எங்கள் ஊருக்குள் போக
இரண்டு வழிகள் உண்டு
ஒன்று நேர்வழி
இன்னொன்று சுருக்குவழி
நேர்வழி
நல்ல சாலை
ஆனால் தூரம் அதிகம்
ஆனாலும் எப்போதும்
ஆள் நடமாட்டம் உண்டு
சுருக்குவழி
ஒற்றையடிப்பாதை
கொஞ்சம் தூரம் குறைவு
ஆனாலும் போகிற வழியில்
ஒரு பேய் மரமும்
பெரிய சுடுகாடும் உண்டு
எனக்கு பேய்கதைகள்
நிறையத் தெரியும்
எனவே
பகல் பன்னிரெண்டு ஆனாலும்
நேர்வழிதான் போவேன்
என் நண்பன் தைரியசாலி
இரவு பன்னிரெண்டு ஆனாலும்
சுடுகாட்டு வழிதான் வருவான்
ஒரு நாள் அவனிடம்
தைரியமாய் இருப்பதன்
சூட்சுமம் கேட்டேன்
ரகசியக் காப்பு ப்ரமானம் கேட்டு
பின் இப்படிச் சொன்னான்.
"இதில் பயப்பட ஏதும் இல்லை
பிணம் என்றால் உயிரற்ற உடல்
உயிரில்லாது அது இயங்க இயலாது
பேய் என்றால் அது உடலற்ற உயிர்
உடலன்றி அது இயங்க முடியாது
அதனால் எனக்கு பயமில்லை" என்றான்
எனக்கு புரிந்தது போல் இருந்தது
கொஞ்சம் தைரியமும் வந்தது
"இனி சுடுகாடுவழி வருவேன் ' என்றேன்
கொஞ்சம் பெருமூச்சு விட்டபடி
"எனக்கு நேர்வழி என்றால்
ரொம்ப பயம் " என்றான்
நான் குழம்பிப் போனேன்
பின் அவனே மெதுவாக
"நேர் வழியில்
பேயும் பிணமும் சேர்ந்து
நிறையத் திரியும்
அதனால் அதிகப் பயம்" என்றான்
எனக்கேதும் விளங்கவில்லை
உங்களுக்கேதேனும் புரிந்தததா ?
இரண்டு வழிகள் உண்டு
ஒன்று நேர்வழி
இன்னொன்று சுருக்குவழி
நேர்வழி
நல்ல சாலை
ஆனால் தூரம் அதிகம்
ஆனாலும் எப்போதும்
ஆள் நடமாட்டம் உண்டு
சுருக்குவழி
ஒற்றையடிப்பாதை
கொஞ்சம் தூரம் குறைவு
ஆனாலும் போகிற வழியில்
ஒரு பேய் மரமும்
பெரிய சுடுகாடும் உண்டு
எனக்கு பேய்கதைகள்
நிறையத் தெரியும்
எனவே
பகல் பன்னிரெண்டு ஆனாலும்
நேர்வழிதான் போவேன்
என் நண்பன் தைரியசாலி
இரவு பன்னிரெண்டு ஆனாலும்
சுடுகாட்டு வழிதான் வருவான்
ஒரு நாள் அவனிடம்
தைரியமாய் இருப்பதன்
சூட்சுமம் கேட்டேன்
ரகசியக் காப்பு ப்ரமானம் கேட்டு
பின் இப்படிச் சொன்னான்.
"இதில் பயப்பட ஏதும் இல்லை
பிணம் என்றால் உயிரற்ற உடல்
உயிரில்லாது அது இயங்க இயலாது
பேய் என்றால் அது உடலற்ற உயிர்
உடலன்றி அது இயங்க முடியாது
அதனால் எனக்கு பயமில்லை" என்றான்
எனக்கு புரிந்தது போல் இருந்தது
கொஞ்சம் தைரியமும் வந்தது
"இனி சுடுகாடுவழி வருவேன் ' என்றேன்
கொஞ்சம் பெருமூச்சு விட்டபடி
"எனக்கு நேர்வழி என்றால்
ரொம்ப பயம் " என்றான்
நான் குழம்பிப் போனேன்
பின் அவனே மெதுவாக
"நேர் வழியில்
பேயும் பிணமும் சேர்ந்து
நிறையத் திரியும்
அதனால் அதிகப் பயம்" என்றான்
எனக்கேதும் விளங்கவில்லை
உங்களுக்கேதேனும் புரிந்தததா ?
23 comments:
//"நேர் வழியில்
பேயும் பிணமும் சேர்ந்து
நிறையத் திரியும்
அதனால் அதிகப் பயம்" //
உங்க நண்பன் அதி புத்திசாலி....
//எனக்கு பேய்கதைகள்
நிறையத் தெரியும்
எனவே
பகல் பன்னிரெண்டு ஆனாலும்
நேர்வழிதான் போவேன்//
ஆக, நீங்கதான் மிகவும் தைரியசாலி.....
Very nice uncle... summa natchunu irukku :)
//Two roads diverged in a wood, and I—
I took the one less traveled by,
And that has made all the difference.
