒரிஜினல் எது ன்று தேடும்போது ஓரிடத்தில் எழுதியவர் ராம்ஜி ன்று வந்திருந்தது.

Post a Comment