Friday, May 13, 2011

விழிப்பின் சூட்சுமம்.?


நாம்தான்
சூட்சுமம் தெரியாது
செக்கு மாடாய்
சுற்றிச் சுற்றித் திரிகிறோம்

அழகிய மலரினைப்போல
குழ்ந்தையின் சிரிப்பினைப்போல
அன்றாட விடியலைப்போல

அழகானவை
இனிமையானவை
உயர்வானவை எல்லாம்

ஆடையின்றி
எளிமையாய்
மிக அருகாமையில்
நம்மைச் சுற்றியே
வலம் வருகின்றன

நாம் தான்
கண்ணை மூடி
காட்சி தேடும்
மூடனாகத் திரிகிறோம்

நாம் தினம் எதிர் கொள்ளும்
சுனாமிச் சீற்றங்களும்
பூகம்ப அதிர்வுகளும்
எரிமலை குழம்புகளும் கூட
நம்முள்
எவ்வித சலனங்களையும்
ஏற்படுத்தாது போக....

வெகு சிலருக்கோ.....
...
முதலிரவில் மறுத்துச் சொன்ன
ஒரே ஒரு வார்த்தை.கூட..
கை மாறி மாறி வந்து சேர்ந்த
ஒரு சிறு கனி.கூட..
அலைந்து ஓய்ந்துச் சாய்ந்த
அடி மரத்து நிழல் கூட
விழிபடைதலுக்கு
போதுமானதாகிப் போகிறது
போதி மரமாகி போகிறது

நாம்தான்
கோடாலி கொண்டு
நகம் வெட்ட முயன்று
தினம் நொந்து வீழ்கிறோம்

நாம்தான்
விழிகள் மூடும்வரை
விழிப்படையாதிருந்து
சவமாய் வாழ்ந்தே சாகிறோம்

27 comments:

எண்ணங்கள் 13189034291840215795 said...

எளிமையாய்
மிக அருகாமையில்
நம்மைச் சுற்றியே
வலம் வருகின்றன//

வீட்டில் சிட்டுக்குருவி ஒண்ணு கூடி கட்டி வருது.. அது எமக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி..

அதுமட்டுமா சிறு மொட்டு செடியில் வந்தாலுமே அதுவும்..

நிற்க..

எங்கோ ஒரு மூலையில் குழந்தையை வன்புணர்ச்சி செய்தான் என்ற செய்தியும் இடியாய் இறங்குது..கொலைவெறி வருது..

இதுவும் இயல்பாய்..

//விழிகள் மூடும்வரை
விழிப்படையாதிருந்து
சவமாய் வாழ்ந்தே சாகிறோம்//

சிலர் மட்டுமே..என சொல்ல தோணுது..

A.R.ராஜகோபாலன் said...

அற்புதமான கருத்துக்களை
அனாயசமாக கையாண்டிருக்கும்
விதம் வியப்பு
உண்மைகளை நாம்
உணராதவைகளை
உரக்க
ஊருக்கு
உறைக்க
உரைத்ததற்கு நன்றி

MANO நாஞ்சில் மனோ said...

//நாம்தான்
கோடாலி கொண்டு
நகம் வெட்ட முயன்று
தினம் நொந்து வீழ்கிறோம்//

அருமையாக சொன்னீர்கள் குரு...

MANO நாஞ்சில் மனோ said...

//நாம்தான்
விழிகள் மூடும்வரை
விழிப்படையாதிருந்து
சவமாய் வாழ்ந்தே சாகிறோம்//

என்ன வாழ்க்கை இது....

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

விழிப்படைதலைத் தருணங்களும் அனுபவங்களும்தான் தீர்மானிக்கின்றன ரமணி அண்ணா. அருமை.

சக்தி கல்வி மையம் said...

நாம்தான்
விழிகள் மூடும்வரை
விழிப்படையாதிருந்து
சவமாய் வாழ்ந்தே சாகிறோம் /////
எவ்வளவு உண்மையான, நிதர்சனமான உண்மை..

அன்புடன் மலிக்கா said...

//நாம்தான்
சூட்சுமம் தெரியாது
செக்கு மாடாய்
சுற்றிச் சுற்றித் திரிகிறோம்//

அருமை அருமை. உண்மைகளை உரக்க, உறைக்க. சொல்லியுள்ளீர்கள்..

//அழகிய மலரினைப்போல
குழ்ந்தையின்[குழந்தையின்]

வெங்கட் நாகராஜ் said...

//நாம்தான்
கோடாலி கொண்டு
நகம் வெட்ட முயன்று
தினம் நொந்து வீழ்கிறோம்//


அருமை ரமணி சார்.

G.M Balasubramaniam said...

வெகுச்சிலரும் நம்மில்தானே இருக்கிறார்கள்.விழிப்படைதல் இல்லாமலேயே எல்லோரும் இருந்து விடுவதில்லை, ரமணி சார். சுந்தர்ஜி சொல்வதுபோல் தருணங்களும் அனுபவங்களும் தான் போதி மரமாகும் பேரினைப் பெறுகின்றன.

எல் கே said...

