நல்லதை நீ
நல்லவிதமாகச் சொல்கிறாயா ?நீ நிச்சயம் பத்தாம்பசலி
தீயதை நீ
எரிச்சலூட்டும்படியே சொல்கிறாயா
நீ நிச்சயம் அடிமுட்டாள்
பயனுள்ளதை நீ
சுவாரஸ்யமின்றிச் சொல்கிறாயா
நீ அரை வேக்காடு
பயனற்றதை நீ
ரசிக்கும்படிச் சொல்கிறாயா
நீயே இந்தயுகத்தில்
தலைசிறந்தப் படைப்பாளி
பொழுது போக்குதலே கடமையாகிப் போன
போதை ஒன்றே கொண்டாட்டம் என ஆகிப் போன
சேர்ந்து குடிப்பவனே நண்பன் என ஆகிப் போன
பிரபலமாவதே வெற்றியென ஆகிப் போன
இந்தச் சமூகச் சூழலில்
சமூகத்தைப் பிரதிபலிப்பதுதானே
ஜனரஞ்சக படைப்பாய் இருக்கச் சாத்தியம்
நூலைப் போலச் சேலை இருக்கத்தானே
நூற்றுக்கு நூறு நிச்சயம் சாத்தியம்
3 comments:
அதென்னவோ உண்மைதான் போங்க... நானே அப்படிதானே!
சிறப்பான சிந்தனை.
உண்மை...
Post a Comment