Saturday, December 14, 2024

பகிரவும்..அவசியமெனில் பயன்படுத்தவும்..

 *லஞ்ச ஒழிப்பு துறை – விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை பதிவு அனைவரிடமும் பகிருங்கள்*


அனைத்து பொதுமக்களுக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு!


நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை: தமிழகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை (DVAC) நியாயமான கோரிக்கைகளை நிராகரிப்பது, தாமதப்படுத்துவது, அல்லது லஞ்சம் கேட்பது போன்ற செயல்களை தடுக்க தீவிரமாக செயல்படுகிறது.


ஒன்றிய அல்லது மாநில அரசு அலுவலர்களின் செயல்பாடுகள் உங்கள் வாழ்வாதாரத்தை பாதித்தால், நீங்கள் இதைப் பற்றிய புகார்களை உறுதிப்படுத் தரமான ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.


புகார் அளிக்க முடியும் காரணங்கள்:


1. நியாயமான கோரிக்கைகளை நிராகரித்தல்:

உங்கள் உரிமையான கோரிக்கைகளை மறுக்க வேண்டிய காரணமின்றி நிராகரிப்பது. நிராகரிப்பதற்கான காரணத்தை சொல்லாமல் அலட்சியம் காட்டுவது.


2. தாமதப்படுத்துதல்:

உங்களின் கோரிக்கைக்கு தேவையற்ற தாமதம் செய்வது.


3. அலட்சியம் காட்டுதல்:

உங்கள் கோரிக்கையை கவனிக்காமல் புறக்கணிப்பது.


4. மறைமுக லஞ்ச கோரிக்கை:

லஞ்சம் கொடுக்க தூண்டுவது, உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக மறைமுகமாக பணம் அல்லது பொருள் கேட்கும் நிலை. இடைத்தரகர்கள் மூலமாக லஞ்சம் பெற முயற்சிப்பது.


புகார் அளிக்க தேவையான முக்கிய ஆதாரங்கள்:


1. கோரிக்கை தொடர்பான ஆவணங்கள்:


நீங்கள் அளித்த கோரிக்கையின் பதவி ஏற்ற பதிவு (பதிவு எண், நாள்).


2. ஆடியோ/வீடியோ ஆதாரம்:


அதிகாரி நேரடியாக அல்லது மறைமுகமாக லஞ்சம் கேட்கிறதற்கான பதிவுகள்.


3. அலட்சியத்தின் ஆதாரம்:


கோரிக்கையை சமர்ப்பித்த பின்னரும் செயல்பாடுகள் இல்லாததற்கான சான்றுகள்.


4. செயல்முறை விளக்கம்:


கோரிக்கையின் தன்மை, ஆவணங்களின் விவரங்கள் மற்றும் சம்பவத்திற்கான நேரம், இடம்.


*லஞ்ச ஒழிப்பு துறையின் தொடர்பு தகவல்கள்:*


தொலைபேசி: 1064


மின்னஞ்சல்: dvac@tn.gov.in


இணையதளம்: www.dvac.tn.gov.in



புகார் அளிக்க சுலபமாக அணுகவும், உங்கள் தகவல்கள் பூரணமாக பாதுகாக்கப்படும். 🙏


லஞ்சம் ஒழிக்க செய்ய வேண்டிய முக்கிய ஆலோசனைகள்:


1. உங்கள் உரிமைகளைப் பாதுகாப்பது:


உங்கள் கோரிக்கைகளை நேர்மையாக பதிவு செய்து நிலையை தொடர்ந்து கண்காணிக்கவும். உங்க நியாயமான கோரிக்கையை நிராகரித்தால் தாமதப்படுத்தினால் அதற்கான காரணத்தை எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுக்க சொல்லுங்கள் நிராகரிப்பது எந்த சட்ட பிரிவின் கீழ் நிராகரித்துள்ளீர்கள் தாமதப்படுத்துகிறீர்கள் என்று. 


2. உண்மையான ஆதாரங்களை சேகரிக்கவும்:


அதிகாரிகள் உங்களை தாமதப்படுத்தினால் அல்லது லஞ்சம் கேட்கிறார்கள், நியாயமான கோரிக்கைகளை நிராகரித்து, அதிகாரிகளை மாற்றி மாற்றி பார்க்கச் சொல்லி அலட்சியப்படுத்தி, சரியான பதில் கொடுக்காமல் லஞ்சம் கொடுக்க தூண்டுகிறார்கள் என்றால் சரியான சான்றுகளுடன் ஆதாரத்துடன் லஞ்ச ஒழிப்புத்துறைல் தாமதிக்காமல் உடனடியாக புகார் கொடுங்கள், உங்கள் நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்படும். 


3. பொதுமக்கள் தங்களின் உரிமைகளை நினைவில் கொள்ளுங்கள்:


உங்கள் உரிமைகளுக்கு போராட தயங்க வேண்டாம்.

அனைத்து மக்களும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே லஞ்சம் ஒழிக்க முடியும்.


"ஒன்றிணைந்த ஒரு சமுதாயத்தை உருவாக்க, உங்கள் ஆதரவை வழங்குங்கள்! லஞ்சத்திற்கு இடமில்லாத சமூகத்திற்காக, நீங்கள் லஞ்சம் ஒளியும் வரை ஒற்றுமையாக பகிருங்கள்." 🙌

1 comment:

ஸ்ரீராம். said...

இங்கும் செயல்பாடு இல்லை என்றால் யாரிடம் சொல்வது?!

Post a Comment