என்ன சொல்ல

//நாம்தான்
கோடாலி கொண்டு
நகம் வெட்ட முயன்று
தினம் நொந்து வீழ்கிறோ//

அட்டகாசம்

சாகம்பரி said...

//அடி மரத்து நிழல் கூட
விழிபடைதலுக்கு
போதுமானதாகிப் போகிறது//
போதுமே சார். சொன்னால் விரக்தியாய் சிரிக்கிறார்கள். இன்னும் அனுபவிச்சிட்டு போவோம் என்கிறார்கள்.

குறையொன்றுமில்லை. said...

மிகவும் நல்லா இருக்கு.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//நாம்தான்
விழிகள் மூடும்வரை
விழிப்படையாதிருந்து
சவமாய் வாழ்ந்தே சாகிறோம்//

இது பழையகதையோ எனத்தோன்றுகிறது.

பதிவு வெளியிட்டுள்ள தேதி: 13.05.2011
தேர்தல் முடிவுகள் வெளிவரும்
முன்பா பின்பா என்று தெரியவில்லை.

பெரும்பாலானவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்டதாக எங்கும் பேசிக்கொள்கிறார்கள்.

நல்ல பதிவு. அருமையாக உள்ளது.
பாராட்டுகள். வாழ்த்துக்கள்.

குணசேகரன்... said...

"நாம்தான்
விழிகள் மூடும்வரை
விழிப்படையாதிருந்து
சவமாய் வாழ்ந்தே சாகிறோம்"-அருமை.

http://zenguna.blogspot.com

Rathnavel Natarajan said...

அருமையான கவிதை.
வாழ்த்துக்கள்.

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

//அழகானவை
இனிமையானவை
உயர்வானவை எல்லாம்

ஆடையின்றி
எளிமையாய்
மிக அருகாமையில்
நம்மைச் சுற்றியே
வலம் வருகின்றன//

எத்தனை ஸத்யமான வார்த்தைகள்.மொத்த கவிதையே அற்புதம்!

மிருணா said...

அருமையான கருத்து.

சிவகுமாரன் said...

கோடாலி கொண்டு நகம் வெட்டுகிறோம். விழிப்படையாமல் இருந்து வாழ்ந்து சாகிறோம்.
---- போதி மரம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை.
--- அருமையான சிந்திக்கத் தூண்டும் கவிதை

ஹேமா said...

நாமேதான் நமக்கெதிரி !

போளூர் தயாநிதி said...

முதலிரவில் மறுத்துச் சொன்ன
ஒரே ஒரு வார்த்தை.கூட..
கை மாறி மாறி வந்து சேர்ந்த
ஒரு சிறு கனி.கூட..
அலைந்து ஓய்ந்துச் சாய்ந்த
அடி மரத்து நிழல் கூட
விழிபடைதலுக்கு
போதுமானதாகிப் போகிறது
போதி மரமாகி போகிறது

நாம்தான்
கோடாலி கொண்டு
நகம் வெட்ட முயன்று
தினம் நொந்து வீழ்கிறோம்//நல்ல பதிவு. அருமையாக உள்ளது.
பாராட்டுகள். வாழ்த்துக்கள்.

Thenammai Lakshmanan said...

அலைந்து ஓய்ந்துச் சாய்ந்த
அடி மரத்து நிழல் கூட
விழிபடைதலுக்கு
போதுமானதாகிப் போகிறது
போதி மரமாகி போகிறது///

அருமை ..ரமணி..

Murugeswari Rajavel said...

விழிப்பின் சூட்சுமம்?விழிப்படையாத சவங்கள் உணர்வதில்லை,ரமணி சார்,உங்கள் படைப்புக்கள் ஒவ்வொன்றுமே ஆழ்ந்த பொருள் கொண்டவை.

sakthi said...

நாம்தான்
விழிகள் மூடும்வரை
விழிப்படையாதிருந்து
சவமாய் வாழ்ந்தே சாகிறோம்

அருமை
ஒரு உணர்வுப்பூர்வமான படைப்பு

ரிஷபன் said...

ஒவ்வொரு வரியும் சுரீர் என்று..
சுய பரிசீலனை செய்து கொள்ள ஒரு மந்திரம் போல..

மோகன்ஜி said...

//நாம்தான்
கோடாலி கொண்டு
நகம் வெட்ட முயன்று
தினம் நொந்து வீழ்கிறோம்//

நெஞ்சைத் தொட்ட வரிகள்.. நல்லதோர் படைப்பு சார்!

சி.பி.செந்தில்குமார் said...

>>முதலிரவில் மறுத்துச் சொன்ன
ஒரே ஒரு வார்த்தை.கூட..


நுட்பமான கவனிப்பு

மாலதி said...

//ஆடையின்றி
எளிமையாய்
மிக அருகாமையில்
நம்மைச் சுற்றியே
வலம் வருகின்றன

நாம் தான்
கண்ணை மூடி
காட்சி தேடும்
மூடனாகத் திரிகிறோம்//ஆழம் நிறைந்த அற்புதமான வரிகள் உளம் கனிந்த பாராட்டுகள் தொடருங்கள் ...

Post a Comment