Sunday, November 13, 2022

ரோஜாவின் ராஜா...

 நேரு மாமா பிறக்கும் முன்பும்

ரோஜா இருந்தது  - அது
நூறு பூவில் தானும்  ஒன்று
என்றே   இருந்தது

நேரு மாமா மார்பில்  அதனைச்
சூடிக் கொண்டதும்-அதுவே
ரோஜா பூவின் ராஜா என்று
பெருமை கொண்டது

பஞ்சம் பசியும் பிணியும் உலகை
விட்டு விலகவும்  -எங்கும்
மிஞ்சும் போரை ஒழிக்க வென்று
உறுதிக் கொண்டதும்....

பஞ்ச சீலக் கொள்கை தன்னை
உலகு உய்யவே -தந்து
ஐந்து கண்டம்  புகழும் வண்ணம்
உயர்வு கொண்டதும் .....

முதலாய் இருத்தல்  மட்டும் பெருமை
என்று  இறாது  -அதிலே
தொடர்ந்து இருத்தல்  அதுவே பெருமை
என்று   உணர்ந்ததும் ......

ஐந்து ஆண்டுத் திட்டம் தந்து
பெருமை சேர்த்ததும் -நமது
இந்தி யாவும்  வளர்ந்து சிறக்க
வழியை வகுத்ததும் ......

நமது  வாழ்வு ஏற்றம் கொள்ள
வழியைத்  தந்தது - அதை 
உணர்ந்துப்   போற்றி நெஞ்சில் பதித்தல்
மகிழத்  தக்கது -

குழந்தை  நலமே நாட்டின் நலமாய்
மனதில் கொண்டதால்  -என்றும்
குழந்தைக் கூட்டம்   சுற்றி  இருக்க
விருப்பம் கொண்டதால்

குழந்தை  களுக்கே   உரிய தெனது
பிறந்த நாளது -என்று
உவந்து சொன்ன  நேரு மாமா
பிறந்த நாளதில்

அவர்தம்  பெருமை முழுதாய்  அறிந்து
மகிழ்ச்சி  கொள்ளுவோம்  -என்றும்
அவர்தம் கனவை  நிஜமென் றாக்க
உறுதி  கொள்ளுவோம்

5 comments:

பா.சதீஸ் முத்து கோபால் said...

👌👌👌

Jayakumar Chandrasekaran said...

!!!!!

கரந்தை ஜெயக்குமார் said...

அவர்தம் பெருமை முழுதாய் அறிந்து
மகிழ்ச்சி கொள்ளுவோம் -என்றும்
அவர்தம் கனவை நிஜமென் றாக்க
உறுதி கொள்ளுவோம்

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை....

சீராளன்.வீ said...

சிறப்பு !

புதுமை காட்டும் புலமைக் கவியில்
பூக்கள் வாசமே -அதில்
எதுகை கொஞ்சம் இணைத்தி ருந்தால்
இனிமை கூடுமே !

வாழ்க நலம் !

Post a Comment