ராபர்ட் ஃப்ராஸ்ட்டின் கவிதை வரிகளைத் தொட்டு விலகிய அற்புதக் கவிதை ரமணி சார்.
புதிரும் போட்டு விடையும் சொல்கிறது உங்கள் கவிதை.
//"நேர் வழியில்
பேயும் பிணமும் சேர்ந்து
நிறையத் திரியும்
அதனால் அதிகப் பயம்//
உண்மைதானே ???
பேய் பிசாசெல்லாம் கிடையாது
"PAEI AND PISAASU" ROAM AROUND IN THE GUISE OF HUMAN BEINGS. YOU HAVE TO BE CAREFUL ABOUT THEM. THE POINT HAS BEEN NICELY BROUGHT OUT.
கோபி சார்..ஜி.எம்.பி சர்
எனக்கும் பேய் பிசாசு மீதெல்லாம்
நம்பிக்கை கிடையாது
.உயிருள்ள
மனிதர்கள்தான் மோசமானவர்களாக
இருக்கிறார்கள் என்பதை
சுட்டிக்காட்டவே அதை பயன்படுத்தியுள்ளேன்
வருகைக்கும்,பதிவுக்கும் நன்றி
இந்தக் கவிதையில் உயிர் உள்ளது.
சொல்லிய விதத்தில் உடலும் உள்ளது.
நீங்கள் செல்வதோ நேர் வழி
பிறகென்ன,
இது போல படைப்புகள் பலவும் தாருங்கள்;
படித்து மகிழ நாங்கள் இருக்கிறோம்.
கலக்கிட்டீங்க ரமணி சார்.
பேயும் பிணமும் சேர்ந்த உருவங்கள் தான் நாமெல்லாம்.
அருமை...நன்றி கெட்ட மனிதரை விட பேய்கள் மேலடா என்று மாற்றிப் பாடலாம்...!
உங்கள் ஒவ்வொரு பதிவிலும் நல்ல கருத்துக்களைத் தெளித்து, சிந்திக்க வைக்கிறீங்க.... பாராட்டுக்கள்!
"நேர் வழியில்
பேயும் பிணமும் சேர்ந்து
நிறையத் திரியும்
அதனால் அதிகப் பயம்"
வரிகளில் பொதிந்து கிடக்கும் உண்மை என்னை சிந்தனையில் ஆழ்த்தியது. பகிர்வுக்கு மிக்க நன்றி!
ஊர்ல இருக்கிறவங்ககிட்ட கடன் வாங்கியிருப்பார்.கண்டா அவ்ளோதான்.
அந்தப் பேய்கைளைவிட இந்தப்பேய்கள் பரவால்லன்னு நினைச்சுட்டார்போல !
தோடா !!!!!
கேட்ட உங்களுக்கே புரியவில்லை
வாசித்த எங்களுக்கு விளங்குமா...
பேயாவது பிசாசாவது...
ஆனா ரெண்டுமே வெளியில் இல்லை நம்ம மனசுக்குள்ளே ,ஏஞ்சல் தூங்கும் போது விழிதெழும் ..
நல்லா இருக்கு.
அவர் உயிருள்ள மனிதரை சொல்லியிருப்பார்.
நேர் வழியில் எப்போதும் பிரச்சினைகள் பரவிக் கிடக்கும். இருப்பினும் பிரச்சினைகளைக் கடந்து இலக்கை அடைவதில் அலாதி இன்பம்தான். அதையே தேர்வு செய்க.
arumai
ஆஹா... அருமையான சிந்தனை!
மிகவும் ரசித்தேன்.. :)
பேயும் பிணமும் சேர்ந்து திரியும்..... உண்மை!
உடலற்ற உயிரும் உயிரற்ற உடலையும் விட... மனிதமற்ற மனிதனே மிக மிக ஆபத்தானவன்....
ரொம்ப பிடித்தது சார் நீங்க சொன்ன விஷயமும் அதைவிட சொன்ன விதமும்....
ரொம்ப சிம்பிளா ஒரு களத்தை உருவாக்கி சுருக்கமா அழகா சொல்லியிருக்கீங்க.....
வாழ்த்துக்கள் :)
ஃஃஃஃஎன் நண்பன் தைரியசாலி
இரவு பன்னிரெண்டு ஆனாலும்
சுடுகாட்டு வழிதான் வருவான்ஃஃஃஃ
அப்ப உங்களை மாதிரீண்ணு சொல்லுங்க...
அருமைங்க..
அருமையான கருத்தை
ஆழமான கருத்தை
ரொம்ப அசால்ட்டா சொல்லியிருக்கீங்க
வாழ்த்துக்கள் ரமணி
"நேர் வழியில்
பேயும் பிணமும் சேர்ந்து
நிறையத் திரியும்
அதனால் அதிகப் பயம்" என்றான்
மிக மிக அனுபவம் நிறைந்த, அர்த்தம் பொதிந்த வரிக்ள்.
நேர்வழியில் உலவும் பேய்களிடம் மீண்டு இலக்கை அடைதலே நம் சிறப்பு.வாழ்த்துக்கள்
Post a Comment