வீட்டை அடுத்திருந்த
திருமண மண்டபத்தில்
முகூர்த்தக் கால் ஊண்டப்பட்டவுடன்
எங்கள் வீட்டில் அனைவருக்கும்
மூச்சுத் திணற துவங்கி விடும்
கேட்க துவங்கியதும்
நங்கள் மூவரும்
மூலைக்கு ஒருவராய் தூக்கி எறியப் படுவோம்
வாழ்வில் தொலைந்து போனவைகள் எல்லாம்
ரேஷன் அரிசியில் இருப்பது போல்
முற்றத்தில் அமர்ந்து
முறத்தில் முகம் புதைப்பாள் அம்மா
அறுத்து அறுத்து தேய்ந்து போன
கதிர் அறிவாளாய்
இயலாமையின் மொத்த உருவாய்
ஈசி சேரில் மிகச் சாய்ந்து
முகட்டினில் முகம் புதைப்பார் அப்பா
முன்னறை ஜன்னலோரம்
முழங்காலில் முகம் புதைத்து
திருமணத்தில் இரண்டறக் கலப்பேன் நான்
நம்பிக்கைகளும் ஆசைகளும்
சமதளத்தில் இருந்தவரை
என் கனவுகளும் கற்பனைகளும் கூட
நாகரிகம்தான் இருந்தன
நம்பிக்கைகள் முழுவதும் தொலைந்து போக
ஆசைகள் ஆர்பரித்துச்சீற
ஜானவாசத்தில்
மாப்பிள்ளை அருகில்
நெருங்கி அமர துவங்கிய நான்
இப்போதெல்லாம்
பள்ளியறையில்
பின்னிரவு வரை
பயணித்து கொண்டே இருக்கிறேன்
திருமண மண்டபத்தில்
முகூர்த்தக் கால் ஊண்டப்பட்டவுடன்
எங்கள் வீட்டில் அனைவருக்கும்
மூச்சுத் திணற துவங்கி விடும்
மந்திர சப்தமும்
மங்கள வாத்தியமும் கேட்க துவங்கியதும்
நங்கள் மூவரும்
மூலைக்கு ஒருவராய் தூக்கி எறியப் படுவோம்
வாழ்வில் தொலைந்து போனவைகள் எல்லாம்
ரேஷன் அரிசியில் இருப்பது போல்
முற்றத்தில் அமர்ந்து
முறத்தில் முகம் புதைப்பாள் அம்மா
அறுத்து அறுத்து தேய்ந்து போன
கதிர் அறிவாளாய்
இயலாமையின் மொத்த உருவாய்
ஈசி சேரில் மிகச் சாய்ந்து
முகட்டினில் முகம் புதைப்பார் அப்பா
முன்னறை ஜன்னலோரம்
முழங்காலில் முகம் புதைத்து
திருமணத்தில் இரண்டறக் கலப்பேன் நான்
நம்பிக்கைகளும் ஆசைகளும்
சமதளத்தில் இருந்தவரை
என் கனவுகளும் கற்பனைகளும் கூட
நாகரிகம்தான் இருந்தன
நம்பிக்கைகள் முழுவதும் தொலைந்து போக
ஆசைகள் ஆர்பரித்துச்சீற
ஜானவாசத்தில்
மாப்பிள்ளை அருகில்
நெருங்கி அமர துவங்கிய நான்
இப்போதெல்லாம்
பள்ளியறையில்
பின்னிரவு வரை
பயணித்து கொண்டே இருக்கிறேன்
21 comments:
ஓ, எல்லாமே கனவுகளும், கற்பனைகளுமா? நம்பிக்கைதான் வாழ்க்கை.
நிச்சயம் கனவுகள் நிறைவேறும் !
கவிதை அருமை. கல்யாணமாகாத ஒரு கன்னிப் பெண்ணின் ஏக்கம் சொல்லும் கவிதை சூப்பர்.
அட்டகாசம் ரமணி சார். உங்க கிட்ட இருந்து நான் நெறயக் கத்துக்கணும்
ஆஹா..ப்ரமாதம் ரமணி ஸார்!
ரமணி சார்...தலைப்பு ரொம்ப அருமை..கவிதை கருவோடு அந்த தலைப்பு ஆழமாய் சுமந்துட்டு வருது...
