ஒரு நாட்டில் ஒரு வினோத பழக்கமிருந்ததாம்.
பரம்பரையாக அந்த நாட்டை ஒரு குடும்பத்தையே
ஆளவிடாது ஒவ்வொரு வருடமும் புதிதாக
ஒரு மன்னரைத் தேர்ந்தெடுப்பார்களாம்.
அவர் ஆட்சிக்காலம் ஒரு வருடம் முடிந்ததும்
அருகில் இருந்த கொடிய மிருகங்கள் மட்டுமே
இருக்கிற ஒரு தனிச் சிறு தீவில்
நாடே கூடி இறக்கிவிட்டுவிடுவார்களாம்
ஒரு வருடத்தில் தின்று தின்று கொழுத்த
உடம்பை எதிர்பார்த்து கொட்டு மேளத்துடன்
மன்னரை அழைத்து வருவதைக் கண்டதுமே
மிருகங்கள் அதிக ஆர்வமாய் நாவில் எச்சில் ஊற
முகப்புக்கே வந்து விடுமாம்...
அதைக் கண்டு எவ்வளவு தைரியம் கொண்ட
மன்னராகினும் அழுதுபுலம்பி தப்பித்து
ஓடவே முயல்வார்களாம்..அதைக் கண்டு
இரசிக்கவே எப்போதும் ஒரு பெரும் கூட்டம்
அந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாம்...
அதைப் போலவே இந்த வருடமும் புதிய
மன்னரின் வருடம் முடிந்து இறக்கி விட
மக்கள் முயல்கையில் ஆரம்பம் முதல்
அந்த மன்னரிடம் எவ்வித பதட்டமும்
இல்லாததுடன் மிகுந்த உற்சாகத்துடன் கிளம்ப
எல்லோருக்கும் மிகுந்த ஆச்சரியமாக
இருந்ததாம்..
அதே ஆச்சரியத்துடன் தீவின் அருகில் செல்ல
கொடிய மிருகங்கள் ஏதும் எதிர்பார்த்து
இல்லாமல் இருந்ததும் ஆச்சரியத்தின்
உச்சிக்கே சென்று விட்டார்களாம்.
அதை விட ஆச்சரியமாய் அவரை
வரவேற்க அழகிய இளம் பெண்கள்
மலர்மாலையுடன் காத்திருக்க மன்னரின்
புலம்பலை எதிர்பார்த்து வந்த வந்த
எல்லோரின் முகத்திலும் அசடு டன்
கணக்கில் வழிந்ததும் மன்னர்
புன்னகைத்தபடி இப்படிப் பேசினாராம்
"இதுவரை எல்லா மன்னர்களும்
வசதிகளை அனுபவித்தபடி வருடம் முடிந்ததும்
நடக்க இருக்கிற கொடுமையைப் பற்றி
யோசித்தார்களே ஒழிய அது குறித்து
என்ன செய்யலாம் என யோசிக்கவில்லை
நான் வசதிகளையும் அனுபவித்தேன்
அதே சமயம் வருடம் முடிந்ததும் அதே
வசதியுடன் வாழ முன்னதாகவே இரகசியமாய்
தீவுக்கு வீர்ர்களை அனுப்பி மிருங்களை
கூண்டில் அடைத்து காடுகளைத் திருத்தி
கழனிகளாக்கி ஒரு சிறு சாம்ராஜ்ஜியத்தையே
உருவாக்கிவிட்டேன் " என்றாராம்.
அதைப் போலவே பணியில் இருக்கும்
பணியாளர்களே (குறிப்பாக \
அதிகாரத்தையும் சுகத்தையும் அனுபவிக்கிற
அரசுப் பணியாளர்களே)நீங்கள் ஓய்வு பெற்று
ஜீப்பில் இறக்கி விட வருகையில் வெறுமையை
உணராமல் உங்களுக்கென ஒரு குட்டி
அமைப்பு உங்களுக்கு உதவ
உறுதுணையாய் இருக்கும்படியாய் ஏற்பாடு
செய்து கொள்ளுங்கள்.ஓய்வு பெற்றோர்
சங்கங்கள் ஏதுமிருப்பின் அந்த புத்திசாலி
மன்னரைப் போல தங்கள் பங்களிப்புடன்
அதனை சிறப்பாக்கி மகிழுங்கள்
(ஓய்வு அமைப்பின் பொறுப்பாளர்களுக்கும்
ஒரு வார்த்தை..
ஆட்டம் தொடர்கிற வரையில்தான் செஸ் விளையாட்டில்
ஒவ்வொரு காயினுக்கும் ஒரு மதிப்புண்டு
பின் ஆட்டம் முடிந்துவிட்டால் பானும் ஒன்றுதான்
மந்திரியும் ராணியும் ஒன்றுதான்
அதை எப்போதும் நினைவில் வைத்திருங்கள் )
3 comments:
இது அந்த சாமியார் தானே...?
கதை முன்னரே படித்திருக்கிறேன். பின்னுரை நல்ல அறிவுரை.
கதை நன்று.
Post a Comment