மதுரை ஆட்சியர் அலுவலகத்துக்கு அருகில் அமைந்திருக்கும் காந்தி அருங்காட்சியகம்
"அந்த அருங்காட்சியகத்தில் காந்தி சுடப்பட்டபோது வழிந்த இரத்தம் தோய்ந்த துணியை பார்வைக்கு வைத்திருக்கிறார்களே! பார்த்திருக்கிறீர்களா?"
1921 ஆம் ஆண்டு காந்தி தமிழ்நாட்டுக்கு வந்திருந்தபோது மதுரை மேலமாசி வீதியில் தங்கியிருந்தார். அப்போதுதான், மேலாடை கூட அணியாமல் மிகவும் வறுமையான நிலையில் வாழ்ந்த மக்களைக் கண்டு மனம் வருந்தினார். அதுவரை சட்டையுடன் வலம் வந்த அவர், தன் மேலாடையைக் களைந்தார். அரை ஆடைக்கு மாறினார். 'இந்திய மக்கள் அனைவரும் என்றைக்கு முழு ஆடை அடைகிறார்களோ, அன்றுதான் நானும் அணிவேன்' என்று சூளுரைத்தார். அப்படிப்பட்ட வரலாற்று சம்பவம் நிகழ்ந்த ஊர் என்பதால் காந்தி சுடபட்டபோது அணிந்திருந்த ஆடையை இரத்தக்கறையுடன், அவர் ஆடையைத் துறந்த மதுரையிலே வைத்திருக்கிறார்கள்.
காந்தியடிகளின் மறைவிற்கு பிறகு இந்தியா முழுவதும் ஏழு காந்தி நினைவு அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டன. அதில் தென்னிந்தியா முழுமைக்கும் மதுரையில்தான் அமைக்கப்பட்டது.
(இன்று செப்டம்பர் 22, காந்தி உடையைத் துறந்தநாள்)
3 comments:
சிறப்பு...
சிறந்த தகவல்
மனம் நெகிழ்ந்தது
Post a Comment