பழனிக்கு பஸ் ஏறினார் ஒருத்தர் சென்னைலேயிருந்து..
கண்டக்டர் சொன்னார்.. போங்க சார்.. இடம் நிறைய இருக்கு போய் உக்காருங்க..
ஆனா அவர் உக்காரவே இல்ல.. பஸ்ல அங்கயும் இங்கயுமா நடந்துட்டே இருந்தார்.. பஸ் செங்கல்பட்டு தாண்டிடுச்சி..
இன்னும் அந்த ஆளு நடந்துட்டு தான் இருக்கார்.
மறுபடியும் கண்டக்டர் சொன்னார்.. என்னங்க ஆச்சு, இத்தன சீட்டு காலியா இருக்கே, எங்கயாவது உக்காரலாமேன்னு..
இல்ல நா உக்காரலன்னு சொல்லிட்டாரு..
விழுப்புரத்துல ஒரு ஹோட்டல்ல வண்டி நிக்க.. சாப்ட எல்லாரும் இறங்கிட்டாங்க, ஆனா இவர் மட்டும் இறங்கல.. கண்டக்டர் திரும்பவும் கேட்டார்..
அதே பதில் தான்..
அடுத்து திருச்சி… திண்டுக்கல்னு.. போய்ட்டு இருக்கு… எல்லாரும் தூங்கி எழுந்துட்டாங்க…
இந்த மனுஷன் நடந்துட்டு தான் இருக்கார்.
ஒரு வழியா… பழனியும் வந்துடுச்சு..
சென்னைலருந்து பழனி வரைக்கும் இவர் உக்காராம நடந்துட்டே தான் இருக்கார்..
கண்டக்டருக்கு ஒன்னும் புரியல… என்னதான் ஆச்சு இவருக்குன்னு.. இன்னொரு பக்கம் ஆர்வமும் கூட.. என்ன சமாச்சாரம்னு கேட்டுடனும்னு.. இறங்கும் போது அவர் கிட்ட கேட்டாரு…
ஏங்க இப்டி காசு கொடுத்து டிக்கெட் வாங்கிட்டு உக்காரமலேயே பழனி வரைக்கும் வந்திங்கன்னு..
அதுக்கு அவர் பதில் சொன்னாரு…
பழனிக்கு நடந்து வர்றதா ஒரு வேண்டுதல்.. அதான் சார்..
🚶♂️🚶♂️🚶♂️🚶♂️திருநேல்வேலிக்கே அல்வா *பழனிக்கே பஞ்சாமிர்தம்* என்பது இதுதானோ..😂😀😀(படித்ததில் பிடித்தது)
4 comments:
ஹா... ஹா...
ஹாஹாஹாஹாஹா
கீதா
:)
ஹா ஹா ஹா..... வேண்டுதலை முடிக்க எத்தனை பிரயத்தனம் செய்திருக்கிறார்...
Post a Comment