//நம்பிக்கைகள் முழுவதும் தொலைந்து போக
ஆசைகள் ஆர்பரித்துச்சீற
ஜானவாசத்தில்
மாப்பிள்ளை அருகில்
நெருங்கி அமர துவங்கிய நான்///
அடடடா அருமை அருமை....
மிகவும் அருமை ரமணி. அற்புதம். தொடர வாழ்த்துகிறேன்.
எழுத்தில் எங்கோ நெருடுகிறது ரமணி, சார். சிறு திருத்தம் கொடுக்கலாமா...துவங்கிய என்ற இடத்தில் துடிக்கும் என்றும்,பள்ளியறையில் அடுத்து ‘கனவில் என்று சேர்த்தும் வாசித்துப் பாருங்கள்.AM I TAKING LIBERTY.?
பல நாளாய் கல்யாணமாகாத கன்னியின் கனவாய் – இந்த கவிதை மிக அருமை ரமணி சார்.
\\வாழ்வில் தொலைந்து போனவைகள் எல்லாம்
ரேஷன் அரிசியில் இருப்பது போல்///
அருமையான பிரயோகம்.
சதுப்பு நிலம் - தலைப்பே கவிதையின் கருவை சொல்லி விட்டது
அருமை ரமணி சார்
சிறப்பான கவிதை
//முன்னறை ஜன்னலோரம்
முழங்காலில் முகம் புதைத்து
திருமணத்தில் இரண்டறக் கலப்பேன் நான்//
கன்னிப்பெண்ணின் உணர்வுகள்
சொன்னவிதம் அழகு; பாராட்டுகள்.
முழங்காலில் முகம் புதைத்து
தன் கண்ணீரால் ச்துப்புநிலமாக்கும்
முதிர்கன்னியின் கேள்விக்குறிகள்
ஆச்சரியக்குறிகளாக காலம் பதில் சொல்லும்.
இந்த கவிதை கல்யாணமாகத கன்னிகளுக்கு மட்டும்
என எனக்கு தோன்றவில்லை.இளவயதிலேயே கணவனை இழந்து(கணவன் யாருடனோ ஓடிப்போய்ட்டார்)வயதுக்குவந்த மகளோடு எங்கள் தெருவில் வாழும் ஒரு அக்கா இப்படித்தான் எங்கள் தெருவில் ஏதேனும் திருமணம் என்றால் தன் மகளோடு சர்ச்சில் போய் உட்கார்ந்துவிடுவார்.இந்த கவிதையை படிக்கையில் என்னையரியாமல் எனக்கு அவர்தான் நினைவுக்குவருகிறார். இது அவர்களுக்காகவும்தான் சரியா சார்?
பொதுவாய் முதிர்கன்னி, வரதட்சணைக் கொடுமை
இவை பற்றி இளைஞர்கள்தான் பேசுவார்கள் எழுதுவார்கள் எனில் நீங்கள் இளைஞர்தான்.
வாழ்த்துக்கள் சார்.
பொதுவாக ஆசைகள் கனவுகளை கொடுக்கின்றன. கனவுகள் செயல்பாட்டைக் கொடுக்கவேண்டும். செயல் படும் உரிமை இந்த மாதிரி நேரங்களில் அப்பாக்களுக்கு மட்டுமே இருக்கின்ற சமூக அமைப்பில் மாற்றம் வேண்டும்.இல்லையேல் முதிர் கன்னிகள் நிலை மாறப்போவதில்லை. ஊங்கள் கவிதையால் இந்த விழிப்புணர்வு ஏற்படுமா?
இந்தக் கவிதை பற்றி வலைச்சரத்தில் இன்று குறிப்பிட்டுள்ளேன்.
http://blogintamil.blogspot.com/2011/11/blog-post_12.html
கவிதையில் உணர்வுகளை வெளிப்படுத்திய விதம் அருமை..
Gopi Ramamoorthy //
தங்களால் எனது பதிவு
அறிமுகம் செய்யப்பட்டதை மிகப் பெரிய
அங்கீகாரமாகக் கருதுகிறேன்
மனமார்ந்த நன்றி
asiya omar //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
UsssVenkat //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
Post a Comment