Tuesday, August 26, 2025

கணபதி திருவடி

 


கணபதி திருவடி
அனுதினம் அடிபணி
துயரது இனிஇல்லை-இனி
இன்பமே எனஅறி

கஜமுகன் திருமுகம்
கண்டுகளி தினமினி
நிஜமென மருவிடும்-உடன்
வருகிற கனவினி

பரமனின் முதல்மகன்
அடியினை உடன்பணி
பயமது அடங்கிடும்-உடன்
தொடர்ந்திடும் ஜெயமினி

உமையவள் திருமகன்
புகழ்மொழி தினம்படி
நிலைபெறும் நிம்மதி-இனி
நிலைத்திடும் என்றறி

சரவணன் மனம் கவர்
கரிமுகன் பதம்பணி
குறையினி என்றுமில்லை-இனி
நிறைவுதான் எனத்தெளி

3 comments:

வெங்கட் நாகராஜ் said...

இனிய காலை வணக்கம்.

சிறப்பான துதி.....

விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.....

ஸ்ரீராம். said...

கணபதியைப் பணிவோம். கஷ்டமெல்லாம் தீரக் காண்போம்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

பதிவு அருமை. என் இஷ்ட தெய்வம் கணபதி பற்றிய கவிதை அருமை. துதித்து பாடி வணங்கிக் கொண்டேன். அனைவருக்கும், அவன் நல்லருள் கிடைக்க பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Post a Comment